பாட்டையாவின் பழங்கதைகள்

 பாட்டையாவின் பழங்கதைகள்: பாரதி மணி



நம் வாழ்ந்த இடம்,பழகிய மனிதர்களுடன் உடனான நினைவுகள் எல்லாம் நம் ஆழ்மனதில் அனுபவங்களாக நின்று விடுகின்றன.வாழ்வின் சம்பவ தொகுப்புகளை நேரடியாக சொல்லும்போது அதில் ஒரு சம்பவத்தின் நிகழ்வுகளும் அது குறித்த தரவுகளும் மட்டுமே இருப்பதாக தோன்றும்.

நீங்கள் நிகழ்ந்த வரலாற்றையே ஒரு சம்பவத்தையோ சொல்லும்போது அதில் கொஞ்சம் புனைவுத்தன்மையும் இருக்கும்.புனைவற்ற எதுவுமே இங்கு வறட்சியானது.

எழுத்தர் பாரதி மணியின் பல நேரங்களில் பல மனிதர்கள் புத்தகத்தை வாசித்த போது உண்மையில் இது அவருடைய வாழ்க்கை அனுபவ கட்டுரைகளாகவே எனக்கு தோன்றவில்லை.புனைவைப் பூசிக் கொண்ட ஒரு சிறுகதை போல இருந்தது.

அத்தனை கட்டுரையிலும் பகடி பாஷை இருக்கும்.பாரதி மணி தன்னுடைய பெரும்பான்மையான வாழ்வை டெல்லியில் கழித்ததால் டெல்லி குறித்த ஒரு நேர்மையான சித்திரத்தை அவரது படைப்புகளில் காணலாம்.பல நேரங்களில் பல மனிதர்கள் நூலில் அதை காணலாம்.

பாட்டையாவின் பழங்கதைகள் நூலும் அப்படிப்பட்ட சுவாரஸ்யமான தகவல்களும்,பகடியும் சேர்ந்த ஒரு படைப்பு.எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் எழுத்துக்களில் தொடர்ச்சியான ஒரு பகடி வாடை உண்டு.

40 வருடங்களாக நாடகத்தில் நடித்தது,தேசிய விருது பெற்ற பல படங்களில் நடித்தது போக தமிழ் சினிமாவில் சில படங்களில் உதிரி பாத்திர நடிகராகவும் நடித்த பாரதி மணியின் முகம் இதுமட்டுமல்ல.

மத்திய அரசு பணியில் பணியாற்றியதால் நேரு இந்திரா காந்தி போன்ற பெரிய தலைவர்களுடன் எல்லாம் பழகியவர்.

பங்களாதேஷில் உள்ள பத்மா நதியிலிருந்து கிடைக்கும் ஒரு வித மீன் குழம்பை பங்களாதேஷ் அதிபர் ஷேக் ஹசீனா வீட்டிலிருந்து இந்திரா காந்திக்கு பிலைட்டில் கொண்டு வந்து கொடுத்த தகவல்கள் என மனிதரிடம் நிறைய தகவல்கள் உண்டு. 

பாட்டையாவின் பழங்கதைகள் நூலில் ஆரம்பத்தில் வாஜ்பாய் பெண்கள் விஷயத்தில் எவ்வளவு ஒழுங்கீனமாக இருந்தார் என்பதை அப்போதைய ஜன சங்கத்தின் தலைவராக இருந்த பல்ராஜ் மதோக் இப்படி கூறுகிறார்:

ஆரம்பகால வாஜ்பாய் லீலைகளை மதோக் வெகுவாக வெறுத்தார்.அவர் கட்டிக்காத்த கட்சிக்கு அதை களங்கமாகவே பார்த்தார்.தனிமனித ஒழுக்கமில்லாத மனிதன் மனிதனே அல்ல. ஒழுக்கமில்லாதவனுக்கு பொதுவாழ்வில் இடமில்லையென்பது அவர் வாதம்.கோல்வால்கருக்கு எழுதிய தன் கடிதத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறார்: “Some time back when I was the president of Jana Sangh, Jagdish Prasad Mathur, in-charge of the central office who was staying with Atal Behari at 30, Rajendra Prasad Road, -- our Party Office--  had complained to me that Atal had turned this house intoa den of immoral activities. Everyday new girls were coming there. Things were getting out of hand. So as a senior leader of Jana Sangh I have dared to bring to your notice this fact, he told me. I had some information about the character of Atal, but I did not know that the situation had deteriorated so much. I called Atal to my residence and in a closed room inquired from him about matters raised by Mathur. The explanation he offered further confirmed the facts conveyed by Mathur. I suggested to him that he should get married, otherwise, he was bound to get a bad name, and the reputation of Jan Sangh too would suffer.” (p. 25).கடிதத்தைப்படித்த கோல்வால்கர் மதோக்கிடம், 'எனக்கும் இதெல்லாம் முன்பே தெரியும். பலர் சொல்லியிருக்கிறார்கள். கட்சியின் எதிர்காலத்தைக்கருதி, நீலகண்டனாக கழுத்தில் விஷத்தை வைத்துக்கொண்டு பொறுத்திருக்கிறேன்!' என்று சொல்லியிருக்கிறார்.

இன்னும் கூடுதலாக சுவாரசியம் என்னவென்றால் தீனதயாள் உபாத்தியாயா கொலையில் வாஜ்பாய்க்கும் லால் கிருஷ்ணா அத்வானிக்கும் தொடர்பு இருந்ததாக பல்ராஜ் மது கடைசி வரை நம்பினார் என்று இந்த நூலில் பாரதி மணி குறிப்பிடுகிறார்.

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்