///தகடூர் புத்தக பேரவை நடத்திய பெரிதினும் பெரிது கேள் இணையவழி நிகழ்வில் மரப்பேச்சி என்ற தலைப்பில் சுற்றுச்சூழலியல் எழுத்தாளர் மற்றும் ஆர்வலர் திரு.கோவை சதாசிவம் அவர்கள் உரையாற்றிய உரையின் தொகுப்பு

மரப்பேச்சி என்பது தமிழில் ஒரு பழமையான சொல்.

தென்தமிழகத்தில் பேச்சி என்றால் பெண் தெய்வங்களை குறிக்கும்.
அப்படி மரமும் பெண் உருவிலான தெய்வங்கள் தான் என்பதை மரப்பேச்சி என்ற சொல் குறிக்கிறது.

சுற்றுச்சூழலியல் முறை என்பது ஒரு அறம் சார்ந்த வாழ்வியல் முறை.

குழந்தைகளுக்கு சூழலியல் சார்ந்த விஷயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் முக்கிய இடமாக குடும்பம் இருக்கிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் காட்டில் உள்ள செம்மரங்களை அந்நாட்டில் உள்ள பசிபிக் லம்பர் நிறுவனம் வெட்டச் சென்ற போது அதை ஒரு தனி பெண்மணியாக தடுத்து நிறுத்தியவர் 23 வயதான ஜூலியா என்ற மர போராளி 180 அடி உயரமுள்ள ஒரு மரத்தின் உச்சியில் அமர்ந்து கொண்டு கிட்டத்தட்ட 736 நாட்களை கடந்த அறப் போராட்டத்தில் உலகின் கவனத்தை தன் பக்கம் திருப்பி மரங்கள் வெட்டப்படக் கூடாது என்பதை வலியுறுத்துகிறாள்.அந்த மரத்திற்கு லூனா என்று பெயர் வைக்கிறார்.

350 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் ஜோத்பூரில் உள்ள அபித்சிங் என்ற மன்னன் கோட்டை கட்ட அந்த பகுதி காட்டில் உள்ள வன்னி மரங்களை வெட்ட தன் வேலையாட்களை அனுப்பியபோது மரங்களை வெட்ட விடாமல் மரங்களை கட்டித்தழுவி நிற்கிறாள் அங்குள்ள பழங்குடி பெண் அமிர்தா தேவி என்பவள்.

 இந்த மரங்களை வெட்டுவதற்கு முன்பாக என் தலையை வெட்டுங்கள் என்று வெட்டுபவனிடம் கூறுகிறாள்.
அவள் தலை வெட்டித் துண்டாக்கப்படுகிறது.

 அப்பொழுதும் வெட்டப்பட்ட அவள் உடல் மரத்தை கட்டிக்கொண்டு நிற்கிறது.
அதன் பிறகு அவர்கள் மரத்தை வெட்ட முன்னேறிய போது அமிர்தா தேவியின் மூன்று பிள்ளைகள் மரங்களை கட்டித் தழுவி கொள்கிறார்கள்.

அதேபோல அங்கே உள்ள பழங்குடி மக்களும் ஒவ்வொரு மரத்தையும் கட்டித்தழுவிக்கொண்டு நிற்கிறார்கள். மொத்தம் 366 தலைகள் துண்டிக்கப்படுகிறது.

 மரங்களிலிருந்து வழியும் ரத்தவாடை அந்த காட்டை கடந்து மன்னன் அரண்மனைக்கு வீசுகிறது பிறகு மன்னன் அச்செயலிலிருந்து பின் வாங்குகிறான்.

அப்படி இந்த மண்ணின் முதல் சூழலியல் போராட்டம் பழங்குடிகளின் ரத்தத்தால் எழுதப்பட்டது.

சிலந்தி என்பது ஒரு பூச்சி இனம் இல்லை.
 சிலந்தி உருவானதற்கு ஒரு கிரேக்க இலக்கிய கதை உண்டு.

