Posts

Showing posts from October, 2020

சிதறல்கள்

Image
 ///பாவண்ணன் அவர்கள் எழுதிய சிதறல்கள் நாவலை முன்வைத்து 1980 களின் காலகட்டத்தில் மூடப்பட்ட புதுச்சேரி பஞ்சாலை தொழிலாளர்களின் வாழ்க்கை பற்றிய நாவல் சிதறல்கள். ஒரு கட்டத்தில் பஞ்சாலை இழுத்து மூடப்படுவதால் அதில் பணிபுரிந்த ஏராளமான,ஊழியர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பொருளாதார பிரச்சினைகள், குடும்பவறுமை,அகத் தவிப்புகள், அன்றாடத்தை நகர்த்த அவர்கள் கொள்ளும் அவமானங்கள், தற்கொலைகள் ஆகியவற்றை நாவல் படுத்தியுள்ளார் பாவண்ணன். நாவலின் பிரதான கதாபாத்திரமாக வரும் முருகேசன் குடும்ப கஷ்டத்தின் வழியாக எல்லா பஞ்சாலை தொழிலாளர் குடும்பங்களின் கஷ்டங்களையும் முருகேசன் பார்வையில் பதிவு செய்கிறார் பாவண்ணன். ஆறாயிரம் தொழிலாளர்கள் வேலை செய்யும் ஒரு ஆலை மூடப்பட்ட உடன் அதையே நம்பி வாழ்ந்த குடும்பங்கள் கொள்ளும் சித்திரவதை சித்திரம் தான் சிதறல்கள் நாவல். ஆலை மூடப்பட்டதும் வேறு வேலையின்றி தவிக்கும் முருகேசன் தறி வேலை,கொத்தனார் வேலை, என பல வேலைகளுக்குச் செல்கிறான். ஆளை மூடப்பட்டதால் வறுமையின் காரணமாக நல்லசாமி என்ற தொழிலாளியால் வாடகை கொடுக்க முடியாத நிலை எழுகிறது. வீட்டின் உரிமையாளர் நல்லசாமி என்னுடைய மனைவி வாசுகி த

பாய்மரக் கப்பல்

Image
 ///பாவண்ணன் அவர்களின் "பாய்மரக் கப்பல்" நாவலை முன்வைத்து நம் பொதுப் பார்வையில் விவசாயம் என்பது ஒரு தொழில்.ஆனால்  விவசாயிக்கு அது ஒரு வாழ்க்கை முறை.நிலம் அவனுடைய இன்னொரு உடல்.உழைப்பை முதலீடாக கேட்கும் உயிர் வளர்க்கும் கலை அது. விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த தலை முறைகளிலிருந்து மெல்ல மெல்ல விலகி வேலைவாய்ப்பு தொழில்கள்,பணம், பதவி என ஓடிக் கொண்டிருக்கின்ற ஒரு தலைமுறை நாம். இந்த நவீன வாழ்க்கைமுறை தலைமுறைகளுக்கு இடையேயான மிகப்பெரிய இடைவெளிகளையும், முரண்களையும் பெருக்கி விட்டிருக்கிறது. மூன்று தலைமுறை மனிதர்களின் வாழ்க்கைப்பாடுகள்,அவர்களின் விவசாய வாழ்க்கை முறையின் வீழ்ச்சி,அவர்களின் தலைமுறை இடைவெளி பிரச்சனை ஆகியவற்றை ஒரு நிஜ வாழ்வின் வாசனையுடன் பதிவு செய்கிறது பாவண்ணன் அவர்களின் பாய்மரக் கப்பல் நாவல். காசாம்பு கவுண்டர் மகன் முத்துசாமி கவுண்டரின் மகன்கள் ரங்கசாமி முனுசாமி,ஆறுமுகம் மற்றும் ஆறுமுகத்தின் மகன் துரைசாமி ஆகிய மூன்று தலைமுறை மனிதர்களின் வழியாக நாவல் பயணிக்கிறது. தன் தகப்பன் வாங்கிய கடனுக்கு ஈடாக சீதாராம ரெட்டியாரிடம் தன் நிலத்தை பறிகொடுத்து விட்டு கோர்க்காட்டு கிராமத்தி

