Posts

Showing posts from April, 2020
Image
எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் "கிழவனும் கடலும் "நாவலை முன்வைத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கேசவரெட்டி எழுதிய "அவன் காட்டை வென்றான் " என்ற நாவலை வாசித்து விட்டு அந்நாவலைப் பற்றி என் நண்பர்களிடம் சிலாகித்து பேசியிருக்கிறேன். ஒரு வயதான கிழவன்,ஒரு காடு, குட்டிகள் ஈன்ற ஒரு தாய்ப்பன்றி இவைகள் மட்டும் தான் நாவலில் வருபவைகள். தான் வளர்க்கும் சினை பன்றி வழி தவறி காட்டுக்குள் சென்று ஒரு புதரில் குட்டிகள் ஈன்று உள்ளதை கண்டுபிடித்து பன்றியையும், குட்டிகளையும் வீட்டுக்கு அழைத்து வர ஒரு கிழவனுக்கும்,பன்றிக் கும், பன்றியை கொல்ல  வரும் நரிகளுக்கும் இடையே ஓர் இரவில் நடக்கும் போராட்டம் தான் நாவல்.  அவன் காட்டை வென்றான் நாவலோடு ஒப்பிடக்கூடியதாகவே இருக்கிறது எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் "கிழவனும் கடலும் "நாவல் காட்டை வென்றான் நாவலின் களம் காடு.கிழவனும் கடலும் நாவலின் களம் கடல்.இரண்டு நாவலிலும் பொதுவான ஒன்று இரண்டு கிழவர்களும் இயற்கையோடு போராடுகிறார்கள். (எர்னெஸ்ட் ஹெமிங்வே) "அவன் காட்டை வென்றான்" நாவலில் தனது பன்றி மற்றும் அதன் குட்டிகளை உயிருடன் மீட்க கடைச
Image
///கி.ராஜநாராயணன் எழுதிய கோபல்லபுரத்து மக்கள் நாவலை முன்வைத்து சிறுவயதில் கதைகள் கேட்டு வளர்ந்தவன் நான்.என்னுடைய தாத்தம்மா (அம்மாவை பெற்றவள் ) தான் எனக்கு நிறைய கதைகள் சொல்லுவாள். என்னுடைய தாத்தம்மா பிறந்த ஊர் ஊத்தங்கரைக்கு அருகிலுள்ள நாயக்கனூர்.அவளுடைய சிறு வயதில் அவளுடைய அண்ணன்களுடன் சேர்ந்து பார்த்த நிறைய சினிமாப் படங்கள், அவள் கேட்ட கதைகள் என நிறைய கதைகளை எனக்கு சொல்லுவார். அலிபாபாவும் 40 திருடர்களும், குலேபகாவலி போன்ற படங்களின் கதையை தாத்தம்மா என்னிடம் சுவாரஸ்யமாக சொல்லியது என் நினைவின் சுவடுகளில் இன்னும் இருக்கிறது. என் தாத்தம்மா எனக்கு அடிக்கடி சொல்லும் கதை ஈசன்காட்டு மொட்டையன் கதை தான்.இந்தக் கதையில் ஈசன் காட்டு மொட்டையன் எதுவும் தெரியாத ஒரு அப்பாவியாக இருப்பான்.ஒரு தடவை பலாப் பழம் வியபாரம் செய்வதற்காக பலாப் பழக்கூடையை தலை சுமாடு இல்லாமல் தலையில் சுமந்து கொண்டு போகும் போது பலாப்பழ பால் அவன் தலைமுடியை இறுக்கமாக பிடித்துக் கொள்ளுவதால் பலாப்பழம் கூடை என் தலையை முழுங்கப் பார்க்கிறது என ஊரையே கூப்பிடுவான். ஒருமுறை ஈசன் காட்டு மொட்டையன் கல்யாணமாகி தன் புது மனைவியை கூட்டிக
Image
எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் எழுதிய "கற்றாழைக்கிணறு" சிறுகதையை முன்வைத்து தற்போது தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் இளம் எழுத்தாளர்களில் ஒரு Promising எழுத்தாளர் என சுரேஷ் பிரதீப்பைச் சொல்லலாம். எழுத வந்த குறைந்த காலங்களில் நிறைய எழுதியவர்.எழுதிக் கொண்டிருப்பவர். சிறுகதைகளில் எல்லாவிதமான வடிவ முயற்சிகளையும் மேற்கொண்டவர் புதுமைப்பித்தன். அதிகமாக சமூகத்தின் புற நிகழ்வுகளை சிறுகதைகளாக எழுதிய புதுமைப்பித்தன் பரிசோதனை முயற்சியாக காஞ்சனை எனும் பேய்க் கதையையும் எழுதியிருப்பார். அந்த வகையான ஒரு முயற்சிதான் சுரேஷ் பிரதீப்பின் இந்த கற்றாழைக்கிணறு சிறுகதையும். கோயில்கள்,தெய்வங்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் பேராசிரியர் நரசிம்மன் என்பவரால் அனுப்பப்பட்டு பாண்டவனுருக்கும்,பாயா நிலத்துக்கும்ம் இடைப்பட்ட குறத்திமேட்டுப்பகுதியில் மூங்கில் வீரன்,செண்பககுறத்தி கதையை ஆராய்வதற்கு வரும் சுரேஷ் என்ற முனைவர் பட்ட மாணவனின் பார்வையில் கதை நகர்கிறது. தெய்வங்களைப் பற்றிய,மனிதர்களைப் பற்றிய தொன்ம,அமானுஷ்ய கதைகளை கி. ராஜநாராயணன்,சோ.தர்மன் படைப்புகளை படித்ததிலிருந்து அந்தக் கதைகள் மீது எனக்கு ஒரு
Image
.///Joaquin Phoenix நடித்த "JOKER" English Movie ஒரு பார்வை ஒரு சமூகத்தால் தொடர்ந்து உதாசீனப்படுத்தப்படும், முற்றிலும் கைவிடப்படும் ஒரு மனிதனின் மன நிலையின் கடைசி புள்ளி உளப் பிறழ்வு நிலை அல்லது வன்முறை என முடியும் என்பதை JOKER படம் உணர்த்துகிறது. சமூகத்தின் கரிசனமும்,காருண்யமும் எப்பொழுதுமே எளிய மனிதர்களை நோக்கி இருந்ததில்லை. Television Show நிகழ்ச்சியில் Joaquin Phoenix பேசும் வசனம் இந்த சமூகத்தின் விரல்களால் நெட்டித் தள்ளப்பட்டு உதாசீனப்படுத்தப்படும் எல்லா எளிய மனிதர்களுக்கும் பொருந்தும். i Killed those guys becoz they Were awful. Every body is awful these days.its enough to make anyone Crazy. (அவனுங்க மோசமானவங்க,மோசமா நடந்துகிட்டாங்க. அதனால தான் அவனுங்கள கொலை பண்ணேன். இங்கு எல்லோருமே மோசமாக இருக்கிறார்கள் அது ஒன்னு போதும் ஒருத்தனா பைத்தியக்காரனா மாத்தறதுக்கு) oh Why is So upset about these guys. "if it was me dying on the Side walk. you had walk right over me. I Pass you everyday and you don't notice me". (ஏன் செத்துப் போன அந்த பணக்கார பச
Image
///Palasa 1978 தெலுங்குப் படத்தைப் Uற்றி ஒரு பார்வை. நான் பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் போது பர்கூரில் இருந்த மூன்று சினிமா தியேட்டர்களில் ஏதாவது ஒன்றில் ஒரு தெலுங்கு படம் ஓடிக்கொண்டிருக்கும். பர்கூரில் தெலுங்கு பாஷை பெரும்பான்மையாக பேசக்கூடிய ஒரு சமூகம் இருந்ததால் தெலுங்கு படம் திரையிட கூடிய ஒரு நிலை அங்கு இருந்தது.  