Posts

Showing posts from January, 2020
Image
"சென்னைப் புத்தகக் கண்காட்சியும், வண்டலூர் மிருக காட்சியும்" - (ஒரு நாள் பயண அனுபவம்) வாழ்வின் சள்ளைகள் முட்டி கோணல் கொள்ளும் மனங்களை நேராக்க, அன்றாடம் வாழ்க்கையை நகர்த்தும் பிழைப்புக்கலையில் எழும் சிக்கல்களால் சக மனிதர்கள் நோக்கியும்,சமூகத்தை நோக்கியும் மனம் கொள்ளும் கோபம், பொறாமை, குரோதம்,எரிச்சல் என எல்லா அழுக்குகளையும் அகம் கழுவிக்கொள்ள வாசிப்பதும், பயணம் கொள்வதும் மட்டுமே ஒரு பயனுள்ள வழியாக இருக்கும் என கருதுகிறேன். வாசிப்பு என்பது கண்களால் புத்தகத்திற்குள் இறங்கி நடக்கும் கலை.பயணம் என்பது புதிய நிலங்களின் மீது கால்களால் கவிதை எழுதும் கலை.இந்த நவீன வாழ்வின் அழுத்தத்தில் எப்போதும் இரைச்சலில் இயங்கும் மனதை சமநிலைப்படுத்த புத்தகங்களை வாசிப்பதும், புதிய இடங்களை நோக்கி பயணம் செய்வதும் மட்டுமே மனதை லகுவாக்குவதற்கு தீர்வு என்பது என் எண்ணம். இந்த சராசரி மொண்னைத்தன வாழ்விலிருந்தும்,எவ்வித அறமுமற்ற சுரணையற்ற சமூகத்திலிருந்து உங்களை தனித்து நிறுத்திக் கொள்ள வாசிப்பும், பயணம் செய்வதும் மட்டுமே ஒரு சிறந்த வழி. எங்களின்  பயணம் 18.1.2020 சனிக்கிழமை விடியற்காலை நான்கு
Image
///43 வது சென்னை புத்தகக் கண்காட்சி 2020ல் வாங்கிய மொத்தப் புத்தகங்களின் பட்டியல் . 1.சோஃபியின் உலகம் - யொஸ்டைன் கார்டெர்  2. சூல் - சோ.தர்மன் 3.கோரை - கண்மணி குணசேகரன் 4.தம்மம் தந்தவன் -விலாஸ் சாரங் 5. கதை கேட்கும் சுவர்கள் -  ஷாபு கிளிதட்டில்  6.பதின் -எஸ்.ராமகிருஷ்ணன் 7.அயோத்திதாசர் - (பார்ப்பனர் முதல் பறையர் வரை) -டி.தருமராஜ் 8.நாடு விட்டு நாடு - முத்தம்மாள் பழனிசாமி 9.இணைந்த மனம் - மிருதுலா கர்க் 10.சிதம்பர ரகசியம் - பூர்ண சந்திர தேஜஸ்வி  11. அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள் - மிகெய்ல் நைமி 12.குரு -எச்.எஸ்.சிவபிரகாஷ் 13.அறிந்ததிதின்றும் விடுதலை - ஜே.கிருஷ்ணமூர்த்தி 14.தீ-எஸ்.பொன்னுத்துரை 15. முண்டக உபநிஷதம் - சுவாமி ஆசுதோஷானந்தர் 16. காகித மலர்கள் -ஆதவன் 17.புன்னகைக்கும் பிரபஞ்சம் - கபீர் 18.பதினெட்டாவது அட்சக்கோடு -அசோகமித்திரன் 19.வேள்வித் தீ- எம்.வி.வெங்கட்ராம் 20.நடந்தாய் வாழி காவேரி -  தி. ஜானகிராமன் 21.தலைமுறைகள் - நீலபத்மநாபன் 22.கண்மணி கமலாவுக்கு புதுமைப்பித்தன் கடிதங்கள் - இளையபாரதி 2
Image
