Posts

Showing posts from September, 2020

எழுத்தாளர் இமையம் எழுதிய எங்கதெ நாவல்

Image
 எழுத்தாளர் இமையம் எழுதிய "எங்கதெ" நாவலை முன்வைத்து ///2019ஆம் ஆண்டு சேலத்தில் உள்ள பாலம் வாசகர் சந்திப்பு ஒருங்கிணைத்த எழுத்தாளர் இமையம் அவர்களின் கோவேறு கழுதைகள் நாவலின் 25 ஆவது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் இமையம் அவர்கள் கலந்து கொண்டார்.நானும் அந்நிகழ்வில் கலந்துகொண்டேன். கோவேறு கழுதைகள் நாவலின் மீதான பார்வையை எழுத்தாளர் தேவிபாரதி அவர்கள் விரிவாகப் பேசினார். எழுத்தாளர் இமையம் அவர்களின் படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தது "கோவேறு கழுதைகள்" நாவலும்,"பெத்தவன்" நெடுங்கதையும் தான். கோவேறு கழுதைகள் நாவலில் ஆரோக்கியம் என்ற தலித் கிருத்துவப் பெண்ணின் சுரண்டலை எழுதிய இமயம்,பெத்தவன் நெடுங்கதையில் சாதி மாறி திருமணம் செய்துகொள்ள நினைக்கும் ஒரு மேல்சாதி பெண்ணின் தகப்பன் பழனி பாத்திரம் வழியே இறுகி போகியிருக்கும் சாதிய நஞ்சு மனங்களின் மீது கல்லெறிகிறார். இமயம் அவர்களிடம் நான் பேசிக் கொண்டிருந்த போது கோவேறு கழுதைகள் நாவலை நான் எழுதும்போது நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். பயம் தெரியாத ஒரு குழந்தை மலைப்பா

யூமா வாசுகியின் ரத்த உறவு

Image
 ///யூமா வாசுகியின் ரத்த உறவு நாவலை முன்வைத்து  ரத்த உறவு நாவல் இன்று வாசித்து முடித்தேன்.நான் வாசித்த வரை தமிழில் எதார்த்தவாத படைப்புகளில் கண்மணி குணசேகரன் அவர்கள் எழுதிய அஞ்சலை ,இமையம் எழுதிய கோவேறு கழுதைகள், பூமணி எழுதிய பிறகு போன்ற நாவல்கள் வரிசையில் யூமா வாசுகியின் ரத்த உறவு நாவலை முதன்மையான இடத்தில் வைக்கலாம். குடும்ப அமைப்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் குரூரமும்,வன்முறையும் தான் ரத்த உறவு நாவலின் கதை என்றாலும் அதை எழுதிய விதமும்,மனித பாத்திரங்களின் எதார்த்த சிருஷ்டியும்,யூமா வாசுகியின் அழகிய மொழியும் தான் இந்த நாவலின் பெரும் பலம் என எண்ணுகிறேன். மங்களத்தம்மாள் கிழவி போன்ற ஒரு கொடூரக்காரி பாத்திரம் என் நிஜ வாழ்வில் நான் கண்ட ஒரு பாத்திரம். மகன்களுடன் சாராயம் குடிப்பதும், சுருட்டு புகைப்பதும்,எந்நேரமும் வாயில் வசுவுகளை வைத்திருக்கும் ஒரு வெறிக் கிழவி அவள். ஆட்டின் கர்ப்பப்பையில் உள்ள குட்டியை அறுத்து குழம்பு வைத்து தின்பதிலேயே கிழவி குரூரம் பிடித்தவள் என்பதை உணரலாம். நீண்ட நாள் உயிர்வாழ ஆமைக்கறி தின்கிறாள் கிழவி.வாழ்ந்த வீட்டை சித்தப்பாவிற்கு விட்டு விட்டு ஊர

உறுபசி

Image
 ///எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய உறுபசி நாவலை முன்வைத்து சமூகத்தின் கண்கள் உற்றுநோக்கி கவனிக்காத உதிரி மனிதர்களின் மீதான விசாரிப்பும்,கரிசனமும் தான் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துக்கள் என்பது என் எண்ணம். மனிதர்களின் வாழ்க்கை மரணத்துடன் முடிந்துவிடுவதில்லை.மரணம் உடலின் இருப்பை தான் முடித்து வைக்கிறது. மரணத்திற்கு பிறகும் மனிதர்கள் நினைவுகளாக வாழ்கிறார்கள். அப்படி சம்பத் என்பவனின் மரணத்திற்கு பின்  அவனது கல்லூரி நண்பர்கள் மூன்று பேர் சம்பத்துடன் பழகிய நினைவுகளை அவரவர் பார்வையில் மீட்டுக் கொள்வதையே நாவல் விவரிக்கிறது.  கன்னடத்தில் சிவராம காரந்த் எழுதிய "அழிந்த பிறகு" நாவல் (கன்னட மூலம்:அழித மேலே)   தன்னுடைய நண்பர் யசுவந்தராயர் இறந்த பின் அவரைப் பற்றிய நினைவுகளோடு  யசுவந்தராயரின் குடும்பத்தை காண செல்லும் சிவராம காரந்த் பார்வையிலேயே நாவல் எழுதப்பட்டிருக்கும். அதேபோல மலையாளத்தில் கல்பட்டா நாராயணன் அவர்கள் எழுதிய  "சுமித்ரா" நாவல் (மலையாள மூலம்:இத்ரமாத்ரம்) ஒரு பெண்ணின் மரணத்திற்கு பிறகு அவளது கணவன்,மகள் அவளது உறவினர்கள் பார்வையில் இறந்த சுமித்ரா என்ற பெண்ணின்  நினைவுகளை

வீடில்லா புத்தகங்கள்

Image
///வீடில்லாப் புத்தகங்கள் எழுத்தாளர்  எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் தான் பல்வேறு சந்தர்ப்பங்களில்,பல்வேறு கடைகளில் வாங்கிய தனக்கு பிடித்த புத்தகங்கள் பற்றிய அனுபவ கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இத்தொகுப்பில் மொத்தம் 56 கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொரு கட்டுரையிலும் ஒவ்வொரு புத்தகங்களை பற்றிய அவருடைய பார்வையை பகிர்ந்துள்ளார். இக்கட்டுரைத் தொகுப்பில் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் கூறியுள்ள மொத்த புத்தகங்களின் பட்டியல் 1. Thief journal - ழான் ஜெனே(பிரெஞ்ச்) 2.12 மணி நேரம் - நீல வண்ணன்  (ஈழ எழுத்தாளர்) 3. Memories of madras -சார்லஸ் லாசன் 4. Wuthering heights_Emily bronte(இங்கிலாந்து) 5. பாரன்ஹீட் 451 - ரே பிராட்பரி 6. ஜப்பானிய பயணம் -தி.ஜானகிராமன் 7. எனது பர்மா வழி நடைப்பயணம் - வெ.சாமிநாத சர்மா 8. காட்டில் என் பயணம் -  பிலோ இருதய நாத் 9. Around  india in 80 Trains -  மோனிஷா ராஜேஷ் 10.தி கிரேட் ரயில்வே பஜார் - பாதெரோ 11.The Burial Of the Count of orgaz & Other Poems_பிகாசோ  12. What Einstein told his Cook -  ராபர்ட் எல் வோல்கி. 13. The Brief history of time - ஸ்டீபன் ஹாக்கிங். 14.மரப்பசு - தி.ஜானகிராமன