Posts

Showing posts from October, 2021

போக்கிடம்

Image
 ///விட்டல்ராவ் எழுதிய போக்கிடம் நாவலை முன்வைத்து இரண்டு வருடங்களுக்கு முன்பு விட்டல்ராவ் எழுதிய நிலநடுக்கோடு  நாவலை வாங்கினேன். இதுவரைக்கும் அந்த நாவல் வாசிக்கப்படாமல் புத்தக அலமாரியிலேயே தூங்கிக்கொண்டிருக்கிறது. புத்தக அலமாரியை சரி செய்து கொண்டிருக்கும் போது விட்டல்ராவ் எழுதிய போக்கிடம் நாவல் கண்ணில் பட்டது.எடுத்து வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். படிக்க ஆரம்பித்த பிறகு தான் தெரிந்தது அது என் சொந்த மண்ணின் கதை, என் தருமபுரி மக்களின் மொழியில் எழுதப்பட்ட ஒரு படைப்பு என்று. டேனிஸ்பேட்டை என்ற கிராமத்தினை மையப்படுத்தியது தான் நாவல்.பொம்மிடி,மொரப்பூர்,தொட்டம்பட்டி, பூதநத்தம்,கடத்தூர்,அரூர் ஆகிய எங்கள் ஊர்களைப் பற்றிய சித்திரத்தை இந்நாவல் முழுக்க காட்டியுள்ளார் விட்டல்ராவ். சேர்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள இடங்களில் இரும்பின் முக்கிய தாது பொருளான மேக்னசைட் இருப்பதால் அப்பகுதியில் உள்ள கனிமங்களை எடுக்க டேனிஸ்பேட்டை என்ற கிராமத்தை அரசு கையப்படுத்து அந்த கிராமத்தையே இடப்பெயர்வு செய்வது தான் நாவலின் கதை. ஏய் நல்லா கீறயா?டேய் பியா எப்பிடிடா கீற என தருமபுரி மக்களின் மொழியை நாவல் முழுக்க காணலாம். என் ம

ரப்பர்

Image
 ///ஜெயமோகன் எழுதிய ரப்பர் நாவலை முன்வைத்து ஒரு படைப்பாளியின் முதல் நாவலுக்கு பிறகு எழுதப்படும் நாவல்களில் இருக்கும் முதிர்ச்சியும்,வடிவ நேர்த்தியும் முதல் நாவலில் இருக்காது.ஆனால் ஜெயமோகனின் ரப்பர் அதற்கு விதிவிலக்கானது. முதல் நாவலிலேயே வடிவ நேர்த்தியும்,கலைத் தன்மையும் கொண்டு  ரப்பர் நாவலை எழுதியுள்ளார் ஜெயமோகன். ஜெயமோகனின் படைப்புகளில் நான் வாசித்த வரை கண்டது அவரது படைப்புகளில் மனித மனங்கள் கொள்ளும் ஒரு பெருங்கனவின் எழுச்சியையும்,அதன் பின் நிகழும் வீழ்ச்சியையும் தான். இந்த ரப்பர் நாவல் சா.கந்தசாமி அவர்கள் எழுதிய சாயவனம் நாவலைப் போல சுற்றுச்சூழலியல் சிதைவை பேசும் நாவல் என்று ஒரு வகையில் வைத்துக்கொண்டாலும் ஒரு கட்டத்தில் பொருளியலில்,சமூக அந்தஸ்த்தில நாயர் சாதியின் வீழ்ச்சியையும்,நாடார் சாதியின் எழுச்சியையும் பதிவு செய்யக்கூடிய வரலாற்று நாவல் என்றுகூட வைத்துப் பார்க்கலாம். ஒரு காலத்தில் நாயர் சாதிகளால் ஒடுக்கப்பட்ட சாதியாக இருந்தது நாடார் சாதி.அவர்கள் மெல்ல மேலெழுந்து வந்த  வரலாற்று சித்திரத்திரத்தை இந்நாவலில் வரும் பொன்னுமணி பெருவட்டரின் வழியே பதிவு செய்கிறார் ஜெயமோகன். ஒரு காலத்தில் அ

சந்தியா

Image
 ///பிரபஞ்சனின் சந்தியா நாவலை முன்வைத்து பெண்ணை ஒருவனின் தாயாக பார்த்திருக்கிறோம்.மகளாக பார்க்கிறோம்.மனைவியாக பார்க்கிறோம்.எனினும் தனி மனுஷியாக பார்த்திருக்கிறோமா? என்று கேட்கும் பிரபஞ்சனின் ஆண் மனம் பெண் மனமாய் உருமாறி எழுதிய கதைதான் சந்தியா நாவல். தன் மனதில் முழுக்க முழுக்க ஒரு பெண்ணின் மனதை ஊற்றி இந் நாவலை எழுதியுள்ளார் பிரபஞ்சன். சமூகக் கட்டமைப்பில் ஒரு ஆணின் பார்வையில் எப்பொழுதும் எக்குலப்பெண்ணும்  தாழ்த்தப்பட்டவள் தான். இன்னமும் வாழ்வை எதிர்கொள்வதில் பெண்களுக்கு சில தடைகளை இச்சமூகம் வகுத்து வைத்துள்ளது. குடும்பம் என்ற ஒரு பயங்கரவாத அமைப்பில் ஓர் ஆணின் இனவிருத்தி இச்சையை பூர்த்தி செய்யும் சதை இயந்திரமாகவே பெண் இருக்கிறாள் என்ற கோபத்தின் உருவம் தான் இந்த நாவலில் வரக்கூடிய சந்தியா பாத்திரம். சக மனிதர்களைப் பற்றி தன் எழுத்துக்களில் எப்பொழுதுமே அன்பொழுக எழுதுபவர் பிரபஞ்சன். அவர் ஒரு எழுத்துலக ஏசுநாதர்.உலகத்தில் எந்த மனிதரும் வெறுக்கப்பட வேண்டியவர் இல்லை என்கிறார் பிரபஞ்சன். மயிலிறகின் வருடல்களும், கடவுளின் அன்பையும் கொண்டவை அவருடைய எழுத்தின் வரிகள். இந்த நாவலில் வரும் சந்தியா கூட நிறை

