Posts

Showing posts from July, 2023

என் இலக்கிய நண்பர்கள்-எம்.வி.வெங்கட்ராம்

Image
 மைசூர் வெங்கடாஜலபதி வெங்கட்ராம் என்கின்ற எம்.வி. வெங்கட்ராம் காதுகள் நித்தியக்கன்னி வேள்வித்தீ போன்ற தமிழ் நாவல்களால் பரவலாக அறியப்பட்டவர். தன்னுடைய 16 வது வயதில் சிறுகதையின் பீஷ்மர் என்று அழைக்கப்படும் கு.ப.ரா மற்றும் புதுக்கவிதையின் தந்தை என அழைக்கப்படும் நா.பிச்சை மூர்த்தி ஆகியோரின் வழிகாட்டுதலில் சிட்டுக்குருவி என்ற சிறுகதையின் மூலம் மணிக்கொடி இதழில் அறிமுகமானவர். கிட்டத்தட்ட தன் வாழ்நாளில் அறுபது வருடங்கள்இலக்கியத்தில் எழுதி கழித்தவர் எம்.வி.வெங்கட்ராம். அவருக்கு 56 வருடங்கள் கழித்து எழுபதைத்தாண்டிய தன் வயோதிக வயதில் காதுகள் நாவலுக்கு சாகித்திய அகடாமி விருது கொடுக்கப்பட்டது. விருதுகளும் அங்கீகாரமும் பாரதி தொடங்கி புதுமைப்பித்தன் வரை உரிய நேரத்தில் அவர்கள் வாழ்ந்த காலத்தில் கிடைக்காமல் போனவை.அதனால்தான் எழுத்து வாழ்க்கை பற்றி எம்.வி.வெங்கட்ராம் இப்படி கூறுகிறார் "என் கதைகளில் நான் என்னையே தேடினேன்.நான் அறிந்ததை கேட்டதை பார்த்ததை பேசியதை அனுபவித்ததை தொட்டதை விட்டதை சிந்தித்ததையே எழுதினேன்.எழுதி எழுதித் தீர்த்தேன் பாதி எனக்காகவும் பாதி பசிக்காகவும். தமிழ்நாட்டில் முழு நேர எழுத்த

காதுகள்-எம்.வி.வெங்கட்ராம்

Image
 ஒவ்வொரு மனித உடலின் அகத்திற்கும் புறத்திருக்கும் ஒரு போர் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. நான் சில தருணங்களில் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது பேருந்தில் நின்று கொண்டிருந்த ஒரு ஐம்பது அல்லது அறுபது வயதை கடந்த ஒரு நபர் தொடர்ச்சியாக அவரே அவருக்குள் பேசிக் கொண்டிருந்ததை கவனித்திருக்கிறேன். என் அப்பா கொஞ்ச காலம் உள அழுத்த பாதிப்பில் இருந்த போது அவரும் இப்படி தனியாக முனுமுனுத்து அவருடனயே பேசிக் கொண்டிப்பதை கண்டிருக்கிறேன். புற இரைச்சல்களும்,புற வாழ்வின் அழுத்தங்களும் தான் அகச் சிதைவிற்கு வழி வகுக்கிறது. காதுகள் நாவல் ஒரு தனிமனிதனின் காது பிரச்சனையின் வழியே முன்வைப்பது பொது மானுட உளப் பிரச்சனைகளைத் தான். ஒருவனின் தேக பிரச்சினையையும் கலையாக்குது தான் நல்ல இலக்கியம். காதுகள் நாவல் அந்த வகையான ஒரு நல்ல இலக்கிய படைப்பு எனலாம். Hallucination என்ற பிரச்சினையினால் ஒருவனின் அகச்சந்தைக்குள் நிகழும் சிக்கல்களையும்,புற வாழ்வின் லெளகீக சிக்கல்கள்,மகாலிங்கத்தை எப்போதும் உடல் வறுத்தி நிற்கும் மகா காமம் என எம்.வி.வெங்கட்ராம் அவர்களின் கடந்த வாழ்க்கைகளின் நிகழ்வு கதம்பங்களின் தொகுப்

S.L.பைரப்பாவின் திரை(Avarana)

