Posts

Showing posts from October, 2023

திமிங்கல வேட்டை

Image
/ஹெர்மன் மெல்வில்(Herman Mellvile) எழுதிய திமிங்கல வேட்டை(Moby Dick) நாவலை முன் வைத்து கடற்பயண புனைவு நாவல்களில் எப்போதும் என் விருப்பத்திற்குரியது எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் "கிழவனும்,கடலும்" நாவல் என்பேன். சாண்டியாகு எனும் மீன் பிடிக்கும் கிழவனுக்கும்,இயற்கைக்கும் இடையே நிகழும் போராட்டத்தை ஹெர்னஸ்ட் ஹெமிங்வே  எழுதி அந்நாவலுக்காக நோபல் பரிசும் பெற்றார். நடு சமுத்திரத்தில் ஒரு ராட்சத மீனுக்கும்,கிழவனுக்கும் நடக்கும் போராட்டத்தை சாகச உணர்வுகள் மோலோங்க எழுதப்பட்ட ஒரு சிறந்த நாவல் கிழவனும் கடலும். ஒரு வயதான கிழவனின் தன்னம்பிக்கையும்,மன போராட்டத்தையும் மையப்படுத்தி எழுதப்பட்ட நாவல் அது. கிட்டத்தட்ட கிழவனும்,கடலும் நாவலைப் போலவே கடற்பயணத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ள நாவல் திமிங்கல வேட்டை(Moby Dick). நீண்ட நாட்கள் மீன் கிடைக்காத ஒரு கிழவன் தன்னை ஒரு  மீனவன் என நிரூபிக்க கடலுக்குள் பயணம் செய்து மீன் பிடித்து வரும்  வைராக்கிய உணர்வை அடிப்படையாக கொண்ட கிழவனும் கடலும் நாவலைப் போல, திமிங்கல வேட்டை(Moby Dick) நாவல் ஒரு வெள்ளை திமிங்கலத்தால் (Moby Dick) தன் ஒரு காலை இழந்த ஆகாப் என்ற க

வெளியேற்றம்

Image
 வெளியேற்றம் - யுவன் சந்திரசேகர். அறிவியலுக்கும் ஆன்மீகத்துக்கும் அடைபடாத மாற்று மெய்மைகளின் தேடல் தான் யுவன் சந்திரசேகர் எழுதிய அவரின் முதல் நாவலான குள்ளச் சித்தன் சரித்திரம் நாவலின் களம். அதன் தொடர்ச்சியாகவே வெளியேற்றம் நாவலையும் கருதலாம்.நடைமுறை வாழ்க்கையின் சாத்தியத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றை தேட முனையும்,வாழ்க்கையின் சிடுக்குகளின் சிரமம் தாளாமல் குடும்பத்தை உறவுகளை விட்டு திருமணம் ஆன நாளன்றே வீட்டை விட்டு வெளியேறும் வேதமூர்த்தி,ஜய்ராம்,வயிரவன் செட்டியார்,மன்னாதி குற்றாலிங்கம், பால்பாண்டி,சிவராமன்,நிறைய பொம்பளளைங்களிடம் போனதால் நோய் வாங்கும் ராமலிங்கம் பிறகு அது யானைக்கால் என வேதமூர்த்தியால் சரி செய்யப்படுகிறது,கண் தெரியாத ஹரிஹரன், கோவர்த்தனம், என பல்வேறு மனிதர்களின் கதைகளை தேடிச் சென்று கேட்கும் சந்தானம் என எல்லா மனிதர்களுக்குள்ளும் ஒரு வித தொடர்பு இருப்பதை முடிச்சிடுகிறது நாவல். வீட்டை விட்டு வெளியேறும் மேற்கண்ட பெயர் கொண்ட எல்லாரும் சென்று சேர்வது வேதமூர்த்தி என்ற சாமியாரைத்தான். வீட்டைத் துறந்து இலக்கற்று திரியும் மனிதர்களை நாம் அன்றாடம் பார்க்கலாம்.அவர்களில் மனப்பிறழ்வுக்கு உள்ள