Posts

Showing posts from September, 2019
Image
///மாங்கடை பாறை அருவியில் இன்று குளித்தேன். இந்த மாங்கடை ஒரு மலை கிராமம். தீர்த்தமலையிலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. கோட்டப்பட்டி,சிட்லிங், வேலனூர்,அம்மாபாளையம் கடந்து காட்டுக்கு நடுவில் செல்லும் தார்சாலையில் சென்றால் மாங்கடை கிராமத்திற்கு முன்பாகவே சாலையின் இடதுபுறம் பாறைகளின் மீது வழிந்துவரும் நீர் அருவியாக கொட்டுகிறது. மழை அதிகம் வரும் நாட்களில் சென்றால் ஆர்பரிக்கும் அருவியை காணலாம். நீர்வரத்து குறைவாக இருந்ததால் நான் அமைதியான அருவியில் குளித்து விட்டு வந்தேன்///
Image
///பன்னலால் பட்டேலின் "வாழ்க்கை ஒரு நாடகம்" நாவலை முன்வைத்து குஜராத்தின் மால்வா பகுதியின் கிராமம் ஒன்றின் மார்கழி மாதத்து நடுநிசப்த இரவில் வாயில் உக்கா இழுத்தபடி இருக்கும் வயதான இடது கை முடமான காலு பட்டேலின் நினைவின் வழியே நிகழ்காலத்திலிருந்து பின்னோக்கி 1956 ஆம் ஆண்டின்  நிகழ்வுகளாக நாவல் விரிகிறது. வாலா படேல் எனும்  கிழவனின் 60ஆவது வயதில் காலு படேல் மகனாக பிறக்கிறான்.காலுவின் அம்மா ரூபா கிழவி.வாலா படேலுக்கு வாரிசே இல்லாமல் இருந்ததால் வாலா கிழவனின் சொத்தெல்லாம் நமக்குத் தான் வரப் போகிறது என கனவு காண்கிறார்கள் வாலா படேலின் தம்பி பரமா படேலின் குடும்பத்தார். இந்நிலையில் காலு பிறப்பதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை.பரமா படேல் நல்லவன்.ஆனால் பரமா படேலின் மனைவி மாலி, அவனது மகன்கள் நாநா,ரண் சோட் மோசமானவர்கள். இந்நாவலில் காலுவின் சித்தி மாலியின் பாத்திரம் என்பது ஒரு குடும்பம் சிதைகிறது நாவலில் வரும் கங்கம்மா பாத்திரம் போன்றது. கங்கம்மா நாவல் முழுவதும் எல்லோரையும் சபித்துக் கொண்டே இருப்பாள்.அவள் வாழ வேண்டிய வயதில் விதவையாகுவதால் அவள் அக வறட்சியில் எல்லோரையும் சபிக்கி
Image
/// "ஒரு குடும்பம் சிதைகிறது" கன்னட நாவலை முன்வைத்து இந்திய இலக்கியங்களில் கன்னட மொழியினுடைய பங்களிப்பு என்பது கொஞ்சம் அடர்த்தியானது. சிவராம் காரந்த் அவர்களின் "மண்ணும் மனிதரும்", "அழிந்த பிறகு"  யு.ஆர்.அனந்தமூர்த்தியின்  "சம்ஸ்காரா" அரவிந்த் மாளகத்தியின் "கவர்ன்மெண்ட் பிராமணன்" விவேக் ஷான்பாக் அவர்களின்  "காச்சர் கோச்சர்" நாவல் ஆகிய படைப்புகளை வாசித்ததின் மூலமே கன்னட இலக்கியங்கள் மீது எனக்கு பெரும் ஈர்ப்பும்,மரியாதையும் உண்டானது.  எஸ்.எல்.பைரப்பாவின் "ஒரு குடும்பம் சிதைகிறது"  நாவல் என்பது சுதந்திரத்திற்கு முன்பான காலகட்டத்தில் வாழ்ந்த கன்னட பிராமண குடும்பமொன்றின் சிதைவை விவரிக்கிறது. மைசூர் சமஸ்தானத்தின் தும்கூர் ஜில்லா,திப்டூர் தாலுகா,கம்பனகரே பிர்காவில் இறந்துபோன பிராமண கணக்குப்பிள்ளை ராமண்ணனுடைய இரண்டாவது மனைவி கங்கம்மா தன் மூத்த மகன் சென்னிகராயனையும், இளைய மகன் அப்பண்ணய்யாவையும் திட்டுவதில் ஆரம்பிக்கிறது நாவல். அப்பண்ணா மடத்துக்குப் போய் படி என்று சொல்லும் கங்கம்மாவை போகாட்டி உனக்கு என்னடி
