பறவைகளைப் பார்



பறவைகளை விரும்பாதவர்கள் யார்? அழகாகவும் ஒயிலாகவும் உள்ள இந்த சிறு உயிர்களை நோக்கிக் கொண்டிருப்பதே ஒரு பெரிய இன்பம். அங்கு மிங்கும் பறப்பதும், தத்தித்தத்தி நடப்பதும்,ஓடுவதும்,பாடுவதும், பேசுவதும், அலகினால் கோதி அழகுசெய்து கொள்வதுமாக இப்படி அவை எப்பொழுதும் சுறுசுறுப்பாகவே இருக்கின்றன.அவற்றின் பேச்சிற்காகவும்,அவற்றின் அழகுக்காகவும் நாம் அவற்றை விரும்புகிறோம் பறவைகள் இல்லாத உலகம் சுவை குறைந்ததாகவே இருக்கும் என தொடங்கும் இந்த புத்தகம் பறவைகள் குறித்து விளக்கும் ஒரு நல்ல புத்தகம்.

பறவைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கான ஒரு முழுமையான கையேடு இந்த புத்தகம்.

குறிப்பாக  பறவைகளைப் பற்றி அறிந்து கொள்ள குழந்தைகளுக்கு பயனுள்ள ஒரு பார்வையை இந்த புத்தகம் வழங்குகிறது. பறவைகளின் வகைகள்,அவைகளின் வாழ்விடம்,வலசைப் போதல்,பறவைகளின் மொழிகள்,அவைகள் கூடு கட்டும் முறைகள் என பறவைகளின் முழு உலகை இப்புத்தகம் தொகுத்து தருகிறது ஆங்கிலத்தில் ஜமால் ஆரா எழுதியதை. தமிழில் பெரியசாமி தூரன் மொழிபெயர்த்துள்ளார்.

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்