Image
எனக்கு எஸ்.எல்.பைரப்பாவின் மீது ஒரு முழுப் பிடிமானம் வந்து விட்டது.வரலாற்றை திருப்பி விசாரிக்கும் இந்த நாவல் முன் வைப்பது நம் முன் உள்ள  வரலாறு என்பது முழுக்க உண்மையானதா?  "வரலாற்று பொய்களை முன்வைப்பதன் மூலம் தேசியவாதத்தை ஒருபோதும் வலுப்படுத்த முடியாது" என்கிறார் எஸ்.எல்.பைரப்பா. இஸ்லாம் அடிப்படை வாதத்தை,இஸ்லாம் மன்னர்கள் இந்திய பண்பாட்டுச் சின்னங்களை பாரம்பரியத்தை சிதைத்ததை வெறும் குற்றச்சாட்டாக முன் வைக்காமல் வலுவான தரவுகளை கொண்டு எஸ்.எல்.பைரப்பா எழுதியுள்ளார். நாவலின் கதாபாத்திரங்களை மட்டும் புனைவுகளாக கொண்டு உள்ளபடியே இருந்த வரலாற்றுத் தகவல்களை கொண்டு மெய்த்தன்மையிலிருந்து விலகி எழுதப்பட்ட வரலாறுகளின் மீதுள்ள திரையை ஒரு பெரும் விவாதத்தின் வழியே விலக்கும் முயற்சியே இந்த நாவல் என கொள்ளலாம்.இதில் மதச்சார்புத்தன்மை உள்ளது, இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலை கொண்ட நாவல் என எடுத்துக் கொள்ளவும் வாசிக்கும் ஒரு சிலருக்கு வாய்ப்புள்ளது.அது அவரவர் பார்வை பொறுத்தது. இந்த நாவலில் அமீரும்,லட்சுமியும்(ரஷியா) இருவரும் இஸ்லாமிய இந்து கலாச்சார விவாதங்களின் குறியீடுகள். சமகாலத்தின் கதையையும்,

பண்பாட்டின் பலகணி: ஸ்டாலின் ராஜாங்கம்

Image
பேராசிரியர் டி.தருமராஜ் எழுதிய நான் ஏன் தலித்தும் அல்ல நூலுக்கு பிறகு எனக்குப் பிடித்த ஒன்றாக பண்பாட்டின் பலகணி நூல் இருந்தது. நாம் புழங்கிக் கொண்டிருக்கும் பண்டிகைகள் பண்பாடுகள் மீதான ஒரு பரந்த ஆய்வு பார்வையை பண்பாட்டின் பலகணி  நூல் வழியே முன் வைக்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம். நாம் கொண்டாடும் நிறைய பண்டிகைகள் நீத்தார் நினைவின் நீட்சியே என்பது தான் ஸ்டாலின் ராஜாங்கம் நூல் முழுமைக்கும் முன் வைப்பது. பொங்கலே புத்தருக்கான நினைவு கூர்தல் விழா அது போதிப் பண்டிகை என்பது வரலாற்று திரிபாகி போகிப் பண்டிகை ஆனது என ஸ்டாலின் ராஜாங்கம் கூறும் தரவுகள் நம்பத்தகுந்தவையாக உள்ளது. நிறைய கோயில்களில் உள்ள பாத சுவடுகள் சமண மதத்திற்கு உரியது. பாதப் பீடிகைகள் சமணத்திற்கானது என மணிமேகலை நூல் கூறுவதாக ஸ்டாலின் ராஜாங்கம் முன் வைக்கிறார்.  ஆரம்பத்தில் புத்த சமண மதத்தின் நீத்தார் நினைவுகளாக இருந்தவைகளை சைவ,வைணவ சமயங்கள் எடுத்துக் கொண்டதாக நூலில் கூறப்படுகிறது. நாம் கொண்டாடும் ஆடிப் பண்டிகை,தீபாவளி,சிவராத்திரி என நிறைய பண்டிகைகள் நீத்தார் நினைவின் நீட்சிகள் என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம். கள ஆய்வு தகவல்கள் மற்றும் தரவு

தருமபுரியும் தாமஸ் மன்றோவும்:இடைப்பாடி அமுதன்

Image
 சர் தாமஸ் மன்றோ அவர்கள் நிர்வாக ஆட்சியராக 1792ல் தர்மபுரிக்கு வருகை புரிந்தது முதல் 1799 வரை அவருக்கும் தருமபுரிக்கும் இருந்த ஏழாண்டு தொடர்பை விவரிக்கும் நூல் இது.  ஒரு சாதாரண ராணுவ வீரனாக ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியில் சேருவதற்காக இந்தியா வந்த தாமஸ் மன்றோ இந்தியாவில் ஆட்சி புரிந்த மிகச்சிறந்த ஆங்கில ஆளுஞர்களில் ஒருவராக புகழ் பெற்றவர். பாரா மஹால் மாவட்டம் என அழைக்கப்படும் சேலம் நாமக்கல், கிருஷ்ணகிரி,தர்மபுரி,ஈரோடு,கோவை போன்றவற்றை உள்ளடக்கியது. 1820 ல் தாமஸ் மன்றோ கொண்டு வந்த ரயத்வாரி முறையின் பரிசோதனை களம் தருமபுரி தான்.விவசாயிகளுக்கும் அரசுக்கும் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாகவே அரசாங்கத்திற்கும் விவசாயிகளுக்கும் இடையே  நேரடியாக விலை நிர்ணயம் செய்யப்படும் முறையான ரயத்துவாரி முறை விவசாயிகளுக்கு பயனளிக்கக்கூடியதாக இருந்தது. அதனால் மன்றோ விவசாயிகளின் நண்பர் என்று போற்றப்பட்டார். தருமபுரியிலிருந்து இருமத்தூர் ஆற்றில் பரிசலில் மீன் பிடித்த அனுபவத்தை இந்நூல் வழியே பகிர்கிறார் சர் தாமஸ் மன்றோ. மராத்தியரான லட்சுமணராவும், அப்போது உதவி கலெக்டராக இருந்த கிரகாமும் சேர்ந்து கிருஷ்ணகிரியின் புதிய ந

