.///Joaquin Phoenix நடித்த "JOKER" English Movie ஒரு பார்வை

ஒரு சமூகத்தால் தொடர்ந்து உதாசீனப்படுத்தப்படும்,
முற்றிலும் கைவிடப்படும் ஒரு மனிதனின் மன நிலையின் கடைசி புள்ளி உளப் பிறழ்வு நிலை அல்லது வன்முறை என முடியும் என்பதை JOKER படம் உணர்த்துகிறது.

சமூகத்தின் கரிசனமும்,காருண்யமும் எப்பொழுதுமே எளிய மனிதர்களை நோக்கி இருந்ததில்லை.

Television Show நிகழ்ச்சியில் Joaquin Phoenix பேசும் வசனம் இந்த சமூகத்தின் விரல்களால் நெட்டித் தள்ளப்பட்டு உதாசீனப்படுத்தப்படும் எல்லா எளிய மனிதர்களுக்கும் பொருந்தும்.

i Killed those guys becoz they Were awful.
Every body is awful these days.its enough to make anyone Crazy.
(அவனுங்க மோசமானவங்க,மோசமா நடந்துகிட்டாங்க. அதனால தான் அவனுங்கள கொலை பண்ணேன். இங்கு எல்லோருமே மோசமாக இருக்கிறார்கள் அது ஒன்னு போதும் ஒருத்தனா பைத்தியக்காரனா மாத்தறதுக்கு)

oh Why is So upset about these guys.

"if it was me dying on the Side walk.
you had walk right over me.
I Pass you everyday and you don't notice me". (ஏன் செத்துப் போன அந்த பணக்கார பசங்களுக்காக பரிதாபப்படறீங்க. இதே நான் ரோட்டோரமா செத்து கிடந்தா என்னை கண்டுக்காம கடந்து போவீங்க)

இந்த புறக்கணிப்பு,
இந்த கோபம் தான் ஒருவனை மன நோயாளியாக பைத்தியக்காரனாக,
வன்முறையாளனாக மாற்றுகிறது.

குறிப்பாக Joaquin Phoenix நடிப்பை எப்படி வரையறுப்பது.அந்த முகபாவம், உடல் மொழி அத்தனையிலும் நடிப்புடா சாமி. பரிதாபமும்,பயமும் கலந்த அந்த சிரிப்பு incredible acting.

இந்த உளநசிவு கதாபாத்திரத்தில் இனி எவர் நடித்தாலும் Joaquin Phoenix முகம்தான் என் முன்னாடி வந்து நிற்கும்.

joaquin Phoenix முழுசா joker ஆ transformation ஆகும் போது வரும் அந்த Music மற்றும் பாட்டு செம.அதற்கு முன் படம் முழுதும் பின்னணியாக மெல்லிய வலி சுமந்த சோகமான பியானோ இசை வரும்.

அட்டகாசமான Script and Making பணியை செய்துள்ளார் இயக்குனர் Todd Philips.கல்லூரி முடித்த காலங்களில் Todd Phillips இயக்கிய Hangover 1 படத்தை பார்த்திருக்கிறேன்.அது ஒரு காமெடி Movie .ஆனால் அவரிடமிருந்து Serious ஆன,வித்தியாசமாய் joker படம் வந்துள்ளது ஆச்சர்யம்.என்னை ரொம்ப disturb பண்ண படம் இது.

நிச்சயம் பார்க்க வேண்டிய படம் JOKER ///

Velu malayan
26.4.2020

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்