3000 ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறுமி இருந்தாள் அவள் துணிகளில் நன்றாக நெய்யக்கூடியவள். அப்போது அவளுடைய செய்யக்கூடிய திறமையை பார்த்து நெசவுக் கடவுளான பெண் தெய்வம் அந்த சிறுமியுடன் போட்டிப்போட்டு தோற்று விடுகிறாது. தோல்வியுற்ற கோபத்தில் அந்த கண் கடவுள் நீ இனி சிலந்தியாக போவாய் என சாபமிட்டு விடுகிறது. அப்படி உருவானது தான் சிலந்திகள் என்று கிரேக்க இலக்கியம் கூறுகிறது.

சாணி உருட்டும் சாணி வண்டுளில் ஆண் வண்டு பெண் வண்டு,மற்றும் வழிப்பறி வண்டுகள் என்றும் உண்டு.
சாணி வண்டுகள் காட்டின் தூய்மையாளர்களாக இருக்கிறது.

50 ஆண்டுகள் இப்பூவுலகில் வாழும் பூஞ்சைகள் காட்டில் உள்ள இறந்த விலங்குகளை மறுசுழற்சி செய்து சுற்றுச்சூழலின் முதுகெலும்பாக திகழ்கிறது.

மிக வளம் கொழிந்த காடுகளை அழிப்பதற்கு பின்னால் ஒரு மிகப்பெரிய பெருநிறுவனங்களின் வணிக அரசியல் இருக்கிறது.

மனிதனின் அன்றாட தேவைகளுக்கு பயன்படும் பொருட்களை தயாரிக்கவும்,ஏற்றுமதி செய்யவும் பாமாயில் தேவைப்படுகிறது.அதற்கு நிறைய செம்பனைகள் அழிக்கப்படுகிறது.

உலகின் முக்கிய நாடுகளான அமேசான் பிரேசில் மற்றும் போர்னியோ காடுகள் அழிக்கப்பட்டதின் பின்னணியில் இந்த பெருநிறுவனங்களின் கொலைகார கைகளே காரணம்.

இதே நிலை தொடர்ந்தால் நாளை இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகள் கூட அழிக்கப்படலாம்.

மரங்கள் தன்னைத்தானே காத்துக்கொள்ளும் தற்சார்பு ஏற்பாடு உடையவை.

வேப்ப மரங்கள் தன்னுடலில் கோந்து போன்ற பிசினை சுரந்து தன்னை பாதுகாத்துக் கொள்கின்றன.வேப்பம் பூ வைக்கும்போது  அதில் தேன் இருக்கும் அப்பொழுதுதான் மகரந்தச் சேர்க்கைக்கு  வண்டுகள் வரும்.ஆனால் காய் வைக்கும்போது  காய் கசப்பாக இருக்கும். வேப்பம் பழமாயிருக்கும்போது இனிப்பாக இருக்கும்.அதனால்தான் பறவைகள் அவற்றை உண்ணுகின்றன.

ஆனால் பறவையின் எச்சத்தில் வரும்  விதைகள்  இனிப்பாக இருப்பதில்லை  கசப்பாக இருக்கும்.அதனால் பூச்சிகள் விதைகளை ஒன்றும் செய்யாது.

சுற்றுச் சூழலியல் சார்ந்த புத்தகங்களை முகமது அலி, தியோடர் பாஸ்கரன் மற்றும் நக்கீரன் போன்ற நிறைய எழுத்தாளர்கள் எழுதியுள்ளார்கள்.

 மனிதன் பிறந்து தொட்டிலில் தவழ்வது முதல் இறந்து சுடுகாட்டில் எரிவது வரை மரம் அவன் வாழ்வுடன் பயணிப்பதைப்பற்றி வைரமுத்து  இப்படி எழுதுகிறார்

