Posts

புனைவும் நினைவும்-சமயவேல்

Image
 எழுத்தாளர் சமயவேல் எழுதிய புனைவும் நினைவும் (வெட்ட வெளியில் ஒரு கரிசல் கிராமம்) நூலின் கட்டுரைகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். இதிலுள்ள இரண்டு கட்டுரைகளை வாசிக்கையிலேயே என் நினைவின் ஆழத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் என் கிராம வாழ்வின் அத்தனை நினைவுகளையும் கீறி விட்டு என்னை மீண்டும் என் கிராமத்துக்குள் கூட்டிச் சென்றது போன்ற ஒரு பிரக்ஞை. மாரியம்மன் கூழ் ஊற்றும் திருவிழாவில் குடித்த மாரியம்மன் கூழின் புளித்த சுவையும்,எல்லா வீட்டின் தாம்பளத்திலுமிருந்து அள்ளித் தின்ற துள்ளு மாவின் இனிப்பும் இன்னும் அடி நாக்கில் ஒட்டியிருப்பதாக ஒரு உணர்வு. காலில் கல்லைக் கட்டிக் கொண்டு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட என் சம வயதினன் பெருமாளின் அக்கா புட்டியம்மாவின் மீன்கள் தின்றரித்த முகத்தை இப்போதும் காலவெளியில் பின்னோக்கிச் சென்று என்னால் பார்க்க முடிகிறது.எல்லோருக்குள்ளும் நினைவாக அனுபவமாக எஞ்சியிருக்கும் கிராம வாழ்வினை அசை போட அழைக்கிறது இந்த புத்தகம்.

ஜனவரி 2024 ல் வாசித்தவை

 ஜனவரி 2024 ல் வாசித்தவை: 1.கிளைக்கதை-சுரேஷ் பிரதீப் 2.குரவை-சிவகுமார் முத்தையா 3.வீரன் குட்டி கவிதைகள்- வீரன் குட்டி தமிழில்: சுஜா 4.நினைவின் குற்றவாளி - ஷங்கர ராமசுப்ரமணியன் 5.தேவதையின் மச்சங்கள் கருநீலங்கள்-கே.ஆர்.மீரா 6.கோதம புத்தர் -ஆனந்த குமாரசாமி 7.மாயாதீதம்-என்.ஸ்ரீராம் 8.நீர்ப்பறவைகளின் தியானம்- யுவன் சந்திரசேகர் ❤️

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்

Image
 என்.ஸ்ரீராம் எழுதிய மாயாதீதம் நாவலை முன்வைத்து: என் பெரியப்பாவின் கடைசி மகள் பெயர் மகேஸ்வரி.அவள் என் வயதொத்தவள்.அவளுக்கு ஒரு கண் பூ விழுந்தது போல் வெண்மையாக பார்வையற்று இருக்கும். அவள் தீர்த்தமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் போது ஒரு கண் அவளுக்கு நன்றாக தெரிந்துக் கொண்டு தான் இருந்தது.என் பாட்டி சந்திரமதி தான் அவளை கோயில் குளம் என கூட்டிச் சென்று தீர்த்தமலை தீர்த்தத்தை எல்லாம் கண்ணில் விட்டு அந்த இன்னொரு கண்ணும் காணும் திறனை இழக்க வைத்தாள் என்று என் பெரியம்மா அழுது கேட்டிருக்கிறேன். மனிதர்கள் அவர்களுடைய ஆற்றலுக்கு அப்பாற்பட்ட வாழ்வின் சிக்கல்களுக்கு  கடவுளை நம்புகிறார்கள்.விஞ்ஞானம் மருத்துவம் பெரும் வளர்ச்சி கண்டிருக்கும் இந்த சூழலிலும் கூட என் கிராமத்தில் உள்ள மக்களுக்கு உடல் சுகக் கேடு என்றால் முதலில் மாரியம்மன் கோவிலுக்கு செல்வதும், உடல் நலமில்லாதவர்களை உட்கார வைத்து சாமி எடுத்து அவர்களைச் சுற்றும் முறை இன்றும் உண்டு. தற்போது இது போல் நடப்பது குறைந்திருந்தாலும் இருபது ஆண்டுகளுக்கு முன்பு இதன் வீரியம் அதிகம் இருந்ததை நான் பார்த்து வளர்ந்திருக்கிறேன். நம்மை மீறி ந

