Posts

Showing posts from December, 2020

2020ஆம் ஆண்டில் வாசித்தவை

Image
 2020 ஆம் ஆண்டில் நான் வாசித்த புத்தகங்களின் பட்டியல்: 1.குற்றமும் தண்டனையும் -ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி(தமிழில் :எம்.ஏ.சுசீலா) 2.ஆதிரை - சயந்தன் 3.சிக்கவீர ராஜேந்திரன் -மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் 4.கதை கேட்கும் சுவர்கள் - கே.வி.சைலஜா 5.பசித்த மானிடம் - கரிச்சான் குஞ்சு 6.ஒரு கடலோர கிராமத்தின் கதை- தோப்பில் முஹம்மது மீரான் 7.நிலம் பூத்து மலர்ந்த நாள் - கே.வி.ஜெயஸ்ரீ 8.கோரை - கண்மணி குணசேகரன் 9.அஞ்சலை - கண்மணி குணசேகரன் 10.என்பிலதனை வெயில் காயும் - நாஞ்சில் நாடன்  11.சதுரங்கக் குதிரைகள் - நாஞ்சில் நாடன் 12.காகித மலர்கள் - ஆதவன் 13.என் பெயர் ராமசேஷன் -ஆதவன் 14. ஆதவன் சிறுகதைகள் - ஆதவன் 15.18 ஆவது அட்சக்கோடு - அசோகமித்ரன் 16.செம்மீன் - தகழி சிவசங்கரன்பிள்ளை (தமிழில்: சுந்தர ராமசாமி) 17. இரண்டு படி- தகழி  சிவசங்கரன்பிள்ளை(தமிழில் : டி.ராமலிங்கம்பிள்ளை) 18.தம்மம் தந்தவன் - விலாஸ்சாரங்(தமிழில்: காளிப்ரஸாத்) 19.கோபல்லபுரத்து மக்கள் - கி. ராஜநாராயணன் 20. Article 15- சா.திருவாசகம் 21. அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள் -மிகெல் நைமி (தமிழில் : புவியரசு) 22. மகிழம்பூ மரம் - ஜய

மானுட வாசிப்பு

Image
 ///தொ.பரமசிவன் எழுதிய "மானுட வாசிப்பு" நூலை முன்வைத்து பண்பாட்டு ஆய்வாளர் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களின் நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல். தமிழ்நாட்டின் பண்பாட்டு, நாட்டாரியல் ஆய்வு கருத்துகளின் கருவூலமாக கருதப்படும் தொ.ப அவர்களின் கருத்து தெறிப்புகளை உள்ளடக்கிய இப்புத்தகம் சாதி, மதம்,தமிழரின் உணவுப் பண்பாடு,சிறுதெய்வ வழிபாடு என எல்லாத் தளங்களை பற்றியும் பேசுகிறது. அம்பேத்கரை சிந்தனையாளராக ஏற்றுக்கொள்ளக்கூடிய இந்துத்துவாவாதிகள் பெரியாரை புறக்கணிப்பதற்கான காரணம் இந்துத்துவவாதிகளின் அடிப்படைக் கொள்கையான வேதத்தின் அத்தாரிட்டியை,சாதிய மேல்-கீழ் அடுக்கை ஒத்துக் கொள்வதை ஏற்றுக்கொள்ளாத பெரியாரை ஏற்க மறுக்கின்றனர். அம்பேத்கர் பெரிய படிப்பாளி, அறிவாளுமை என்பதால் வேறு வழியின்றி அவரை பிராமணர்கள் ஒத்துக் கொள்கிறார்கள். இசைஞானி இளையராஜா அவர்களை பிராமணர்கள் ஏற்றுக் கொண்டதைப் போல. தமிழில் ஜாதி என்ற சொல்லே இல்லை என்கிறார் தொ.ப. தமிழில் ஜா என்ற வேர்ச் சொல்லே கிடையாது.ஜா என்ற வேர்ச் சொல்லுக்கு அர்த்தம் பிறப்பு என்பதாகும். தொல்காப்பியத்தில் ஒரே ஒரு இடத்தில் உயிர்வாழ் சாதி என்று பறவைகளை செல்வ

