Posts

Showing posts from July, 2020
Image
///எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய "பதின்" நாவலை முன்வைத்து நாம் ஒவ்வொருவருக்குள்ளும்  அவரரவர்களுடைய பால்ய பருவ நினைவுகள் கட்டாயம் இருக்கும். நாம் தொலைத்த அந்த பால்ய காலத்தின் நினைவுகளில் நம் மனம் வாழ்ந்து பார்க்கக் கூடிய ஒரு வாய்ப்பை வழங்குகிறது இந்த பதின் நாவல். நம் அறிவாளித்தனத்தையும், மேதாவி மனதையும் கழட்டி வைத்துவிட்டு நமக்குள் மிச்சமிருக்கும் குழந்தைத்தன மனதின் கண்களால் வாசிக்க வேண்டிய நாவல் இது. இந்நாவலில் வரும் நந்துவும்,சங்கரும் யாரோ இரண்டு சிறுவர்கள் அல்ல. நீங்களும்,நானும் தான். சிறுவர்களின் உலகம் தனித்துவமானது.அங்கே பெரியவர்கள் அவ்வளவு எளிதில் நுழைந்து விட முடியாது. நாம் பெரியவர்களாக வளர வளர நமக்குள்ளிருக்கும் குழந்தைத்தனங்கள் வற்ற ஆரம்பித்து விடுகிறது. என் பால்ய காலம் நடு நாக்கில் வைத்ததும் கரைந்து இனிக்கும் சோன் பப்டியைப் போன்றது தான்.ஆனால் அதை கசப்பாக்கியது பள்ளி தான். ஒரு நாள் எங்கள் ஊர் வறட்டாறு மணலில் விளையாடிக் கொண்டிருந்த என்னை என் அப்பா வாடா சேலத்திலுள்ள அத்தை வீட்டுக்குப் போகலாம் எனச் சொல்லி அழைத்துக் கொண்டுப் போய் தீர்த்தமலையிலுள்ள அரசு ஆரம்ப
Image
///இரா.ஆனந்தகுமார் எழுதிய நான்காம் தடம் நூலை முன்வைத்து மனம் மேய்ச்சல் மாட்டைப் போல இடைவிடாது அலைந்து கொண்டும், எதன் மீதாவது தன்னை முட்டிக் கொண்டு அவதிப்பட்டுக் கொண்டும் இருப்பதிலிருந்து வெளியேற ஆன்மீகம் சார்ந்த புத்தகங்களை,ஆன்மீக ஞானிகளின் உரையாடல்களை வாசிக்கத் தொடங்கினேன். அப்படி என்னைப் பெரிதும் பாதித்தவர் ரமண மகரிஷி.அவருடைய Who Am I? (நான் யார்?) வாசித்தது என் அகத்திறப்பிற்கான வழி என்றே சொல்லலாம். தொடர்ந்து அவருடைய வாழ்க்கை வரலாறு,அவர் நிகழ்த்திய உரைகள் என என் மனம் அவரை உற்று அவதானிக்கத் தொடங்கியது. அதன் பிறகு நான் விரும்பி வாசித்தது ஓஷோவின் நூல்கள்.ஓஷோ பயணங்களின் மூலம் பல்வேறு மனிதர்களின் மதங்களை கடந்த அகத் தேடலில் வாழ்ந்தவர். நாம் இதுவரை கட்டிவைத்திருந்த அத்தனை நம்பிக்கைகள் மீதும் கல்லெறிந்தவர். எதுவெல்லாம் புனிதம் என நம் பொது புத்தி பொத்தி வைத்திருந்ததோ அதை அத்தனையும் தன் உள் மன உரைகளால் உதைத்தவர். தன் உரைகளில் காமத்தை வெளிப்படையாய் பேசிய கலகக்காரர். நான் விரும்பி வாசிக்கக் கூடிய மற்றொருவர் ஜே.கிருஷ்ணமூர்த்தி. மனிதர்களுக்கு தேவை மாற்றமல்ல விழிப்புணர்வே என்
Image
///இந்த வருடம் பயணம் தொடர்பான ஏ.கே.செட்டியாரின் "இந்தியப் பயணங்கள்", "குடகு" மற்றும்  வெ.சாமிநாத சர்மா எழுதிய "எனது பர்மா வழி நடைப்பயணம்" போன்ற நூல்களை வாசித்திருக்கிறேன். ஒரு இளைஞனின் பயணத்தைப் பற்றி Sean Penn இயக்கிய In to the Wild படத்தையும் பார்த்திருக்கிறேன்.