சிதறல்கள்

 ///பாவண்ணன் அவர்கள் எழுதிய சிதறல்கள் நாவலை முன்வைத்து



1980 களின் காலகட்டத்தில் மூடப்பட்ட புதுச்சேரி பஞ்சாலை தொழிலாளர்களின் வாழ்க்கை பற்றிய நாவல் சிதறல்கள்.


ஒரு கட்டத்தில் பஞ்சாலை இழுத்து மூடப்படுவதால் அதில் பணிபுரிந்த ஏராளமான,ஊழியர்களின்

குடும்பங்கள் எதிர்கொள்ளும் பொருளாதார பிரச்சினைகள்,

குடும்பவறுமை,அகத் தவிப்புகள்,

அன்றாடத்தை நகர்த்த அவர்கள் கொள்ளும் அவமானங்கள், தற்கொலைகள் ஆகியவற்றை நாவல் படுத்தியுள்ளார் பாவண்ணன்.


நாவலின் பிரதான கதாபாத்திரமாக வரும் முருகேசன் குடும்ப கஷ்டத்தின் வழியாக எல்லா பஞ்சாலை தொழிலாளர் குடும்பங்களின் கஷ்டங்களையும் முருகேசன் பார்வையில் பதிவு செய்கிறார் பாவண்ணன்.


ஆறாயிரம் தொழிலாளர்கள் வேலை செய்யும் ஒரு ஆலை மூடப்பட்ட உடன் அதையே நம்பி வாழ்ந்த குடும்பங்கள் கொள்ளும் சித்திரவதை சித்திரம் தான் சிதறல்கள் நாவல்.


ஆலை மூடப்பட்டதும் வேறு வேலையின்றி தவிக்கும் முருகேசன் தறி வேலை,கொத்தனார் வேலை, என பல வேலைகளுக்குச் செல்கிறான்.


ஆளை மூடப்பட்டதால் வறுமையின் காரணமாக நல்லசாமி என்ற தொழிலாளியால் வாடகை கொடுக்க முடியாத நிலை எழுகிறது.

வீட்டின் உரிமையாளர் நல்லசாமி என்னுடைய மனைவி வாசுகி தன்னுடன் படுத்தால் வாடகை தான் கேட்பதில்லை என்கிறார்.

அன்றிரவே வாசுகி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்கிறாள்.


இல்லாதவர்களிடம் நிறையவே இருக்கிறது தன் மானமும்,ரோஷமும்.

வாழ்வதை விட மானம் பெரிது என வாசுகி இறந்து விடுகிறாள்.


தந்தையின் சொல்லை மீறி ரெட்டியார் பெண்ணை திருமணம் செய்து கொண்ட சுந்தரம் ஆலை மூடப்பட்டதும் குடும்பம் நடத்த பணம் இல்லை என்று குழந்தையுடன் மனைவியைக்கூட்டிக் கொண்டு தன் தந்தையை பார்க்க செல்லும் போது தன் சாதி கௌரவத்தை குலைத்த நீ உள்ளே வரக்கூடாது என்று அவமானப்படுத்தி வெளியே துரத்தி விடுகிறார்.


அன்று மறுநாளே சுந்தரம் அவனுடைய மனைவி சுசித்ரா குழந்தை ஆகிய மூவரும் விஷமருந்தி இறந்து விடுகிறார்கள்.


வறுமையும்,உறவுகளின் புறக்கணிப்பும் சுந்தரத்தை தற்கொலை செய்ய வைக்கிறது.


முருகேசன் கடைசியில் தன்னுடைய உறவினர் கிட்டு என்பவனின் சிபாரிசுடன் புதுச்சேரியில் உள்ள ஒரு லாட்ஜில் வேலைக்கு சேருகிறார்.


ஆலைத்தெருவில் வசிக்கும் மூர்த்தியினுடைய மனைவி வேறு ஒரு ஆணுடன் தான் பணிபுரியும் லாட்ஜிக்கு வருவதை பார்த்த முருகேசன் கிட்டுவிடம் அந்த பொம்பள மூர்த்தியின் மனைவி தானே? என கேட்கும் போது ஆமா மாமா சாயங்காலம் பேப்பர்ல ஆலை சாத்தின வறுமையில குடும்பமே தற்கொலை செஞ்சுடுச்சு.


ஆனால் மூர்த்தி குடும்பம் தினம் தினம் தற்கொலை செய்து கொள்கிறது இப்படி என்று இருவரும் பேசிக்கொண்டே இருள் அடர்ந்த பாதையில் சைக்கிளில் செல்வதாக நாவல் முடிகிறது.


ஆலையை நம்பி வாழ்ந்து அது மூடப்பட்டதும் வேறு வேலை இன்றி அலைந்து சிதறிப்போன தொழிலாளர்களின் வாழ்க்கையை சித்திரமாக காட்டுகிறது சிதறல்கள் நாவல்.


தொழிலாளர்களின் வறுமையின் பல்வேறு  வடிவங்களை காட்டும் பாவண்ணன் எந்த வித உணர்ச்சி மேலோங்களும் இன்றி நாவலை எதார்த்தமாய் எழுதி  உள்ளார்.



நாவலில் வரும் முருகேசன் கதாபாத்திரம் தான் வறுமையிலும் கஷ்டத்திலும் உழண்டாலும் பிறரின் கஷ்டங்களுக்காக பரிவு காட்டும் ஒருவனாக இருக்கிறான்.


வறுமை காரணமாக ஒரு தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்லும் முருகேசனின் பெரிய மகள் காந்தாமணி,தெரிந்த ஒருவரின் வீட்டு வேலையே பார்த்துக்கொள்ள பெங்களூருக்கு செல்லும் இன்னொரு மகள் மங்களா,

முருகேசன் மனைவி சுந்தரவல்லி என மனதில் சித்திரமாய் பதியக் கூடிய முகங்களாய் வருகிறார்கள்

இந்நாவலில்.


பாவண்ணன் அவர்களின் எளிமையான மொழி நடைக்கும்,எதார்த்த தன்மைக்கும்

சிதறல்கள் நாவலை வாசிக்கலாம்///

velu malayan

 30.10.2020

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்