Posts

Showing posts from March, 2020
Image
/// அசோகமித்ரனின் "18 ஆவது அட்சக்கோடு" நாவலை முன்வைத்து எழுத்தாளர் ஜெயமோகனின் வீட்டுச்சுவரில் இருவரின் படங்கள் மட்டுமே மாட்டி வைக்கப்பட்டுள்ளதாக கூறுவார்கள். அந்த இருவர்கள். காந்தியும், அசோகமித்ரனும். ஒரு விதத்தில் அசோகமித்திரனும் எழுத்துலகில் காந்தியாக வாழ்ந்தவர் தான். எளிமையை தன் எழுத்தின் வழியாக கலை ஆக்கியவர்.   ஜீவனம் நடத்துவதற்கு எந்த உத்தரவாதத்தையும் கொடுக்காத தமிழ் இலக்கியத்தில் எழுத்தை கைவிடாமல் தொடர்ந்து அறுபது ஆண்டுகள் எழுதி தன்னை தண்டித்து கொண்டவர். பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்களிடம் அரிதே காணக்கூடிய சொற்செட்டு . புறநிலை உணர்வு,வலிந்து எதையுமே புகுத்தாத போக்கு,வாழ்க்கையின் சலனத்தை உள்ளபடியே பிரதிபலிக்கும் திறன், கலை உணர்வுக்கு அப்பாற்பட்ட நோக்கங்களிலிலிருந்து பூரண விடுதலை இவை அனைத்தும் அசோகமித்திரனின் தனித்தன்மைகள் என்கிறார் எழுத்தாளர் ஜி.நாகராஜன். கடந்த மாதம் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் அவர்களிடம் நான் பேசிக்கொண்டிருந்தபோது அசோகமித்திரன்,சுந்தர ராமசாமி ஆகியோரின் எழுத்துக்களைத் தாண்டி ஏதாவது எழுதி விடவேண்டும் என்ற வேட்கையில் நான் எழுதவே வந்தேன் என்ற
Image
பள்ளிப் பாட புத்தகங்கள் வழியாகவும், நீதிக்கதைகள் வழியாகவும் நம் சிந்தனைக்குள் புத்தரைப் பற்றி புகுத்தப்பட்ட அத்தனைத் தகவல்களைத் தாண்டி ஒரு நவீனத்துவ பார்வையில் புத்தரின் வாழ்கை வரலாற்றைச் சொல்கிறது "தம்மம் தந்தவன்" நூல். நேபாளத்தில் பிறந்து இந்தியாவில் இறந்து பல்வேறு தேசங்களின் மதமாய் வாழ்ந்துகொண்டிருக்கும் கௌதம புத்தரின் கதையை நவீனத்துவ பாணியில் சமகால நிகழ்வுகளுடன் பொருத்திப் பேசும் இந்நூல் ஒரு ஆச்சர்ய ஆக்கம். ஒரு மகனாக ,கணவனாக,தந்தையாக இருந்து பந்தங்களின் பற்றைத் துறந்து துறவியான தூயவனின் வரலாற்றை அவன் சாலமரத்தின் அடியில் மாயா தேவிக்கு  மகனாக பிறந்து அரச மரத்தடியில் ஞானம் பெற்று தம்மம் தந்தததை வரலாறு கலந்த புனைவில் நாவலாக்கியிருக்கிறார் மராத்தி எழுத்தாளர் விலாஸ் சாரங். ஞான ஒளி பெற உண்ணாமல் தன் மனதையும் உடலையும் அங்குல அங்குலமாய் சுயவதைக்கு ஆட்படுத்தி மாட்டு சாணத்தையும் சரிவர செரிக்காத தன்னுடைய மலத்தையும் உண்கிறார் புத்தர். நாட்டை, தந்தையை,தன் மனைவியை துறந்து வெளியேறிய புத்தர் மீண்டு கபிலவஸ்துவிற்கு வந்து தன் எட்டு வயது மகன் ராகுலையும் தன்னுடன் துறவியாக்கி அழைத்து
Image
/// ஆதவன் எழுதிய "காகித மலர்கள்" நாவலை முன்வைத்து "மனித  மனங்களின் அந்தரங்க மொழிபெயர்ப்பு" ஆதவனின் என் பெயர் ராமசேஷன் என்ற நாவல் தான் நான் முதலில் வாசித்தது.