Posts

Showing posts from May, 2021

உலகப்புகழ்பெற்ற மூக்கு

Image
 ///பஷீரின் உலகப்புகழ்பெற்ற மூக்கு சிறுகதை தொகுப்பை முன் வைத்து வைக்கம் முகமது பஷீரின் படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தவை பால்யகால சகி மற்றும் மதிலுகள் ஆகிய இரண்டு நாவல்களும் தான். பால்யத்தில் ஏற்படக்கூடிய நட்பின் அடர்த்தியை,காதல் கைகூடாமல் போன ஒரு மனிதனின் உச்ச வலியை பால்யகால சகி நாவலில் பதிவு செய்திருப்பார் பஷீர். மதிலுகள் நாவலில் ஒரு சிறைக்கைதியின் நிறைவேறாத காதலை ஒரு மெல்லிய துயர் கனக்கும் உணர்ச்சியுடன்  சொல்லியிருப்பார் பஷீர். ஒரு பத்திரிகையாளர்.சுதந்திர போராட்ட வீரர்.இலக்கின்றி பல்வேறு தேசங்களில் பயணம் செய்தவர் பஷீர்.ஒரு சூஃபி போன்று சிந்தித்தவர். இந்த உலக புகழ்பெற்ற மூக்கு சிறுகதைத் தொகுப்பில் பெரும்பான்மையான கதைகள் பஷீரின் சொந்த அனுபவங்களை புனைவில் ஊற்றி எழுதப்பட்டவையாகவே இருக்கின்றன. உலகின் யதார்த்த முகங்களையும், மனிதர்களையும் தன் படைப்புகளில் பேசியவர் பஷீர்.பஷீரையும் பகடியையும் பிரிக்க முடியாது. அவரது படைப்புகளில் துயரையும், ஏமாற்றத்தையும் கூட பகடி செய்யும் அவரது கலை தொனி தவிர்க்க  முடியாததாக இருக்கும். ஜென்ம தினம் என்ற கதையில் தன்னுடைய பிறந்த நாளில் ஒரு வேளை உணவு கிடைக்கா

தண்ணீர்

Image
 ///அசோகமித்திரனின் தண்ணீர் நாவலை முன்வைத்து அசோகமித்திரனின் படைப்புகளில் எனக்கு நெருக்கமான நாவல் என்று 18வது அட்சக்கோடு நாவலைச்  சொல்வேன். அதற்கு அடுத்ததாக நிச்சயம் தண்ணீர் நாவலைத் தான் சொல்வேன். புறத்தில் தண்ணீர் பிரச்சினைகளைப் பற்றி பேசக்கூடியதாக இருக்கும் இந்த நாவலின் உள் மடிப்பில் மூன்று பெண்களின் துயர் கதைகளை பேசியிருப்பார் அசோகமித்திரன். மனித உள் மனதின் இறுக்க உணர்ச்சிகளை தன் எழுத்துக்களில் பிரதிபலிப்பவர் அசோகமித்ரன். ஜமுனா,சாயா மற்றும் டீச்சரம்மா ஆகிய மூன்று பெண்களின் பின் உள்ள துயர் இழைகளின் பின்னலில் தான் நாவல் நகர்கிறது. சினிமாவில் நடிக்க வைக்கிறேன் என்று ஜமுனாவை ஏமாற்றும் பாஸ்கர ராவ் கதாபாத்திரம் எதார்த்த சினிமா உலகில் உள்ள ஏமாற்று மனிதர்களின் ஒற்றை உருவத்தின் பிரதிபலிப்பாய் புனையப்பட்டுள்ளது. திருமணமான பாஸ்கர ராவ் உடன் பழகும் ஜமுனாவுக்கு பின்னால் ஒளிந்துள்ள அங்கீகாரம் தேடும் ஏக்கம்,துயர் போலவே  15 வயதில்  நாற்பத்தைந்து வயதான தன் கணவனை மணக்கும் டீச்சரம்மா முதலிரவில் இருமல் வியாதி காரணமாக தன் கணவன் முடங்கிப் போவதால் தன் உடல் ஏக்கம் மறைத்து வாழ்வதின் பின் உள்ள துயர்,ராணுவத்தி

