குழந்தைப் பாடல்கள்

குழந்தைப் பாடல்கள்: முன்னோடிகள்&வகைகளும் வளச்சியும்: செல்ல கணபதி & பாவண்ணன்.



நாம் குழந்தைகளாக இருக்கும் போதிருந்தே தாலாட்டு வடிவில் பாடல் கேட்டு வளர்கிறோம்.பெரியவர்களால் கதை அல்லது விடுகதை வடிவில் கதைகளும் கேட்டு வளர்கிறோம் என்றாலும் குழந்தைகளுக்கு பாடல் வடிவமும் அதன் தாளமும் விரைவில் அவர்கள் உள்வாங்க கூடியதாக இருக்கிறது.

முதன்முதலாக 1908 ஆம் ஆண்டு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களே குழந்தைகளுக்காக பாடல்கள் எழுதினார்.ஏறத்தாழ அறுபது பாடல்கள் எழுதி ‘குழந்தைச் செல்வம்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டார்.

குழந்தை இலக்கியத்தில் ஒரு பெரும் புரட்சி ஏற்படுத்தியவர் கவிஞர் அழ. வள்ளியப்பா.அதற்குப் பிறகு குறிப்பிடத்தகுந்த குழந்தை பாடல்களை குழந்தைகளுக்கான நூல்களை எழுதியவர் பெரியசாமி தூரன்.எழுத்தாளர் பாவண்ணன் அவர்களும் இப்பொழுது குழந்தைகளுக்கான நூல்களை எழுதி வருகிறார்.

இந்த நூல் குழந்தை இலக்கியம் மற்றும் குழந்தைகளுக்கான பாடல்களின் வளர்ச்சி குறித்தும் அதன் முன்னோடிகள் குறித்தும் விவாதிக்கிறது.


தாளம்  இல்லாமல் குழந்தையின் வளர்ச்சி இல்லை.குழந்தையின் வளர்ச்சியில் எல்லா காலகட்டத்திலும் தாளம் இருக்கும். அதன் பேச்சு கூட அடிப்படையில் ஏதோ ஒரு தாளத்துக்கு உட்பட்டதாகவே இருக்கும். தன் கற்பனையாலும் கேள்விஞானத்தாலும் கண்டுபிடித்த தாளத்தை சதாகாலமும் உருட்டிக்கொண்டே இருக்கும். சிரிப்பதற்கும் அழுவதற்கும் ஓடுவதற்கும் நடப்பதற்கும் கூட தனித்தனி தாளம் இருக்கிறது என்பதை குழந்தை தானாகவே உணர்ந்துகொள்கின்றது.

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்