Posts

Showing posts from March, 2021

அனல் காற்று

Image
 ///ஜெயமோகனின் அனல் காற்று நாவலை முன்வைத்து ஆண் பெண் உறவின் சிக்கலை,அதன் உள்ளிருக்கும் காமத்தை,அதன் உளவியலை தமிழில் சற்றே நெருங்கி எழுதிய எழுத்தாளர் என தி.ஜானகிராமனைச் சொல்லலாம். இது நாள் வரை சமூகம் சரியென கட்டி வைத்திருக்கும்  ஒழுக்க விதிகளின் மீறல் தான் தி.ஜா படைப்புகளின் அடிநாதம். மனித மனம் எதையும் மீறிப் பார்க்க திரியும் ஒரு மிருகம்.மீறல் ஒரு சுவாரஸ்யம்.மீறல் ஒரு துடுக்குத் தனம்.மீறல் ஒரு  சாகசம். அருண் என்பனின் அந்த மீறல் தான் அனல் காற்று நாவலின் உள்ளிருக்கும் வெப்பம். அடுத்து தமிழில் குறைவாக எழுதினாலும் மனித மனங்களின் அடித்தளங்களில் இருந்த சின்ன தனங்களையும், காமத்தையும் வெளிப்படையாய் எழுதியவர் எழுத்தாளர் ஜி.நாகராஜன். குறி நுழைத்தலும்,குறி நுழைத்துக் கொள்ளுதலும் மட்டுமே குறிக்கோளாய் இருந்த ஆதி குரங்கினத்தின் நாகரிக நகல்கள் நாம். ஆண் பெண் கூடி வாழ்தலின் மைய விசையாக இருப்பது காமம் தானே. காமத்தை வெளிப்படையாய் ஏற்றுக் கொள்ள தயங்கும் சமூகம் இது. ஒருவனின் சூழலும்,வாழிடமும் தான் அவனை வழி நடத்துகிறது.அப்படி பெண்கள் மத்தியில் வளர்க்கப்படும் ஒருவனின் காதலும்,காமமும் கலந்த Extra martial affa

செல்லாத பணம்

Image
 ///எழுத்தாளர் இமையத்தின் செல்லாத பணம் நாவல் குறித்து 2009 ஆம் ஆண்டு என்னுடைய அண்ணன் மணிவண்ணன் திருமணமான குறுகிய நாட்களிலேயே திருமண வாழ்வில் அவனுக்கு ஏற்பட்ட கசப்பின் காரணமாக தற்கொலை செய்து கொண்டான். முதுகலை தமிழ் இலக்கியம் படித்து அரசு ஆசிரியராக வாழப்பாடியில் பணியாற்றிக் கொண்டிருந்த என் அண்ணன் ஒரு நாள் பள்ளிக்குச் செல்கிறேன் என்று வாழப்பாடி  சென்றவன் வீடு திரும்பாமல் காணாமல் போனான். ஒரு வார காலம் எங்கு தேடியும் கிடைக்காத என் அண்ணன் வாழப்பாடியில் உள்ள ஒரு சோளக்காட்டில் அழுகிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டான். சோள காட்டில் சோளத்தட்டு அறுத்து கொண்டிருந்தவர்கள் சோளக் கொல்லையிலிருந்து துர்நாற்றம் வருவதை அறிந்து காவல்துறைக்கு தெரிவித்து இறந்து கிடப்பது என் அண்ணன் தான் என்று உறுதி செய்தார்கள். சேலம் அரசு மருத்துவமனையில் கிட்டத்தட்ட ஒன்றரை நாட்கள் பிணவறையின் முன்பாக எங்கள் குடும்பம் பிணமாக நின்று கொண்டிருந்தது. அதிகுளிரூட்டப்பட்ட பிணங்களை கிடத்தி வைத்திருக்கும் ஒரு அறைக்குள் நுழைந்து பார்த்தபோது தலை பிளந்த நிலையில் ஒரு பிணம்,பஸ்ஸோ அல்லது லாரியோ ஏறி பாதி சிதைந்த உடலுடன் கூடிய  ஒரு பிணம் என

திமிங்கல வேட்டை(Moby Dick)

