Posts

Showing posts from January, 2021

நேருவின் ஆட்சி பதியம் போட்ட 18 ஆண்டுகள்

Image
 ///ரமணன் எழுதிய "நேருவின் ஆட்சி பதியம் போட்ட 18 ஆண்டுகள்" நூலை முன்வைத்து சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நேரு பதவியேற்ற ஆகஸ்ட் 15,1947 முதல் அவர் மறைந்த மே 27, 1964 வரையிலான 18 ஆண்டுகால அவரது ஆட்சி ஆளுமையின் பலம் பலவீனங்களை பதிவு செய்ததில் முக்கியமான கவனத்தை பெறுகிறது இந்தப் புத்தகம். நவ இந்தியாவின் சிற்பி,அணிசேரா கொள்கையை உருவாக்கியவர்,சமஸ்தானங்களாக சிதறுண்டு கிடந்த இந்தியாவை ஒருங்கிணைக்க ஜினாகத்,காஷ்மீர் போன்ற பகுதிகளை இந்தியாவுடன் இணைக்க  சாமர்த்திம் செய்தவர் என்று பாராட்டப்பட்டவர் நேரு. ஆனால் காஷ்மீரை இந்தியாவுடன் ஒரு நிரந்தர பகுதியாக இணைக்காமல் தவற விட்டது, 1962 ஆம் ஆண்டு நடந்த இந்திய சீன போரை சரிவர கையாளாமல் தோல்வி நோக்கி கொண்டு சென்றது ஆகிய இரண்டு நிகழ்வுகளும் இன்று வரை நேரு ஆட்சி ஆளுமையின் மீது  விழுந்த கீறல்களாகவே பார்க்கப்படுகிறது. காஷ்மீர் பிரச்சினையை வல்லபாய் பட்டேலிடம் விட்டிருந்தால் அவரே முடித்திருப்பார்.அதற்குள் நேரு தலையிட்டு காஷ்மீர் பிரச்சினையை ஐநா சபை வரை கொண்டு சென்று ஒரு பெரிய தவறை இழைத்து விட்டார் என்று காஷ்மீர் மன்னர் ஹரி சிங்கின் மகன் கரண் சிங் க

ரசவாதி(The Alchemist)

Image
 ///Paulo Coelho எழுதிய ரசவாதி(The Alchemist) நாவலை முன்வைத்து “Where your treasure is,there also will be your heart" உன்னுடைய இதயம் எங்கே இருக்கிறதோ,அங்கே தான் உன் புதையலும் இருக்கும். உலகில் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல கோடி பிரதிகள் விற்பனையான Cult Classic நாவல் ரசவாதி (The Alchemist). தத்துவம்,சுயமுன்னேற்றம்,ஞானம்,மாய கற்பனை கதை என எல்லா வகைமைக்குள்ளும் வைத்து வாசிக்க வேண்டிய நாவல் இது. மனித ஆன்மாவை உணரவும்,பிரபஞ்ச ஆன்மாவை கண்டடைந்து கொள்ளவும் ஒரு ஆட்டிடையன் கொள்ளும் சாகசப் பயணமே ரசவாதி நாவல். தனக்குள் இருக்கும் மகிழ்ச்சியை கண்டடைந்து கொள்பவனே ஒரு சிறந்த ரசவாதி. அதனால் தான் உன் இதயம் எங்கே இருக்கிறதோ,அங்கே தான் உன் புதையலும் இருக்கிறது என்கிறார் பாவ்லோ கொயலோ. நாவலை எழுதிய பாவ்லோ கொய்லோ ஒரு கத்தோலிக்கராக இருந்தாலும் எல்லா மதங்களுக்குமான தத்துவங்களை இந்நாவல் முழுக்க பேசியிருக்கிறார். எல்லா மதங்களும் ஒரே ஒளியைத் தான் சுட்டிக்காட்டுகின்றன. எல்லா விஷயங்களுமே ஒரே விஷயத்தின் வெளிப்பாடுதான். நீ உண்மையிலேயே ஒன்றை ஆழமாக விரும்பும் போது அதை அடைவதற்கு இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சமு

வாசிப்பது எப்படி?