விலங்குப் பண்ணை

Image
 ///ஜார்ஜ் ஆர்வெல்(George orwell) எழுதிய "விலங்குப் பண்ணை(Animal Farm)" நாவலை முன்வைத்து வாழ்க்கையில் ஒரு முறையாவது படித்து விட வேண்டிய நாவல் விலங்குப் பண்ணை என்கின்ற என் அபிப்பிராயத்தை முதலில் முன் வைத்து விடுகிறேன். விலங்குகளை பிரதான பாத்திரங்களாக வைத்து ஒட்டுமொத்த மனித வாழ்க்கையைப் பற்றி பேசியிருக்கிறார் ஜார்ஜ் ஆர்வெல்' மனித இனம் மனிதர்களை வைத்து இன்றளவும் செய்துவரும் அரசியலை Animals பார்வையில் நையாண்டி செய்கிறது நாவல். நாவலின் உள் புனைவின் நோக்கம் சோவியத் ரஷ்ய யூனியனின் அரசியல் கொள்கைகளையும், அதிகாரங்களையும் நையாண்டி செய்ய எழுதப்பட்டதாக இருந்தாலும் இது ஒட்டுமொத்த உலக மனிதர்களின் அரசியலை நையாண்டி தனம் செய்யும் ஒரு கலை ஆவணமாக நிற்க்கிறது இந்நாவல். இந்நாவலின் ஆரம்பத்தில் கிழட்டு தளபதியாக வந்து இறந்து போகும் கிழட்டுப்பன்றி லெனின் ஆகவும், நெப்போலியனாக வரும் பன்றி ஸ்டாலின் ஆகவும்,விலங்கு பண்ணை இன் முதலாளியாக வரும் ஜோன்ஸ் ஜார் மன்னர்வம்சத்தின் கடைசி அரசன் இரண்டாம் நிக்கோலாஸ் ஆகவும் உருவகப் படுத்தப்பட்டுள்ளார்கள் ஒட்டுமொத்த விலங்கு பண்ணையையே  சோவியத் ரஷிய யூனியன் ஆக உருவகப்பட

கடவுள் தொடங்கிய இடம்

Image
 ///அ.முத்துலிங்கம் எழுதிய "கடவுள் தொடங்கிய இடம்" நாவலை முன்வைத்து "குந்தியிருக்க ஓர் நிலம் குறித்துக் காட்ட ஒர் பூமி அள்ளி அணைக்கும் உறவு  இழந்தவர் இங்கே காற்சட்டை மேற் சட்டை போட்டு நிர்வாணமாக திறிகின்றோம் அந்நியர் பூமியிலே" என்ற "செல்வம்.அருளானந்தம்" அவர்களின் கவிதை அகதிகளின் அவல நிலையை நெருங்கி பதிவு செய்கிற ஒரு கவிதை. ஒரு அகதியின் மனநிலையை புரிந்து கொள்ள நாம் ஒரு அகதியாய் இருந்தால் மட்டுமே சாத்தியம் என நினைக்கிறேன். ஆனால் எழுத்தாளர் ஷோபா சக்தி சொல்வது போல் ஒரு அகதியின் மனநிலையை இன்னொரு அகதியால் கூட புரிந்து கொள்ள முடியாது என்பதே நிதர்சனம். கடவுள் தொடங்கிய இடம் என்ற இந்த நாவல் ஒரு அகதியின் அலைதல் பயணத்தைப் பற்றியது. இலங்கையின் குப்பிளான் எனும் குக்கிராமத்திலிருந்து தன் அம்மாவின் கால் காணி நிலத்தை விற்ற பணத்தில் ஜெர்மனிக்கு அகதியாய் செல்லும் 19 வயது நிஷாந் என்ற அகதியின் அலைதல் பயணத்தையும், அவனது அகதி மனநிலையையும் பதிவு செய்கிறது. ஏஜெண்டுகள் மூலம் கள்ள பாஸ்போர்ட்டில் ரஷ்யா சென்று அங்கிருந்து ஜெர்மனி செல்வது தான் திட்டம். ஆனால் குடிவரவு அதிகாரிகளின் கெடுபி