பல நேரங்களில் பல மனிதர்கள்

Image
 ///பாரதி மணியின் "பல நேரங்களில் பல மனிதர்கள்" நூலை முன்வைத்து உண்மையில் ஒரு நல்ல நூலை  வாசித்த அனுபவத்தைக் கொடுக்கிறது இந்த நினைவு கட்டுரைகளின் தொகுப்பு நூல். அதுவும் 74 வயதில் ஒரு மனிதன் இதுவரை தன் வாழ்வில் சந்தித்த மனிதர்கள்,தன் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வு துணுக்குகளை தொகுத்து ஒரு நூலாக எழுதுகிறார் என்றால் உண்மையில் அந்த அனுபவங்கள் குறைந்த பட்சம் உண்மை கலந்தவையாகவும், சுவாரஷ்யமாகவும் தான் இருக்கும்.அப்படித்தான் இருக்கிறது புத்தகம். பாரதி மணி அவர்கள் ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கும் மேலாக டில்லியில் வாழ்ந்த தன் வாழ்பனுபவங்களை நினைவு கட்டுரைகளாக இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். பாரதி மணி அவர்கள் அடிப்படையில் ஒரு மத்திய அரசின் பல்வேறு  பணிகளில் இருந்தவர்,நாடகக் கலைஞர்,சினிமா நடிகர். பாரதி மணி அவர்கள் எழுத்தாளர் கா.நா.சு வின் மருமகன். தமிழில் பாரதி படத்திலும் ரஜினி நடித்த பாபா,விக்ரம் நடித்த அந்நியன் படத்திலும் நடித்திருப்பார். இந்தியாவின் மிகப் பிரபல்யமான அரசியல் தலைவர்கள்,பர்மிய போராளி ஆங் சான் சூகி,பங்களாதேஷ் முன்னால் பிரதமர் ஷேக் ஹசீனா என எல்லோருடனும் அவர் பழகிய அனுபவங்களின் தொக

அமைதி என்பது நாமே

Image
 ///திக் நியட் ஹான்(Thich Nhat Hanh) எழுதிய அமைதி என்பது நாமே(Being peace) நூலை முன்வைத்து திக் நியட் ஹான் வியட்நாமைச் சேர்ந்த ஒரு பெளத்த துறவி. அமைதி அடைய வேண்டும் என்றால் நாமே அமைதியாக இருக்க வேண்டும்.அமைதி நமக்குள்ளே இருக்கிறது.எனவே அமைதி என்பது நாமே எனவும்,புத்தர் என்ற பெயரும், புத்தர் சிலையும் ஒரு குறியீடு மட்டுமே.புத்தர்கள் என்பது நாம் தான்.நாமே தான் புத்தர்.நம் எல்லோரின் உள்ளேயும் புத்தர் இருக்கிறார்  என்கிறார் திக் நியட் ஹான். பௌத்தம்,தியானம் ஆகியவற்றின் அடிப்படைகளை அறிந்து கொள்ள இந்த புத்தகம் ஒரு வாயிலாக இருக்கும். வெறித்தனமான பற்றிலிருந்து நாம் விடுதலை பெற்றால் மட்டுமே சமாதானத்தை நம்மால் அடையமுடியும். எந்த ஒரு சித்தாந்தத்தின் மீதும் வெறித்தனமான பற்று இருக்கக்கூடாது.அது பெளத்தமாக இருந்தாலும் கூட விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருக்க கூடாது. "உங்களிடம் ஒரு துப்பாக்கி இருந்தால் ஒருவரையோ அல்லது இரண்டு,மூன்று,ஐந்து பேரையோ சுடலாம்.ஆனால் உங்களுக்கு என்று ஒரு சித்தாந்தம் இருந்து அதுதான் அறுதி உண்மை என்று நினைத்துக்கொண்டு அதை விடாப்பிடியாக நீங்கள் பிடித்துக் கொண்டிருப்பீர்கள் என்ற

