Posts

Showing posts from May, 2023

கருப்பு வெள்ளை

Image
கருப்பு வெள்ளை கலந்த நிறம் எல்லா நிறங்களையும் தனக்குள் விழுங்கி நிழல் நிறத்தில் நிற்கும் ஒரு நிறம்.அது கண்களின் நிறம்.கருப்பு நிறம் எனக்கு எப்போதும் பிடித்த நிறம் .

விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா 2021

Image
 ///நான் கலந்துகொண்ட முதல் விஷ்ணுபுரம் விருது விழா இது. இலக்கியத்தில் ஆழப் பங்காற்றிய படைப்பாளிகளுக்கு ஆண்டுதோறும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தால் விஷ்ணுபுரம் இலக்கிய விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருது கவிஞர் விக்ரமாதித்யன் நம்பி அவர்களுக்கு வழங்கப்பட்டது.  இரண்டு நாட்கள் நடந்த நிகழ்வில் பல்வேறு எழுத்தாளர்களை காணும் வாய்ப்பு கிடைத்தது. படைப்பாளிகளும்,வாசகர்களும் உரையாடல் வழியே இலக்கிய படைப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளும் ஒரு அறிவுப் பெருக்கின் களமாக விஷ்ணுபுரம் விருது விழா இருந்தது. தொடர்ந்து  வாழ்வை சூழ்ந்து கொண்டேயிருக்கும் அன்றாட சிடுக்குகளைத் தாண்டி சிந்திக்காதவர்கள், பணம்,பொருளீட்டல் வழியே வசதி பெருக்குதலை மட்டுமே வாழ்வின் முதன்மையான கொள்கையாக கொண்டிருக்கும் ஒரு சராசரி செக்கு மாட்டு வாழ்வைத் தாண்டிய ஒரு அறிவார்ந்த சமூகத்தை இலக்கியம் வழியாக, உரையாடல் வழியாக உருவாக்கிக்கொண்டிருக்கிறார் ஜெயமோகன். பதினோரு வருடங்களாக விஷ்ணுபுரம் இலக்கிய விருது வழியாக பல்வேறு படைப்பாளிகளுக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுத்து வருகிறது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம். கலந்துரையாடலில் கலந

பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்

Image
 மயிலன் ஜி.சின்னப்பன் எழுதிய பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் நாவலை முன் வைத்து: மருத்துவ மேற்படிப்பு படிக்கும் பிரபாகரன் என்ற மாணவனின் தற்கொலையை அவன் மரணத்திற்கு பின்பாக அவனைச் சுற்றியுள்ளவர்களின் ஒவ்வொருவரின் பார்வைகளின் வழியாக தற்கொலைக்கான காரணங்களை பல்வேறு கோணங்களில் பதிவு செய்கிறது நாவல். ஒரு வகையான குற்றப்புலனாய்வு நாவல் போன்று தோன்றினாலும் உள்ளே உளவியல் நோக்கு தன்மை கொண்ட நாவல் இது. மயிலன் அடிப்படையில் மருத்துவர் என்பதால் மருத்துவ உலகம் குறித்த விவரணைகள்,விஷயங்கள் எல்லாம் நமக்குள் ஒரு வித நம்பகத்தன்மையை உண்டாக்கி விடுகிறது. நாவலில் மயிலன் கையாளும் மொழி சாதாரண மொழி தான் என்றாலும் நாவலுக்கான தேவை மீறாத கச்சிதமான மொழியையும், வரிகளையும் மயிலன் பயன்படுத்தியுள்ளார். ஒரு விபத்தில் ஏற்படும் மரணமோ அல்லது இன்ன நோயில் தான் இறந்தார் என்ற வகையிலான மரணமோ அந்த மரணத்திற்கான மேலான காரணங்களை  சமூகம் வேண்டி நிற்பதில்லை. ஆனால் தற்கொலை அப்படி அல்ல.அது சமூகத்தின் வாய் அசைபோட நிறைய விஷயங்களை விட்டுச் சென்று விடுகிறது.அப்படி ஒருவனின் தற்கொலையை அவரவர் வசதிக்கேற்ப அவர்களுடைய மனங்கள் உளவியல் பார்வையில் அணுகுவத