Posts

Showing posts from May, 2020
Image
///ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி எழுதிய "குற்றமும் தண்டனையும்" நாவலை முன்வைத்து வெண்ணிற இரவுகள், நிலவறைக்குறிப்புகள் போன்ற படைப்புகளை வாசித்ததின் வழியே தான் எனக்கு தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புலகம் பரிட்சயம் ஆனது. பொதுவாகவே தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புலகம் என்பது வாசகர்கள் எளிதில் அணுக முடியாத மனித அக மனங்களின் ஆழங்களை பேசுபவை. தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புகளை படிப்பது என்பது உங்களை நீங்களே சுயவதைப் படுத்திக் கொள்வதைப் போன்றது.உங்கள் முன் உங்களையே நேர் நிறுத்தி பேசிக்கொள்வது. ஒரு வருடங்களுக்கு முன்பு குற்றமும் தண்டனையும் நாவலை நான் வாசிக்கத் தொடங்கியபோது மனம் இருநூறு பக்கங்களை கடப்பதற்குள் சலிப்புகளால் சரிந்து பின்வாங்கி நின்றதால் நாவலை தூக்கி தூர வைத்து விட்டேன். குட்டி ஆக்கங்களை விடுத்து கெட்டி அட்டை போட்ட பெரிய ஆக்கங்களை வாசியுங்கள் என கூறிய எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் அவர்களால் குற்றமும் தண்டனையும் நாவலை பதினைந்து நாட்களில் படித்து முடித்தேன். எனக்கு பெருத்த அகச்சலிப்பையும், அகச் சிதைவையும் ஏற்படுத்திய நாவல் குற்றமும் தண்டனையும் நாவல். தன்னை வதைக்கும் வறுமை சூழலின் விரக்தி,அடகு
Image
///கரிச்சான் குஞ்சு எழுதிய  "பசித்த மானிடம் "நாவலை முன்வைத்து சில படைப்புகள் அது எழுதப்பட்ட காலத்தில் இலக்கியப் பரப்பிலும், வாசகர் மத்தியிலும் சரியான மதிப்பீடுகளையும், அங்கீகாரத்தையும் பெறாமல் போயிருக்கிறது. அப்படி காலதாமதமாக கவனம் பெற்ற நாவல் கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானிடம் நாவல். தமிழில் ஓரினச்சேர்க்கைப் பற்றி வெளிப்படையாய் பேசிய முதல் நாவல் பசித்த மானிடம். பெரும்பாலும் பெண்களின் உடல் சுரண்டலை மட்டுமே பதிவு செய்து வந்த தமிழ் இலக்கியத்தில் ஒரு ஆணின் உடல் சுரண்டலை பதிவு செய்ததில் முக்கிய கவனம் பெறுகிறது இந்நாவல். மனித உடலில் வற்றாமல் ஊறிக் கொண்டேயிருக்கும் , பசி,காமம்,பொருள் சேர்க்கும் வேட்கை, அதிகார அரிப்பு இவையெல்லாம் வற்றிப்போகும் ஒரு புள்ளியில் வாழ்வின் நிறைவு என்பது என்ன? என்ற கேள்வியை முன்வைக்கும் படைப்பாக பசித்த மானிடம் இருக்கிறது. கணேசன் கிட்டா என்ற இரண்டு நண்பர்களின் வாழ்வின் மீது பணம், அதிகாரம்,காமம் என எல்லாம் இயங்கி இருவரும் மனிதர்களாலும், உறவுகளாலும் எப்படி உறிஞ்சப்படுகிறார்கள் என்பதை ஆன்மீகமும்,தத்துவமும் கலந்த பார்வையில் பதிவு செய்கிறார்
Image
///தோப்பில் முஹம்மது மீரான் எழுதிய ஒரு கடலோர கிராமத்தின் கதை நாவலை முன்வைத்து இஸ்லாம் சமூகம் ஒரு இறுகிய கட்டமைப்பைக் கொண்டது.குறிப்பாக பெண்கள் மீதான அதன் இறுக்கம் இன்னும் தளர்ந்ததாகவே இல்லை. இஸ்லாம் சமூக பெண்களின் நொம்பலங்களை தனது எழுத்துக்களின் வழியே அம்பலமாக்கியவர் உருது எழுத்தாளர் இஸ்மத் சுக்தாய். இஸ்லாம் சமூகம் எவற்றையெல்லாம் தன் மதத்திற்கான  கண்ணியம், கட்டுப்பாடு  என இறுக்கி வைத்திருந்ததோ அவற்றையெல்லாம் தன் எழுத்துக்களில் பிரதிபலித்து தன்னை எப்போதும் பிரச்சனைகளில் வைத்துக் கொண்ட மீறலின் வடிவம் இஸ்மத் சுக்தாய் அவர்கள். அவர் கதைகளின் வழியாகத்தான் இஸ்லாமிய பெண்களின் சுதந்திர முனகளையும்,அவர்கள் மீது நூற்றாண்டுகளாய் போர்த்தப்பட்டு கிடந்த திரை விலகளையும் கண்டேன். ஒரு நூற்றாண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்த மீறல் இஸ்மத் சுக்தாய். ஆனால் இந்த நொடியிலும் இன்னும் வற்றி விடாத இருண்மையை இஸ்லாம் சமூகம் தனக்குள் சுமந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படி முதல் உலகப்போர் முடிவடைந்த காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு கடலோர கிராமத்தில் எவ்வித நாகரிக வளர்ச்சியையும் தனக்குள் அனுமதிக்காம
Image
///டி.தருமராஜ் எழுதிய "அயோத்திதாசர் " (பார்ப்பனர் முதல் பறையர் வரை) நூலை முன்வைத்து பள்ளிப் பாடப் புத்தகங்கள் வழியாகவும், ஒரு சில பேர் சொல்லியும் ஒரு தெளிவற்ற பிம்பமாய்  இதுவரை நான் உள் வாங்கி வைத்திருந்த அயோத்திதாச பண்டிதரை அருகில் அணுகிப் பார்ப்பதற்கான பாதையை ஏற்படுத்தி தந்துள்ளது இந்த நூல். வரலாற்றாய்வாளர்களால் இருட்டிப்பு செய்யப்பட்ட தமிழகத்தின் மிகச் சிறந்த  சிந்தனையாளர் அயோத்திதாசர் பண்டிதரின் எண்ணங்களை, படைப்புகளை அவர் உண்மையான அகமுகம் எது என பேராசியர் டி.தருமராஜ் ஆய்வு நோக்கில் அணுகும் வரலாற்று விசாரணை இந்நூல். அயோத்திதாசர் என்பவரின் தனிப்பட்ட முகத்தை துதிக்காமல் அவரது அக சிந்தனைகளின் மீதான ஆய்வு விசாரணையாக இருக்கிறது இந்நூல். பௌத்தமே தமிழர்களின் பூர்வீக சமயமாக இருந்தது என்றும், பூர்வ பௌத்தர்களே பறையர்கள். பறையர்களின் ஆதி சமயம் என்பது பெளத்தமே என்றும், வேஷ பிராமணர்களே பெளத்த மதத்தை சீர்குலைத்து பெளத்தர்களாக இருந்தவர்களை பறையர்களாக மாற்றினார்கள் என்றும், பார்ப்பனர்களுக்கும், பறையர்களுக்கும் உள்ள முரண் எப்படி உருவானது என்பதை அயோத்திதாசர் தன்னுடைய இந்தி