Image
///எஸ்.எல் பைரப்பாவின் "ஒரு குடும்பம் சிதைகிறது" என்ற கன்னட நாவலை சுமார் இருநூற்று எழுபத்து நான்கு பக்கங்கள் கடந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். கடந்த மாதம் நான் கர்நாடக மாநிலத்திற்கு பயணம் சென்ற போது பார்த்த இடங்களான மைசூர், தும்கூர்,ஹாசன் மாவட்டம், சென்னராயப்பட்டணம்,கம்பனகெரே, போன்ற பகுதிகள் தான் நாவலின் கதை நிகழும் களங்கள். பிராமண குடும்பத்தில் நிகழும் குடும்ப அக சிக்கல்கள்,அவர்களின் வாழ்வியல், வறுமை,வலி,அவர்கள் படும் வாதை தான் நாவலின் நடு மையம்.ஒரு கிராமத்தை,அதன் மண்ணை,அதன் மனிதர்களை அதன் அசல் முகம் மாறாமல் எழுத்தாக்கியுள்ளார் பைரப்பா. நாவலைப் படித்த வரை நம்மை தூக்கி துயரத்தில் ஆழ்த்துகிறது.பாலுணர்வு என்றால் என்னவென்றே தெரியாத வயதில் திருமணம் செய்துகொண்டு இரு குழந்தைகளுக்கு தாயான பெண் பாலுணர்வு பற்றிய புரிதல் தொடங்கும் 25 வயதில் தன் கணவரை இழந்து விதவையாய் போன எப்போதும் எண்ணெயில் இட்ட கடுகென வெடிந்து எல்லோரையும் சபித்துக் கொண்டே இருக்கும் கங்கம்மா, புத்திகெட்ட கணவனுக்கு வாழ்க்கைப்பட்டு அறத்துடனும், வறுமையுடன் வாழும் நஞ்சம்மா. பொய் வழக்குகளில் சாட்சி சொல்லி சூ
Image
///மனித சமத்துவத்தை வலியுறுத்தும் #மகாமுனி# திராவிட அரசியல்,ஆன்மீகம்,மதம், மனித மனங்களின் சாதிய வன்மங்கள், துரோகம்,பழிவாங்கல் என நாம் அறிந்த விஷயங்களை சற்றே சராசரி தமிழ் படங்களிலிருந்து விலகி நின்று வித்தியாச காட்சி அமைப்புகளில் பேசுகிறது மகாமுனி. ஒரு கருவில் உருவான இரு உருவங்கள் வெவ்வேறு சூழலில் வளர்க்கப்படுவதையும், அவர்களின் வாழ்வியலே கதை என்றாலும் அதை நேர்த்தியான திரைக்கதையிலும் கனமான காட்சியமைப்பிலும் கவனம் ஈர்க்க வைக்கிறார் சாந்தகுமார். இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத அரசியல்வாதிகளுக்கு கொலை நிகழ்த்த வடிவம் கொடுக்கும் ரவுடி அடியாளின் பாத்திர அமைப்பு,மேனரிஷம்,நடிப்பு என  மகாவாக வரும் ஆர்யாவின் நடிப்பு சூப்பர். ஆர்யாவின் மனைவியாக வரும் இந்துஜாவின் நடிப்பு எதார்த்தம் மீறாத நடிப்பு.நம் பக்கத்து வீட்டுப் பெண்ணை திரையில் பார்ப்பது போன்ற உணர்வை தருகிறார் இந்துஜா. ஒரு மஞ்சள் நிற புடவையை கட்டிக்கொண்டு  ஆர்யாவின் முன் வந்து நின்று இது எப்படி இருக்கிறது என்று இந்துஜா கேட்கும்போது,புடவை ஏது? எப்படி எடுத்த என்று கேட்பதற்கு  தவணை முறையில் தான் எடுத்தேன் இன்னும் பணம் கொடுக்கவில்லை
Image
ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி வேலூர் மாவட்டத்தின் திருப்பத்தூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி. இந்த நீர்வீழ்ச்சியின் தொடர்ச்சி ஆனது ஏலகிரி மலையில் உற்பத்தியாகிறது.ஏலகிரி மலையில் உற்பத்தியாகும் இந்த நீரானது பாறைகள் மீது படர்ந்து வந்து நீர்வீழ்ச்சியாக விழுகிறது. இது ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. நானும் எனது மைத்துனனும்  இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டு ஜலகம்பாறை அடைந்தோம். கிட்டத்தட்ட 2 மணி நேரம் குளித்தோம். அவ்வளவு குளிர்ச்சியாகவும் குதூகலமாகவும் இருந்தது. நீர்வீழ்ச்சியில் குளிக்கும் இடத்திலும் ஆண்களின் ஆதிக்கமே அதிகமாக இருக்கிறது. பெண்கள் குளிப்பதற்காக எவரும் வழிவிடுவதில்லை. அதனால் பெண்கள் கூட்டமாக ஒரு ஓரமாக நின்று  குளிக்கிறார்கள்.  அப்படி இல்லை என்றால் பெண்களின்  தகப்பன் அல்லது கணவன்  அரவணைப்பில் நின்று குளிக்கிறார்கள். நீர்வீழ்ச்சியை அடைவதற்கான பாதைகள் சரியாக கட்டமைக்கப்பட வில்லை.சுற்றுலா வருபவர்களின்  நலன்களையும் குழந்தைகள், முதியோர்கள், பெண்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு ஒரு நல்ல பாதை அமைத்தால்  நன்றாக இருக்கும் என்பத
Image
"நம்ம ஊரு நயாகரா கலசப்பாடி நீர்வீழ்ச்சி" இந்த பிரபஞ்ச வாழ்வு என்பதே இயற்கையோடு சேர்ந்து இயற்கையின் கீழ் வாழ்வதுதான்.ஆனால் நாம் இந்த நவீன அவசர உலகில் இயற்கையை விட்டு விலகி ஒரு இயந்திர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அன்றாட வாழ்க்கையை தாண்டி நாம் எந்த ஒன்றையும் செய்வதுமில்லை, செய்ய விருப்பம் கொள்வதுமில்லை.   மனிதர்கள் தன்  நடப்பு வாழ்க்கையில் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கான அடையாளமாக கொஞ்சம் வாசிப்பு பழக்கமும் நிறையப் பயணம் செல்லும் பழக்கமும் இருக்கும் என்பது என் நம்பிக்கை. அப்படி இயற்கை அன்னையின் மார்பிலிருந்து சுரந்து மண்ணில் விழும் ஒரு நீர்வீழ்ச்சி இந்த கலசப்பாடி நீர்வீழ்ச்சி.அரூரில் இருந்து பாப்பிரெட்டிப்பட்டி நோக்கி செல்லும் சாலையில் கிழக்குப்புறமாக கொக்கராபட்டி என்ற கிராமத்தினை கடந்து கொஞ்ச தூரம் மலைப்பகுதியை ஏறினால் அண்ணாந்து பார்க்கக் கூடிய அளவில் உயரத்திலிருந்து கொட்டும் ஒரு நீர்வீழ்ச்சியாக காட்சியளிக்கிறது இந்த கலசப்பாடி நீர்வீழ்ச்சி. அடர்ந்த காட்டின் மலைகளுக்கு நடுவில் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் இருந்து நீர்வீழ்ச்சி கொட்டு
Image
///சுதந்திரத்துக்கு முன்பான காலத்தில் கேரளாவின் தெற்கு திருவிதாங்கூரில் இருந்து வடக்கில் உள்ள மலபார் பகுதியின்  வயநாடு மலைப்பகுதிக்கு பிழைப்புக்காக குடியேறும் ஏழை கிருத்துவ குடும்பங்களின் வாழ்வுச் சிக்கல்களையும்,வதைகளையும் பதிவு செய்கிறது விஷக் கன்னி நாவல். தன்னை நம்பி பிழைக்க வந்த மனிதர்கள் மீது இயற்கை நிகழ்த்தும் கோரத்தாண்டவமே இந்நாவல் உணர்த்தும் பெரிய உண்மையாகும். இந்நாவலில் மிக முக்கிய பாத்திரங்கள் என மரியம்,அவளின் கணவன் மாத்தன், மாத்தனின் 9 வயது மகள்  மேரிக்குட்டி , ஒன்றரை வயது மகன் ஜானி, அந்தோணி, அந்தோணியின் சித்தப்பன் செரியான்,கிருஷ்ணன் நம்பியார், மாதவி,வர்க்கி,குரியன்,குரியன் மனைவி சாரம்மை,டீ கடைக்காரன் சாக்கோச்சன் என கூறலாம். மாத்தனின் மனைவி மரியம் குறுங்காடாய் இருக்கும் 20 ஏக்கர் சமமற்ற மலைப் பகுதியை வாங்கி கடுமையாய் உழைத்து சீர்படுத்தி மரவள்ளி கிழங்குச் செடி வைக்கிறாள்.