சஞ்சீவி தியேட்டர், துரைஸ் தியேட்டர் மற்றும் துரைசாமி பாரடைஸ் என இருந்த மூன்று தியேட்டரில் இப்போது துரைஸ் தியேட்டர் மட்டும் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது என நினைக்கிறேன். அங்குதான் நான் நிறைய தெலுங்கு படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். சிரஞ்சீவி, பவன் கல்யாண், பாலகிருஷ்ணா, ஜீனியர் NTR நடித்த திரைப்படங்களை பார்த்தும்,அங்குள்ள உள்ளூர் நண்பர்களோடு பழகியும் தெலுங்கு மொழி பேசக் கற்றுக் கொண்டேன். தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட, கலையம்சம் அல்லாத ஜனரஞ்சக தெலுங்கு சினிமாக்களையே பார்த்து வந்த எனக்கு நேற்று இரவு பார்த்த "Palasa 1978" என்ற தெலுங்குத் திரைப்படம் வெகுவாக என்னை ஈர்த்தது. ரெட்டியார்களும்,நாயுடுகளும்,ராஜு (பிரபாஸ் குலம்)  மற்றும
Image
///தகழி சிவசங்கரன் பிள்ளையின் "இரண்டு படி" நாவலை முன்வைத்து தகழியின் படைப்புகளை வாசிக்கும் போது அவரது படைப்புகளில் எளிய மனிதர்களின் குரல்களை கேட்கலாம். சமூகத்தின் பார்வையிலிருந்து சாதிய,வர்க்க பேதத்தால் விலக்கப்பட்ட ஒரு தோட்டியின் குரலை தோட்டியின் மகன் நாவலில் பதிவு செய்திருப்பார் தகழி. அதே போல் "இரண்டு படி" நாவலில் கேரளாவின் குட்ட நாட்டில் உள்ள பண்ணையார்களுக்கும், புலையர்களுக்கும் உள்ள வர்க்க பேதத்தை, புலையர்களின் உழைப்புச்சுரண்டலை, அவர்களின் இனத்திற்காக போராடும் கோரன் என்பவனின் குரலை பதிவு செய்கிறார் தகழி சிவசங்கரன் பிள்ளை. சுதந்திரத்திற்கு முன்பான காலகட்டத்தில் குட்டநாடு பண்ணையார்களிடம் அடிமைகளாக வயல்களில் வேலை செய்யும் புலையர்கள் அதிக கூலி வேண்டியும், நிலம் உழபவனுக்கே சொந்தம் என ஓங்கும் புரட்சி மற்றும் அதனால் சுட்டு வீழ்த்தப்படுபவர்களின் தியாகத்தை பேசும் "இரண்டு படி" நாவல் ஒரு இனப் போராட்டத்தை முன்னிலைப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. குட்ட நாட்டு வழக்கப்படி காளிச் சாம்பனின் மகள் சிருதையை ஐம்பது ரூபாய் பணமும்,இருப்பத்தைந்து பறை நெல்லும் கொடுத்து
Image
தகழி சிவசங்கரன் பிள்ளையின் "செம்மீன்" நாவலை முன்வைத்து இரண்டு வருடங்களுக்கு முன்பே தோட்டியின் மகன் நாவலை  வாசித்தேன்.நாவலை வாசித்து முடித்த பிறகு ஒரு அவஸ்தையை உணர்ந்தேன். சுடலைமுத்து என்ற தோட்டி தன் மகன் மோகனை தன்னை விட உயர்ந்த வாழ்வு வாழ வேண்டும் என அவனை படிக்க வைக்கிறான்.ஆனால் வாழ்வு நிகழ்த்தும் கோர விளையாட்டில் அவன் மகனும் மலம் அள்ளும் தோட்டித் தொழிலே செய்யும் நிலைக்கு தள்ளப்படுவதை நாவல் பேசும். ஒரு தோட்டியை முதன்மைப்படுத்தி  தோட்டி வாழ்வின் நிறைவின்மையை,  நிராசைகளின் வலியை நெருங்கி பேசியதில் மிக முக்கிய நாவல் என தோட்டியின் மகனைப் பார்க்கிறேன். தகழியின் படைப்புகளில் நான் இரண்டாவதாக வாசித்தது ஏணிப்படிகள் நாவல். கேசவ பிள்ளை எனும் ஒரு சாதாரண குமாஸ்தா குறுக்கு வழியில் எப்படி உயர்ந்த அதிகாரமுள்ள பதவியில் உட்காருகிறான் என்பதை ஏணிப்படியில் எழுத்தாக்கியிருப்பார் தகழி. வெகுஜன வாசிப்பு சாரமும்,கலைத் தன்மையையும் கலந்த படைப்புகளை உருவாக்குவதில் தகழி தன்னிகரகற்றவர். கறுத்தம்மா என்ற மீனவப் பெண்ணுக்கும்,இஸ்லாமிய மீன் வியாபாரியான பரீக்குட்டிக்கும் இடையே ஏற்படும் கைகூடாத த