ஆதவன் எழுத்து மீது அளப்பரிய ஆர்வமும்,பற்றும் எனக்கு ஏற்பட ஒரு திறப்பாக இருந்தது என் பெயர் ராமசேஷன் நாவல். என்பெயர் ராமசேஷன் நாவலில் ஒரு நடுத்தர வர்க்கத்து பிராமண இளைஞன் பார்வையில் மனிதர்களின் சுயமிழப்பையும்,காமத்தையும் உளவியல் நோக்கில் எழுதியிருப்பார் ஆதவன். மனிதர்கள் ஒரு சின்ன சிரிப்பின் மூலம் தனக்குள் இருக்கும் அத்தனை சின்னத் தனங்களையும் மறைத்து உறவாடும் உயர்கலை அறிந்தவர்கள். நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கொலையாளி,ஒரு திருடன், ஒரு கற்பழிப்பவன் இருக்கக்கூடும். ஒருவனை ஏய்க்கவும்,சுரண்டவும் வாய்ப்புகளை எதிர்நோக்கியும், அப்படி அமையும் வாய்ப்புகளை வேண்டாம் என்று விளக்கியும் செல்லக் கூடியவர்களாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் ஆழ்மனதில் ஆதி மனிதனின் அத்தனை வன்மத்தையும், மூர்க்கத்தையும் மூடி வைத்து சமூக கட்டுக்கு நல்லவர்களாய்,நாகரிகம் வளர்ந்தவர்களாய் நடித்து வாழ்கிறோம் அவ்வளவு தான். ஒரு திருட்டுச
Image
///ஆதவனின் "என் பெயர் ராமசேஷன்" நாவலை முன்வைத்து " மனித மனங்களின் முகமூடி" நாம் வாழும் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் குடும்பத்தில்,குடும்பத்தைத் தாண்டி பழகுபவர்களிடம்,பணிபுரியும் இடத்தில் எல்லோரிடத்திலும் ஒருவித முகமூடியை மாட்டிக்கொண்டு வாழ்க்கையை நகர்த்துகிறோம்.  போட்டா போட்டிகள்,பாசாங்குகள், குரோதங்கள்,மனக்கிலேசங்கள் என எதுவுமற்றவர்களைப் போல் நடிக்கிறோம். நம்மை இழந்து நம்மை யாருக்கோ நிரூபித்துக்காட்ட முயற்சிக்கிறோம். சமூகப் பரப்பில் வர்க்க முரண்களை காட்டிக்கொள்ளாமல் எல்லாம் இருப்பவர்களைப் போல் காட்ட ஒரு முகமூடியை விரும்பி மாட்டிக் கொள்கிறோம். இந்திய நடுத்தர மற்றும் மேல் மட்ட வர்க்கத்து குடும்ப மனிதர்களின் உறவு, காதல்,குடும்ப உறவுகளின் குலைவு, போலித்தனம்,பாஷாங்குகள்,முகமூடிகள் ஆகியவற்றை ஒரு பிராமண இளைஞனின் பார்வையிலும், குரலிலும் சொல்லப்படும் நாவலே  "என் பெயர் ராமசேஷன் ". தன்னை ஒரு Casonova வாக காட்டிக் கொள்ளும் Amoral hero வின் கதை இந்நாவல். இன்ஜினியரிங் படிக்கும் பிராமண இளைஞன் ராமசேஷன் என்பவனின் குடும்பம், அவன் சந்திக்கும் நண்பர்களின்
Image
///கண்மணி குணசேகரன் எழுதிய  "கோரை" நாவலை முன் வைத்து நான் அடிப்படையில் சிறு விவசாய பின்புலமுள்ள குடும்பத்தில் பிறந்தவன். இருப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நுகத்தடியில் மாடுகளைப் பூட்டி கவலை மூலம் கிணற்றிலிருந்து நிலத்திற்கு நீர் பாய்ச்சுவோம். பிறகு நீர் இரைக்கும் வளர்ச்சி டீசல் என்ஜீனுக்கு மாறியது. அதன் பிறகு மின் மோட்டார் மூலம் நீர் இரைக்கும் வசதியில் வந்து நிற்கிறோம். பயிருக்கு இரண்டு நாள் தண்ணீர் பாய்ச்சவில்லையென்றால் பயிர் வாடிவிடும் என என் அப்பா நிலத்தை சுற்றி சுற்றி வருவார். சில நேரங்களில் கிணற்றில் நீர் இருப்பு இல்லையென்றால் பக்கத்து நிலத்துகாரனின் கிணற்றிலிருந்து நீர் பாய்த்துக் கொள்வதும் உண்டு. பயிர்களுக்கு மருந்தடிக்க, உரம் வைக்க காசில்லாமல் அழைந்து என் அப்பா அலுப்பு கொள்வதைப் பார்த்திருக்கிறேன். பத்து வருடங்களுக்கு முன் வரை என் நிலத்தில் விளைந்த நெல் அரிசியைத் தான் உண்டேன்.இப்போது பல்பொருள் அங்காடியில் அரிசி வாங்கித் தின்னும் அவல நிலை. முதலாளித்துவ முதலையின் வாயில் அகப்பட்டு விட்டோம்.கடுகளவு மனம் கொண்ட கருங்காலி பெரியப்பன் ஒருவனால் என் நிலம்