Posts

Showing posts from August, 2021

இரவு(Night)

Image
 ///Elie Wiesel எழுதிய இரவு(Night) நாவலை முன்வைத்து இரவு என்ற பெயரில் ஜெயமோகன் ஒரு நாவல் எழுதி உள்ளார்.ஆனால் இந்த இரவு(Night) நாவல் Elie Wiesel எழுதியது. 1944 ஆம் ஆண்டில் ஹிட்லர் நிகழ்த்திய யூத இன அழிவிலிருந்து(Holocaust) உயிர் தப்பித்த Elie Wiesel -ன் வதை முகாம் சித்ரவதைகளின் தன்னனுபவ கதை வடிவமே இரவு நாவல். தன் பால்ய வயதில் ஆஸ்விட்ச்,புச்சன் வால்ட் மற்றும் புனா ஆகிய வதை முகாம்களில் தன் தாய்,தங்கை மற்றும் தந்தையை இழந்து எலீ வீஸல் மட்டும் உயிர் பிழைக்கிறார். எலீ வீஸல் உயிர் பிழைத்த பின் பத்தாண்டுகள் கழித்து அவரால் எழுதப்பட்டது இந்த நாவல். வரலாறு தன் வயிற்றில் வாங்கி வரவு வைத்திருக்கும் உலகின் மிகப் பெரிய இன அழிப்பு நிகழ்வுகளாக யூத இன மக்கள் அழிக்கப்பட்டதையும், இலங்கை ஈழத்தமிழர்கள் அழிக்கப்பட்டதையும் கூறலாம். ஒரு அரசு அல்லது ஒரு அமைப்பு அல்லது ஒரு தனி மனித அதிகாரம் எப்போதெல்லாம் இன்னொரு இனத்தின் மீது அல்லது இன்னொரு மதத்தின் மீது வெறுப்பு கொள்கிறதோ அப்போதெல்லாம் இனப்படுகொலைகள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. ஆரிய வெறி ஹிட்லர் நிகழ்த்திய யூத இன அழிப்பு,சிங்கள வெறி ராஜபக்ஷே நிகழ்த்தி

புத்துயிர்ப்பு

Image
 ///லியோ டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு நாவலை முன்வைத்து டால்ஸ்டாயும்,தஸ்தாயெவ்ஸ்கியும் ரஷ்ய இலக்கியத்திற்கு மட்டுமல்ல,உலக இலக்கியத்திற்கே பேராசான்கள். இருவருமே ரஷ்யாவில் பிறந்தவர்கள் என்றாலும் வெவ்வேறு வாழ்க்கை பின்னணியைக் கொண்டவர்கள். ஒரு செழிப்பான நிலபிரபுத்துவ குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் டால்ஸ்டாய். ஆனால் தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கை அப்படிப்பட்டதல்ல.அவஸ்தையும், அலைக்கழிப்பும்,வலிப்பு நோயின் வாதையும் கொண்ட வாழ்க்கை அவருடையது. ஒரு படைப்பாளி தன்னுடைய சொந்த வாழ்வின் பாதிப்புகளை தன்னுடைய படைப்புகளில் பிரதிபலிப்பது வழக்கம். தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகளில் வரும் பாத்திரங்கள் தஸ்தாயெவ்ஸ்கியை பிரதிபலிப்பவையே. குற்றமும் தண்டனையும் நாவலில் வரும் ஒரு ராஸ்கோல்னிவ்வும்,அசடன் நாவலில் வரும் மிஷ்கினும் வேறு யாருமல்ல தஸ்தயேவ்ஸ்கி தான். நான் தஸ்தயேவ்ஸ்கியைத் தான் டால்ஸ்டாய்யை விட அதிகமாக வாசித்திருக்கிறேன். தஸ்தாயெவ்ஸ்கியின் முப்பெரும் காப்பியங்களான குற்றமும் தண்டனையும்,கரமசேவ் சகோதரர்கள் மற்றும் அசடன் ஆகியவற்றை வாசித்திருக்கிறேன். நான் வாசிக்கும் டால்ஸ்டாயின் முதல் ஆக்கம் புத்துயிர்ப்பு தான். மனித ம