Posts

Showing posts from February, 2021

கிடங்குத் தெரு

Image
 ///செந்தூரம் ஜெகதீஷ் எழுதிய கிடங்குத் தெரு நாவலை முன்வைத்து ராஜா என்ற 30 வயது இளைஞனின் சுய வாழ்வு பதிவின் வழியே கிடங்குத் தெருவின் மனிதர்களையும்,அங்கு நடக்கும் வியபார நுட்பங்களையும்,அதன் அரசியலையும் பேசும் ஒரு  சுய சரிதை வகை நாவல் என்றே கிடங்குத் தெரு நாவலை கூறலாம். என் வாசிப்பனுவத்தில்  தனித்த எழுத்து நடையிலும்,மொழி கையாள்கையிலும் என்னை வசீகரித்த எழுத்தாளர்கள் புதுமைப்பித்தனும் சுந்தர ராமசாமியும் என்று சொல்வேன். புதுமைப்பித்தன் எழுத்திலும்,சுந்தர ராமசாமி எழுத்திலும் என் அகம்  அடைந்து கொள்ளும் நிறைவை கிடங்குத் தெரு நாவலிலும் நான் அடைந்தேன். இவ்வளவு இலக்கிய அடர்வும்,எழுத்து நடையும் உள்ள எழுத்தாளரான செந்தூரம் ஜெகதீஷ் அவர்கள் ஏன் தொடர்ந்து எழுதவில்லை என்பது எனக்கு பெரும் ஏமாற்றமாக இருக்கிறது. அவர் தொடர்ந்து எழுதி இருந்தால் தமிழ் இலக்கிய உலகில்  அவருக்கான இடம் மிகப்பெரிதாக இருந்திருக்கும். அதனால் என்ன ஒன்றின் தரத்தையும்,தகுதியையும் தீர்மானிப்பது எண்ணிக்கை அல்ல. சம்பத் இடைவெளி என்ற ஒரு நாவலைத் தான் எழுதினார். பா.சிங்காரம் புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால் ஆகிய இரண்டு  நாவல்களை மட்டும் தான

சோளகர் தொட்டி

Image
 ///ச.பாலமுருகன் எழுதிய"சோளகர் தொட்டி" நாவலை முன்வைத்து மேற்கு தொடர்ச்சி மலையில் கர்நாடக எல்லையில் அமைந்துள்ள தொட்டி என்ற கிராமத்தில் வாழ்ந்த பழங்குடி இன மக்களின் வாழ்க்கையை,அவர்கள் பட்ட வாதையை முன் வைக்கிறது இந்நாவல். வீரப்பனை பிடிக்க தமிழக-கர்நாடக எல்லை போலீஸ் படையினரால் சோளகர் பழங்குடியின மக்கள் எப்படி சித்திரவதை செய்யப்பட்டார்கள் என்பதின் துல்லிய சித்தரிப்பை இந்நாவலில் செய்திருக்கிறார் ச.பாலமுருகன். பொது வெளியில் வீரப்பனைப் பற்றி கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பங்களைத் தாண்டி வீரப்பனால் பழங்குடியின மக்களுக்கு எவ்வித தீங்கும் நேரவில்லையென்றாலும் அவனுக்கு சோளகர்கள் உதவி செய்கிறார்கள் என எண்ணி தமிழக கர்நாடக போலீஸ்கள் சோளர்களை அடித்து சித்ரவதை செய்ததை பதிவு செய்ததில் இந்நாவல் மிக முக்கிய கவனம் கொள்கிறது. காட்டுக்கும்,சோளகர்களுக்கும் இருந்த உறவை,அவர்களின் கூட்டு வாழ்க்கை முறையை நாவலின் முதல் பாகம் பதிவு செய்கிறது. இரண்டாவது பாகம் வீரப்பனை தேடும் போலீஸ் அதிரடி படையினரால் சோளகர்களின் வாழ்வும்,நிம்மதியும் எப்படி  சீர்குலைகிறது என்பதை பதிவு செய்கிறது. அலெக்ஸ் ஹேலி எழுதிய ஏழு தலைமுறை

ஜனவரி 2021ல் வாசித்த புத்தகங்கள்

Image
 ///இம்மாதம் ஜனவரி,2021ல் வாசித்த புத்தகங்கள்: 1.ஆன்மா என்னும் புத்தகம்-என்.கௌரி 2. ரயில் நிலையங்களின் தோழமை - எஸ். ராமகிருஷ்ணன் 3.21ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்- யுவால் நோவா ஹராரி 4.பிரபஞ்சன் கட்டுரைகள்-தேர்வும், தொகுப்பும் நா. முருகேசபாண்டியன் 5. அஷேரா-சயந்தன் 6.வாசிப்பது எப்படி?- செல்வேந்திரன் 7.கபீர் புன்னகைக்கும் பிரபஞ்சம் - தமிழில்: செங்கதிர் 8.ரசவாதி - Paulo Coelho 9.நேருவின் ஆட்சி பதியம் போட்ட 18 ஆண்டுகள் - ரமணன்/// ❤️❤️❤️❤️