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்:மகுடேசுவரன்

Image
விஜய நகர பேரரசின் தலைநகரமாக விளங்கிய ஹம்பி என்னும் விஜயநகரம் தலைக்கோட்டை போரினால் சிதைந்து சிதிலமடைந்த கோயிலாக, கோட்டைகளாக வெறும் வரலாற்று தடமாக எஞ்சி இருக்கிறது. 1336 இல் ஹரிஹரர்,புக்களின் சங்கம வம்ச ஆட்சியிலிருந்து விஜயநகரம் கொஞ்சம் கொஞ்சமாக கட்டி எழுப்பப்படுகிறது.அக்காலத்தில் இருந்த உலகின் வேறு எந்த நகரத்தை விடவும் இந்நகரே மிகப்பெரியதாகவும், செல்வ வளம் மிக்கதாயும் இருந்திருக்கிறது. விஜயநகரம் பெரு நகரமாய் புகழ்பெற்று விளங்கிய போது இன்று உள்ள பல ஐரோப்பிய நகரங்கள் அப்போது வெறும் சிற்றூர்களாக இருந்தன.வேறு பல ஐரோப்பிய நகரங்கள் தோன்றியிருக்கவே இல்லை. அமெரிக்க கண்டம் கண்டறியப்படாத தரிசு கண்டமாய் இருந்திருக்கிறது. அன்றைய லண்டன் அன்றைய விஜய நகரத்தோடு ஒப்பிடக்கூட தகுதியற்றதாக இருந்திருக்கிறது.விஜய நகரத்தை அன்றைய ஒரே ஒரு ஐரோப்பிய நகரத்தோடு மட்டுமே ஒப்பிடலாம் என்றால் அது ரோம் நகரம் மட்டுமே. விஜய நகரத்தில் இருந்த எல்லா ஆலயங்களும் வைணவ ஆலயங்களாக இருக்கையில் விருப்பாக்சரர் ஆலயம் சிவாலயமாக இருப்பது அதன் பழமையால்தான்.கிருஷ்ண தேவராயர் ஆட்சி காலத்தில் தான் ஒட்டுமொத்த விஜயநகரமும் வைணவமயமானது. விருப்பாக

நெருங்கி வரும் இடியோசை-விபூதி பூஷன் பாந்தோபாத்யாய

Image
வங்க நாவல்களின் தனித்த சிறப்பே அதன் அமைதியும்,ஆழமும் தான்.போரினால் உருவாகும் பஞ்சத்தில் உழலும் மனிதர்களின் உணர்வுகளை அவ்வளவு ஆழமாக நம்முள் கடத்துகிறது நாவல்.நாவலின் பெரும் தரிசனமே இதில் வரும் பெண்கள் தான். கங்கா சரணின் மனைவி அனங்கா, காபாலியின் மனைவி காபாலி போம், மோத்தி முச்சினி, கங்கா சரணுக்கு அரிசி கொடுக்கும் நிபாரண் கோஷ் விதவை மகள் காந்தோ மணி என பஞ்சத்திலும் பிறரின் சங்கடங்களில் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். வயிற்று பசிக்கும் அரிசிக்கும் போரா- ஜதுவிடம் செங்கல் சூளையின் பின்புறம் ஒதுங்கும் காபாலி போம் தனது தோழி அனங்காவுக்காக ஊரை விட்டு போரா- ஜதுவுடன் போகாமல் இருப்பது,பசியினால் கால்கள் வீங்கி இறக்கும் மோத்தி முச்சினி என பெண்களின் சித்திரம் இந்த நாவலில் சிறப்பாக காட்டப்பட்டுள்ளது. அவ்வளவு வறுமையிலும் அரிசிக்கு அலையும் நேரத்திலும் கங்கா சரண் அனங்காவை மூன்றாம் தரம் தாயாகி பிரசவிப்பதை ஒரே அத்தியாயத்தில் அது உடல் நிகழ்த்திக் கொள்ளும் இயற்கை தேவை என்பதை விபூதி பூஷன் பாந்தோபாத்யாய காட்டியுள்ளார்.வங்க நாவல்கள் எப்போதும் மிகச்சிறந்தவை, கலைத் தரம் கொண்டவை என்பதற்கு இன்னொரு உதாரணம் நெருங்கி வரும்