ஆடு ஜீவிதம்

Image
 ///பென்யாமின் எழுதிய "ஆடுஜீவிதம்" நாவலை முன்வைத்து இந்தியாவில் இருந்து அரபு தேசங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் என்னை ஒட்டகம் மேய்க்க வைத்து கொடுமை செய்கிறார்கள்,வீட்டு வேலை செய்ய சொல்லி அடித்து துன்புறுத்துகிறார்கள் என்ற பல்வேறு  மனிதர்களின் அவலக் குரல்களை நாம் செய்தித்தாள்கள் வழியாகவும்,சமூக ஊடகங்கள் வாயிலாகவும் பார்த்திருப்போம். சமீபத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளிவந்த மலையாள படமான  C U Soon என்ற படத்தில் கூட கேரளாவில் இருந்து அரபு தேசத்திற்கு வேலைக்கு சென்ற ஒரு பெண்ணை அடித்து பாலியல் சித்திரவதை செய்வதை காட்டியிருப்பார்கள். கல்ஃபிற்கு வேலைக்குச் சென்று அவதிப்படும் இதைப் போன்ற நிறைய நாம் அறியாத மனிதர்களின் துயர் சம்பவங்கள் உள்ளன. அப்படி 1992 ஆம் ஆண்டு அரபு தேசத்திற்கு வேலை தேடிச் சென்ற நஜீப் முகமது என்ற ஒரு மலையாளியின் துயர் மிகுந்த வாழ்க்கை நிகழ்வின் உண்மையை அடிப்படையாக கொண்டு மலையாள எழுத்தாளர் பென்யாமினால் எழுதப்பட்டது தான் இந்த ஆடு ஜீவிதம் நாவல். வெம்மை தகிக்கும் அரபி பாலைவனத்தில் மாட்டிக்கொண்டு மூன்று வருடம் மூச்சு சுருங்கி, உருக்குலைந்து தப்பி வந்த ஒரு அப்பாவியின் கண்ண

ஒற்றை வைக்கோல் புரட்சி

Image
 ///"ஜப்பானிய நம்மாழ்வாரும், ஒற்றை வைக்கோல் புரட்சியும்" நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்வியல் முறை முழுக்க முழுக்க செயற்கைத் தனங்களால் ஆனது. ரசாயனம் கலந்த உணவு உண்டு, ரசாயனம் கலந்த குடிநீர் குடித்து, நஞ்சு கலந்த காற்றை நுகர்ந்து நுரையீரல் பையை  நிரப்பிக்கொண்டு ஒரு சதை தொழிற்சாலையாக ஒவ்வொரு மனிதனும்  உலவிக் கொண்டிருக்கிறான். நாம் காட்டைவிட்டு எப்பொழுது வெளியே வந்தோமோ அப்பொழுதே நம் ஆரோக்கியமும்,ஆயுளும் குறைய ஆரம்பித்துவிட்டது. இயற்கையோடு ஒத்திசைந்து வாழும் வாழ்விலிருந்து விலகி நாகரீக நாய்களாக வளர்ந்து  நிற்கிறோம். இன்றைய மனிதனின் செயற்கை நுகர்வு கலாச்சார வாழ்க்கைக்கு ஒரே மாற்று இயற்கை வேளாண்மை தான் என்பதை முன்வைக்கக் கூடிய ஒரு மிகச் சிறந்த புத்தகம்  "ஒற்றை வைக்கோல் புரட்சி". ஜப்பானிய இயற்கை வேளாண் விஞ்ஞானி மசானபு ஃபுகோகா (Masanobu Fukuoka) அவர்களின் இயற்கை வேளாண்மை குறித்த கருத்தியல் மற்றும் கள ஆய்வு ஆவணம் இப்புத்தகம். இயற்கை வேளாண் முறையை தன்னுடைய வாழ்வியல் முறையாக கொண்டு வாழ்ந்து காட்டியவர் மசானபு ஃபுகோகா. இந்த புத்தகத்தை வெறுமனே ஒரு இயற்கை வேளாண் குறித

