சிதறல்கள்

///பாவண்ணன் அவர்கள் எழுதிய சிதறல்கள் நாவலை முன்வைத்து 1980 களின் காலகட்டத்தில் மூடப்பட்ட புதுச்சேரி பஞ்சாலை தொழிலாளர்களின் வாழ்க்கை பற்றிய நாவல் சிதறல்கள். ஒரு கட்டத்தில் பஞ்சாலை இழுத்து மூடப்படுவதால் அதில் பணிபுரிந்த ஏராளமான,ஊழியர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பொருளாதார பிரச்சினைகள், குடும்பவறுமை,அகத் தவிப்புகள், அன்றாடத்தை நகர்த்த அவர்கள் கொள்ளும் அவமானங்கள், தற்கொலைகள் ஆகியவற்றை நாவல் படுத்தியுள்ளார் பாவண்ணன். நாவலின் பிரதான கதாபாத்திரமாக வரும் முருகேசன் குடும்ப கஷ்டத்தின் வழியாக எல்லா பஞ்சாலை தொழிலாளர் குடும்பங்களின் கஷ்டங்களையும் முருகேசன் பார்வையில் பதிவு செய்கிறார் பாவண்ணன். ஆறாயிரம் தொழிலாளர்கள் வேலை செய்யும் ஒரு ஆலை மூடப்பட்ட உடன் அதையே நம்பி வாழ்ந்த குடும்பங்கள் கொள்ளும் சித்திரவதை சித்திரம் தான் சிதறல்கள் நாவல். ஆலை மூடப்பட்டதும் வேறு வேலையின்றி தவிக்கும் முருகேசன் தறி வேலை,கொத்தனார் வேலை, என பல வேலைகளுக்குச் செல்கிறான். ஆளை மூடப்பட்டதால் வறுமையின் காரணமாக நல்லசாமி என்ற தொழிலாளியால் வாடகை கொடுக்க முடியாத நிலை எழுகிறது. வீட்டின் உரிமையாளர் நல்லசாமி என்னுடைய மனைவி வாசு...