பூமியெங்கும் பூரணியின் நிழல்: குமாரநந்தன்

இலக்கியத்தில் இன்று அதிகம் கையாளப்படும் வடிவங்களில் ஒன்றாக சிறுகதை இருக்கிறது. சிறுகதை அல்லது நாவல் போன்ற இலக்கிய வடிவங்களை வாழ்க்கை அனுபவங்களின் மீதான கற்பனைகளின் ஒட்டுவேலை என்றே சொல்லலாம்.



சில கதைகளுக்கு முடிவு என்பது கட்டாயம் தேவையுமில்லை. அதை வாசகர்களின் யூகத்திற்கும் அவர்களிடம் விட்டு விடுவதும் ஒரு யுக்தி.


குமார நந்தனின் வெளிறிய அந்திமாலை சிறுகதையில் கணவனை இழந்தும், வேலை கிடைத்து வெளியூரில் தங்கி விட்ட மகனும் இன்றி தனிமையில் இருக்கும் கோமதியம்மாள் தனக்கு வீட்டுப் பொருட்கள் வாங்க உதவி செய்யும் தாமோதரனுடன் காணும் கனவு பூடகமானது. 


மொத்தம் பதினைந்து கதைகள் இருக்கும் இத்தொகுப்பில் விபத்து கதை நீங்கலாக பதினான்கு கதைகளும் பொருட்படுத்த தகுந்தவை.


இந்த வாழ்க்கைக்குள் அடைபட்டு சிக்கலுற்றும் சிரித்தும் வாழும் மனிதர்களின் கதைகளைத் தான் குமாரநந்தனும் எழுதியிருக்கிறார்.


ஆனால் அத்தனை கதைகளின் கற்பனையிலும், சிருஷ்டிப்பிலும் நாம் அறிந்த மனிதர்களின் வாழ்க்கையை கதையாக்கிய விதத்திலும் நேர்மை போக்கு இருக்கிறது.


 முக்கியமாக பெண்களின் மன உலகை,பாலியல் வேட்கைகளை, உளப் பிறழ்வுகளை முடிந்தவரை நேர்மையாக அணுயிருக்கிறார் குமாரநந்தன்.


அதற்கு  வெளிறிய அந்தி மாலையில் வரும் கோமதியம்மாள்,

கடவுளுடன் ஒரு மாலைக் காட்சி கதையில் வரும் ராணி,நதி கதையில் வரும் வெண்ணிலா, சபிக்கப்பட்ட நிலத்தில் வரும் மலர்க்கொடி போன்றவர்களை உதாரணமாக சுட்டலாம். 


ஆணின் குடிப்பழக்கம் ஒரு பெண்ணின் உளவியலை எவ்வளவு பாதிக்கிறது என்பதை நெருஞ்சி வெளி சிறுகதை ரேவதி தன் குழந்தையையே பூச்சி மருந்து கொடுத்து கொல்லுவதை  விவரிக்கிறது.போலிச் சாமியாராக மாற நினைக்கும் இருவரின் மன வேட்கையை மகான்கள் சிறுகதை சித்தரிக்கிறது.


குமாரநந்தனின் எழுத்து நடை சாதாரணமாக தெரிந்தாலும் அவரின் மொழியழகு வசீகரமாய் இருக்கிறது.


இருவர் எனும் சிறுகதை ஒரு பாலுறவை சித்தரிப்பதாக இருந்தாலும் அது சம்பிரதாயத்திற்கு தொகுப்பில் சேர்க்கப்பட்டது போல் உள்ளது.


இந்த தொகுப்பில் பூமியெங்கும் பூரணியின் நிழல், மழையில் எரியும் நினைவுகள் மற்றும் மழையை இயக்குபவன் போன்ற சிறுகதைகள்  மிகச்சிறந்த கதைகள் என்பேன்.



குமாரநந்தனின் பிற படைப்புகளை வாசிக்கும் ஆர்வத்தை இந்தச் சிறுகதை தொகுப்பு எனக்கு அளித்திருக்கிறது.

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்