.நாவல் பெயர்:சித்தார்த்தன் ஆசிரியா்:ஹெர்மன் ஹெஸ்ஸெ. தமிழுக்கு மடைமாற்றியவர்: திருலோக சீதாராம். பதிப்பகம் :பாரதி புத்தகாலயம் விலை: ரூ.100/- "ஞானம் தேடிய பயணம்" சித்தார்த்தன் இது கொளதம சித்தார்த்தனாகிய "புத்தரைப்பற்றிய கதையல்ல. புத்தரையே நேரில் சந்தித்து அவரை பின்பற்றாமல் தனித்த பயணத்தில் தன்னை கண்டறியும் அந்தண குமாரனாகிய சித்தார்த்தன் எனும் பிராமண இளைஞனின் கதை". சித்தார்த்தன் தன் தந்தையின் விருப்பமற்ற விடைபெறுதலுடன் தன்னுடைய நண்பன் கோவிந்தனுடன் சேர்ந்து சமண மதம் சேர்கிறான்.பிறகு சமண மதத்தில் தன் மனம் சமநிலை கொள்ளவில்லை என்பதால் புத்த மதம் புகுகிறார்கள் சித்தார்த்தனும்,கோவிந்தனும். புத்தரை நேரில் சந்தித்து உரையாடுகிறான் சித்தார்த்தன்.சித்தார்த்தன் தன் நண்பன் கோவிந்தனை புத்தரிடம் விட்டு விட்டு புத்தரை கடந்து புறப்படுகிறான்.புறப்படும் முன் சித்தார்த்தன் "புத்தா் என் உடமையைப் பறித்தார்" ஆனால் எனக்கு என்னை(சித்தார்த்தனை) வழங்கியிருக்கிறார் என கூறுகிறான். இதன் பொருள் புத்தர் என்னை பாதித்தார்,ஆனால் அவர் என்னை ஆக்கிரமித்து ஆட்கொள்ளவில்லை என
Image
 ///நிலம் பூத்து மலர்ந்த நாள் நாவலை சற்று முன்னான கணத்தில் தான் படித்து முடித்தேன். நான் என் பள்ளி காலத்து கல்வி வழியாக தேர்வு எழுதுவதற்காக மட்டுமே தெரிந்து கொண்ட என் தமிழின் சங்க கால வாழ்க்கை முறையை, மன்னர்களை,புலவர்களான பரணரை, கபிலரை,மன்னர்களை புகழ்ந்து பாடி இரந்து வாழும் பாணர்களை,ஆடிப்பாடும் கூத்தர்களை, என் தாய் மண்ணான தகடூரை ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சியை, அவன் ஆதரித்த தமிழ் மூதாட்டி அவ்வையை நான் இந்த நாவலின் வழியாக நெருங்கிப் பார்த்தேன். சிறுவயதில் தொலைந்து போன தன் மகன் மயிலனை தேடி புறப்படும் ஒரு பாணர் கூட்டத்தின் புறப்பாடும் அவர்களின் பயணத்தின் வழியே அவர்கள் சந்திக்கும் சிக்கல்களும் தான் இந்நாவல்.  நாவல் மூன்று அத்தியாயங்களாக சொல்லப்படுகிறது.  முதல் அத்தியாயம் கொலும்பன் என்ற தந்தையின் பார்வையிலும், இரண்டாவது அத்தியாயம் அவனது மகள் சித்திரையின் பார்வையிலும், மூன்றாவது அத்தியாயம் கொலும்பனின் மகன் மயிலன் பார்வையிலும் சொல்லப்படுகிறது.  சங்ககால பழமையின் ஊடாக மனோஜ் குரூர் நிகழ்த்தியிருக்கும் இந்த  புனைவு எழுத்து தமிழ் எழுத்தாளர்கள் நிகழ்த்தியிருக்க வேண்டியது. எண்ணமுடிய
Image
