அமைதி என்பது நாமே

 ///திக் நியட் ஹான்(Thich Nhat Hanh) எழுதிய அமைதி என்பது நாமே(Being peace) நூலை முன்வைத்து



திக் நியட் ஹான் வியட்நாமைச் சேர்ந்த ஒரு பெளத்த துறவி.

அமைதி அடைய வேண்டும் என்றால் நாமே அமைதியாக இருக்க வேண்டும்.அமைதி நமக்குள்ளே இருக்கிறது.எனவே அமைதி என்பது நாமே எனவும்,புத்தர் என்ற பெயரும்,

புத்தர் சிலையும் ஒரு குறியீடு மட்டுமே.புத்தர்கள் என்பது நாம் தான்.நாமே தான் புத்தர்.நம் எல்லோரின் உள்ளேயும் புத்தர் இருக்கிறார்  என்கிறார் திக் நியட் ஹான்.

பௌத்தம்,தியானம் ஆகியவற்றின் அடிப்படைகளை அறிந்து கொள்ள இந்த புத்தகம் ஒரு வாயிலாக இருக்கும்.

வெறித்தனமான பற்றிலிருந்து நாம் விடுதலை பெற்றால் மட்டுமே சமாதானத்தை நம்மால் அடையமுடியும்.

எந்த ஒரு சித்தாந்தத்தின் மீதும் வெறித்தனமான பற்று இருக்கக்கூடாது.அது பெளத்தமாக இருந்தாலும் கூட விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருக்க கூடாது.

"உங்களிடம் ஒரு துப்பாக்கி இருந்தால் ஒருவரையோ அல்லது இரண்டு,மூன்று,ஐந்து பேரையோ சுடலாம்.ஆனால் உங்களுக்கு என்று ஒரு சித்தாந்தம் இருந்து அதுதான் அறுதி உண்மை என்று நினைத்துக்கொண்டு அதை விடாப்பிடியாக நீங்கள் பிடித்துக் கொண்டிருப்பீர்கள் என்றால் கோடிக்கணக்கானோரைக் கொல்ல உங்களால் முடியும்" என்ற கருத்தை போதிக்கிறார் திக் நியட் ஹான்.



இந்த வருடத்தின் தொடக்கமாக நான் வாசித்தது என்.கௌரி எழுதிய "ஆன்மா என்னும் புத்தகம்".

இந்த புத்தகத்தில் உலகின் மிகச் சிறந்த ஆன்மீக புத்தங்களைப் பற்றி என்.கெளரி எழுதியிருப்பார்.

இந்த புத்தகத்தின் வழியாகத்தான் "அமைதி என்பது நாமே" என்ற புத்தகத்தை என்னால் அறிய முடிந்தது.


மனம் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர்களுக்கு இந்த புத்தகம் நிச்சயம் பிடிக்கும்.வாசித்துப் பாருங்கள்///


velu malayan

22.5.2021

❤️❤️❤️❤️

Comments

Popular posts from this blog

இலட்சிய இந்து ஓட்டல்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

வீடில்லா புத்தகங்கள்