Posts

Showing posts from November, 2020

சாயாவனம்

Image
 ///சா.கந்தசாமியின் சாயாவனம் நாவலை முன்வைத்து எழுத்தாளர் சா.கந்தசாமி அவர்களை ஜனவரி மாதம் நடந்த சென்னை புத்தக திருவிழாவில் சந்தித்துப் பேசக் கூடிய ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சா.கந்தசாமியின் படைப்புகளில் தக்கையின் மீது நான்கு கண்கள் சிறுகதையும்,இரணிய வதம் சிறுகதையும் எனக்கு நெருக்கமானவை. தக்கையின் மீது நான்கு கண்கள் சிறுகதையில் ஒரு தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையே மீன் பிடிப்பதில் ஏற்படும் மன தன் முனைவை(Ego) எழுத்தில் காண்பித்திருப்பார் சா.கந்தசாமி. தன்னிடமிருந்து பிரிந்து வேறு இடத்தில் ராமு மீன் பிடிக்க தூண்டில் போடுவதிலிருந்தே தாத்தா மாணிக்கத்திற்கு பேரன் ராமு மீது Ego வளர ஆரம்பித்து விடுகிறது. வாளை மீனை தன்னால் பிடிக்க முடியவில்லை என்ற கழிவிரக்கத்தில் தன் மனைவி மீதும்,பேரன் ராமு மீதும் கிழவர் மாணிக்கம்  கோபத்தைக் காட்டுகிறார். தான் பிடிக்க முடியாத பெரிய வாளை மீனை ராமு ஒருநாள் பிடித்து விடுவதை அவனுடைய பாட்டி பெருமையாக மாணிக்கத்தை அழைத்துச் சென்று காட்டும் போது  மாணிக்கம் ராமுவின் தோள் மீது கை வைத்து மெதுவாக அவரின் கைகள் காது நோக்கி தலையை உரசிச் செல்லும் போது தன்னுடைய பாட்டியின் ப

பனி மனிதன்

Image
 ///ஜெயமோகன் எழுதிய "பனி மனிதன்" நாவலை முன்வைத்து தமிழில் குழந்தை இலக்கியத்தின் முன்னோடி என்று ஆத்திச்சூடி எழுதிய அவ்வையாரைச் சொல்லலாம். சமகாலத்தில் குழந்தைகளுக்கான நூல்களை யூமா வாசுகி, பாவண்ணன் ஆகியோர் கணிசமான அளவு எழுதி வருகிறார்கள். தொடர்ச்சியாக சிறுவர்களின் செயல்பாடுகள்,வளர்ச்சித் திறன்,சிறுவர்களுக்கான கற்பித்தல் திறன் குறித்தும் தும்பி சிறுவர் மாத இதழ் வழியாக மிக முக்கிய பங்கை செய்து வருகிறார் காந்திய செயற்பாட்டாளர் திரு.சிவராஜ் அவர்கள். சிறுவர்களுக்கான நூல் என்ற வகையில் ஒரு முக்கியம் பெற்ற நாவலாக ஜெயமோகன் எழுதிய பனிமனிதன் நாவலை கூறலாம். இமயமலையில் வாழ்வதாக கூறும் யதி எனும் பனி மனிதனை தேடிய பயணம் தான் முழு நாவலும். நேபாளம்,மியான்மர் போன்ற நாடுகளில் பனி மனிதன் இருப்பதாக இன்றும் நம்பப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு இந்திய ராணுவம் பனி மனிதனின் காலடித் தடத்தை வெளியிட்டு ஒரு சர்ச்சையை கிளப்பியது. பனி மனிதன் இமயமலையில் இருப்பதாக கூறப்படும் ஒரு புராதான நம்பிக்கையை அடிப்படையாக வைத்துதான் ஜெயமோகன் இந்த பனிமனிதன் நாவலை எழுதி இருக்கிறார். மேஜர் பாண்டியன், டாக்டர் திவாகர், மற்றும் கிம்சுங

அறிந்ததினின்றும் விடுதலை

Image
 ///ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களை வாசிப்பது என்பது வெறும் வாசிப்பு என்ற செயலுக்குள் சுருக்கிவிட முடியாத அகத்தை தூய்மை செய்து கொள்ளும் ஒரு அகக்கலை என்றே சொல்வேன். உங்களையே நீங்கள் உற்று அவதானித்து உங்களையே நீங்கள் உள் விசாரணை செய்து கொள்ளும் ஒரு உயர் கலைவடிவங்களே அவரது எண்ணங்களும்,கருத்துக்களும். மானுட உளவியலின் அத்தனை சிக்கல்களையும் ஆன்மீக அறிவியலோடு அணுகக் கூடியவை ஜே.கிருஷ்ணமூர்த்தியின் ஆழ்மனச் சொற்களும்,சொற்பொழிவுகளும். ஜே.கிருஷ்ணமூர்த்தியின் சொற்பொழிவுகளில் முதன்மையானதாக போற்றப்படுவது அறிந்ததினின்றும் விடுதலை (Freedom from the unknown) எனும் இந்த நூல் தொகுப்பே. உங்கள் மனதின் மேன்மைகளை, கீழ்மைகளை,விகாரங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளவும்,உங்கள் அகத்தை அகலப்படுத்திக் கொள்ளவும் ஒருமுறையேனும் ஜே.கிருஷ்ணமூர்த்தியை வாசியுங்கள்/// velu malayan 8.11.2020 ❤️❤️❤️❤️