பணம் குடும்பம் என எல்லாவற்றையும் துறந்து ஒரு அடையாளமற்ற மனிதனாக அலாஸ்கா நோக்கி பயணம் செல்லும் ஒரு இளைஞனின் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம். இடுப்புக்கு கீழே மட்டுமே வாழ்க்கை இருக்கிறது என நாம் வாழும் சராசரியான,சலிப்பான இந்த வாழ்க்கையைத் தாண்டி வாழ்க்கைக்கான அர்த்தத்தை புரிந்து கொள்ளுவதற்கான அகத் தேடலை  உணர்த்தும் படம் In to the Wild. நாம் ஒரே இடத்தில் ஒரே மாதிரி வாழும் வாழ்க்கைச் சார்ந்த குறுகிய மண் பரப்பையும்,மனப்பரப்பையும் விரித்துக் கொள்வதற்கான வாய்ப்பை பயணமே வழங்குகிறது என்பது என் எண்ணம். பயணம் என்பது இந்த பூமியின் பல்வேறு பக்கங்களை பாதங்களால் வாசிக்கும் ஒரு கலை. அது புதிய மண்ணை, புதிய மனிதர்களை,புதிய கலாச்சாரங்களை,புதிய உணவை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது
Image
///எழுத்தாளர் சயந்தன் எழுதிய "ஆறாவடு" நாவலை முன்வைத்து ஈழப் போருக்கு முன்பாகவே புலம்பெயர்ந்து வாழக்கூடிய நிறைய தமிழர்களின் குற்றவுணர்ச்சியோடு சயந்தன் தன்னுடைய தாழாத குற்றவுணர்ச்சியையும் ஆற்றிக்கொள்ள எழுதப்பட்டதே ஆதிரை நாவல். ஆதிரை நாவலின் கடைசி அத்தியாயத்தில் சந்திரா டீச்சரிடம் பயின்ற பழைய மாணவனாகவும், சந்திரா டீச்சர் எப்படி இறந்தார் என கேட்கும் பத்திரிகையாளராகவும் சயந்தன் வருவது அந்த ஒரு குற்ற  உணர்ச்சியின் உறுத்தல் தான். அரசியலற்ற மக்களின் வாழ்வில் போர் நிகழ்த்திய பேரழிவையும், போரின் வலியைப் பதிவு செய்ததிலும் தமிழ் பேரிலக்கியங்களில் ஆதிரை ஒரு வலுவான வார்ப்பு என்பது என் எண்ணம். முப்பதாண்டு கால தமிழீழ மக்களின் போர் அச்சுறுத்தல்,அலைக்கழிப்புகள் இடப்பெயர்வுகள்,இனப்படுகொலைகள் என இறுதி யுத்தம் வரையிலான இழப்புகளை ஆதிரை நாவல் பேசியது. ஆறாவடு நாவல் 1987 மற்றும் 2003ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட இரண்டு அமைதிக்கான காலங்களுக்கு இடையேயான காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளின் புனைவுக் கதை. புலிகள் இயக்கத்தில் இருக்கும் பொழுது தனது வலது காலை இழந்த ஐயாதுரை பரந்தாமன் என்ற இயற்பெயர் க
Image
///நான் இதுவரை வாசித்த ஆக்கங்களில் வாசித்து முடிக்க முழுமையாய் முழு மாதத்தை எடுத்துக்கொண்ட நாவல் அசடன் தான் என நினைக்கிறேன். தஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலை குறுகிய நாட்களில் வாசித்து முடித்த என்னால் அசடன் நாவலை அவ்வளவு எளிதாகவும்,விரைவாகவும் வாசிக்க முடியவில்லை. மனித மனங்களின் இருண்மையான இடங்களில் இறங்கி நடந்து பார்த்தவர் தஸ்தயெவ்ஸ்கி. மனித மன உளவியலின் ஒட்டுமொத்த வெளிப்பாடுகளையே அவரின் எழுத்துக்கள் பேசுகிறது. தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புகளை வாசிக்கும் ஒரு வாசகன் சகித்துக் கொள்ள முடியாத அகச் சலிப்பையும்,அக நடுக்கத்தையும் அடைந்தாலும் இறுதியில் வாசக மனம் ஒரு திறப்பை பெறுகிறது என்பதே என் எண்ணம். குற்றமும் தண்டனையும் நாவலில் கொலை செய்துவிட்ட ரஸ்கோல்னிவ் என்ற இளைஞனின் அக போராட்டத்தை எழுதிய தஸ்தயெவ்ஸ்கி அசடன் நாவலில் மிஷ்கின் என்ற பெயர் கொண்ட ஒரு அசட்டு இளவரசனின் மனத்தூய்மையை,எவரோடும் முரண்படாமல் அன்பு செய்யும் ஒரு குழந்தைமை குணக்காரனின் மன உருவத்தின் உயரத்தை,அவன் மன உயரத்தின் வீழ்ச்சியை விவரிக்கிறார். இந்த நாவலில் வரும் மிஷ்கின் இயேசு நாதரைப் போன்றவன்.புத்தரைப் போன்