Posts

Showing posts from September, 2023

குள்ளச் சித்தன் சரித்திரம்

Image
யுவன் சந்திரசேகர் எழுதிய குள்ளச் சித்திரன் சரித்திரம் நாவலை முன்வைத்து: என் பால்யம் கதைகள் ஊட்டி வளர்க்கப்பட்டவை.என் அம்மாவைப் பெற்ற என் பாட்டியின் பெயர் ஜானகி. மர்மங்கள் நிறைந்த ஈசன் காட்டு மொட்டையன் கதைகள்,தான் பார்த்த அலிபாபாவும் ஆயிரம் திருடர்களும் படத்தின் கதைகள் என எனக்கு கதைகளை சொல்லி வளர்த்தவர் என் பாட்டி. எதார்த்தத்திற்கு நேர் எதிராக நடக்கும் அதி அற்புத கதைகள் தான் மனதிற்கு கிலேசம் ஊட்டுவதாக உள்ளது. புற உலக வாழ்வின் எதார்த்த நிகழ்வுகளிலிருந்து ஒரு படி தள்ளி நடக்கும் அதிசயங்களுக்கு எப்போதுமே நம் அகம் ஆசை கொள்கிறது. லௌகீக வாழ்வின் உபாதைகளுக்கு மனிதர்கள் கோயில்,குளம்,கடவுள், ஜோசியம் என எதன் மூலமாகவோ  பரிகாரம் தேடி அலைகிறார்கள். தங்கள் வாழ்வின் குறைகளை தீர்க்க ஏதாவது ஒரு அதிசயம் நிகழ்ந்து விடாதா என ஒரு வித நம்பிக்கையில் வாழ்கிறார்கள். நமக்கு கடவுள் வழிபாடு சார்ந்து,மறுபிறப்பு சார்ந்து நிறைய நம்பிக்கைகள் உண்டு.மறுபிறப்பு என்பது உண்மையில் உண்டா?நம் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து செயல்களும் தற்செயல்களின் கூட்டுத்தொகை தானா? நான் எனும் இந்த சரீரம் என் முன் பிறப்பின் தொடர்ச்சியாகக் கூட இ

ஆலஹாவின் பெண் மக்கள்

Image
 சாரா ஜோஷப்பின் ஆலஹாவின் பெண் மக்கள் நாவலை முன் வைத்து: எப்பொழுதுமே குழந்தைகளின் பார்வையில் சொல்லப்படும் எந்த ஒன்றிலும் கள்ளமும்,கசப்பும் இருக்காது.அவர்கள் விஷம் நிரம்பாத வெள்ளை மனம் கொண்டவர்கள். ஆன்னி என்ற எட்டு வயது பெண் குழந்தையின் பார்வையில் சொல்லப்படும் ஆலஹாவின் பெண் மக்கள் நாவல் முழுக்க முழுக்க  கோக்கஞ்சறா எனும் மாற்றுலகை நம் முன் காட்டுகிறது. கோக்கஞ்சறா என்ற விலக்கப்பட்ட மனிதர்களும்,மலம் அள்ளுபவர்களும் வாழும் ஒரு ஊரை சாரா ஜோஷப் உருவாக்கி அதில் முழுக்க பெண்களையே உரையாட விட்டிருக்கிறார். ஒரு காலத்தில் பிணம் புதைக்கும் இடமாக இருந்த இடம் தான் ஆன்னியும் அவளது குடும்பமும் வசிக்கும் கோக்கஞ்சறா என்ற இடம்.நாவலின் தொடக்கத்தில் ஆன்னியின் பாட்டி அவரை விதை நட மண்ணை தோண்டும் போது எலும்புத்துண்டு வரும்.அவரைச் செடியும்,ஆலஹாவின் மந்திரமும் நாவலில் குறியீடுகளாக வருகிறது. நாவலில் ஆன்னியின் சித்தப்பா குட்டி பாப்பன்(பிரான்ஸிஸ்),குஞ்சன் காம்பவுண்டர் என சில ஆண்கள் வந்தாலும் முழுக்க முழுக்க பெண்களின் அவலச்சுவை நிரம்பிய வாழ்வைத்தான் இந்நாவல் விவரிக்கிறது. சிறு வயதிலேயே வடகிழக்கு மாநிலம் ஓடிவிட்ட ஆன்னியி

