ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி

வேலூர் மாவட்டத்தின் திருப்பத்தூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி. இந்த நீர்வீழ்ச்சியின் தொடர்ச்சி ஆனது ஏலகிரி மலையில் உற்பத்தியாகிறது.ஏலகிரி மலையில் உற்பத்தியாகும் இந்த நீரானது பாறைகள் மீது படர்ந்து வந்து நீர்வீழ்ச்சியாக விழுகிறது. இது ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. நானும் எனது மைத்துனனும்  இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டு ஜலகம்பாறை அடைந்தோம். கிட்டத்தட்ட 2 மணி நேரம் குளித்தோம். அவ்வளவு குளிர்ச்சியாகவும் குதூகலமாகவும் இருந்தது. நீர்வீழ்ச்சியில் குளிக்கும் இடத்திலும் ஆண்களின் ஆதிக்கமே அதிகமாக இருக்கிறது. பெண்கள் குளிப்பதற்காக எவரும் வழிவிடுவதில்லை. அதனால் பெண்கள் கூட்டமாக ஒரு ஓரமாக நின்று  குளிக்கிறார்கள்.  அப்படி இல்லை என்றால் பெண்களின்  தகப்பன் அல்லது கணவன்  அரவணைப்பில் நின்று குளிக்கிறார்கள். நீர்வீழ்ச்சியை அடைவதற்கான பாதைகள் சரியாக கட்டமைக்கப்பட வில்லை.சுற்றுலா வருபவர்களின்  நலன்களையும் குழந்தைகள், முதியோர்கள்,
பெண்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு ஒரு நல்ல பாதை அமைத்தால்  நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. இங்கு பிரசித்தி பெற்ற ஒரு முருகன் ஆலயம் உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியை அடைய நாம் மிகவும் சிரமப்பட தேவையில்லை. ஏனெனில் சமதள பரப்பிலிருந்து நாம் வாகனத்தை நிறுத்திவிட்டு ஒரு இரண்டு நிமிடம் செங்குத்தாக ஏறினால் இந்த நீர் வீழ்ச்சியை அடைந்துவிடலாம். விடுமுறை தினங்களில் கூட்டம் அதிகமாக இருக்கிறது.
இந்த நீர்வீழ்ச்சியில் நீண்டநேரம் குளித்து மகிழ விரும்புவர்கள் காலை 8 மணிக்குள்ளாக அல்லது விடுமுறை அல்லாத தினங்களில் வந்தால் களிப்பு தீர குளிக்கலாம். குடும்பத்தோடு குளித்து மகிழ சிறந்த சுற்றுலாத் தலம் இது. சுற்றுலா செல்ல விரும்புவோர் வீட்டில் இருந்தோ அல்லது திருப்பத்தூரில் இருந்தோ உணவு கொண்டு செல்வது சிறந்தது ஏனெனில் அங்கு எந்த வித உணவகங்கள்,பெரிய கடைகள் என ஏதும் இல்லை. ஏலகிரியில் மழை வரும் போதெல்லாம் இந்த ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது இது சரியான சீசன்.
விருப்பமும் வாய்ப்பும் உள்ளவர்கள் இந்த நீர்வீழ்ச்சியை நோக்கி குடும்பத்தோடு ஒரு முறையாவது சுற்றுலா வரலாம்.

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்