Image
///மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் "சிக்கவீர ராஜேந்திரன்" நாவலை முன்வைத்து தமிழ் மொழியைத் தாண்டி கன்னட மொழி இலக்கியங்கள் தொடர்ந்து வாசிக்க எனக்கு வாயிலாக இருந்தவர்கள் சிவராம் காரந்த், எஸ்.எல்.பைரப்பா இருவரும் தான். சிவராம் காரந்த்தின்  "மண்ணும் மனிதரும், அழிந்த பிறகு" எஸ்.எல்.பைரப்பாவின் ஒரு குடும்பம் சிதைகிறது நாவல்களை வாசித்தப் பிறகு கன்னட படைப்புகள் மீது ஈர்ப்பும், அப்படைப்புகளை தொடர்ந்து வாசிக்கக் கூடிய ஆவலும் ஏற்பட்டது. அந்த ஆவலின் நீட்சிதான் யு.ஆர். அனந்தமூர்த்தியின் "சம்ஸ்கரா", அரவிந்த் மாளகத்தியின் "கவர்மெண்ட் பிராமணன்" பி.வி. பாரதியின் "கடுகு வாங்கி வந்தவள்" விவேக் ஷான்பாக் எழுதிய "காச்சர் கோச்சர்" போன்ற கன்னட படைப்புகளை என்னை வாசிக்கச் செய்தது.  நான்கு தினங்களுக்கு முன் ஏ.கே.செட்டியார் எழுதிய குடகு என்ற பயண நூலை வாசித்து முடித்தேன். அந்த நூல் குடகு பயணத்தைப் பற்றிய நூலாக இல்லாமல் குடகின் வரலாற்றையும் கூறும் நூலாக இருந்தது. அதில் குடகு நாட்டின் கடைசி அரசன் சிக்கவீர ராஜேந்திரன் என்றும் அவனுடைய ஆட்சி மு
Image
///ஏ.கே.செட்டியார் எழுதிய "குடகு" பயண நூலை முன்வைத்து "தன் இடத்தை விட்டு அயலிடங்களுக்கு சென்றே இராதவன் மற்ற மக்களையெல்லாம் எதிரிகளாகவே நோக்குகிறான்.வெவ்வேறு இடங்களுக்கு பயணம் செய்து இருப்பவனோ தன்னுடைய கூட்டம் வாழ வேண்டுமானால் மற்ற கூட்டங்களுடன் ஓரளவாவது ஒட்டுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்கிறான்" என்று கூறுகிறார் இங்கிலாந்து அறிஞர் பெட்ரண்ட் ரசல். அப்படி கர்நாடகாவின் குடகிற்கு சென்று அம்மக்களுடன் பழகியும் பயணித்தும் திரண்ட ஏ.கே.செட்டியாரின் அனுபவங்களின் பதிவு தான் இந்த குடகு நூல்.  ஏற்கனவே ஏ.கே.செட்டியாரின் இந்திய பயணங்கள்  நூல் வாசித்த எனக்கு குடகு நான் வாசித்த இரண்டாவது நூல். குடகு புத்தகத்தை வாசித்து முடித்த பிறகு இது ஒரு பயணப் புத்தகம் என்பதையும் தாண்டி குடகின் வரலாற்றைப் பதிவு செய்யும் நூலாகவும்,அங்கு வாழும் குடகர்களின் வாழ்க்கை முறையை பதிவு செய்யும் பண்பாட்டு ஆவணமாகவும் இருப்பதை உணர்ந்தேன். குடகு ஒரு மலை நாடு.குடகின் மொத்த நிலப்பரப்பு 1587 சதுர மைல். இந்தியாவின் மற்ற எந்த பகுதிகளைக் காட்டிலும் தமிழ் நாட்டுக்கும் குடகு நாட்டுக்கும் ஒரு உயிர
Image
