Posts

Showing posts from August, 2023

பறவைக்கு கூடுண்டு அனைவருக்கும் வீடு லாரி பேக்கரின் கனவு

Image
 பறவைக்கு கூடுண்டு அனைவருக்கும் வீடு லாரி பேக்கரின் கனவு நூலை முன் வைத்து:  இங்கிலாந்தில் பிறந்து தன்னுடைய இந்திய நண்பர் P.J. சாண்டியின் சகோதரி மருத்துவர் எலிசபெத் என்பவரை மணந்து கொண்ட லாரி பேக்கர் குறித்தும் அவர்களது வாழ்க்கை குறித்தும் அவரது மனைவி எழுதிய நூல் இது. காந்திய கட்டிடக் கலைஞர் என அழைக்கப்படும் லாரி பேக்கர் "மக்கள் நலனுக்காகக் கட்டப்படும் கட்டிடங்கள் மக்களின் வாழ்வுச் சூழல், வசதி,இவற்றைப் பிரதிபலிப்பதாக அந்த அந்த இடங்களில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு கட்டப்படுவது நல்லது எனும் காந்தியடிகளின் அறிவுரைக்கேற்பவே லாரி தன் கட்டிடங்களை வடிவமைத்தார்.இது தான் இந்தியா போன்ற வறுமைப்பட்ட நாடுகளுக்கு ஏற்ற கட்டிட வடிவமைப்பு முறை என லாரி ஏற்றார். மேற்கத்திய சூழலுக்கும்,பருவ நிலைக்கும்,தேவைகளுக்குமாக வடிவமைக்கப்படும் கட்டிடங்கள் இந்தியச் சூழலுக்கு சுமையே என்று கருதினார்" 1948ஆம் ஆண்டு லாரி பேக்கர் எலிசபெத் பேக்கரை திருமணம் செய்து கொண்ட பின் இமயமலையில் உள்ள பித்தோராகர் என்ற இடத்தில் தன் கணவருடன் தொழு நோயாளிகளுக்கு மித்ர நிகேதன் என்ற நட்பு இல்லத்தை நிறுவி 1963 வரை கிட்டத்தட்ட 15 ஆ

கறுப்பு வெள்ளைக் கடவுள்

Image
 தேவிபாரதியின் கறுப்பு வெள்ளைக் கடவுள் நூலை முன்வைத்து: நான் தேவிபாரதி எழுதிய எல்லா நாவல்களையும்  வாசித்திருக்கிறேன். நான் வாசித்த வரை வஞ்சிக்கப்பட்ட மனிதர்களின் கடந்த கால கசப்பும் வன்மமும்,பழியுணர்ச்சியும் தான் அவரது படைப்புகளில் உள்ள உள்ளோட்டம். அவரின் முதல் நாவலான நிழலின் தனிமை நாவலில் வரும் அந்தப் பெயரற்ற கதை சொல்லியினுடைய வன்மத்திலும் பழி தீர்க்கும் உணர்ச்சியிலும் குற்றமும் தண்டனையில் வரும் Raskolnikov பாத்திரத்தின் பாதிப்பு தெரியும். நீர்வழிப்படூஉம் நாவலில் வரும் காரு மாமா பாத்திரம் வழியாக வாழ்க்கை கைவராத துயர் துரத்தி சரியும் ஒரு மனிதனின் சித்திரத்தை காட்டுவார்.இந்த நாவல் ஒரு விதத்தில் அவர் சார்ந்த நாவித சமூகம் மற்றும் அவருடைய குடும்ப உறவுகள் சார்ந்த சுய புனைவு படைப்பு. பெண்களின் சாபமும்,பழி உணர்ச்சியும் ஒரு வம்சத்தையே நாசம் செய்வதை தொன்மம் குறியீடுகள் வழியாக நொய்யல் நதி மனிதர்களின் வாழ்வியலை நொய்யல் என்ற பெயரில் எழுதியிருப்பார். ஒரு சாதாரண சத்துணவு அமைப்பாளராக இருக்கும் "ந" என்ற காளிங்க நடராஜ் என்பவனின் வாழ்க்கையை முன் வரலாற்று பெருமிதத்துடன் நட்ராஜ் மகாராஜ் நாவலில் அ