இறுதி யாத்திரை

Image
எம்.டி.வாசுதேவன் நாயரின் இறுதி யாத்திரை நாவலை முன் வைத்து: நம்மைச் சார்ந்தவர்களின் மரணம் எதன் பொருட்டு நமக்கு பெரும் துயரையும் இழப்பையும் தருகிறது என்று பார்த்தால் அவருடன் நெருங்கி பழகிய நினைவுகளே அவர் இல்லாமை குறித்து நம் மனதை போட்டு உழற்றும்.அவர் உடன் பிறந்தவரே ஆனாலும் தொடர்ந்து அவரிடம் பேசவில்லை பழகவில்லை என்றால் அவர்களின் இருப்பும் இறப்பும் என்பது நமக்கு  ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. தொடர்ந்து பேசுவதாலும் நினைவுறுதலாலும் மட்டுமே ஒருவருடைய உறவின் வலிமையை அவருடைய முகத்தை நம் அகத்திற்குள் பெருக்கிக் கொள்ள முடியும். நான் கடைசியாக வெடித்து அழுத மரணம் என் அண்ணன் மணிவண்ணனுடைய மரணம் மட்டும் தான்.அண்ணன் தம்பி உறவு தாண்டிய ஒரு புரிதலும் பற்றும் எனக்கும் அவனுக்கும் இருந்ததே அந்த அகவலிக்கு காரணம்.அதுதான் அவன் இழப்பை அவன் இல்லாமையை தொடர்ந்து நான் நினைக்க காரணம். நாம் இறந்த பிறகு நம் பிள்ளைகளால் உறவுகளால் நினைவு கூறப்பட,அழுது பெருக அவர்களுக்கு ஆஸ்தியும் நல்ல ஒழுக்க வாழ்க்கை நாம் வாழ்ந்ததையும் கொடுத்துச் செல்ல வேண்டும் என்பது குடும்ப வாழ்க்கையின் குறுகிய விதியாக இருக்கிறது.அப்போதுதான் நம் மரண

நெடுஞ்சாலை

Image
கண்மணி குணசேகரனின் நெடுஞ்சாலை நாவலை முன் வைத்து: எதார்த்த வாத எழுத்துக்கள் என்றாலே தமிழில் ஆர்.ஷண்முகசுந்தரம் பூமணி அதன் பிறகு கண்மணி குணசேகரன், இமையம் போன்ற எழுத்தாளர்களின் வரிசை வரும்.  கண்மணி குணசேகரன் தான் சார்ந்த மண்ணையும் மக்களையும் இலக்கியமாக்குபவர்.எந்த வித ஜோடனைகளும்,சொற்பகட்டும் இல்லாதவை அவருடைய எழுத்து நடை. ஒரு போக்குவரத்து பணிமனையில் பணிபுரியும் பணியாளர்களை கதாபாத்திரங்களாக வைத்துக் கொண்டு அந்த போக்குவரத்து துறை சார்ந்த வேலையில் இருக்கும் சிரமங்களையும் அதற்கு பின்னுள்ள உலகையும் இந்த நாவலில் நமக்கு காட்டுகிறார் கண்மணி குணசேகரன். கண்மணி குணசேகரன் தற்போது விழுப்புரம் போக்குவரத்து பணிமனையில் பணிபுரிவதால் அந்த துறை குறித்த விவரணைகளில் தரவுகளில் ஒரு நம்பகத் தன்மை உள்ளது.தான் பணிபுரியும் போக்குவரத்து பணி மனையையும் அதன் ஊழியர்களையும் வைத்து அவர்களின் தனித் தனி வாழ்க்கையை நாவலில் தொகுத்து காட்டுகிறார்.கதை நிகழும் இடத்தை,சூழலைத் தாண்டாத சொற்களும் சொலவடைகளும் எதார்த்த எழுத்துகளே நாவல் முழுதும். நாவலில் வரும் கம்பிளி,சந்திரா,பார்வதி பெண் பாத்திரங்கள் வலுவான சிருஷ்டிப்புகள்.அஞ்சலை நாவலி

