
///மாங்கடை பாறை அருவியில் இன்று குளித்தேன். இந்த மாங்கடை ஒரு மலை கிராமம். தீர்த்தமலையிலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. கோட்டப்பட்டி,சிட்லிங், வேலனூர்,அம்மாபாளையம் கடந்து காட்டுக்கு நடுவில் செல்லும் தார்சாலையில் சென்றால் மாங்கடை கிராமத்திற்கு முன்பாகவே சாலையின் இடதுபுறம் பாறைகளின் மீது வழிந்துவரும் நீர் அருவியாக கொட்டுகிறது. மழை அதிகம் வரும் நாட்களில் சென்றால் ஆர்பரிக்கும் அருவியை காணலாம். நீர்வரத்து குறைவாக இருந்ததால் நான் அமைதியான அருவியில் குளித்து விட்டு வந்தேன்///