"மரம் தான்
 மரம் தான்
 எல்லாம் மரம் தான்
 மனிதன் எல்லாம்
மறந்தான்" என்று///

14.4.2020
Velu malayan

தமிழில் எழுதப்பட்ட சுற்றுச்சூழலியல் மொத்த புத்தகங்களின் தொகுப்பு

இயற்கை: பொது

1. மழைக்காலமும் குயிலோசையும், மா. கிருஷ்ணன், பதிப்பாசிரியர் சு. தியடோர் பாஸ்கரன், காலச்சுவடு
2. இயற்கை: செய்திகள், சிந்தனைகள், ச. முகமது அலி, இயற்கை வரலாறு அறக்கட்டளை.
3. பல்லுயிரியம், ச. முகமது அலி, வாசல் வெளியீடு
4. நம்மைச் சுற்றி காட்டுயிர், சு. தியடோர் பாஸ்கரன், தமிழில்: ஆதி வள்ளியப்பன், பாரதி புத்தகாலயம்
5. மனிதர்க்குத் தோழனடி, ஆதி வள்ளியப்பன், அறிவியல் வெளியீடு
6. நெருப்புக் குழியில் குருவி, ச.முகமது அலி, மலைபடுகடாம்
7. கடற்கரையோரம் ஒரு நடைபயணம், த.வி. வெங்கடேஸ்வரன், பாரதி புத்தகாலயம்

இயற்கை: உயிரினங்கள்

1. கானுறை வேங்கை, கே. உல்லாஸ் கரந்த், தமிழில்: சு. தியடோர் பாஸ்கரன், காலச்சுவடு பதிப்பகம்
2. யானைகள்: அழியும் பேருயிர், ச. முகமது அலி, க. யோகானந்த், இயற்கை வரலாறு அறக்கட்டளை
3. பாம்பு என்றால்?, ச. முகமது அலி, இயற்கை வரலாறு அறக்கட்டளை
4. பூச்சிகளின் தேசம், கோவை சதாசிவம், வெளிச்சம் வெளியீடு
5. இந்தியப் பாம்புகள், ரோமுலஸ் விட்டேகர், நேஷனல் புக் டிரஸ்ட்
6. பாலூட்டிகள், இராம.சுந்தரம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்
7. மழைக்காடுகளும் சிறு ஊனுண்ணிகளும், ச.முகமது அலி, மலைப்படுகடாம்

இயற்கை: பறவைகள்

1. தமிழ்நாட்டுப் பறவைகள், முனைவர் க. ரத்னம், மெய்யப்பன் தமிழாய்வகம்
2. பறவைகளும் வேடந்தாங்கலும், மா. கிருஷ்ணன், பதிப்பாசிரியர்: பெருமாள் முருகன், காலச்சுவடு பதிப்பகம்
3. வட்டமிடும் கழுகு, தொகுப்பு: ச. முகமது அலி, சந்தியா பதிப்பகம்
4. ஊர்ப்புறத்துப் பறவைகள், கோவை சதாசிவம், கஸ்தூரி பதிப்பகம்
5. நாராய் நாராய், ஆதி வள்ளியப்பன், அறிவியல் வெளியீடு
6. ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி, சாலிம் அலி, நேஷனல் புக் டிரஸ்ட்
7. பறவையியல் நிபுணர் சாலிம் அலி, ச. முகமது அலி, மலைபடுகடாம்

இயற்கை: தாவரங்கள்

1. தமிழரும் தாவரமும், கு.வி. கிருஷ்ணமூர்த்தி, பாரதிதாசன் பல்கலைக்கழகம்
2. அலையாத்திக் காடுகள், முனைவர் பா. ராம் மனோகர், முனைவர் சி. சிவசுப்ரமணியன், அறிவியல் வெளியீடு
3. மழைக்காடுகளின் மரணம். நக்கீரன், பூவுலகின் நண்பர்கள்
4. வனப் பயன்பாட்டியல், ச.முகமது அலி, மலைபடுகடாம்

இயற்கை: காட்டு உரிமை

1. சுற்றுச்சூழலும் வாழ்வுரிமையும், அர்ச்சனா பிரசாத், பாரதி புத்தகாலயம்
2. வனஉரிமைச் சட்டம்: ஒரு வரலாற்றுத் திருப்புமுனை, பெ. சண்முகம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், பாரதி புத்தகாலயம்
3. வனஉரிமைச் சட்டம் ஒரு வழிகாட்டி, எம்.எஸ். செல்வராஜ், விவசாயிகள் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம்