ஒற்றன்

Image
 ///அசோகமித்திரன் எழுதிய "ஒற்றன்" நாவலை முன்வைத்து அசோகமித்திரன் படைப்புகளில்கரைந்த நிழல்கள் மற்றும் 18வது அட்சக்கோடு நாவல்களை இதற்கு முன் வாசித்திருக்கிறேன். அசோகமித்திரன் அவர்களின் எழுத்து என்பது தமிழில் ஒரு தனித்த நடை வகை கொண்டது. கூர்நுண்ணுணர்வு கொண்ட வாசகர்கள் மட்டுமே அணுகக் கூடியவையாக இருப்பவை அவரது படைப்புகள்.  அசோகமித்திரன் படைப்புகளில் இருக்கும் எளிமை மேலோட்டமான வாசகனை திருப்தி கொள்ள செய்யாது. அவரைப் போலவே அவரது படைப்புகளிலும் ஒரு மெல்லிய அமைதி இருக்கும். அவரது படைப்புகளில் எவ்வித பரபரப்பும்,வாசகனை வலிந்து திருப்தி செய்வதற்கான அலங்கார சொற்செட்டுகளும் இருக்காது. அவரது கதைகளில் ஒரு கலை அமைதி இருக்கும். ஒரு எழுத்தாளனுக்கு வணிகப்பலனுக்கான எந்தவித உத்ரவாதத்தையும் கொடுக்காத தமிழ் இலக்கியச் சூழலில் வாழ்நாளெல்லாம் எழுதியே தன்னை கரைத்து கொண்டவர் அசோகமித்திரன்.எழுத்தை ஒரு அந்தரங்க தவமென கருதி வாழ்ந்தவர். பொது மந்தை மனநிலை வாசகர்களின் மனங்களை நிறைவாக்க பரபரப்பையும், பகட்டையும் தன் எழுத்தில் கூட்டி எழுதும் திருட்டுக்கலையை ஒருபோதும் அறியாதவர் அசோகமித்திரன். அதனால் தான் ஜெமினி வாச

வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள்

Image
 ///வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள் நூலை முன்வைத்து 1997ஆம் ஆண்டு வீரப்பனால் கடத்தப்பட்ட கர்நாடகத்தைச் சேர்ந்த பிரபல வனவிலங்கு புகைப்பட காரர்களான கிருபாகர் - சேனானி இருவரும் வீரப்பனுடன் காட்டிலிருந்த அனுபவங்களை "Birds,Beasts and Bandits:14 days with Veerappan" என்ற பெயரில் ஆங்கிலத்தில் எழுதிய நூலினை எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள் தமிழில் வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள் என்று மொழி பெயர்த்துள்ளார். பொதுவெளியில் வீரப்பனைப் பற்றி கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பங்களிலிருந்து வீரப்பனின் வேறு பக்கத்தை இந்த புத்தகம் பதிவு செய்கிறது. வனவிலங்கை படம் பிடிக்கும் கிருபாகர் - சேனானி இருவரும் பெரிய காட்டிலாகா அதிகாரிகள் என நினைத்து வீரப்பன் கடத்தி விடுகிறான். இவர்களுடன் பெங்களூரில்  விஞ்ஞானியாக இருக்கும் வங்காளத்தைச் சேர்ந்த சத்யவிரத மைத்தி என்ற விஞ்ஞானியையும், ராஜு மற்றும் பாஷா என்ற இரு தொழிலாளர்களையும் கடத்தி விடுகிறான். 14 நாட்கள் காட்டில் வீரப்பனுடன் இருந்த இந்த அனுபவ பதிவு நூலில் கொலைகாரன்,கடத்தல்காரன் எனக்கூறப்படும் வீரப்பன் சேனானியிடம் நீ இறந்துபோன என் தம்பி அர்ஜுனனைப் போல இருக்க

நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்

Image
 ///டாக்டர் அம்பேத்கர் எழுதிய "நான் ஓர் இந்துவாக சாகமாட்டேன்" நூலை முன்வைத்து இன்றைக்கு தலித்துகள் சுமந்து கொண்டிருக்கும் அத்தனை இழி நிலைகளுக்கும்,சாதிய கொடுமைகளுக்கும் காரணம் இந்து மதம் தான். இந்து மதம் என்னுடைய பகுத்தறிவுக்கு ஏற்றதாய் இல்லை. இந்து மதம் என்னுடைய சுய மரியாதைக்கு  ஏற்றதாய் இல்லை.தலித்துகளை விலங்குகளை விட கேவலமாக நடத்தும் இந்துமதம் எனக்கான மதம் அல்ல என நாக்பூரில் 14.10.1956 ல் பத்து லட்சம் மக்களுடன் இந்து மதத்தை விட்டு பௌத்த மதத்தைத்தை ஏற்கிறார் அம்பேத்கர். தலித்துகள் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழலை எச்சமயத்திலும் இந்துமதம் வழங்காது என பல்வேறு இடங்களில் மதம் மாற்றத்தின் அவசியம் குறித்தும்,அம்மதம் ஏற்படுத்தி வைத்துள்ள சாதிய அடுக்குகளை பற்றியும் அம்பேத்கர் ஆற்றிய உரைகளின் தொகுப்பு தான் இந்த நூல். வெறுமனே இந்து மதத்தின் மீது உள்ள வெறுப்பிலும்,காழ்ப்பிலும் அம்பேத்கர் புத்தமதத்தை நாடவில்லை.இந்து மதத்தை முழுமையாக ஆராய்ந்ததில் அது எல்லா நிலைகளிலும் தலித்துகளுக்கு அனுகூலமற்ற மதம் என்பதால் தான் கடைசியில் அவர் புத்த மதத்தை ஏற்கிறார். இந்து மதத்தில்  சாதிப்பாகுபாடுகள் இருப்