மாத்தன் ஒரு சோம்பேறி மடையன். எஸ்.கே. பொற்றேக்காட் ஒரிடத்தில் இப்படி சொல்கிறார்  "தோட்ட வேலைக்கு வரும் இரண்டு பனியர்களோடு,மாத்தனும் சேர்ந்து நிற்கும் போது இரண்டோடு சேர்த்து  மூன்று மடையர்கள்
///சுரேஷ் பிரதீப்பின் "கசப்பு" சிறுகதையை முன்வைத்து இலக்கியம் என்பது மனித உணர்வுகளின் உச்சக்கட்ட வெளிப்பாடாகும்.மனித ஆழ் மனங்களின் அவதி,மனம் அதன் ஆழ்ப்பரப்பில் நிரப்பி வைத்திருக்கும்  கீழ்மைகள் என அத்தனையையும் நிஜத்திற்கு நெருக்கமாய் எழுத்தாக்கி இலக்கியம் செய்யும் கலை ஒரு சிலருக்கே கை வரக்கூடியது. அதில் சுரேஷ் நல்ல இலக்கியம் செய்யக் கூடிய ஒரு சிலரில்  எப்போதும் முதலிடத்தில் இருக்கிறார். சுவரின் சிறு விரிசலில் நுழையும் எறும்பு போல பெண்களின் மனச் சுவர்களில் நுழைந்து அவர்களின் மன அந்தரங்களின் வெறுமையை,வலியை,கசப்பை, காழ்ப்பை,பள்ளங்களை தனக்கான எழுத்தாக்கி கொள்கிறார் சுரேஷ். மனித மனம் எப்பொழுதும் தனக்கான உச்சகட்ட வெற்றி எனவும், களிப்பெனவும் கொள்வது தன் மனம் வெறுக்கும் சக ஒருவரின் ஒட்டு மொத்த வீழ்ச்சியையே. "கசப்பு" கதையில் வரும் பாரதி பாத்திரம் ஒட்டுமொத்த பெண் மனங்களில் மண்டிக்கிடக்கும் கசப்பின் பிரதிநிதி. தன்மேனிவனப்பு,பொருளாதாரம், அலுவலக மதிப்பு என எல்லாவற்றிலும் பாரதியை விட தன் சக அலுவலகியான மிருதுளாவே தன்னை விட உயர்ந்து நிற்கிறாள் என பாரதியின் மனம் முழு
///"பெண்களின் அக மன பாவனைகளின் அகங்கார நீட்சியும்,அதன் வீழ்ச்சியும்///"சொட்டுகள்" சிறுகதை/// சுரேஷ் பிரதீப் சமகால எழுத்தாளர்களில் இலக்கிய உலகில் "ஒளிர்நிழல்" மூலம் ஒரு புது வித ஒளியை உருவாக்கி அனைவரின் கவனத்தையும் தன்னை நோக்கி குவித்து வருகிறார்.இந்த பதிவு அவரின் "சொட்டுகள்" சிறுகதையைப் பற்றியது.கணவன் இல்லாத தன் சுய வாழ்வு தோல்வியின் வலி,நிராசை,ஆற்றாமை குமைச்சலை சுமந்து வாழும் ஒரு சராசரி தாயின் ஆளுமையை வீழ்த்திவிட்டு சுதந்திரமாக வாழ நினைக்கும் மகளின் வாழ்வு கணச்சொட்டுகள் கனவாக கலைவதே "சொட்டுகள்" சிறுகதை.கதை நாயகி நீண்ட நேரம் குளிப்பதற்கு "அப்படி எந்த தடிப் பயல நினைச்சிட்டு குளிக்கிற" என தாய் கேட்பது மகள்கள் கற்பனையிலும் கெட்டு விடக்கூடாது,அவளின் குறித்தூய்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஒரு தாயினுடைய பயத்தின் நீட்சியாக தெரிகிறது. ஆனால் தாயின் ஆளுகையை விட்டு வெளியேறுவதை ஒரு வித வெற்றியாக கொண்டாடுகிறது மகளின் மனம்.உலகின் ஒட்டுமொத்த தாய்களும் அக்கறை என்ற ஆக்கிரமிப்பை மகள்கள் மீது திணிப்பதை உலகின் ஒட்டு மொத்த மகள்களும் வெறுக்கிறார்கள