இயற்கை: வேட்டை இலக்கியம்

1. எனது இந்தியா, ஜிம் கார்பெட், தமிழில்: யுவன் சந்திரசேகர், காலச்சுவடு
2. குமாயுன் புலிகள், ஜிம் கார்பெட், தமிழில்: தி.ஜ.ர., காலச்சுவடு
3. ஏலகிரியில் சிறுத்தை வேட்டை, கென்னத் ஆண்டர்சன், தமிழில்: எஸ். சங்கரன், பாரதி புத்தகாலயம்

இயற்கை: பரிணாமவியல்

1. பீகிள் கடற்பயணம், சார்லஸ் டார்வின், தமிழில்: முனைவர் அ. அப்துல் ரஹ்மான், அகல் வெளியீடு
2. சார்லஸ் டார்வின் சுயசரிதம், தமிழில்: முனைவர் அ. அப்துல் ரஹ்மான், அகல் வெளியீடு
3. உயிரினங்களின் தோற்றம், சார்லஸ் டார்வின், தமிழில்: ராஜ் கெளதமன், விடியல் பதிப்பகம்

சுற்றுச்சூழல்: பொது

1. இன்னும் பிறக்காத தலைமுறைக்காக, சு. தியடோர் பாஸ்கரன், உயிர்மை பதிப்பகம்
2. தாமரை பூத்த தடாகம், சு. தியடோர் பாஸ்கரன், உயிர்மை பதிப்பகம்
3. வானில் பறக்கும் புள்ளெலாம், சு.தியடோர் பாஸ்கரன், உயிர்மை பதிப்பகம்
4. அணுகுண்டும் அவரை விதைகளும், பாமயன், தமிழினி
5. நம்பிக்கையும் நடப்பும், முனைவர் இராமகிருட்டிணன், கஸ்தூரி பதிப்பகம்
6. பூவுலகின் கடைசி காலம், கிருஷ்ணா டாவின்சி, பாரதி புத்தகாலயம்
7. காண் என்பது இயற்கை: எஸ்.ராமகிருஷ்ணன், உயிர்மை பதிப்பகம்
8. இப்போது அவை இங்கு வருவது இல்லை: கிருஷ்ணன் ரஞ்சனா, உயிர்மை பதிப்பகம்
9. உயிர்ப்புதையல், கோவை சதாசிவம், வெளிச்சம் வெளியீடு
10. அசுரச் சிந்தனைகள், அசுரன், தொகுப்பு:உதயகுமாரன்
11. மெளன வசந்தம், ரேச்சல் கார்சன், சுருக்கம்: தி. சுந்தர்ராமன், பூவுலகின் நண்பர்கள்-வம்சி
12. எண்ணெய் மற, மண்ணை நினை, வந்தனா சிவா-போப்பு, பூவுலகின் நண்பர்கள்-எதிர் வெளியீடு
13. விரட்டப்படவேண்டிய ஸ்டெர்லைட், பூவுலகின் நண்பர்கள்-எதிர் வெளியீடு
14. ஞெகிழி, பூவுலகின் நண்பர்கள்-எதிர் வெளியீடு
15. மண்ணுக்கு உயிருண்டு, பூவுலகின் நண்பர்கள்
16. விதை துளிர்த்தால் இன்னும் அழகாகும் வாழ்வு, ஹெர்மான் ஹெஸ்ஸே, டாக்டர் ஜீவா, யூமா.வாசுகி, பூவுலகின் நண்பர்கள்
17. உயிரோடு உலாவ, வந்தனா சிவா, பூவுலகின் நண்பர்கள்
18. ஓகோனிக்கு எதிரான யுத்தம், யூமா.வாசுகி, பயணி வெளியீடு
19. அறிவியல் - வளர்ச்சி - வன்முறை, கிளாட் ஆல்வாரெஸ்- இரா.நடராசன், பயணி வெளியீடு
20. சேதுக் கால்வாய்த் திட்டமும் ராமேசுவரத் தீவு மக்களும்: குமரன்தாஸ், கருப்புப் பிரதிகள்
21. போபால், மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியின் உண்மை முகம், மருத்துவர் வீ. புகழேந்தி
22. சுற்றுச்சூழலும் தற்சார்பும், யோனா ஃபிரெய்ட்மேன், எடா ஷார், எம்.ஆர்.ராஜகோபாலன், என்.சி.பி.எச்.
23. பூமியை பாதுகாப்போம்: நடாலியா மார்ஷல், விகடன் பிரசுரம்
24. சூழலியல் புரட்சி, ஜான் பெல்லமி ஃபாஸ்டர், தமிழில்: துரை.மடங்கன், விடியல்