இடக்கை

Image
 ///எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய இடக்கை நாவலை முன்வைத்து நானறிந்த முகலாயர்கள் மற்றும் இன்ன பிறர்களின்  வரலாறு என்பது பள்ளிக்காலங்களில் வெறும் மதிப்பெண்களுக்காக படித்தவை. கரும்பு சக்கையை போன்ற சுவாரஸ்யமற்ற,மேலோட்டமான ஒரு கூர்மையற்ற அவதானிப்புகளைத்தான் பள்ளி வயதில் வரலாறு நமக்கு கொடுத்திருக்கும். வரலாற்றை புனைவாக,ஒரு நாவலாக அணுகும்போது அது கொடுக்கும் அக அனுபவம் அலாதியானது. அப்படி ஒரு அனுபவத்தை முகலாய பேரரசன் அவுரங்கசீப்பின் இறுதி காலத்தை மையப்படுத்தி எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருக்கும் இடக்கை நாவல் கொடுக்கிறது. வரலாற்றின் வயிறு முழுக்க துரோகமும்,பழிவாங்கல் உணர்வும்,கொலையும்,அதிகார மமதையும்,நீதி புறக்கணிப்புகளுமே நிரம்பி கிடக்கின்றன. அவுரங்கசீப்பின் இறுதி காலத்தில் தொடங்கும் நாவல் அவரின் மரணத்திற்குப் பிறகு அவரின் விசுவாசத்துக்கு உரியவர்கள் மற்றும் அந்நாட்டின் எளிய மக்கள் மீது நிகழ்த்தப்படும் அநீதியை புனைவின் வடிவில் ஆவணப்படுத்துகிறது இடக்கை நாவல். பேரரசுகளின் வீழ்ச்சிகளின் வழியாக எளிய மக்கள் மீது நிகழ்ந்த அவலங்களையும்,நீதி மறுக்கப்பட்ட துயரையும் இடக்கை பேசுகிறது. சாமர் எனப்படும் தாழ்ந்த சாதியில்

அனார்யா(Akkarmashi)

Image
 ///சரண்குமார் லிம்பாலே எழுதிய அனார்யா(Akkarmashi)நூலை முன்வைத்து இந்தியாவில் ஒரு தலித்தாக வாழ்வதில் உள்ள சிக்கலை நீங்கள் ஒரு தலித்தாக இருந்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.  எனக்கு முன்பு நண்பனாக இருந்த இடைநிலைச் சாதியைச் சார்ந்த  ஒருவன் தலித்துகளுக்கு இப்போது என்ன பிரச்சனை? நல்ல கல்வி கிடைக்கிறது,அதன் மூலம் நல்ல வேலை கிடைக்கிறது.எல்லா விதத்திலும் வளர்ந்து ஒரு நிலையை எட்டிக்கொண்டிருக்கிறீர்கள். பின் ஏன் எங்களை ஆண்டார்கள், அடிமைப்படுத்தினார்கள் என்று பிலாக்கணம் பாடி புலம்புகிறீர்கள் என்றான். அவன் கூறியது போலவே தலித்துகள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை.ஆனால் அப்படி கல்வியும், வேலையும் கிடைத்தும் கூட ஒரு தலித்தை இந்த சாதிய கட்டமைப்பில் இயங்கும் பொது சமூகம் எப்படி பார்க்கிறது,அவனை எப்படி அணுகுகிறது என்பதை ஒரு தலித்தாக நான் அறிவேன். கடந்த ஆண்டு அரூர் திரு.வி.க நகரில் நான் வாடகைக்காக வீடு தேடிக்கொண்டிருந்த போது ஒரு வீடு காலியாக இருந்ததை வீடு காட்டும் தரகரின் மூலம் அறிந்து அந்த வீட்டின் உரிமையாளரை நானும்,தரகரும் அணுகிய போது அவர் எனக்கு ஏற்கனவே பரி