///தகடூர் புத்தக பேரவை நடத்திய பெரிதினும் பெரிது கேள் இணையவழி நிகழ்வில் மரப்பேச்சி என்ற தலைப்பில் சுற்றுச்சூழலியல் எழுத்தாளர் மற்றும் ஆர்வலர் திரு.கோவை சதாசிவம் அவர்கள் உரையாற்றிய உரையின் தொகுப்பு மரப்பேச்சி என்பது தமிழில் ஒரு பழமையான சொல். தென்தமிழகத்தில் பேச்சி என்றால் பெண் தெய்வங்களை குறிக்கும். அப்படி மரமும் பெண் உருவிலான தெய்வங்கள் தான் என்பதை மரப்பேச்சி என்ற சொல் குறிக்கிறது. சுற்றுச்சூழலியல் முறை என்பது ஒரு அறம் சார்ந்த வாழ்வியல் முறை. குழந்தைகளுக்கு சூழலியல் சார்ந்த விஷயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் முக்கிய இடமாக குடும்பம் இருக்கிறது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் காட்டில் உள்ள செம்மரங்களை அந்நாட்டில் உள்ள பசிபிக் லம்பர் நிறுவனம் வெட்டச் சென்ற போது அதை ஒரு தனி பெண்மணியாக தடுத்து நிறுத்தியவர் 23 வயதான ஜூலியா என்ற மர போராளி 180 அடி உயரமுள்ள ஒரு மரத்தின் உச்சியில் அமர்ந்து கொண்டு கிட்டத்தட்ட 736 நாட்களை கடந்த அறப் போராட்டத்தில் உலகின் கவனத்தை தன் பக்கம் திருப்பி மரங்கள் வெட்டப்படக் கூடாது என்பதை வலியுறுத்துகிறாள்.அந்த மரத்திற்கு லூனா
Image
///ஏ.கே.செட்டியாரின் "இந்தியப் பயணங்கள் " பிரயாண கட்டுரை நூலை முன்வைத்து குடும்பம்,வேலை பளு,பொருளீட்டல் என அன்றாட  சலிப்பில் தன்னை புதைத்துக்கொண்டு எப்போதும் வாழ்வின் பேரிரைச்சலில் சிக்கித்தவிக்கும் மனித மனதை பயணமும்,வாசிப்பும் மட்டுமே இலகுவாக்கும் என்பது என் எண்ணம்.  பாம்பு தன்னை புதிதாய் தோலுரித்துக் கொள்வது போல பயணம் ஒருவரை புதுப்பித்துக் கொடுக்கிறது.  பல்வேறு சூழலை,பல்வேறு மனிதர்களை புரிந்து கொள்ளும் வாய்ப்பை பயணம் நமக்கு வழங்குகிறது. சாமிநாத சர்மா எழுதிய "எனது பர்மா வழி நடைப்பயணம்" நூலை வாசித்து பிறகுதான் எனக்கு பயணம் பற்றிய நூல்களை வாசிக்கும் ஒரு மன வெறி மலர்ந்தது. அந்த வெறியின் தொடர்ச்சியில் வாசித்தது தான் ஏ.கே.செட்டியார் எழுதிய "இந்தியப் பயணங்கள்" நூல். தமிழில் பிரயாண இலக்கியத்தின் பிதாமகராக திகழ்கிறார் ஏ.கே.செட்டியார். மனிதர் பிரயாணத்தை பிராணமாகக் கொண்டு பல்வேறு தேசங்களுக்கு சென்று சுற்றித்திரிந்திருக்கிறார். போக்குவரத்துச் சூழலும்,வசதிகளும் குறைவாக இருந்த நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் எப்படி இவரால் இவ்வளவு இடங்களுக்கு பய
Image
///தகடூர் புத்தக பேரவை இணைய வழியில் நடத்திய"பெரிதினும் பெரிது கேள்" என்ற நிகழ்வில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களைப் பற்றி "காலம் அறிந்து கூவிய சேவல்" என்ற தலைப்பில் தீக்கதிர் பத்திரிகையின் ஆசிரியர் தோழர் மதுக்கூர் ராமலிங்கம் அவர்கள் ஆற்றிய உரையின் தொகுப்பு மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் ஏப்ரல் 13 1930 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்திலுள்ள செங்கப்படுத்தான்காடு என்ற கிராமத்தில் பிறந்தவர். 29 ஆண்டுகள் மட்டுமே இம்மண்ணில் வாழ்ந்து மறைந்த மகத்தான கவிஞன். சினிமாவுக்காக 9 ஆண்டுகளில் 180 திரையிசைப் பாடல்கள்களை எழுதியவர். ஆரம்ப காலகட்டங்களில் திரையிசை பாடல்களை தாழ்வாக எண்ணிய காலம் உண்டு. கர்நாடக இசை வடிவம் போன்ற மேட்டுக்குடிகளின் இசையை திரையிசைப் பாடல்கள் தான் வெகுஜன சாமான்ய மக்களுக்கு கொண்டு சேர்த்தது. திரையிசை இலக்கியம் ஆகுமா ? கவிதைக்கான இலக்கியத்துக்கான மரியாதையை திரையிசைக்கு தரமுடியுமா? என்ற கேள்விகள் ஆரம்பத்தில் எழுந்த காலங்கள் உண்டு. கவிஞர் கண்ணதாசனை கவிஞர் என்று ஏற்றுக் கொள்ளாதவர்களும் உண்டு. சினிமாவின் வளர்ச்சி என்பது நாடகங்களி