பாரதி நினைவுகள்

Image
 ம.கோ.யதுகிரி அம்மாள் எழுதிய பாரதியின் நினைவுகள் நூலை முன்வைத்து: பாரதியின் தோழராக விளங்கிய மண்டயம் ஸ்ரீ.ஸ்ரீநிவாஸாச்சாரியாரின் மகள் யதுகிரி எழுதிய பாரதி நினைவுகள் நூல் பாரதி வாழ்க்கை வரலாறு குறித்து எழுதப்பட்ட நூல்களில் மிக முக்கியமானது என்கிறார் க.நா.சு. “எனக்குத் தெரிந்த அளவில், வ.ராவின் பாரதியார் சரித்திரமும், செல்லம்மாளின் தவப்புதல்வர் பாரதியாரும்,யதுகிரி அம்மாளின் பாரதி நினைவுகளும் சிறந்தவையாகத் தோன்றுகின்றன” என்கிறார் க.நா.சு. பாரதி புதுவையில் இருந்தபோது அவருடன் நெருங்கி பழகியுள்ளது யதுகிரியின் குடும்பம்.யதுகிரி சிறு பெண்ணாக இருக்கும் போது பாரதியாருடன் பழகிய பசும் நினைவுகளின் தொகுப்பு இந்நூல். பாரதி நினைவுகள் புத்தகம் மிக முக்கியமான பாரதியார் குறித்த ஆவணம் என்று கூறப்படுவதற்கு காரணம் அது யதுகிரி என்ற ஒரு சிறு பெண்ணின் பாசாங்கு கலக்காத பார்வையில் எழுதப்பட்டது என்பதால். ஒருவரின் வரலாற்றை  வளர்ந்தவர்கள் எழுதும் போது அதில் ஒருவித மேதாவித் தனமும் மிகப்படுத்தலும் இருக்கும்.ஆனால் இந்த பாரதி நினைவுகள் புத்தகத்தில் யதுகிரி பாரதியுடன் கை பிடித்து நடந்ததை,அவருடன் கவிதை வாசித்ததை,அவர் எழுதி

மரப்பசு

Image
தி.ஜானகிராமனின் மரப்பசு நாவலை முன்வைத்து: தி.ஜானகிராமன் அவர்களின் படைப்புலகத்தில் நான் நுழைந்தது அம்மா வந்தாள் நாவல் மூலமாகத்தான்.பிறகு மோகமுள் நாவல் வாசித்தேன்.இப்போது மரப்பசு. நான் வாசித்த வரை தி.ஜா வின் படைப்புலகம் பிராமணியக் குடும்பம்,பிராமணப் பெண்களின் பாலியல் இச்சை,இசை என்ற சட்டகத்திற்குள் நிகழ்வது. சமூகப் பித்தலாட்டத்திற்கு எதிரான கோபம்,மனிதர்களின் புற சிடுக்குகள்,பசி,வறுமை என அவர் எழுதுவதில்லை. மனித அகத்தின் அடிப்படை அவாவே காமம் தான்.அது தான் அவரது படைப்புகளின் அடிநாதம். இடுப்புக்கு கீழ இருக்கிற சமாச்சாரம் தான் எல்லா சமாச்சாரங்களிலும் சத்தானது என நினைத்து பிராமண பொம்மணாட்டிங்க பாலியல் ஏக்கத்தையும் சுதந்திரத்தையும் கலையாக்கும் யுக்தி தி.ஜாவுக்கு கை வந்த கலை போல.  மரப்பசு நாவலில் வரும் அம்மணியை மறக்க நாட்கள் பிடிக்கும். அம்மா வந்தாள் நாவலில் வரும் அலங்காரத்தம்மாள்,மோகமுள் நாவலில் வரும் யமுனா,மரப்பசு நாவலில் வரும் அம்மணி ஆகிய பாத்திரங்களின் வழியாக அவர்  ஆண்களை அதிர்ச்சியூட்டச் செய்கிறார். குடும்பம் என்ற ஒன்றை அமைத்துக் கொண்டு தண்டபாணி இருக்கும் போதே சிவசுவுடன் குழந்தை பெற்றுக் கொள