பழம்பெரும் ஞானத்தை பெறுவதற்கான பத்து வாயில்கள்

Image
 ///ஹெச்.எஸ்.சிவபிரகாஷ் எழுதிய  "பழம் பெரும் ஞானத்திற்கான பத்து வாயில்கள்" நூலை முன்வைத்து ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீது அல்லது ஒரு குறிப்பிட்ட கடவுளின் மீது பற்று ஏற்படுத்துவதற்கான வழிமுறைகளை வழங்கும் புத்தகம் அல்ல இது. அக வெறுமையைப் போக்கவும்,அக உலகை உற்றுப் பார்ப்பதற்குமான வழிமுறைகளை அளிக்கிறது இப்புத்தகம். ஆன்மீக நிறைவை மனம் அடைவதற்கு இந்து மதம்,புத்த மதம்,சமண மதம் என எல்லா  மதங்களிலிலும் பின்பற்றிய வழிமுறைகளை அளிக்கிறது இந்நூல். ஆன்மீகத்தின் இறுதி நிலையை அடைய குரு தொடங்கி அனுத்தரம் வரையிலான பத்து வாயில்களைப் பற்றி விவாதிக்கிறது இக்கட்டுரை தொகுப்பு.  பத்து வாயில்கள் 1. குரு 2. மந்திரம் 3. தெயவம் 4. உடல் 5. பிராணன் 6. மனம் 7. காமம் 8. கர்மமும்,காயகமும் 9. பிரதிபா 10.அனுத்தரம் தேடல் கொண்டவர்களின் ஆன்மீக பயணத்தை துவக்கி வைக்கவும் வழிகாட்டவும் ஒரு ஆன்மீக குரு  தேவைப்படுகிறார் என்றும், "குருவிற்கு அடிமையாகாத வரை உனக்கு கடைத்தேற்றம் இல்லை" என்று கன்னட புனிதப் பாடகர் புரந்தரதாசர் கூறுவதை சுட்டிக் காட்டுகிறார் ஹெச்.எஸ்.சிவபிரகாஷ். ஆன்மீக ஞானத்தை அடைய முதன்மையான வாயில் க

வாழ்க வாழ்க

Image
 ///இமையம் எழுதிய வாழ்க வாழ்க நாவலை முன்வைத்து எப்போதும் பாவப்பட்டவர்களின், பசித்தவர்களின் பக்கம் நிற்கும் ஒரு மாபெரும் சக்தியாக இலக்கியம் இருக்க வேண்டும் என்கிறார் மலையாள எழுத்தாளர் சந்தோஷ் ஏச்சிக்கானம். எளிய மக்களின் வாழ்வியலை அம்மக்களின் மொழியிலேயே கலையாக்கும் வேலையை எப்பொழுதும் தன் எழுத்துக்களில் செய்து கொண்டிருப்பவர் எழுத்தாளர் இமையம் அவர்கள். இமையம் அவர்களின் படைப்புகளில் வரும் மனிதர்கள் வாசகர்களுக்கு அந்நியப்பட்டு போகாதவர்கள். அவரது படைப்புலகம்  எளிய மனிதர்களைப் பற்றியது.நம்மை சுற்றியுள்ளவர்களைப் பற்றியது. நான் வாசித்த வரை கோவேறு கழுதைகள்,பெத்தவன்,எங்கதெ ஆகிய நாவல்களில் எளிய மனிதர்களை,அவர்களின் எதார்த்த வாழ்வின் சிடுக்குகளை எழுதியிருப்பார். எல்லாமே அரசியலிலிருந்து தொடங்குகிறது அல்லது அரசியலை நோக்கி போகிறது (Everything must be from politics or towards politics) என்ற சொற்றொடர் போல அரசியலற்ற கலையும், அரசியலற்ற வாழ்வும் நாம் கற்பனை செய்ய முடியாத ஒன்று. அப்படி அரசியல் சார்ந்த ஒரு நெடுங்கதை அல்லது குறு நாவல் தான்  வாழ்க வாழ்க. இமையம் அவர்கள் எழுத்தாளர் என்ற முகத்தை தாண்டி அடிப்படையில்

ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்

Image
 ///ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்(Brief Answers to the big Questions) நூலை முன்வைத்து பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான மனிதகுல வரலாற்றை அறிவியல் பார்வையில் பதிவு செய்த யுவால் நோவா ஹராரியின் சேப்பியன்ஸ் புத்தகம் என்னை வியப்பில் ஆழ்த்திய ஒரு சிறந்த புத்தகம் என்பேன். அறிவுப் புரட்சி,வேளாண்மைப் புரட்சி மனிதகுல ஒருங்கிணைவு, அறிவியல் புரட்சி என்கிற நான்கு தலைப்பில் மனிதகுலம் கடந்து வந்த பரிணாம வளர்ச்சி பாதை,மனிதகுலத்திற்கு வேளாண் புரட்சி செய்த மோசடி, மனிதகுலம் எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது, அதன் முன்னிருக்கும் சவால்கள் ஆகியவற்றைஅறிவியல் கலந்த வரலாற்றுப் புனைவின் வடிவில் சேப்பியன்ஸ் புத்தகத்தை எழுதியிருப்பார் யுவால் நோவா ஹராரி. சேப்பியன்ஸ் புத்தகத்திற்கு பிறகு என்னை பெரிதும் பாதித்த புத்தகம் ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள் (Brief Answers to the big Questions) புத்தகம் என்று சொல்லலாம். கடவுள் ஒருவர் இருக்கிறாரா? இந்த பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது? மனிதனைத் தவிர அறிவார்ந்த உயிரினங்கள் இந்த பிரபஞ்சத்தில் வேறு ஏதாவது இருக்கிறதா? வருங்கால