///இந்த வருட சென்னைப்புத்தகக் கண்காட்சியில்  தேசிய புத்தக வெளியீட்டு நிறுவனம் (NBT) இல்லாதது ஒரு பெரிய ஏமாற்றம் அளித்தது எனக்கு. சாகித்திய அகாடமி அரங்கில் கூட நான் எதிர்பார்த்த கேசவதேவ் எழுதிய அண்டைவீட்டார் நாவல், கிரிராஜ் கிஷோரின் சதுரங்கக் குதிரைகள் நாவல் போன்ற படைப்புகள் இல்லை. நான் விரும்பி வாங்க நினைத்த நிறைய புத்தகங்கள் மறுபதிப்பு செய்யப்படவில்லை என நிறையப் பதிப்பகங்களால் சொல்லப்பட்டதால் என் விருப்பப் பட்டியலில் இருந்த நிறைய புத்தகங்கள் வாங்க முடியாமல் போனது.  மேலும் அரங்கு எண் பட்டியல் குறித்த விவர கையேட்டை வாசகர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தான் வழங்கினார்கள்.அதுவும் வேறு எவரோ ஒரு பதிப்பகத்தாரின் சேவையால் . சனிக்கிழமை அன்று எந்த அரங்கு எங்கு உள்ளது என்பதை அறிய மிகவும் சிரமப்பட்டேன்.அங்குள்ள அலுவலகத்தை அணுகி தான் அறிய முடிந்தது. மற்றபடி பஜ்ஜி மசால் வடையும், ஆயிரக் கணக்கான மக்கள் வாடையும் மூக்கைத் துளைக்க  குறையின்றி நடந்துக் கொண்டிருக்கும் அகத்திற்கான அறிவு திருவிழாவில் கலந்து கொள்ள இன்னொரு முறையும் வார இறுதியில் வருகிறேன் சென்னை நோக்கி. கீழ்கண்ட புத்தகங்கள் சனிக்கிழ
Image
சென்னை புத்தகக் கண்காட்சி 2020ல் வாங்கிய புத்தகங்கள் 1.சோஃபியின் உலகம் - யொஸ்டைன் கார்டெர்  2. சூல் - சோ.தர்மன் 3.கோரை - கண்மணி குணசேகரன் 4.தம்மம் தந்தவன் -விலாஸ் சாரங் 5. கதை கேட்கும் சுவர்கள் -  ஷாபு கிளிதட்டில்  6.பதின் -எஸ்.ராமகிருஷ்ணன் 7.அயோத்திதாசர் - (பார்ப்பனர் முதல் பறையர் வரை) -டி.தருமராஜ் 8.நாடு விட்டு நாடு - முத்தம்மாள் பழனிசாமி 9.இணைந்த மனம் - மிருதுலா கர்க் 10.சிதம்பர ரகசியம் - பூர்ண சந்திர தேஜஸ்வி  11. அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள் - மிகெய்ல் நைமி 12.குரு -எச்.எஸ்.சிவபிரகாஷ் 13.அறிந்ததிதின்றும் விடுதலை - ஜே.கிருஷ்ணமூர்த்தி 14.தீ-எஸ்.பொன்னுத்துரை 15. முண்டக உபநிஷதம் - சுவாமி ஆசுதோஷானந்தர்
Image
2020 சென்னை புத்தக கண்காட்சியில் நான் வாங்க உள்ள புத்தகங்களின் உத்தேச பட்டியல் கிழக்கு பதிப்பக நூல்கள் : 1.அயோத்திதாசர்  (பார்ப்பனர் முதல் பறையர் வரை) - பேராசிரியர் டி.தர்மராஜ்  2. ஜப்பான் ஒரு கீற்றோவியம் - ஜெயமோகன் 3. நவீன இந்தியாவின் சிற்பிகள் -ராமச்சந்திர குஹா 4. இறவான் - பா.ராகவன் 5. காடு -ஜெயமோகன் உயிர்மை பதிப்பக நூல்கள் : 6. ஆடு ஜீவிதம் - பென்யாமின் 7. என் பெயர் ராமசேஷன் - ஆதவன் எதிர் வெளியீடு புத்தகங்கள்: 8. பார்வையற்றவளின் சந்ததிகள் - அனீஸ் சலீம் 9. ஆயிரம் சூரியப்பேரொளி - காலித் ஹீசைனி 10. புலப்படாத நகரங்கள் - இடாலோ கால்வினோ 11. 13 வருட நக்சலைட்டின் சிறைக் குறிப்புகள் - ராமச்சந்திர சிங் . காலச்சுவடு பதிப்பக நூல்கள் : 12. சோஃபியின் உலகம் - யொஸ்டைன் கார்டர் 13. அறியப்படாத தீவின் கதை- ஜோஸே ஸரமாகோ 14. கடலும் வண்ணத்துப்பூச்சிகளும் -சுரேஷ்குமார் இந்திரஜித் 15. தலைமுறைகள் -நீலபத்மநாபன் 16. வேள்வித்தீ - எம்.வி.வெங்கட்ராம் 17. நிச்சலனம் _ அகமத் ஹம்தி தன்பினார் தமிழினி பதிப்பக நூல்கள் : 17.கலிங்கம் காண்போம் -மகுடேஸ்வரன் 18.கோரை_கண்மணி