குழந்தைப் பாடல்கள்

Image
குழந்தைப் பாடல்கள்: முன்னோடிகள்&வகைகளும் வளச்சியும்: செல்ல கணபதி & பாவண்ணன். நாம் குழந்தைகளாக இருக்கும் போதிருந்தே தாலாட்டு வடிவில் பாடல் கேட்டு வளர்கிறோம்.பெரியவர்களால் கதை அல்லது விடுகதை வடிவில் கதைகளும் கேட்டு வளர்கிறோம் என்றாலும் குழந்தைகளுக்கு பாடல் வடிவமும் அதன் தாளமும் விரைவில் அவர்கள் உள்வாங்க கூடியதாக இருக்கிறது. முதன்முதலாக 1908 ஆம் ஆண்டு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களே குழந்தைகளுக்காக பாடல்கள் எழுதினார்.ஏறத்தாழ அறுபது பாடல்கள் எழுதி ‘குழந்தைச் செல்வம்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டார். குழந்தை இலக்கியத்தில் ஒரு பெரும் புரட்சி ஏற்படுத்தியவர் கவிஞர் அழ. வள்ளியப்பா.அதற்குப் பிறகு குறிப்பிடத்தகுந்த குழந்தை பாடல்களை குழந்தைகளுக்கான நூல்களை எழுதியவர் பெரியசாமி தூரன்.எழுத்தாளர் பாவண்ணன் அவர்களும் இப்பொழுது குழந்தைகளுக்கான நூல்களை எழுதி வருகிறார். இந்த நூல் குழந்தை இலக்கியம் மற்றும் குழந்தைகளுக்கான பாடல்களின் வளர்ச்சி குறித்தும் அதன் முன்னோடிகள் குறித்தும் விவாதிக்கிறது. தாளம்  இல்லாமல் குழந்தையின் வளர்ச்சி இல்லை.குழந்தையின் வளர்ச்சியில் எல்லா காலகட்டத்திலும் தாளம்

பாட்டையாவின் பழங்கதைகள்

Image
 பாட்டையாவின் பழங்கதைகள்: பாரதி மணி நம் வாழ்ந்த இடம்,பழகிய மனிதர்களுடன் உடனான நினைவுகள் எல்லாம் நம் ஆழ்மனதில் அனுபவங்களாக நின்று விடுகின்றன.வாழ்வின் சம்பவ தொகுப்புகளை நேரடியாக சொல்லும்போது அதில் ஒரு சம்பவத்தின் நிகழ்வுகளும் அது குறித்த தரவுகளும் மட்டுமே இருப்பதாக தோன்றும். நீங்கள் நிகழ்ந்த வரலாற்றையே ஒரு சம்பவத்தையோ சொல்லும்போது அதில் கொஞ்சம் புனைவுத்தன்மையும் இருக்கும்.புனைவற்ற எதுவுமே இங்கு வறட்சியானது. எழுத்தர் பாரதி மணியின் பல நேரங்களில் பல மனிதர்கள் புத்தகத்தை வாசித்த போது உண்மையில் இது அவருடைய வாழ்க்கை அனுபவ கட்டுரைகளாகவே எனக்கு தோன்றவில்லை.புனைவைப் பூசிக் கொண்ட ஒரு சிறுகதை போல இருந்தது. அத்தனை கட்டுரையிலும் பகடி பாஷை இருக்கும்.பாரதி மணி தன்னுடைய பெரும்பான்மையான வாழ்வை டெல்லியில் கழித்ததால் டெல்லி குறித்த ஒரு நேர்மையான சித்திரத்தை அவரது படைப்புகளில் காணலாம்.பல நேரங்களில் பல மனிதர்கள் நூலில் அதை காணலாம். பாட்டையாவின் பழங்கதைகள் நூலும் அப்படிப்பட்ட சுவாரஸ்யமான தகவல்களும்,பகடியும் சேர்ந்த ஒரு படைப்பு.எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் எழுத்துக்களில் தொடர்ச்சியான ஒரு பகடி வாடை உண்ட