சுற்றுச்சூழல்: அணுவாற்றல்

1. அணுவாற்றல்: ஒரு அறிமுகம், பூவுலகின் நண்பர்கள்
2. கூடங்குளம் அணுமின் திட்டம்: மருத்துவர்கள் ரா.ரமேஷ், வீ.புகழேந்தி, வி.டி.பத்மநாபன், பூவுலகின் நண்பர்கள்-எதிர் வெளியீடு
3. கல்பாக்கமும் கடல் எரிமலையும், மருத்துவர்கள் வீ.புகழேந்தி, ரா. ரமேஷ், பூவுலகின் நண்பர்கள்-எதிர் வெளியீடு
4. அணு ஆட்டம், சுப.உதயகுமாரன், விகடன்
5. இந்திய அணுசக்தித் திட்டம், சுவ்ரத் ராஜு, முகம்
6. கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள், அ. முத்துக்கிருஷ்ணன், உயிர்மை பதிப்பகம்
7. தேவையா இந்த அணு உலைகள்?, அ. மார்க்ஸ், பயணி வெளியீடு
8. ஏன் இந்த உலைவெறி, ஞாநி, ஞானபாநு
9. அன்று செர்னோபில், இன்று ஃபுகுஷிமா, நாளை கல்பாக்கமா?, மருத்துவர் வீ.புகழேந்தி, சூழல் பாதுகாப்புக்கான மருத்துவர் குழு
10. அய்யோ… அணு உலைகள்!, கா.தமிழ்வேங்கை, ஐந்திணை வெளியீட்டகம்
11. உயிருக்கு உலை வைக்கும் அணு உலைகள் வேண்டாம், கட்டுரைத் தொகுப்பு, வெளிச்சம்
12. கூடங்குளம் அணு மின் உலை: வரமா, சாபமா? சிறில் அலெக்ஸ், நம்ம சென்னை
13. அடிவயிற்றில் அணுகுண்டு, அரிமா வளவன், தமிழர் களம்
14. அபாயம் (அணுஉலை விபத்து பற்றிய நாவல்), ஜோஷ் வண்டேலூ, க்ரியா

சுற்றுச்சூழல்: காலநிலை மாற்றம்

1. கொதிக்கும் பூமி, ஆதி வள்ளியப்பன், ஆழி வெளியீடு
2. சூடாகும் பூமி, பேராசிரியர் பொ. இராஜமாணிக்கம், பாரதி புத்தகாலயம்
3. பூமி சூடேற்றம் சிக்கலா? பேரழிவா?, சேது, தென்றல் மீடியா
4. புவி வெப்பமடைதலும் காலநிலை மாற்றமும் - அவற்றின் அறிவியல், அரசியல், சூழலியல், பூவுலகின் நண்பர்கள்

