இலட்சிய இந்து ஓட்டல் விபூதி பூசன் வந்தோபாத்தியாவின் மிகச்சிறந்த நாவல்களில் இலட்சிய இந்து ஓட்டல் முதன்மையானது என்பேன்.ஒரு சாதாரண மனிதனின் அசாதாரணமான நம்பிக்கையின் கதை.அவனைச் சுற்றிய நல்ல மனம் கொண்ட பெண்களின் கதை. மனதில் எந்தவித மலினமான எண்ணங்களும்,தன்னை அவமானப்படுத்தியவர்களையும்,வஞ்சித்தவர்களையும் வாய்ப்பு கிடைத்தால் பழி வாங்கலாம் என்ற எந்த மனக் குரோதமும் இல்லாத ஹஜாரியின் பாத்திரம் மனித மாண்பின் உச்சம். உண்மையும்,உழைப்பும்,நேர்மையும் இருந்தால் ஒருவனுடைய பயணமும் லட்சியமும் தடைபடாது என்பதை ஹஜாரி பாத்திரத்தின் வழியாக முன் வைக்கிறார் விபூதி பூஷன். தன்னை மறைத்துக் கொள்ளாமல் எளிமையையும் நேர்மையும் அன்பையும் வெளிப்படுத்தும் மனிதர்களுக்கு நல்ல மனிதர்கள் கிடைப்பார்கள்.தனியாக ஒரு ஓட்டல் வைக்க வேண்டும் என்ற ஹஜாரியின் லட்சியத்திற்கு பணம் கொடுத்து உதவும் அதஸி(ஜமீன்தார் மகள்),குஸீமா, சுவாஷினி(இடையர் குல பெண்கள்) ஆகிய மூன்று பெண்களின் பாத்திரம் அவ்வளவு அசல் தன்மையுடன் எழுதப்பட்டுள்ளது. எளிய மனிதர்களின் சின்ன வாழ்க்கையும் சிறிய லட்சியத்தையும் எந்த வித அலங்கார பேச்சும் ஆபரண பூச்சும் இல்...
///ஜெயமோகன் எழுதிய ஜனநாயகச் சோதனைச்சாலையில் நூலை முன்வைத்து ஜனநாயகம் என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளவும்,இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் மக்கள் மனதில் ஆழ ஊன்றி வைத்துள்ள வாக்கரசியல் உளவியலை புரிந்து கொள்வதற்குமான ஒரு மிகச் சிறந்த கையேடு இந்த புத்தகம். அரசியல் கட்சிகள் நடத்துபவர்களின் பித்தலாட்டங்கள்,ஊழல்,மக்களை வாக்கு மந்தைகளாகவே வைத்திருக்க அவர்கள் செய்யும் தந்திரங்கள் போன்றவற்றை எளிய வாசகனும் எளிதில் அணுகக்கூடிய பார்வையில் எழுதியிருக்கிறார் ஜெயமோகன். என் சொந்த சாதிக்காரனுக்குத் தான் நான் வாக்களிப்பேன்.என் சொந்த மதத்தைச் சேர்ந்தவனுக்குத்தான் நான் வாக்களிப்பேன் என்ற உளவியலை ஒவ்வொரு இந்திய வாக்காளனின் மனதில் உருவாக்கி வைத்திருக்கிறது அரசியல் கட்சிகள். அப்படி சுயசாதி காரனுக்கும்,சுய மதத்தை சேர்ந்தவனுக்கும் வாக்களிக்க நினைக்கும் ஒரு வாக்காளனின் மனநிலை இந்த புத்தகத்தை படித்தப் பிறகு மாறலாம். சமூக ஊடங்கள் செய்யும் பொய் பரப்பும் தன்மை,விவாத நிகழ்வுகள் என்ற பெயரில் அவர்களே செய்யும் ஜோடிப்பையும்,நடிப்பையும் ஜெயமோகன் இந்நூலில் சுட்டிக் காட்டுகிறார். நமக்கு வழங்கப்பட்ட ஜனநாயக கடமையை ...
///எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய"ரயில் நிலையங்களின் தோழமை" நூல் குறித்து மனித இனம் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயபணப்படாமல் இருந்திருந்தால் நாகரிகம் என்ற ஒன்றே உருவாகி இருக்காது. ஓடாத நதியும்,தேடாத மனமும் தெளிவு கொள்ளாது என்று சொல்லுவார்கள். பயணங்களின் வழியே நாம் கண்டடைவது பல்வேறு இடங்களை,இதுவரை நாம் கண்டு கால்பதிக்காத நிலப்பரப்புகளை மட்டுமல்ல,நம்மையும் கண்டடைந்து கொள்வதற்கான வழியை அலைதல் தியானமான பயணமே கொடுக்கிறது. இதுநாள் வரை உங்கள் மனம் கட்டமைத்து வைத்திருக்கும் சொந்த இடம்,சொந்த ஊர்,சொந்த சாதி போன்ற எண்ணங்களை உடைத்து உங்களை அடையாளமற்ற ஒரு பறவையாக உணரச் செய்ய வைப்பது பயணமே. நிறைய பயணம் செய்தும், இலக்கியம் செய்தும் தன் வாழ்வின் பெரும் பகுதியை கரைத்துக் கொண்டவர் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள். காற்றில் இலக்கின்றி திரியும் ஒரு பறவையின் இறகைப் போல பல்வேறு இடங்களைக் காண ஒரு தேசாந்திரியாக திரிந்தவர் எஸ்.ராமகிருஷ்ணன். அவர் பயணம் செய்த இடங்களை பற்றிய பயண அனுபவங்களின் தொகுப்பு தான் இந்த நூல். ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்து...
Comments
Post a Comment