பறவைகளைப் பார்

Image
பறவைகளை விரும்பாதவர்கள் யார்? அழகாகவும் ஒயிலாகவும் உள்ள இந்த சிறு உயிர்களை நோக்கிக் கொண்டிருப்பதே ஒரு பெரிய இன்பம். அங்கு மிங்கும் பறப்பதும், தத்தித்தத்தி நடப்பதும்,ஓடுவதும்,பாடுவதும், பேசுவதும், அலகினால் கோதி அழகுசெய்து கொள்வதுமாக இப்படி அவை எப்பொழுதும் சுறுசுறுப்பாகவே இருக்கின்றன.அவற்றின் பேச்சிற்காகவும்,அவற்றின் அழகுக்காகவும் நாம் அவற்றை விரும்புகிறோம் பறவைகள் இல்லாத உலகம் சுவை குறைந்ததாகவே இருக்கும் என தொடங்கும் இந்த புத்தகம் பறவைகள் குறித்து விளக்கும் ஒரு நல்ல புத்தகம். பறவைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கான ஒரு முழுமையான கையேடு இந்த புத்தகம். குறிப்பாக  பறவைகளைப் பற்றி அறிந்து கொள்ள குழந்தைகளுக்கு பயனுள்ள ஒரு பார்வையை இந்த புத்தகம் வழங்குகிறது. பறவைகளின் வகைகள்,அவைகளின் வாழ்விடம்,வலசைப் போதல்,பறவைகளின் மொழிகள்,அவைகள் கூடு கட்டும் முறைகள் என பறவைகளின் முழு உலகை இப்புத்தகம் தொகுத்து தருகிறது ஆங்கிலத்தில் ஜமால் ஆரா எழுதியதை. தமிழில் பெரியசாமி தூரன் மொழிபெயர்த்துள்ளார்.

காந்தி வழி

Image
காந்தி எழுதிய ‘From Yervada Mandir’ என்ற நூலைத் தழுவி என்.சொக்கன் காந்தி வழி நூலை எழுதியுள்ளார். மகாத்மா காந்தி தன்னுடைய தொண்டர்களுக்கு முன்வைத்த 14 கொள்கைகளை எளிமையானமுறையில் அறிமுகப்படுத்தும் நூல். மிக எளிமையான விளக்கத்துடன் காந்தியின் கொள்கைகளை இந்த நூல் விளக்குகிறது. காந்தியின் கொள்கைகள் வெறுமனே நூல்களிலிருந்து படித்ததோ எவரிடமிருந்தோ போதனைகள் மூலம் பெற்றது அல்ல.அவரை சுயமாக சுட்டு சுட்டு வாழ்வின் சத்தியத்தை, ஒழுக்கத்தை தன்னுள் உருவாக்கிக் கொண்டவர்.  தன் வாழ்வைத்தான் அவர் இந்த சமூகம் கற்றுக் கொள்ளும் பாடமாகவும் கொள்கையாகவும்  முன் வைத்தவர். குறிப்பாக காந்தியை அணுக விரும்பும் ஆரம்ப நிலை வாசகர்கள்  வாசிக்க ஏற்ற நூல் இது.

நாகம்மாள்

Image
 ஆர்.ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாள் நாவலை முன் வைத்து: ஒரு குடியானக் குடும்பத்தின் சிதைவை இவ்வளவு எதார்த்தமும்,குரூரமும் கலந்து எழுதப்பட்ட தமிழின் முதல் படைப்பு இதுவாகத் தான் இருக்கும். பழைய பங்காளி சண்டையின் பகை தீர்க்கும் ஒரு கதை என்று மேலோட்டமாகப் பார்க்க தோன்றும் இந்த நாவல் நிலப் பற்றினால் மனிதர்களுக்குள் உருவாகும் பொறாமை,பகைமை, குரூரத்தை அதன் சூடு குறையாமல் எழுத்தில் பிரதிபலிக்கிறது நாவல். முழுக்க முழுக்க ஒரு கொங்கு வாழ்வை ஆதாரமாகக் கொண்டு அதன் அசல்  நிலப்பரப்பையும் குரோதம், பொறாமை,மண் பிடிக்கும் சூழ்ச்சி குணம் நிரம்பிய மனிதர்கள் என எவ்வித மிகைப்பூச்சும் இல்லாமல் படைப்பாக்கியிருக்கிறார் ஆர்.ஷண்முகசுந்தரம். கணவனை இழந்து  ஒரு பெண் குழந்தையுடன் விதவையாக நிற்கும் நாகம்மாள் தன் கொழுந்தன் சின்னப்பனுடன் ஒரே வீட்டில் கூட்டாக வாழ்ந்தாலும் அவளுக்குள் ஒரு வித இழப்புணர்வும்,சுதந்திரமற்ற ஒரு இறுக்கமும் இருப்பதை எந்நேரமும் தன் கொழுந்தன் சின்னப்பன் மனைவி ராமாயியை அவள் திட்டிக்கொண்டும், அவளிடம் கடுகடு என இருப்பதை காணலாம்.கணவனை இழந்த ஒரு பெண் அப்படி புறத்தில் எந்நேரமும் ஒரு வித வெப்ப கோலத்தில் இருப்