கானகத்தின் குரல்

Image
 ///ஜாக் லண்டன் எழுதிய கானகத்தின் குரல்(Call of the wild ) நாவலை முன்வைத்து மனித வளர்ச்சியின் ஆதியிலிருந்தே மனிதன் முதன் முதலாக பழக்கப்படுத்திய விலங்கு நாய் தான் என்று வரலாறு சொல்கிறது. மனிதன் நாடோடியாய் திரிந்ததிலிருந்து,இன்றைய நாகரீக வாழ்க்கை முறை வரை மனித உறவின் தொடக்க விலங்கான நாய் நம்முடன் தொடர்ந்து வளர்க்கப்பட்டு வருகிறது. "மாட்டிடம் பால் கறக்க ஆரம்பிக்கும் முன்,ஆடுகளை மேய்க்கும் முன்,பன்றிகளை வளர்க்கும் முன், விவசாயத்தை கண்டுபிடிக்கும் முன்,எழுத கற்றுக் கொள்ளும் முன், நிரந்தர வீடுகளை உருவாக்கும் முன், பூனைகளை வளர்க்க தொடங்கும் முன் மனிதர்கள் நாய்களை வளர்க்க தொடங்கி இருந்தனர்" என்று கூறுகிறார் ஜேம்ஸ் கார்சன் என்பவர்.(தியோடர் பாஸ்கரனின் இந்திய நாயினங்கள் நூலில் இருந்து) பொதுவாக நாய்கள் கூர்மையான மோப்ப உணர்வும், மனிதர்களின் உடல் மொழிகளை உள்வாங்கிக் கொள்ளும் திறனும் கொண்டவை. அதனால் தான் மனிதர்களுடன் அவை அவ்வளவு நெருக்கத்துடன் பழக முடிகிறது.இதைத் தான் நாம் நாய் விசுவாசமுள்ள பிராணி என்கிறோம். நாய் நன்றியுள்ள விலங்காக நாம் ஆபத்தில் மாட்டிக் கொண்டிருக்கும் போது காப்பாற்றும் ஒர

சோமன துடி

Image
 ///இந்திய செவ்வியல் ஆக்கங்களில் நான் வாசித்த வரை சிறந்த நாவல்களாக கன்னடத்தில் சிவராம் காரந்த் அவர்களால் எழுதப்பட்ட "மண்ணும் மனிதரும்" மற்றும் "அழிந்த பிறகு" நாவல்களைச் சொல்வேன். சிவராம காரந்த்  கலை, இலக்கியம், சினிமா,நடனம் (யகஷகானா) ஆகிய பல்வேறு கலை வடிவங்கள் மூலம் கன்னட மொழிக்கு பெரும் பங்காற்றியவர். மண்ணும் மனிதரும்  நாவல் ஒரு பிராமணர் குடும்பத்தில் உள்ள பெண்கள் படும் துயரை எதார்த்த மீறலும்,மிகையுமின்றி பதிவு செய்த பேரிலக்கியம் என்பேன்.. அழிந்த பிறகு ஒரு நவீனத்துவ நாவல்.தன் நண்பர் யசுவந்த ராயர் மரணத்திற்கு பின் அவருடன் பழகிய நினைவுகளை சுமந்து யசுவந்தரின் குடும்பங்களை சொந்தங்களை தேடிச் செல்லும் ஒரு நவீன புனைவு நாவலே அழிந்தபிறகு. நாவலில் யசுவந்தரின் உறவுகளைத் தேடி செல்பவராக சிவராம் காரந்தே வருகிறார். குடும்பங்களுக்குள் இருக்கும் மனிதர்களின் மன பகையை, அது உடையும் இடங்களை மிக நுட்பமாக எழுத்தாக்கியிருப்பார் சிவராம காரந்த் அழிந்த பிறகு நாவலில். நான் தமிழில் படிக்க தேடி கிடைக்காத நாவல் சிவராம் காரந்த் எழுதிய "சோமன துடி" நாவல். சோமன துடி என்ற பெயரிலேயே அதை படமா

Bandit Queen

Image
 ///நேற்று அக்டோபர் 11 சர்வதேச பெண்கள் தினத்தில் பூலான் தேவியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட "Bandit Queen" படத்தைப் பார்த்தது எதேச்சையாக அமைந்த ஒன்று. சமீபத்தில் நாடெங்கும் பெரும் பேசு பொருளான உத்தரபிரதேசத்தில் தாக்கூர் உயர் சாதியினரால் வல்லாங்கு செய்து கொலை செய்யப்பட்ட மனிஷா வால்மீகி என்ற பெண்ணின் துயர் நிகழ்விற்கும்,இந்தப் படத்துக்கும் பெரும் தொடர்பு உண்டு. காரணம் பூலான்தேவி உத்தரபிரதேசத்தில் சம்பல் பள்ளத்தாக்கில் பிறந்தவர். அவரும் தாக்கூர் சாதியினரால் பலமுறை வன்புணர்வு செய்து கொடுமை செய்யப்பட்டவர். பால்ய பருவமான 11 வயதில் திருமணம் செய்யப்பட்டு தன்னை மணந்த புட்டிலால் என்பவனால் மனச்சிதைவுக்கும் உடல் சிதைவிற்கும் உள்ளாகிறார் பூலான் தேவி. கணவனிடமிருந்து தப்பி வரும் பூலான்தேவி தாகூர் சாதி ஆண்களால் தொடர்ந்து வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகிறார். பால்ய வயதில் தனக்கு நிகழ்ந்த உடல் சுரண்டல், தாக்கூர் ஆதிக்கசாதி ஆண்களால் பலமுறை வன்புணர்வு செய்யப்பட்டதின் வலி,வேதனை, குடும்ப வறுமை என எல்லாம் சேர்ந்து பூலான்தேவியை ஒரு மூர்க்கமான பெண்ணாக மாற்றுகிறது. பின் சம்பல் பள்ளத்தா

