Posts

Showing posts from April, 2021

The Great Indian kitchen

Image
 ///The Great indian kitchen படம் பற்றிய ஒரு பார்வை குடும்பம் என்பது சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் ஒரு வன்முறையின் வடிவம் என்பேன். குடும்ப அமைப்பின் அதிகார மையத்தின் ஆணிவேராக ஆண் இருக்கிறான்.அவனின் அதிகார நிழலின் கீழ் தான் ஒரு பெண் வாழ வேண்டும் என்ற நியதி இங்கு வகுத்து வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குடும்பத்தில் பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இரு அதிகார இடங்கள் சமையலறையும்,கட்டிலறையும் தான். படுக்கையறைக்கும், சமையலறைக்கும் இடைப்பட்ட தூர சேவையிலேயே பெண்களின் வாழ்நாள் தேய்ந்து விடுகிறது. திருமணமாகி கணவன் வீட்டிற்கு செல்லும் ஒரு பெண் தன் கணவனுக்கும்,மாமானாருக்கும் வடித்து கொட்டியும்,அவர்களுக்கு பணிவிடை செய்வதையுமே 1.30 மணி நேரங்களுக்கு மேல் திரையில் காட்டுகிறது "The Great indian kitchen" என்ற மலையாளப்படம்.  படத்தின் பெரும்பகுதி கேமிராவின் கோணம் சமையலறையையும், சாப்பாட்டு மேசையையும் தாண்டி செல்வதில்லை. சமையலறையை அதுவும் மேலிருந்து கீழாக காட்டும் உயர் கோண கேமிரா காட்சிகள். மாமானார் சட்னியை அம்மியில் அரைக்க சொல்வது,சாதத்தை குக்கரில் வைக்காமல் நெருப்பில் வேக வைக்க சொல்வது,Washing mac

மார்ச் 2021ல் வாசித்தவை

Image
 இம்மாதம் மார்ச் 2021 ல் வாசித்து முடித்த புத்தகங்கள் 1.இக்கிகை (ikigai) - Hector Garcia and Francesc Miralles 2.யாத்வஷேம்-நேமிசந்த்ரா  தமிழில்: கா.நல்லதம்பி 3. திமிங்கல வேட்டை-ஹெர்மன் மெல்வில் 4. செல்லாத பணம் - இமையம் 5. அனல் காற்று- ஜெயமோகன் 6. தகப்பன் கொடி - அழகிய பெரியவன். ❤️❤️❤️❤️

தகப்பன் கொடி

Image
 ///அழகிய பெரியவனின் தகப்பன் கொடி நாவலை முன்வைத்து நிலம் அதிகாரத்தின் குறியீடு.நிலம் இழந்தவன்,நிலம் இருப்பவனிடம் கையேந்தி விவசாயக் கூலியாக மாற்றப்பட்ட, ஏமாற்றப்பட்ட தலித் குடிகளின் வரலாற்று உண்மையின்  வலியை பதிவு செய்கிறது தகப்பன் கொடி நாவல். தலித்துகள் நிலமிழந்து ஒடுக்கப்பட்டவர்களாக மாறியதன் வரலாற்றை சொல்லும் ஒரு எதார்த்தவாத நாவல் தகப்பன் கொடி. எனக்கு எப்பொழுதும் பிடித்த எதார்த்தவாத எழுத்தாளர் பூமணியின் "பிறகு" நாவலில் வரும் அழகிரி பகடையை நியாபகப்படுத்துகிறான்  தகப்பன் கொடி நாவலில் வரும் அம்மாசி. சொந்த மண்ணில் ஆதிக்க சாதி ஆண்டைகளால் நிலம் பிடுங்கப்பட்டு அகதியாய் திரியும் பறக்குடியில் பிறந்த அம்மாசி என்பவனின்  வாழ்க்கை வழியே பஞ்சமி நிலங்கள் தலித்துகளிடமிருந்து எப்படி பறிக்கப்பட்டது, அவர்கள் எப்படி விவசாய அடிமை கூலிகளாய் ஆனார்கள் என்பதை பேசுகிறது நாவல். நாவலின் களம் வட தமிழகத்தின் குடியாத்தம்,ஆம்பூர் என்பதால் அதன் நிலப்பரப்பு அங்குள்ள சாயுபுகள், தோல் தொழிற்சாலை,பீடி தொழிற்சாலைகள் ஆகியவற்றை நாவல் பதிவு செய்கிறது. நாவலின் பெரும் பலம் நாவலில் காட்டப்படும் மனிதர்களின் வாழ்க்கையும்