பேரலையாய் ஒரு மென் ஷட்ஜம்: லலிதாராம்

Image
   பேரலையாய் ஒரு மென் ஷட்ஜம்: லலிதாராம் இசை ஆளுமைகள் மற்றும் இசைக் கருவிகளை உருவாக்கும் கலைஞர்கள் குறித்து எழுதப்பட்டுள்ள தமிழில் ஒரு சிறந்த ஆவணம் இந்த புத்தகம்.

அஸீஸ் பே சம்பவம்: அய்ஃபர் டுன்ஸ், தமிழில்: சுகுமாரன்.

Image
அஸீஸ் பே சம்பவம்:அய்ஃபர் டூன்ஸ் தமிழில்: சுகுமாரன் துருக்கி மது விடுதி ஒன்றில் தம்புரா இசைக்கும் கலைஞனின் வாழ்க்கை சம்பவங்களின் தொகுப்பு இந்த குறுநாவல். காதலும்,இசையும்,துயரமும் தான் இந்த நாவலின் மைய விசைகள். தன்னை ஏமாற்றிவிட்டு இன்னொருவருடன் சென்றுவிடும் தன் காதலி மரியத்தின் காதல் துரோகமும்,தன்னை இடையிலேயே விட்டு இறந்து போகும் தன்னுடைய மனைவி வுஸ்லாத்தின் மரணமும் ஒரு பெருந்துயராக மாறி அதை தன் தம்புராவின் இசையில் எந்நேரமும் வழிய விடுகிறான் அஸீஸ் பே. மரியத்தை சந்திப்பதற்கு முன் தன்னுடைய பருவ வயதில் எல்லா பெண்களோடும் உல்லாசத்தில் இருக்கும் அஸீஸ் பே மரியத்தின் மீது அவனுக்கு ஏற்படும் அன்பினாலும்,காதலாலும் தான் அவன் பலமற்றவனாக மாறிவிடுகிறான்.மரியத்தின் துரோகத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் இஸ்தான்புல் நகர வீதிகளில் ஒரு பித்தனைப் போல்  திரிகிறான் அஸீஸ் பே. தன்னுடைய இசையால் மது விடுதியில் வியாபாரத்தை பெரும் அளவில் பெருக்கிக் கொள்ளும் தன்னுடைய நண்பன் ஸேக்கி ஒரு கட்டத்தில் உன்னுடைய இசை இன்றைய தலைமுறைகளை எவரையும் வசீகரிக்கவில்லை எனக் கூறி அஸிஸ் பேயை அடித்து துரத்தி விடுவதுடன் இந்த குறுநாவல் முடிகிறத

காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை:ரா.கிரிதரன்

Image
 காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை: ரா.கிரிதரன் ஒரு தனி மனிதனின் அனுபவங்களை அல்லது அவன் பார்வையில் சொல்லப்படும் கதையை வாசிக்கும் வாசகர்கள் தான் பார்த்த தங்களுக்கான கதை என்றோ அல்லது அந்த கதையின் நுண் தருணங்களை அவன் உணரும் புள்ளியில் இருக்கிறது ஒரு கலைப்படைப்பின் பூரண வெற்றி. சில கதைகளை நாம் வாசிக்கும் போது நீர் இழுத்துக் கொள்ளும் மணல் போல எளிதில் உள்வாங்கிக் கொள்வதாக இருக்கும்.ஆனால் சில கதைகள் பாறை மீது ஊற்றும் நீர் போல    வாசகனுக்கு வசப்படாமல் வழிக்கு ஓடும்.கிரியின் சில கதைகளை ஆரம்பத்தில் வாசிக்கும் போது நான் நீராகவும் இசை குறித்த கதைகள் பாறையாகவும் இருந்தன. காரணம் அவர் கதை நிகழ்த்தும் நிலங்கள் நான் நடக்காதவை (புனைவில் அது சாத்தியம் என்றாலும் கூட)பிரெஞ்சு இசைமேதை Oliver messiaen மற்றும் ராபர்ட் ஷீமன் மற்றும் அவரது மனைவி கிளாரா ஷூமன் இசைகள் நானறியாதவை.பிறகு அவர்கள் குறித்து தனியாக இணையத்தில் வாசித்து தான் கதைகளை உள்வாங்க முடிந்தது. காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை என்ற தொகுப்பின் முதல் கதை பிரான்ஸ் இசை மேதை oliver messiaen எழுதிய இசை குறிப்பை மையப்படுத்தி எழுதிய சிறுகதை. 1942 ஆம் ஆண்டு ஜ
Image
 ஜூலை-2023 ல் வாசித்த புத்தகங்கள்: 1.நெருங்கி வரும் இடியோசை-பிபூதிபூஷன் பாந்தோபாத்யாய தமிழில்: சேதுபதி அருணாசலம் 2.விண்ணளந்த சிறகுகள்- தியோடர் பாஸ்கரன் 3.மழைக்காலமும் குயிலோசையும் - மா.கிருஷ்ணன்தொகுப்பாசிரியர்: தியோடர் பாஸ்கரன் 4.தருமபுரியும் சர் தாமஸ் மன்றோவும் - இடைப்பாடி அமுதன் 5.கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம் - மகுடேசுவரன் 6,ஆசிரம வாழ்க்கை-காந்தியடிகள் 7.திரை-எஸ்.எல்.பைரப்பா 8.அல் கிஸா-அஜிதன் 9.காதுகள்-எம்.வி.வெங்கட்ராம். 10.என் இலக்கிய நண்பர்கள்-எம்.வி.வெங்கட்ராம் 11.படைப்புக்கலை-அசோகமித்திரன் 12.பண்பாட்டின் பல கணி-ஸ்டாலின் ராஜாங்கம் 13.நட்ராஜ் மகராஜ்-தேவி பாரதி

பூமியெங்கும் பூரணியின் நிழல்: குமாரநந்தன்

Image
இலக்கியத்தில் இன்று அதிகம் கையாளப்படும் வடிவங்களில் ஒன்றாக சிறுகதை இருக்கிறது. சிறுகதை அல்லது நாவல் போன்ற இலக்கிய வடிவங்களை வாழ்க்கை அனுபவங்களின் மீதான கற்பனைகளின் ஒட்டுவேலை என்றே சொல்லலாம். சில கதைகளுக்கு முடிவு என்பது கட்டாயம் தேவையுமில்லை. அதை வாசகர்களின் யூகத்திற்கும் அவர்களிடம் விட்டு விடுவதும் ஒரு யுக்தி. குமார நந்தனின் வெளிறிய அந்திமாலை சிறுகதையில் கணவனை இழந்தும், வேலை கிடைத்து வெளியூரில் தங்கி விட்ட மகனும் இன்றி தனிமையில் இருக்கும் கோமதியம்மாள் தனக்கு வீட்டுப் பொருட்கள் வாங்க உதவி செய்யும் தாமோதரனுடன் காணும் கனவு பூடகமானது.  மொத்தம் பதினைந்து கதைகள் இருக்கும் இத்தொகுப்பில் விபத்து கதை நீங்கலாக பதினான்கு கதைகளும் பொருட்படுத்த தகுந்தவை. இந்த வாழ்க்கைக்குள் அடைபட்டு சிக்கலுற்றும் சிரித்தும் வாழும் மனிதர்களின் கதைகளைத் தான் குமாரநந்தனும் எழுதியிருக்கிறார். ஆனால் அத்தனை கதைகளின் கற்பனையிலும், சிருஷ்டிப்பிலும் நாம் அறிந்த மனிதர்களின் வாழ்க்கையை கதையாக்கிய விதத்திலும் நேர்மை போக்கு இருக்கிறது.  முக்கியமாக பெண்களின் மன உலகை,பாலியல் வேட்கைகளை, உளப் பிறழ்வுகளை முடிந்தவரை நேர்மையாக அணுயிர