குரவை - சிவகுமார் முத்தய்யா

Image
 குரவை -சிவகுமார் முத்தய்யா தமிழில் மரமார்ந்த நாட்டுப்புற கலைகள் குறித்தும் அதை வாழ்வாதாரக் கலையாக ஒழுகும் மனிதர்களின்  பின்னணி குறித்தும் எழுதப்பட்ட  மிகச் சிறந்த படைப்பாக குரவை நாவலை பார்க்கிறேன். கால மாற்றத்தின் சடுதியில் நலிந்து போன கலை குறித்தும் அதை நம்பி வாழ்ந்த மனிதர்கள் குறித்தும் எந்த வித கருணைக் கோரலும் இன்றி எதார்த்தமாய் அந்த மனிதர்களின் வாழ்வை நேர்மையாக பதிவு செய்துள்ளது இந்த நாவல். இதில் வரும் பெண் பாத்திரங்கள் வாழ்க்கையின் மீது எந்த புகாரும் இன்றி தனக்கு வாய்த்த வாழ்க்கையை அல்லது திணிக்கப்பட்ட வாழ்க்கையை அவர்கள் போக்கில் ஏற்று வாழ்கிறார்கள். காவியத் தன்மையுள்ள பெண் பாத்திர சிருஷ்டிப்புகள். நாவலில் வரும் பெண்கள் இரவு முழுக்க உடல் வலிக்க ஆடுவதால்  குடிக்கிறார்கள் தனக்கு பிடித்தவர்களோடு படுக்கிறார்கள். விஜயா,நித்யா,பேபி, வசந்தா,சித்ரா, செவத்தக் கன்னி, நீலவேணி என அவ்வளவு அடர்த்தியான கதைகள் கொண்ட பெண் பாத்திரங்கள். தவில் வித்வானாக வரும் கலியமூர்த்திக்கும் வசந்தாவுக்கும் இருக்கும் உறவு முறையற்ற உறவு என்றாலும் அதில் ஒரு ஆழமான அன்பும் உயிர்த் தன்மையையும் இருக்கிறது.ஆரம்பத்தில் வ

2023ஆம் ஆண்டு வாசித்தவை:

Image
 2023 ஆம் ஆண்டு வாசித்தவை: 1.பகடையாட்டம்- யுவன் சந்திரசேகர் 2.எதிர்க்கரை-யுவன் சந்திரசேகர் 3.அநாமதேயக் கதைகள்-மயிலன் ஜி சின்னப்பன் 4.கானல் நதி -யுவன் சந்திரசேகர் 5.அத்தைக்கு மரணமில்லை- சீர்ஷேந்து முகோபாத்தியாய 6.ஆலம்-ஜெயமோகன் 7.வெளியேற்றம் - யுவன் சந்திரசேகர் 8.குள்ளச் சித்தன் சரித்திரம்- யுவன் சந்திரசேகர் 9.கஸாக்குகள்-லியோ டால்ஸ்டாய் 10.ஆலஹாவின் பெண் மக்கள் - சாரா ஜோஷப். 11.இறுதி யாத்திரை -எம்.டி.வாசுதேவன் நாயர் 12.என் கதை- நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை. 13.மீன்காரத்தெரு- கீரனூர் ஜாகீர்ராஜா 14.திருச்சி ஜெயில்- எஸ்.எல்.கரையாளர். 15.பூமியெங்கும் பூரணியின் நிழல்-குமாரநந்தன் 16.காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை-ரா.கிரிதரன் 17.அஸீஸ் பே சம்பவம் - அய்ஃபர் டூன்ஸ் 18.பேரலையாய் ஒரு மென் ஷட்ஜம்- லலிதாராம் 19.நாகம்மாள்- ஆர்.ஷண்முகசுந்தரம் 20.காந்தி வழி - என்.சொக்கன் 21.பறவைகளைப் பார்- ஜமால் ஆரா  தமிழில்: பெ.தூரன் 22.பாட்டையாவின் பழங்கதைகள்- பாரதிமணி 23.குழந்தைப் பாடல்கள்: முன்னோடிகள்&வகைகளும் வளர்ச்சியும் - செல்ல கணபதி & பாவண்ணன் 24.மரப்பசு- தி.ஜானகிராமன் 25.பாரதி நினைவுகள்- ம.கோ.யதுகிரி அம்ம