காடு நாவல்

Image
 ///ஜெயமோகனின் காடு நாவலை முன்வைத்து நான் தீவிர இலக்கியம் வாசிக்க ஆரம்பித்து நிறைய நாட்கள் கழித்து தான் எழுத்தாளர் ஜெயமோகனுடைய எழுத்துக்களை வாசிக்க ஆரம்பித்தேன். அதற்குக் காரணம் ஜெயமோகன் வலதுசாரி சிந்தனை கொண்டவர்.அதை தன் எழுத்துக்களிலும் பிரதிபலிப்பவர் என்று என்னுள் ஊட்டப்பட்ட பொதுவெளி கருத்துகள் ஒரு காரணமாக இருக்கலாம். நான் வாசித்த ஜெயமோகனின் நாவல்கள் என வெள்ளையானை, ஏழாம் உலகம்,கன்னி நிலம்,அனல்காற்று போன்றவற்றை  குறிப்பிடுவேன். அவருடைய பயண கட்டுரை நூல்கள் வரிசையில் முகங்களின் தேசம் மற்றும் நூறு நிலங்களின் மலை மட்டுமே நான் வாசித்தவை. அவருடைய சிறுகதைகளை தொகுப்பாக படிக்காமல் தனித்தனி சிறுகதைகளாக நிறைய படித்திருந்தாலும் ஜெயமோகன் எனும் உருவத்தை என் அகத்தின் உள்ளே ஒரு பேருருவமாய் நிற்கச் செய்தது என அறம் சிறுகதைத் தொகுப்பைச் சொல்வேன். ஜெயமோகனின் கண்ணீரைப் பின்தொடர்தல் நூலை வாசித்த பிறகு தான் இந்திய பிராந்திய மொழிகளில் உள்ள எல்லா செவ்வியல் படைப்புகளையும் வாசிக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் வாசித்த வரை ஜெயமோகனுடைய படைப்புகளில் ஒரளவு செவ்வியல் தன்மை கொண்ட நாவல் என ஏழாம் உலகம் நாவலைச

செப்டம்பர்-2021ல் வாசித்தவை

Image
இந்த மாதம் செப்டம்பர் 2021ல் வாசித்த  புத்தகங்கள் 1.அறம் -ஜெயமோகன் 2.முகங்களின் தேசம்-ஜெயமோகன் 3.ஜனநாயகச் சோதனைச் சாலையில்- ஜெயமோகன் 4.துணைவன்- ஜெயமோகன் 5.தூப்புக்காரி- மலர்வதி 6.எதிர்ப்பிலேயே வாழுங்கள்-ஓஷோ ❤️❤️❤️❤️

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

Image
 ///ஜெயமோகன் எழுதிய ஜனநாயகச் சோதனைச்சாலையில் நூலை முன்வைத்து ஜனநாயகம் என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளவும்,இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் மக்கள் மனதில் ஆழ ஊன்றி வைத்துள்ள வாக்கரசியல் உளவியலை புரிந்து கொள்வதற்குமான ஒரு மிகச் சிறந்த கையேடு இந்த புத்தகம். அரசியல் கட்சிகள் நடத்துபவர்களின் பித்தலாட்டங்கள்,ஊழல்,மக்களை வாக்கு மந்தைகளாகவே வைத்திருக்க அவர்கள் செய்யும்  தந்திரங்கள் போன்றவற்றை எளிய வாசகனும் எளிதில் அணுகக்கூடிய பார்வையில் எழுதியிருக்கிறார் ஜெயமோகன். என் சொந்த சாதிக்காரனுக்குத் தான் நான் வாக்களிப்பேன்.என் சொந்த மதத்தைச் சேர்ந்தவனுக்குத்தான் நான் வாக்களிப்பேன் என்ற உளவியலை ஒவ்வொரு இந்திய வாக்காளனின் மனதில் உருவாக்கி வைத்திருக்கிறது அரசியல் கட்சிகள். அப்படி சுயசாதி காரனுக்கும்,சுய மதத்தை சேர்ந்தவனுக்கும் வாக்களிக்க நினைக்கும் ஒரு வாக்காளனின் மனநிலை இந்த புத்தகத்தை படித்தப் பிறகு மாறலாம். சமூக ஊடங்கள் செய்யும் பொய் பரப்பும் தன்மை,விவாத நிகழ்வுகள் என்ற பெயரில் அவர்களே செய்யும் ஜோடிப்பையும்,நடிப்பையும் ஜெயமோகன் இந்நூலில் சுட்டிக் காட்டுகிறார். நமக்கு வழங்கப்பட்ட ஜனநாயக கடமையை நாம் சரிய