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

Image
 திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர் எண்பது ஆண்டுகளுக்கு முன் சத்தியாகிரக போராட்டத்தில் சிறை சென்ற ஒருவரால் அன்றைய சக சிறைவாசியாக இருந்த தலைவர்கள், சிறையின் சூழல் குறித்து எழுதப்பட்ட  சிறை நினைவுகள் குறித்த ஒரு புத்தகம் இன்றைய தலைமுறை  வாசகனுக்கு ஒரு வித சுதந்திர வரலாற்று தரவுகள் குறித்த வறட்டுத் தன்மையை அளிப்பதாக இருக்குமோ என்ற எண்ணத்தை இந்த நூல் முதலில் உடைக்கிறது. சிறையில் கைதியாய் வாழ்ந்தவர் அதன் நினைவுகளை சிறை என்பது சித்திரவதைகளை அளிக்கும் ஒரு இடம் என்ற வழக்கொழிந்த வார்த்தைகளை எல்லாம் ஒதுக்கி விட்டு சக சிறைவாசிகளின் குணநலன்கள் குறித்தும், அவர்களுடனான நட்பு குறித்தும் முழுக்க ஹாஸ்யம் கலந்த ஒரு கேலி மொழியில் தன்னுடைய சிறை நினைவுகளை எழுதியுள்ளார் எஸ்.எல்.  கரையாளர். இந்த புத்தகம் வெறும் ஒரு சிறை நினைவுகளின் தொகுப்பு என்பதைத் தாண்டி அன்றைய காலத்தை அப்போதிருந்த அரசியல் நிலை, சிறைச் சூழல் போன்றவற்றை பிரதிபலிக்கும் ஒன்றாகவும் இருக்கிறது. ராஜாஜி,டி.எஸ்.சொக்கலிங்கம் (முன்னாள் தினமணி ஆசிரியர்,போரும் வாழ்வு நூலினை தமிழில் மொழிபெயர்த்தவர்) இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் கே.சந்தானம்,பசும்பொன் முத

மீன்காரத்தெரு-கீரனூர் ஜாகிர்ராஜா

Image
 மீன்காரத் தெரு: கீரனூர் ஜாகிர்ராஜா இஸ்லாமிய சமூகத் தின் இறுக்க வாழ்வியலையும்,அதன் மீது போர்த்தப்பட்டிருந்த புனிதப் போர்வையை கொஞ்சம் விலக்கி அதனை நிர்வாணத் தன்மையுடன் வெளிப்படுத்தக்கூடிய படைப்புகள் என்று நான் வாசித்த வரை கீரனூர் ஜாகிர்ராஜாவின் வடக்கே முறி அலிமா நாவலையும்,மீன்காரத் தெரு நாவலையும் குறிப்பிடுவேன். வடக்கேமுறி அலிமாவில் வரும் அலிமா பாத்திரம் இது வரை நம் பொதுபுத்தியிலிருந்த இஸ்லாமிய பெண் சித்திரத்தின் ஒரு உடைந்த பிரதி. பல ஆண்களை புணரும் ஒழுக்கப் பிறழ்வும்,மனப் பிறழ்வும் கொண்டவளின் வாழ்க்கை வதையின் கதையாக நீளும் ஒரு இலக்கியப் பிரதியாக வடக்கேமுறி அலிமா நாவலை வகைபடுத்தலாம். மீன்காரத் தெருவில் வரும் அமீனா பங்களாத் தெரு மேல்தட்டு முஸ்லிம் சலீம் என்பவனால் உடல் சுரண்டலுக்கு உள்ளாகும்  தாழ்ந்த முஸ்லீம் பெண்ணாக வந்தாலும் வடக்கே முறி அலிமாவில் வரும் அலிமாவுக்கும், மீன்காரத்தெருவில் வரும் அமீனாவுக்கும் குண முரண்கள் உண்டு என்றாலும் இருவரும் அதே சமூகத்து ஆண்களால் வஞ்சிக்கப்படுபவர்கள்.  இஸ்லாம் சமூகத்திற்குள்ளேயே உள்ள லெப்பை,ராவுத்தர் பிரிவுகளை உள்ளடக்கிய பங்களாத் தெரு முஸ்லீம் மற்றும் மே