Image
 ///இது ஒரு உபதேச குப்பை என்று ஒதுக்கிவிட முடியாத ஒரு சிறந்த நூல். ஏன் வாசிக்க வேண்டும்?எதற்கு வாசிக்க வேண்டும்?எப்படி வாசிக்க வேண்டும்? என்பதை ஆரம்ப நிலை வாசகர்களுக்கு ஒரு வாசலை உருவாக்கி கொடுக்கிறது இந்நூல். ஒருவர் ஏன் வாசிக்க வேண்டும் என்ற கேள்வியை என்னையோ அல்லது வேறு எவரையோ நோக்கி எழுப்பும்போதெல்லாம் அது நாம் ஏன் வாழ வேண்டும் என்பதற்கு நிகரான கேள்வியாகவே படுகிறது எனக்கு. வாசிக்காமல் போனால் வாழ முடியாதா? முடியும்.ஆனால் வாழ முடியாது.பிழைக்கத்தான் முடியும். வாழ்வது என்பது ஒருவன் அன்றாடம் இயங்குவது.பிழைப்பது என்பது இயக்கமின்மை.கோமாவில் இருக்கும் ஒரு நோயாளியைப் போன்றது. தொடர்ச்சியான வாசிப்பு உங்களுக்குள்ளிருக்கும் வார்த்தை கிடங்குகளை நிரப்பும். வாசிப்பதினால் நீங்கள் சராசரி மனித கூட்டத்திலிருந்து தனித்து தனித்துவமிக்கவராய் உணர்வீர்கள்,தெரிவீர்கள். வாசிக்கவும்,வாசிப்பின் அவசியத்தை உணர்த்தவும் கூடிய மிகச்சிறந்த வழிகாட்டி இந்நூல் என்பது என் எண்ணம்/// Velu malayan 24.1.2021

சயந்தனின் அஷேரா

Image
 ///சயந்தன் எழுதிய "அஷேரா" நாவலை முன்வைத்து புலம்பெயர் படைப்பாளர்களில் ஆறாவடு மற்றும் ஆதிரை நாவல்கள் வழியே தமிழ் இலக்கிய பரப்பில் மிகுந்த கவனத்தை சம்பாதித்தவர் எழுத்தாளர் சயந்தன் அவர்கள். சயந்தனின் முந்தைய இரண்டு நாவல்களிலிருந்த போர்,அரசியல் ஆகியவற்றிலிருந்து விலகி எழுதப்பட்டுள்ளது புதிய நாவலான  அஷேரா. ஈழத்தில் தமிழராய் பிறந்து இனப் போரின் வலி மற்றும் துயரில் உழண்ட ஒருவர் அவரது படைப்புகளில் அந்த வலியின் துயரை,உணர்ச்சிகள் மேலோங்க பதிவு செய்வது என்பது எப்போதும் தவிர்க்க முடியாதது. ஆனால் சயந்தனின் படைப்புகள்  உணர்ச்சிகளின் வெளியிலிருது ஈழத் தமிழர்களின் துயரை பேசுபவை. ஈழ மண்ணில் தமிழீழம் மலர போராடிய ஒரே இயக்கம் விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே என்பது இலங்கை தாண்டிய மற்ற நாட்டவர்களின் பொது எண்ணம்.  ஆனால் தமிழீழம் மலர ஏறத்தாழ நாற்பதுக்கும் மேற்பட்ட இயக்கங்கள் தோன்றின எனவும் அந்த இயக்கங்களுக்குள் ஏற்பட்ட முரண்கள்,அரசியல்,சண்டைகளை சில மனிதர்களின் கதைகள் வழியே அஷேரா நாவலில் பதிவு செய்கிறார் சயந்தன். புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறிய அருள் குமரன்,தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE

21ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்

Image
 ///இஸ்ரேல் நாட்டைச் சார்ந்த வரலாற்று ஆசிரியர் யுவால் நோவா ஹராரி எழுதிய 21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள் புத்தகம் நாம் எதிர்கொள்ள இருக்கும் எதிர்காலத்தை காட்டும் எழுத்து வடிவ கண்ணாடியாக இருக்கிறது. 2050ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்பப் புரட்சி (infotech revolution)மற்றும் உயிரி தொழில் நுட்ப புரட்சி(Biotech revoloution) ஆகிய இரண்டும் நம் தோலுக்கு உள் சென்று நம்மை ஆட்சி செய்யப் போகிறது என்பதை அறிவியல் தரவுகளோடு இந்த புத்தகத்தின் வழியே விவரிக்கிறார் யுவால் நோவா ஹராரி. பண்டைய வரலாறு, தத்துவம்,இனவாதம்,தேசியவாதம்,மதம் கடவுள் என எல்லா தளங்களின் மீதும் ஒரு பரந்த விவாதத்தை முன் வைக்கிறார். உலகின் எல்லா மதங்களும் மானுட இனத்திற்கு ஏதாவது ஒரு பங்களிப்பை செய்திருக்கிறது. எங்களுடைய மதம் தான் உயர்ந்த மதம் என்று சொல்வதற்கு இங்கே இடமில்லை என்கிறார் யுவால் நோவா ஹராரி. அறிவியல் கண்டுபிடிப்புகளை அதிகமாக உலகுக்கு வழங்கிய விஞ்ஞானிகள் யூத மதத்தைச் சார்ந்தவர்கள்.நான் கூட யூத மதத்தை சேர்ந்தவன் தான் என்றாலும் யூத மதம் தான் உயர்வானது என என்னால் பெருமை கொள்ள முடியாது என்கிறார் யுவால் நோவா ஹராரி. நம் முன் இருக்கும

ரயில் நிலையங்களின் தோழமை

Image
 ///எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய"ரயில் நிலையங்களின் தோழமை" நூல்   குறித்து  மனித இனம் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயபணப்படாமல் இருந்திருந்தால் நாகரிகம் என்ற ஒன்றே உருவாகி இருக்காது. ஓடாத நதியும்,தேடாத மனமும் தெளிவு கொள்ளாது என்று சொல்லுவார்கள். பயணங்களின் வழியே நாம் கண்டடைவது பல்வேறு இடங்களை,இதுவரை நாம் கண்டு கால்பதிக்காத நிலப்பரப்புகளை மட்டுமல்ல,நம்மையும் கண்டடைந்து கொள்வதற்கான வழியை அலைதல் தியானமான பயணமே கொடுக்கிறது. இதுநாள் வரை உங்கள் மனம் கட்டமைத்து வைத்திருக்கும் சொந்த இடம்,சொந்த ஊர்,சொந்த சாதி போன்ற எண்ணங்களை உடைத்து உங்களை அடையாளமற்ற ஒரு பறவையாக உணரச் செய்ய வைப்பது பயணமே. நிறைய  பயணம் செய்தும், இலக்கியம் செய்தும் தன் வாழ்வின் பெரும் பகுதியை கரைத்துக் கொண்டவர் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள். காற்றில் இலக்கின்றி திரியும் ஒரு பறவையின் இறகைப் போல பல்வேறு இடங்களைக் காண ஒரு தேசாந்திரியாக திரிந்தவர் எஸ்.ராமகிருஷ்ணன். அவர் பயணம் செய்த இடங்களை பற்றிய பயண அனுபவங்களின் தொகுப்பு தான் இந்த நூல். ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கற்கால குட

ஆன்மீகம் என்னும் புத்தகம்

Image
 ///ஆன்மீகம் சம்பந்தப்பட்ட நிறைய புத்தகங்களைப் பற்றிய விமர்சன தொகுப்பு இந்நூல். நான் வாசித்த மிர்தாதின் புத்தகம், ஹெர்மன் ஹெஸ்ஸே எழுதிய சித்தார்த்தன்,குர்ஜிப்பின் வாழ்க்கை வரலாறு,ஜே.கிருஷ்ணமூர்த்தியின் "எண்ணிப்பார்க்க வேண்டிய ஏராளமான விஷயங்கள்",கலீல் ஜிப்ரானின் "தீர்க்கதரிசி"போன்ற நிறைய புத்தகங்களின் மீதான பார்வையும் இந்நூலில் உள்ளடக்கம். ஆன்மீகத்தில் மனம் நாட்டம் உள்ளவர்கள் படிக்க வேண்டிய புத்தகங்களை என்.கௌரி சிறப்பான முறையில் தொகுத்துள்ளார். ஆன்மீக சம்பந்தப்பட்ட புத்தகங்களை வாசிக்க விரும்பும் வாசகர்களுக்கு இந்தப் புத்தகம் நிச்சயம் ஒரு வாயிலாகவும்,வழிகாட்டியாகவும் இருக்கும்/// Velu malayan 5.1.2021