பறவைக்கு கூடுண்டு அனைவருக்கும் வீடு லாரி பேக்கரின் கனவு

பறவைக்கு கூடுண்டு அனைவருக்கும் வீடு லாரி பேக்கரின் கனவு நூலை முன் வைத்து: இங்கிலாந்தில் பிறந்து தன்னுடைய இந்திய நண்பர் P.J. சாண்டியின் சகோதரி மருத்துவர் எலிசபெத் என்பவரை மணந்து கொண்ட லாரி பேக்கர் குறித்தும் அவர்களது வாழ்க்கை குறித்தும் அவரது மனைவி எழுதிய நூல் இது. காந்திய கட்டிடக் கலைஞர் என அழைக்கப்படும் லாரி பேக்கர் "மக்கள் நலனுக்காகக் கட்டப்படும் கட்டிடங்கள் மக்களின் வாழ்வுச் சூழல், வசதி,இவற்றைப் பிரதிபலிப்பதாக அந்த அந்த இடங்களில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு கட்டப்படுவது நல்லது எனும் காந்தியடிகளின் அறிவுரைக்கேற்பவே லாரி தன் கட்டிடங்களை வடிவமைத்தார்.இது தான் இந்தியா போன்ற வறுமைப்பட்ட நாடுகளுக்கு ஏற்ற கட்டிட வடிவமைப்பு முறை என லாரி ஏற்றார். மேற்கத்திய சூழலுக்கும்,பருவ நிலைக்கும்,தேவைகளுக்குமாக வடிவமைக்கப்படும் கட்டிடங்கள் இந்தியச் சூழலுக்கு சுமையே என்று கருதினார்" 1948ஆம் ஆண்டு லாரி பேக்கர் எலிசபெத் பேக்கரை திருமணம் செய்து கொண்ட பின் இமயமலையில் உள்ள பித்தோராகர் என்ற இடத்தில் தன் கணவருடன் தொழு நோயாளிகளுக்கு மித்ர நிகேதன் என்ற நட்பு இல்லத்தை நிறுவி 1963 வரை கிட்டத்தட்ட 15 ஆ...