Posts

Showing posts from September, 2021

அறம்

Image
 ///ஜெயமோகன் எழுதிய அறம் சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து அறம் செய்ய விரும்பு என்கிறார் தமிழ் மூதாட்டி ஒளவை. தமிழில் எழுதப்பட்ட நிறைய நூல்கள் மானுட வாழ்வியலுக்கான அறத்தை முன்வைத்தவை. மானுட இனம் தங்களுக்குள் உருவாக்கிக் கொண்ட நல் நெறிகளே அறம். அறமற்ற மனித வாழ்வு அழுக்கானது. சக மனிதனுக்கு ஒருவன் செய்துவிட்ட தீங்கு அவன் மனதை குடையும் குற்ற உணர்ச்சியாய்  எழுவதும் ஒருவகையில் அறமே. பிறிதொரு மனிதனுக்காக ஒரு மனித மனம் சுரக்கும் கருணையும் ஒரு வகை அறம் தான். அறம் உள்ள மனிதர்களால் தான் இந்த உலகம் இன்னும் உன்னதமாய் இருக்கிறது. சண்டையிடாமல் சாசுவதமாக போராடி இந்தியாவை மீட்ட அண்ணல் காந்தியடிகள் ஒரு அறத்தின் உருவம். ஏழைகளின் துயர் துடைக்க தன் முழு வாழ்க்கையையும் ஒப்புக்கொடுத்த கருணைக் கடவுள் அன்னை தெரசா ஒரு அறத்தின் உருவம்தான். அப்படி முழுக்க முழுக்க அறத்தை மையமாய் வைத்து அறத்தின் உருவமாய் இருந்த மனிதர்களைப் பற்றி ஜெயமோகனால் எழுதப்பட்டது தான் அறம் எனும் நூல். ஜெயமோகன் அவர்களின் அறம் சிறுகதைத் தொகுப்பு முழுவதும் அறத்தின் உருவமாய் இருந்த உண்மை மனிதர்களை பற்றிய சித்திரத்தை நம் முன் வைக்கிறது. ஒரு எழுத்தாளரு

முகங்களின் தேசம்

Image
 ///ஜெயமோகன் எழுதிய முகங்களின் தேசம் நூலை முன்வைத்து வெற்று லௌகீகத்தில் திளைத்து குழந்தைகள் பெருக்கி,பொருள் பெருக்கி சொந்த வீடு,சொந்த ஊர்,சொந்த மாநிலம் தாண்டி  செல்லாத மழுங்கடிக்கப்பட்ட மனதை,மூளையைபயணம் தான் கூர்மையாக்குகிறது. சாதி,மதம் என உங்களுக்குள் ஊற்றி இந்த சமூகம் ஏற்படுத்தி வைத்திருக்கும் ஒரு குறு மனநிலையை  உடைத்து உங்கள் அகத்தை அகலப்படுத்தும் வேலையை நிச்சயம் பயணம் சாத்தியப்படுத்தும். ஒரு தேசத்தை முழுமையாய் புரிந்து கொள்ள அதைப் பற்றிய புத்தகங்களை படித்து தெரிந்து கொள்ள முடியாது.அந்த தேசம் முழுவதும் பயணம் செய்ய வேண்டும். பணம்,பொருள் இன்ன பிற விஷயங்கள் உங்கள் புறத்தேவைகளை தான் பூர்த்தி செய்யும்.ஆனால் பயணம் உங்கள் ஆன்மாவை நிரப்பும் ஒரு இயக்கக் கலை. இந்தியாவின் பல்வேறு நிலப்பரப்புகளில் தான் பயணம் மேற்கொண்ட பயண அனுபவ கட்டுரைகளின் தொகுப்பு ஜெயமோகன் எழுதிய முகங்களின் தேசம் என்ற இந்த நூல். ஒரு பயண அனுபவம் என்பது நாம் பார்த்த நிலப்பரப்பை பற்றி,நாம் பார்த்த இடங்களைப் பற்றிய சிலாகிப்பு மனநிலையில் அந்த இடங்களைப் பற்றிய வெறும் தகவல் குறிப்புகளை முன் வைக்காமல் ஒவ்வொரு நிலத்திலும்,ஒவ்வொரு இடத்

தூப்புக்காரி

Image
 ///மலர்வதி எழுதிய தூப்புக்காரி நாவலை முன்வைத்து என்னுடன் பணிபுரியும் ஒரு அண்ணாவுடன் ஒரு நாள் ஒரு உணவகத்தில் உணவு உண்டு கொண்டிருக்கும் பொழுது நான் எதேச்சையாக மலம் என்ற வார்த்தையை பயன்படுத்தி விட்டதற்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த அவருடைய முகம் ஒரு மாதிரி கோணலாகி விட்டது. தொண்டைக்கு கீழே உண்ணும் உணவு இறங்கி விட்டாலே அது மலம் தானே அண்ணே இதுக்கு போய் ஏன் சங்கோஜப்படுகிறீர்கள் என்றேன். மலத்தைப் பற்றி பேசினாலோ, மலத்தை பார்த்தாலோ நம் மனதில் ஒரு அசௌகரிய உணர்வு தோன்றி விடுகிறது. வகை வகையான உணவை தின்றுவிட்டு தினமும் பேளுகிறோம். மனப்பைக்கு கீழே மலப் பையை சுமந்து திரிபவர்கள் நாம். சிலருக்கு மனப் பை இருக்கவேண்டிய இடத்தில் மலப் பையும்,மலப்பை இருக்கவேண்டிய இடத்தில் மனப்பையும் இருக்கிறது. வயிற்றில் மலத்தை சுமந்து திரியும் மலக்கிடங்குகள் மனிதர்கள். நம் மலத்தை நம்மாலே சகித்துக் கொள்ள முடிவதில்லை. ஆனால் மற்றவர்களின் மலங்களையும் அள்ளி சுத்தப்படுத்தும் துப்புரவு பணியாளர்களின் வாழ்வை நினைத்து பாருங்கள். அப்படிப்பட்ட ஒரு துப்புரவு தொழிலாளியைப்பற்றிய வாழ்க்கைச் சித்திரம் தான் இந்த தூப்புக்காரி நாவல். கவிஞர் சதீஷ