"நம்ம ஊரு நயாகரா கலசப்பாடி நீர்வீழ்ச்சி"

இந்த பிரபஞ்ச வாழ்வு என்பதே இயற்கையோடு சேர்ந்து இயற்கையின் கீழ் வாழ்வதுதான்.ஆனால் நாம் இந்த நவீன அவசர உலகில் இயற்கையை விட்டு விலகி ஒரு இயந்திர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அன்றாட வாழ்க்கையை தாண்டி நாம் எந்த ஒன்றையும் செய்வதுமில்லை,
செய்ய விருப்பம் கொள்வதுமில்லை. 
 மனிதர்கள் தன்  நடப்பு வாழ்க்கையில் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கான அடையாளமாக கொஞ்சம் வாசிப்பு பழக்கமும் நிறையப் பயணம் செல்லும் பழக்கமும் இருக்கும் என்பது என் நம்பிக்கை. அப்படி இயற்கை அன்னையின் மார்பிலிருந்து சுரந்து மண்ணில் விழும் ஒரு நீர்வீழ்ச்சி இந்த கலசப்பாடி நீர்வீழ்ச்சி.அரூரில் இருந்து பாப்பிரெட்டிப்பட்டி நோக்கி செல்லும் சாலையில் கிழக்குப்புறமாக கொக்கராபட்டி என்ற கிராமத்தினை கடந்து கொஞ்ச தூரம் மலைப்பகுதியை ஏறினால் அண்ணாந்து பார்க்கக் கூடிய அளவில் உயரத்திலிருந்து கொட்டும் ஒரு நீர்வீழ்ச்சியாக காட்சியளிக்கிறது இந்த கலசப்பாடி நீர்வீழ்ச்சி. அடர்ந்த காட்டின் மலைகளுக்கு நடுவில் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் இருந்து நீர்வீழ்ச்சி கொட்டுகிறது.வருவாய் துறையில் பணிபுரியும் நண்பர்கள் வட்டாட்சியர் திரு.செழியன் சார் உள்ளாட்சி  தணிக்கையில் பணிபுரியும்  நண்பர் 
திரு.அண்ணா ஜெயவேல்  வருவாய் ஆய்வாளர்  திரு.ஞான தீபன் மற்றும் நான் ஆகிய 4 பேரும் விடியற்காலை 5 மணிக்கு நீர்வீழ்ச்சியை நோக்கி புறப்பட்டோம்.
நீர்வீழ்ச்சியை நெருங்கிய பிறகுதான் தெரிந்தது மழையின் அளவு குறைவாக இருந்ததால் நீர்வீழ்ச்சியில் நீரின் வரத்து குறைவாகவே இருந்தது.இருந்தாலும் அதில் குளித்து குதூகலப்பட்டது ஒரு பெரிய நிறைவை தந்தது.நிறைய பேருக்கு இப்படி ஒரு நீர்வீழ்ச்சி இங்கு இருப்பது என்பதே தெரியவில்லை.என்னைத் தவிர மற்ற மூன்று நண்பர்களும் ஏற்கனவே இதில் பலமுறை குளித்தவர்கள்.
அவர்கள் அவர்களின் வழிகாட்டுதலுடன் தான் நான் அரசு படி நீர்வீழ்ச்சிக்கு சென்றேன்


நண்பர்களின் சில அலுவலக வேலையின் காரணமாக எங்களால் நீடித்த நேரம் குளிக்க முடியவில்லை மழை ஏற்றத்துடன் கூடிய இந்த நீர்வீழ்ச்சி குளியல் அகத்திற்கு ஒரு நிறைவையும்  குளிர்ச்சியும் தந்தது மழை அதிகம் வரும் காலங்களில் சென்றால் இந்த நீர்வீழ்ச்சியின் அழகை பிரம்மத்தை கூடுதலாக ரசிக்கலாம் இதில் ஆச்சரியம் என்னவென்றால் நிறைய பேருக்கு இங்கு இப்படி ஒரு நீர்வீழ்ச்சி உள்ளதே தெரியவில்லை என்பதுதான். பரவாயில்லை அப்படி தெரியாமல் இருப்பதுதான் நல்லது  ஏனென்றால் குளித்து முடித்து விட்டு வரும் வழியில் மது அருந்தி விட்டு அந்த மது பாட்டில்களை அப்படியே விட்டுச் சென்றிருக்கிறார்கள். நண்பர் ஞான தீபனுடன்
பேசிய பொழுது  அவர் சொன்னார்  இது மனித நுகர்வு அதிகம் உள்ள ஒரு சுற்றுலாத் தலமாக அல்லது அதிகம் பேர் வந்து செல்ல கூடிய இடமாக இருந்தால்  இந்த இடமே நாசமாகிவிடும். எங்கெல்லாம் மனிதன் நுகர்வு இல்லாமல் இருக்கிறதோ,  அங்கெல்லாம் இயற்கை பாதுகாப்பாக தான் இருக்கிறது. உலகின் மிகப் பெரிய நாடாக கருதப்படும்  பல லட்சம் அரிய வகை தாவரங்களும் விலங்கினங்களையும் தன்னுள் வைத்திருந்த பெரும் மழைக் காடான அமேசான் காட்டில்  தீப்பிடித்து நாசமாகிவிட்டது யார்பாப்பிரெட்டிப்பட்டி,அரூர் பகுதியில் வசிப்பவர்கள் தாராளமாக இந்த நீர்வீழ்ச்சியை ரசித்து குளிக்கலாம்.மீண்டும் ஒரு மழைநாளில் கலசப்பாடி நீர்வீழ்ச்சியை நோக்கி என் கால்கள் பயணப்படும் என நம்புகிறேன். இந்த கலசப் பாடி நீர்வீழ்ச்சியில் குளிக்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி.

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்