திமிங்கல வேட்டை

Image
/ஹெர்மன் மெல்வில்(Herman Mellvile) எழுதிய திமிங்கல வேட்டை(Moby Dick) நாவலை முன் வைத்து கடற்பயண புனைவு நாவல்களில் எப்போதும் என் விருப்பத்திற்குரியது எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் "கிழவனும்,கடலும்" நாவல் என்பேன். சாண்டியாகு எனும் மீன் பிடிக்கும் கிழவனுக்கும்,இயற்கைக்கும் இடையே நிகழும் போராட்டத்தை ஹெர்னஸ்ட் ஹெமிங்வே  எழுதி அந்நாவலுக்காக நோபல் பரிசும் பெற்றார். நடு சமுத்திரத்தில் ஒரு ராட்சத மீனுக்கும்,கிழவனுக்கும் நடக்கும் போராட்டத்தை சாகச உணர்வுகள் மோலோங்க எழுதப்பட்ட ஒரு சிறந்த நாவல் கிழவனும் கடலும். ஒரு வயதான கிழவனின் தன்னம்பிக்கையும்,மன போராட்டத்தையும் மையப்படுத்தி எழுதப்பட்ட நாவல் அது. கிட்டத்தட்ட கிழவனும்,கடலும் நாவலைப் போலவே கடற்பயணத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ள நாவல் திமிங்கல வேட்டை(Moby Dick). நீண்ட நாட்கள் மீன் கிடைக்காத ஒரு கிழவன் தன்னை ஒரு  மீனவன் என நிரூபிக்க கடலுக்குள் பயணம் செய்து மீன் பிடித்து வரும்  வைராக்கிய உணர்வை அடிப்படையாக கொண்ட கிழவனும் கடலும் நாவலைப் போல, திமிங்கல வேட்டை(Moby Dick) நாவல் ஒரு வெள்ளை திமிங்கலத்தால் (Moby Dick) தன் ஒரு காலை இழந்த ஆகாப் என்ற க

வெளியேற்றம்

Image
 வெளியேற்றம் - யுவன் சந்திரசேகர். அறிவியலுக்கும் ஆன்மீகத்துக்கும் அடைபடாத மாற்று மெய்மைகளின் தேடல் தான் யுவன் சந்திரசேகர் எழுதிய அவரின் முதல் நாவலான குள்ளச் சித்தன் சரித்திரம் நாவலின் களம். அதன் தொடர்ச்சியாகவே வெளியேற்றம் நாவலையும் கருதலாம்.நடைமுறை வாழ்க்கையின் சாத்தியத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றை தேட முனையும்,வாழ்க்கையின் சிடுக்குகளின் சிரமம் தாளாமல் குடும்பத்தை உறவுகளை விட்டு திருமணம் ஆன நாளன்றே வீட்டை விட்டு வெளியேறும் வேதமூர்த்தி,ஜய்ராம்,வயிரவன் செட்டியார்,மன்னாதி குற்றாலிங்கம், பால்பாண்டி,சிவராமன்,நிறைய பொம்பளளைங்களிடம் போனதால் நோய் வாங்கும் ராமலிங்கம் பிறகு அது யானைக்கால் என வேதமூர்த்தியால் சரி செய்யப்படுகிறது,கண் தெரியாத ஹரிஹரன், கோவர்த்தனம், என பல்வேறு மனிதர்களின் கதைகளை தேடிச் சென்று கேட்கும் சந்தானம் என எல்லா மனிதர்களுக்குள்ளும் ஒரு வித தொடர்பு இருப்பதை முடிச்சிடுகிறது நாவல். வீட்டை விட்டு வெளியேறும் மேற்கண்ட பெயர் கொண்ட எல்லாரும் சென்று சேர்வது வேதமூர்த்தி என்ற சாமியாரைத்தான். வீட்டைத் துறந்து இலக்கற்று திரியும் மனிதர்களை நாம் அன்றாடம் பார்க்கலாம்.அவர்களில் மனப்பிறழ்வுக்கு உள்ள