Image
 ///ஹெர்மன் மெல்வில்(Herman Mellvile) எழுதிய திமிங்கல வேட்டை(Moby Dick) நாவலை முன் வைத்து கடற்பயண புனைவு நாவல்களில் எப்போதும் என் விருப்பத்திற்குரியது எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் "கிழவனும்,கடலும்" நாவல் என்பேன். சாண்டியாகு எனும் மீன் பிடிக்கும் கிழவனுக்கும்,இயற்கைக்கும் இடையே நிகழும் போராட்டத்தை ஹெர்னஸ்ட் ஹெமிங்வே  எழுதி அந்நாவலுக்காக நோபல் பரிசும் பெற்றார். நடு சமுத்திரத்தில் ஒரு ராட்சத மீனுக்கும்,கிழவனுக்கும் நடக்கும் போராட்டத்தை சாகச உணர்வுகள் மோலோங்க எழுதப்பட்ட ஒரு சிறந்த நாவல் கிழவனும் கடலும். ஒரு வயதான கிழவனின் தன்னம்பிக்கையும்,மன போராட்டத்தையும் மையப்படுத்தி எழுதப்பட்ட நாவல் அது. கிட்டத்தட்ட கிழவனும்,கடலும் நாவலைப் போலவே கடற்பயணத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ள நாவல் திமிங்கல வேட்டை(Moby Dick). நீண்ட நாட்கள் மீன் கிடைக்காத ஒரு கிழவன் தன்னை ஒரு  மீனவன் என நிரூபிக்க கடலுக்குள் பயணம் செய்து மீன் பிடித்து வரும்  வைராக்கிய உணர்வை அடிப்படையாக கொண்ட கிழவனும் கடலும் நாவலைப் போல, திமிங்கல வேட்டை(Moby Dick) நாவல் ஒரு வெள்ளை திமிங்கலத்தால் (Moby Dick) தன் ஒரு காலை இழந்த ஆகாப் என்

யாத்வஷேம்

Image
 ///கன்னடத்தில் நேமிசந்த்ரா எழுதி கா.நல்லதம்பி தமிழில் மொழிபெயர்த்த "யாத்வஷேம்" நாவலை முன்வைத்து கன்னட படைப்புகள் எப்பொழுதுமே விஷயகனமும்,கலை கனமும் கொண்டவை என்பதற்கு இன்னுமொரு சான்று இந்த யாத்வஷேம் நாவல்.  யாத்வஷேம் என்ற சொல் "ஹிட்லரின் நாஜி வதை முகாம்களின் விவரம்,வதை முகாம்களில் கொல்லப்பட்ட யூதர்களின் பெயர்கள் மற்றும் விவரங்களை கணினியில் பாதுகாத்து வைத்திருக்கும் ஜெருசேலமில் உள்ள ஒரு நினைவுச்சின்னம் மற்றும் ஆவண காப்பகத்தின் பெயரைக் குறிக்கிறது". 1943ல் இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லரின் இன வெறி காரணமாக ஒரு யூத  சிறுமி தன் தாய்,அக்கா,தம்பி ஆகியோரை பிரிந்து விஞ்ஞானியாக இருக்கும் தன் தந்தையுடன் ஹிட்லர் மண்ணிலிருந்து காந்தி மண்ணிற்கு வருகிறாள். அந்த சிறுமிக்கு பெங்களூரில் உள்ள ஒரு இந்து ஒக்கலிகர் குடும்பம் அடைக்கலம் கொடுக்கிறது.  ஹ்யானா மோசஸ் என்ற அந்தப் பெண்ணின் பெயரை அனிதா என்று பெயர் மாற்றி அவளை அந்த வீட்டுப் பையன் விவேக் உடன் திருமணம் செய்து வைத்து அவளை ஒரு இந்து பெண்ணாக மாற்றி விடுகிறார்கள். உடலளவில் மட்டுமே அவள் ஒரு இந்து பெண்ணாக மாறுகிறாள்.அவள் உள்ளத்தில் அவள்

இக்கிகய்(ikigai)

Image
 ///Hector Garcia and Francesc Miralles எழுதிய இக்கிகய்(ikigai) நூலை முன்வைத்து அலுவலக நாட்களில் என் அலுவலகத்தின் முன்னால் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடிப்பது வழமை. அப்படி ஒரு நாள் நானும் என்னுடன் பணிபுரியும் நண்பர் ரமேஷ் அவர்களும் டீ குடித்துக் கொண்டே அந்த டீ கடைக்காரரிடம் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவர் அவருடைய பையனை பற்றி பேச ஆரம்பித்தார். என் பையனுக்கு உங்க வயசு தான் சார் ஆகும் என்று என்னை காட்டி பேசினார். உங்க பையனுக்கு என்ன வயது என்று நான் கேட்டேன்.43 என்று சொன்னார்.பக்கத்தில் இருந்த ரமேஷ் என்னை பார்த்து சிரிக்க தொடங்கினார். தொண்டையில் இறங்கிய டீ எனக்கு கசக்கத் துவங்கியது. முடி விழுந்த வழுக்கை தலை,சற்று உயரமான உருவம், தாடைகளை எப்போதும் தாயகமாக கொண்டிருக்கும் மழிக்காத தாடி இவை எல்லாம் நான் சற்று வயது கூடியவன் என்பதற்கான அவருடைய அனுமானிப்பிற்கு காரணமாக இருந்திருக்கலாம். எனக்கு இப்போது 35 வயது தான் ஆகிறது என்று டீ கடைக்காரரிடம் சொல்லி விட்டு நானும்,நண்பரும் அலுவலகத்திற்குள் நுழைந்தோம். சிறுவயதிலேயே வயதை தாண்டி மூப்படைந்தவராக நம் உருவம் மாறுவதற்கு இந்த அவசர கதியான புழுதிப்பாய்ச்சல்