அஸீஸ் பே சம்பவம்: அய்ஃபர் டுன்ஸ், தமிழில்: சுகுமாரன்.

அஸீஸ் பே சம்பவம்:அய்ஃபர் டூன்ஸ் தமிழில்: சுகுமாரன்



துருக்கி மது விடுதி ஒன்றில் தம்புரா இசைக்கும் கலைஞனின் வாழ்க்கை சம்பவங்களின் தொகுப்பு இந்த குறுநாவல்.


காதலும்,இசையும்,துயரமும் தான் இந்த நாவலின் மைய விசைகள்.


தன்னை ஏமாற்றிவிட்டு இன்னொருவருடன் சென்றுவிடும் தன் காதலி மரியத்தின் காதல் துரோகமும்,தன்னை இடையிலேயே விட்டு இறந்து போகும் தன்னுடைய மனைவி வுஸ்லாத்தின் மரணமும் ஒரு பெருந்துயராக மாறி அதை தன் தம்புராவின் இசையில் எந்நேரமும் வழிய விடுகிறான் அஸீஸ் பே.


மரியத்தை சந்திப்பதற்கு முன் தன்னுடைய பருவ வயதில் எல்லா பெண்களோடும் உல்லாசத்தில் இருக்கும் அஸீஸ் பே மரியத்தின் மீது அவனுக்கு ஏற்படும் அன்பினாலும்,காதலாலும் தான் அவன் பலமற்றவனாக மாறிவிடுகிறான்.மரியத்தின் துரோகத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் இஸ்தான்புல் நகர வீதிகளில் ஒரு பித்தனைப் போல்  திரிகிறான் அஸீஸ் பே.


தன்னுடைய இசையால் மது விடுதியில் வியாபாரத்தை பெரும் அளவில் பெருக்கிக் கொள்ளும் தன்னுடைய நண்பன் ஸேக்கி ஒரு கட்டத்தில் உன்னுடைய இசை இன்றைய தலைமுறைகளை எவரையும் வசீகரிக்கவில்லை எனக் கூறி அஸிஸ் பேயை அடித்து துரத்தி விடுவதுடன் இந்த குறுநாவல் முடிகிறது. 


காதல் தோல்வி,தந்தையுடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்ற பின் நிகழும் அவர்கள் இருவரின் மரணம், அத்துடன் மனைவியின் மரணம்,நண்பர்களால் தன்னுடைய இசை நிராகரிக்கப்படும் நிலை என முழுக்க ஒரு துயர் பீடித்த உருவமாக இஸ்தான்புல் நகரின் வீதிகளில் அழுது அலைகிறான் அஸிஸ் பே.


அய்ஃபர் டூன்ஸ் ஒரு பெண் எழுத்தாளராக இருந்தாலும் ஒரு ஆணின் அக உணர்ச்சிகளை நுட்பமாக எழுத்தாகியுள்ளார்.



சுகுமாரனின் நேர்த்தியான மொழிபெயர்ப்பு இந்த குருநாவலை குறுகிய நேரத்தில் வாசிக்க வழி செய்கிறது.


Velu malayan

12.8.2023

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்