Image
துயரெனும் தூரிகை தீட்டிய சித்திரம் - "அஞ்சலை" இலக்கியத்தில் இயல்புவாத எழுத்து என்பது ஒருவர் வாழும் மண்ணை, அவர்களின் வாழ்வியலை எவ்வித பூச்சும் இல்லாமல் நேரடியாக எடுத்து வைப்பது. இயல்பு வாத எழுத்தின் மிகப்பெரிய பலம் என்பதும், பலவீனம் என்பதும் அது கலைத்தன்மை நோக்கி பயணிக்காத மேலோட்டமான தட்டையான வாசகர்களின் மனங்களுக்கு நெருக்கமாக நிற்பதில்லை. இயல்பு வாத படைப்புகள் வாசகனின் மனதை உணர்ச்சிகளின் உயரத்திற்கு கொண்டு சென்று நிறுத்தும் வேலையையோ,அவன் நோக்கும் சுவாரஸ்ய பார்வைக்கு பந்தி வைக்கும் வேலையையோ ஒரு போதும் செய்வதில்லை. தமிழில் இயல்புவாத படைப்பாளிகளில் முக்கியமாக கருதப்படுபவர்கள் பூமணி,ஆ.மாதவன் மற்றும் இமையம். இந்த இயல்பு வாத படைப்பாளர்களின் வரிசையில் கண்மணி குணசேகரும் சேர்கிறார் அஞ்சலை நாவல் வழியாக. நாம் பார்த்த வாழ்க்கையை எதார்த்தமாக கூறும் கலை கூறின் வடிவம் கொண்டவைகளே இயல்புவாத படைப்புகள் .அப்படி அஞ்சலை என்ற ஒரு பெண்ணின் வாழ்க்கையை, அவளின் அவஸ்தையை,அலைக்கழிப்பை, அவளின் கண்ணீரை இயல்பு நீங்காமல் பேசும் கலைக்காவியம் தான் அஞ்சலை நாவல். இமையத்தின் "கோவேறு கழுதைகள்
Image
/// 2019 ஆம் ஆண்டு நான் வாசித்த புத்தகங்கள் 1.எஞ்சும் சொற்கள் - சுரேஷ் பிரதீப் 2.மோகமுள் -தி. ஜானகிராமன் 3.ஏழாம் உலகம் - ஜெயமோகன் 4. என் தந்தை பாலையா - Y. P. சத்தியநாராயணா 5.சம்ஸ்காரா -யு.ஆர் அனந்தமூர்த்தி 6.நாளை மற்றுமொரு நாளே -ஜி.நாகராஜன் 7.இடைவெளி - எஸ். சம்பத் 8.குறத்தி முடுக்கு _ ஜி. நாகராஜன் 9. தாவோ தே ஜிங் - லாவோட்சு 10.மொட்டு விரியும் சத்தம் - கே. நல்லதம்பி 11.காஹா சத்தச ஈ தெரிந்தெடுக்கப்பட்ட பிராகிருத மொழிக் கவிதைகள் -  சுந்தர் காளி  பரிமளம் சுந்தர் 12.மித்ரா வந்தி -கிருஷ்ண ஷோப்தி  13.வாழ்க்கை ஒரு நாடகம் -பன்னாலால் பட்டேல் 14.விஷக்கன்னி -எஸ்.கே.பொற்றேக்காட் 15.ஒரு குடும்பம் சிதைகிறது -எஸ்.எல்.பைரப்பா. 16.வாடிவாசல் - சி.சு செல்லப்பா 17.சேப்பியன்ஸ் - யுவால் நோவா ஹராரி 18. பான்கி மூனின் ருவாண்டா -  அகரமுதல்வன்  19.டொமினிக் - பவா செல்லதுரை 20.உப்பு நாய்கள் -லட்சுமி சரவணகுமார் 21. எதிரி உங்கள் நண்பன் - பால் தசார் கிராசியன் 22.அம்மா வந்தாள் - தி. ஜானகிராமன் 23.நான் யார்?-ரமண மகரிஷி 24.மகிழ்ச்சியான பன்றிக்குட்டி- வெய்யில் 25.நீ