என் கதை

Image
 நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் என் கதை நூலை முன்வைத்து: தன் வரலாறு நூல்களில் முதன்மையாக கருதப்படுவது காந்தியின் வாழ்க்கை வரலாறு நூலான சத்திய சோதனை.அதற்குப் பிறகு உ.வே. சாமிநாதையர் எழுதிய என் சரிதம் நூலைச் சொல்வார்கள்.இந்த நூல்களைத் தொடர்ந்து நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை எழுதிய என் கதையும் ஒரு சிறந்த தன் வரலாற்று நூல் என எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன். தன் வரலாறு நூல்களின் தரமும் தகுதியும் அதை எழுதுபவர்களின் வெளிப்படைத் தன்மையையும் உண்மைத் தன்மையையும் பொறுத்தது. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பள்ளியின் என் கதை என்பது அவருடைய எதார்த்தமும் நேர்மையும் கலந்த வாழ்க்கை நிகழ்வுகளின் தொகுப்பு என கூறலாம். ஒரு ஏட்டுவின் மகனாக பிறந்து தந்தையின் ஆசைக்கிணங்க ஒரு அரசு வேலையில் சேராமல் ஓவியக் கலைஞராக, விடுதலைப் போராட்ட வீரராக திகழ்ந்த ராமலிங்கம் பிள்ளை கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது என்ற பாடலை எழுதியதால் ராஜாஜியால் பாரதியின் இழப்பை ஈடு செய்ய வந்தவர் என்று பாராட்டப்பட்டவர். தன் தன் தாயின் அஞ்சாத குணத்தை சொல்லும் இலுப்பு மர பிசாசு என்னும் அத்தியாயம் இ

ஆகஸ்ட் 2023 வாசித்தவை:

Image
 ஆகஸ்ட் 2023 ல் வாசித்தவை: 1.மீன்காரத்தெரு-கீரனூர் ஜாகீர்ராஜா 2.திருச்சி ஜெயில்-எஸ்.எல்.கரையாளர். 3. பூமியெங்கும் பூரணியின் நிழல்-குமாரநந்தன் 4. காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை-ரா.கிரிதரன் 5.அஸீஸ் பே சம்பவம் - அய்ஃபர் டூன்ஸ் 6. பேரலையாய் ஒரு மென் ஷட்ஜம்-லலிதாராம் 7.நாகம்மாள்-ஆர்.ஷண்முகசுந்தரம் 8. காந்தி வழி - என்.சொக்கன் 9. பறவைகளைப் பார்- ஜமால் ஆரா தமிழில்: பெ.தூரன் 10.பாட்டையாவின் பழங்கதைகள்- பாரதிமணி 11.குழந்தைப் பாடல்கள்: முன்னோடிகள்&வகைகளும் வளர்ச்சியும் - செல்ல கணபதி & பாவண்ணன் 12.மரப்பசு-தி.ஜானகிராமன் 13.பாரதி நினைவுகள்- ம.கோ.யதுகிரி அம்மாள். 14.கறுப்பு வெள்ளைக் கடவுள்-தேவிபாரதி 15.பறவைக்கு கூடுண்டு அனைவருக்கும் வீடு லாரி பேக்கரின் கனவு - எலிசபெத் பேக்கர் தமிழில்: ஈரோடு வெ.ஜீவானந்தம் 16. கடவுள்-சுஜாதா 17.வரலாறு என்னும் கதை-எட்வர்டோ கலியானோ தமிழில்: ரவிக்குமார் 18.கரிக்கோடுகள் -ஜெயகாந்தன் 19.நெடுஞ்சாலை-கண்மணி குணசேகரன் ❤️