Image
///எழுத்தாளர் பாமாவின் "கருக்கு" நாவலை முன்வைத்து தமிழில் எழுதப்பட்ட  தன் வரலாறுகளில் உ.வே.சாவின் என் சரித்திரம்,நாமக்கல் கவிஞரின் என் கதை நூல்களே சிறந்தவை என எழுத்தாளார் பெருமாள் முருகன் அவர்கள் கூறியிருந்தார். மேற்கண்ட இரண்டு நூல்களைத் தாண்டி பிற தன் வரலாற்று நூல்கள் அதிகம் கவனம் பெறாமல் போனதற்கு காரணம் அவை உண்மைகளை உரித்து காண்பிக்காமல் எழுதப்பட்டதே காரணம். இங்கே எழுதுவதற்கு அவரவர் வாழ்க்கையே நம்முன் ஒரு வாய்ப்பாக இருக்கிறது.வாழ்க்கையை அதன் நிறம் மாறாமல் புனைவும்,பூச்சும் அல்லாமல் எழுதுவது தான் தன் வரலாற்றின் வெற்றியாகும். அப்படி ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வுகளை அதிகபட்ச நிஜத் தன்மையின் தொனியுடன் பதிவு செய்யப்பட்டதாக இருக்கிறது பாமாவின் கருக்கு நாவல். தமிழில் தலித் தன்வரலாற்று நூல்களுக்கு முன்னோடியாக கருதப்படுகிறது கருக்கு நாவல். நாவல் என்ற வடிவ வகைமைக்கு உட்படாத ஒரு படைப்பு இது. பாமாவின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவ நினைவுகளின் தொகுப்பாக இருக்கிறது. சாதியின் கோர நாக்கு பனங்கருக்காய் நீண்டு தன்னை ரணப்படுத்தியதை அதை எதிர்த்து அல்லது ஏற்றுக் கொண்டு தான் கல்வி க
Image
///இன்று தகடூர் புத்தக பேரவை நடத்திய இணையவழி நூல்கள் அறிமுக நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட எழுத்தாளர் பெருமாள்முருகன் அவர்கள் நிகழ்த்திய உரைகளின் தொகுப்பு இன்றைய சமூகச் சூழலில் புத்தகங்கள் வாங்குவதும்,புத்தகங்களை வாசிப்பதும் ஒரு ஏளனமாக பார்க்கக்கூடிய மனோநிலை உள்ளது.  புத்தகங்களை ஒரு அறிவுச் சார்ந்த சொத்தாக கருதாமல் புத்தகங்களை எதிரிகளாக கருதக்கூடிய பொதுவான மனோபாவ நிலை உள்ள மனிதர்கள்  உள்ள சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். என் சக நண்பர் ஒருவர் புத்தகத் திருவிழாவில் வாங்கிய புத்தகப்பையை அவருடைய வீட்டுக்கு கொண்டு செல்லாமல் என் வீட்டில் கொண்டு வந்து வைத்துவிட்டு நீ கல்லூரிக்கு வரும்போது தினமும் இரண்டு இரண்டு புத்தகமாக எடுத்துக்கொண்டு வந்து என்னிடம் கொடு நான் என் வீட்டு அலமாரியில் வைத்து விடுகிறேன்.அது என் வீட்டில் இருப்பவர்கள் கவனிக்க மாட்டார்கள் என அவருடைய நண்பரின்  நிகழ்வை கூறுகிறார். தீவிர வாசிப்புப் பழக்கம் உள்ள நிறைய பேரின் நிலைமை அவரவர் குடும்பங்களில் உள்ள மனைவியோ,பிள்ளைகளோ புத்தகம் வாங்குவதையும் வாசிப்பதையும் விரும்புவதில்லை. குடும்பம் சார்ந்த நபர்களி