அறியப்படாத தமிழகம்

Image
 ///தொ.பரமசிவம் எழுதிய அறியப்படாத தமிழகம் நூலை முன்வைத்து தொ.பரமசிவன் ஒரு பேராசிரியர் மற்றும் வரலாற்று ஆய்வாளர் (ஆசான் ஜெயமோகன் தொ.ப ஒரு வரலாற்று ஆய்வாளர் அல்ல என்கிறார்). தமிழர்களின் மதம்,சாதி,ஆன்மீகம், ஆலய வழிபாடுகள், பண்பாடு,உணவு மற்றும் உடை போன்ற தளங்களின் முன் தடங்கங்களை மற்றும் வேர்களை வரலாற்று ஆய்வின் வழியே இந்நூலில் விவரிக்கிறார் தொ.ப. தமிழர்களின் பழக்க வழக்கங்கள், பண்பாடு,நம்பிக்கைகள், வாய்மொழிக் கதைகள் ஆகியவற்றை நெருங்கி பதிவு செய்யும் நாட்டாரியல் ஆய்வு ஆவணமே அறியப்படாத தமிழகம் நூல். நம் வேர்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் ஒரு விவரத் தொகுப்பு இந்நூல். செய்த வேலைக்கு மாற்றாக நெல்லும் (சம்பா) உப்பும் கொடுத்த வழக்கத்தினால் தான் சம்பளம் என்ற சொல் பிறந்தது.ஆங்கிலத்திலும் Salary என்ற சொல் Salt என்பதன் அடியாகப் பிறந்தது என்ற தகவல் நாம் புதிதாக அறிவது. உடைகள் பற்றி குறிப்பிடும் போது பெண்கள் அணியும் ரவிக்கை எனப்படும் மேலாடை பதினைந்தாம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு தமிழகத்தில் குடியேறிய போது தெலுங்கு மக்களிடமிருந்துஅந்த பழக்கம் வந்தது என்கிறார் தொ.ப. தாலி கட்டும் பழக்கம் தமிழர் திரும

கரமசோவ் சகோதரர்கள் (The Brothers Karamazov)

Image
 ///தஸ்தாயேவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலை முன்வைத்து உலக மொழிகளில் உள்ள உன்னத உயர் இலக்கியங்கள் என பத்துக்குள் வரிசைப்படுத்தினால் ஃபியோதர் தஸ்தாயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும்,அசடன் மற்றும் கரமசோவ் சகோதரர்கள் ஆகிய மூன்று நாவல்கள் நிச்சயம் இடம்பெறும். தஸ்தாயேவ்ஸ்கியின் படைப்புகளை வாசிப்பதின் வழியே ஒருவன் உலகின் ஒட்டுமொத்த மானுட மனங்களை வாசித்துவிட்ட பேரனுபவத்தை அடைகிறான். மானுட ஆன்மாவின் ஆழங்களில் நடந்து அதன் கீழ்மையை கிழித்து நம் முன் வைப்பவர் தஸ்தயேவ்ஸ்கி. குற்றமும் தண்டனையும் நாவலில் வரும் ரஸ்கோல்னிவ், அசடன் நாவலில் வரும் மிஷ்கின், கரமசோவ் சகோதரர்கள் நாவலில் வரும் அல்யோஷா பாத்திரங்கள் வழியே அவர் மானுடத்திற்கு வலியுறுத்துவது அன்பையும், மனிதநேயத்தையும் தான். குற்றமும் தண்டனையும் நாவலில் அதிக வட்டிக்கு பணம் கொடுக்கும் கிழவியையும் அவளது தங்கையையும் கொலை செய்துவிடும் ரஸ்கோல்னிவ் சட்டம் பயின்ற அறிவு நுட்பமானவன். தான் செய்த குற்றத்தை நியாயப்படுத்தி அதை ஏற்றுக்கொள்ளாமல் தப்பிக்கிறான். கடைசியில் அவனுடைய அறிவுக்கும் சோனியா என்ற பெண்ணின் அன்புக்கும் இடையே நிகழும் தர்க்கத்தில் கடைசியில் அ