குஜராத்தி படம் "HELLARO"

Image
 ///ஆணாதிக்கத்தையும்,பெண்களின் எழுச்சியையும் பேசும் " HELLARO" பொதுவாக வட இந்திய மொழி திரைப்படங்கள் என்றாலே நம் நினைவை முதலில் ஆக்கிரமித்துக் கொள்பவை ஹிந்தி திரைப்படங்கள் தான்.அப்படி ஒரு பிம்பத்தை அவை ஏற்படுத்தி வைத்திருக்கின்றன. காரணம் இந்தி மொழி பெரும்பான்மை மக்கள் பேசும் மொழி என்பதும்,ஹிந்தி திரைப்படங்களின் வணிகச் சந்தையின் வலு உலகம் முழுக்க வியாபித்திருப்பதுமே அதற்கு காரணம். இந்தி மொழியைத் தவிர்த்து இந்தியாவின் பிற பிராந்திய மொழியிலிருந்து எடுக்கப்படும் படங்களே கலை நேர்த்தி மிகுந்த திரைப்படங்களாக இருக்கின்றன என்பதற்கு உதாரணமாக நான் ரசித்து பார்த்த Court,Fandry மற்றும் Sairat போன்ற மராட்டிய படங்களைச் சொல்லுவேன். இன்று வரைக்கும் நான் மிகவும் பார்த்து பிரமித்த திரைப்படம், என் விருப்பப் பட்டியலில் எப்போதும் இருக்கும் படம் கன்னட மொழியில் எடுக்கப்பட்ட "Thithi" திரைப்படத்தைச் சொல்வேன்.கர்நாடக மண்ணின் அசல் கலை பதிப்பு Thithi திரைப்படம். அதைப் போலவே குஜராத் மண்ணின் ஒரு அசல் கலைப் பதிப்பாக வந்திருக்கும் படமே Hellaro. 1975 ஆம் ஆண்டு குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள ஒரு குக

சிதம்பர நினைவுகள்

Image
 கே.வி.ஷைலஜா மொழிபெயர்த்து எழுதிய "சிதம்பர நினைவுகள்" நூலை முன்வைத்து நாம் எல்லோருக்குள்ளும் சொல்ல ஒரு கதை இருக்கிறது. நாம் அனுபவித்த அவமானங்களைப் பற்றியும், நம்மை துவளச் செய்த தோல்விகளைப் பற்றியும், நாம் தூக்கி சுமந்த துயர்களைப் பற்றியும், நாம் சந்தித்த பல்வேறு மனிதர்களைப் பற்றியும் சொல்ல நம்மிடம் ஏராளமான கதைகள் உள்ளன. நம் அடி மனம் வாங்கி ஒளித்து வைத்திருக்கும் வாழ்வின் சகல விசயங்களையும் அப்படியே அசலாய் வெளிப்படுத்த தயங்கும் தன் மனதின் சின்னத் தனங்களை, முன்பின் தெரியாத மனிதர்களின் மேன்மையை,மனித நேசிப்பை, மனிதர்களின் அன்பை,அழுகையை எவ்வித ஒளிவு மறைவுகளின்றி எழுத்தாக்கியிருக்கும் எதார்த்த கலையை இந்த புத்தகம் வழியே நிகழ்த்தியிருக்கிறார் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு. கட்டுரை வடிவில் எழுதப் பட்டிருந்தாலும் இந்நூல் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு அவர்களின் தன்வரலாற்று அனுபவங்களின் தொகுப்பு என்று கொள்ளலாம். தன்னுடைய 18 வயதில் அப்பாவுடன் ஏற்பட்ட பிணக்கில் வீட்டை விட்டு வெளியேறிய பாலச்சந்திரன் சுள்ளிக்காடு தான் வேலையின்றி, பணமின்றி,உணவின்றி திரிந்து அலைந்த போது தன் வாழ்வில் நேர்ப்பட்ட மனிதர்