சுற்றுச்சூழல்:தண்ணீர்

1. அவல நிலையில் தமிழக ஆறுகள், தொகுப்பாசிரியர்: எஸ். ஜனகராஜன், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்-காலச்சுவடு
2. தமிழக பாசன வரலாறு, பழ.கோமதிநாயகம், பாவை பப்ளிகேஷன்ஸ்
3. தமிழகம், தண்ணீர், தாகம் தீருமா?, பழ.கோமதிநாயகம், பாவை பப்ளிகேஷன்ஸ்
4. தாமிரவருணி - சமூக பொருளியல் மாற்றங்கள், பழ.கோமதிநாயகம், பாவை பப்ளிகேஷன்ஸ்
5. மணல்கோட்டைகள், சாண்ட்ரா போஸ்டல் - பாமயன், பூவுலகின் நண்பர்கள்-வம்சி
6. மூன்றாம் உலகப் போர் தண்ணீருக்காக, சாண்ட்ரா போஸ்டல், பூவுலகின் நண்பர்கள்-வம்சி
7. நன்னீர்ச் செல்வம், சாண்ட்ரா போஸ்டல் - போப்பு, பூவுலகின் நண்பர்கள்-வம்சி
8. தண்ணீர், தண்ணீர், தண்ணீர், பேராசிரியர் சந்திரா, பாரதி புத்தகாலயம்
9. தமிழக ஆறுகளின் அவலநிலை (சுருக்கம்), பேராசிரியர் ஜனகராஜன், பாரதி புத்தகாலயம்
10. தண்ணீர் யுத்தம், சுப்ரபாரதிமணியன், உயிர்மை பதிப்பகம்

சுற்றுச்சூழல்: வேளாண்மை

1. ஒற்றை வைக்கோல் புரட்சி, மசனாபு ஃபுகோகா, பூவுலகின் நண்பர்கள்-வம்சி
2. பசுமைப் புரட்சியின் வன்முறை, வந்தனா சிவா, பூவுலகின் நண்பர்கள்-வம்சி
3. விதைகள், பூவுலகின் நண்பர்கள்-எதிர் வெளியீடு
4. வேளாண் இறையாண்மை, பாமயன், தமிழினி
5. உழவுக்கும் உண்டு வரலாறு, கோ.நம்மாழ்வார், விகடன் பிரசுரம்
6. எந்நாடுடைய இயற்கையே போற்றி, கோ.நம்மாழ்வார், விகடன் பிரசுரம்
7. இனி விதைகளே போராயுதம், கோ. நம்மாழ்வார், இயல்வாகை பதிப்பகம்
8. நோயினைக் கொண்டாடுவோம், கோ. நம்மாழ்வார், இயல்வாகை பதிப்பகம்
9. தமிழ்நாடு வேளாண் மன்றச் சட்டம், கோ.நம்மாழ்வார், வானகம்
10. வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும், கோ. நம்மாழ்வார், வானகம்

சுற்றுச்சூழல்: மரபணு மாற்றம்

1. உயிரியல் புரட்சியின் ஒடுக்குமுறை, மு. பாலசுப்பிரமணியம், பூவுலகின் நண்பர்கள் - வம்சி
2. பட்டினி வயிறும் டப்பா உணவும், போப்பு, பூவுலகின் நண்பர்கள் - வம்சி
3. எது சிறந்த உணவு, மருத்துவர் கு.சிவராமன், பூவுலகின் நண்பர்கள்

சுற்றுச்சூழல்: மண்ணியல்

1. மூதாதையரைத் தேடி, சு.கி.ஜெயகரன், காலச்சுவடு
2. குமரி நில நீட்சி, சு.கி.ஜெயகரன், காலச்சுவடு
3. மணல் மேல் கட்டிய பாலம்: சு.கி.ஜெயகரன், காலச்சுவடு
4. கருப்பு கிருஸ்துவும் வெள்ளைச் சிங்கங்களும், சு.கி.ஜெயகரன், உயிர்மை வெளியீடு
5. இரு கிளிகள் இரு வழிகள், சு.கி.ஜெயகரன்
6. தளும்பல், சு.கி.ஜெயகரன்

சுற்றுச்சூழல்: கவிதை

1. இன்னும் மீதமிருக்கிறது நம்பிக்கை, பூவுலகின் நண்பர்கள் - வம்சி
2. கொண்டலாத்தி, ஆசை, க்ரியா பதிப்பகம்
3. நத்தையின் அழுகை, த.ரெ. தமிழ்மணி, பாவாணர் பதிப்பகம்
4. காடுறை உலகம், அவைநாயகன், ஓசை வெளியீடு
5. சிதறாத எழுத்துக்கள், பா. சதீசு முத்துகோபால், பதிவுகள் பதிப்பகம்

(தொகுப்பு: காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் ஏ.சண்முகானந்தம்,
ஆதி வள்ளியப்பன்)

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்