///இந்த வருட சென்னைப்புத்தகக் கண்காட்சியில்  தேசிய புத்தக வெளியீட்டு நிறுவனம் (NBT) இல்லாதது ஒரு பெரிய ஏமாற்றம் அளித்தது எனக்கு.

சாகித்திய அகாடமி அரங்கில் கூட நான் எதிர்பார்த்த கேசவதேவ் எழுதிய அண்டைவீட்டார் நாவல்,
கிரிராஜ் கிஷோரின் சதுரங்கக் குதிரைகள் நாவல் போன்ற படைப்புகள் இல்லை.

நான் விரும்பி வாங்க நினைத்த நிறைய புத்தகங்கள் மறுபதிப்பு செய்யப்படவில்லை என நிறையப் பதிப்பகங்களால் சொல்லப்பட்டதால் என் விருப்பப் பட்டியலில் இருந்த நிறைய புத்தகங்கள் வாங்க முடியாமல் போனது.

 மேலும் அரங்கு எண் பட்டியல் குறித்த விவர கையேட்டை வாசகர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தான் வழங்கினார்கள்.அதுவும் வேறு எவரோ ஒரு பதிப்பகத்தாரின் சேவையால் .

சனிக்கிழமை அன்று எந்த அரங்கு எங்கு உள்ளது என்பதை அறிய மிகவும் சிரமப்பட்டேன்.அங்குள்ள அலுவலகத்தை அணுகி தான் அறிய முடிந்தது.

மற்றபடி பஜ்ஜி மசால் வடையும்,
ஆயிரக் கணக்கான மக்கள் வாடையும் மூக்கைத் துளைக்க  குறையின்றி நடந்துக் கொண்டிருக்கும் அகத்திற்கான அறிவு திருவிழாவில் கலந்து கொள்ள இன்னொரு முறையும் வார இறுதியில் வருகிறேன் சென்னை நோக்கி.

கீழ்கண்ட புத்தகங்கள் சனிக்கிழமை அன்று கிடைக்கவில்லை. நல்ல மனம் கொண்ட வாசக நண்பர்கள் கீழ்க்கண்ட புத்தகங்கள் எந்த அரங்கில் கண்டாலும் தெரியப்படுத்தவும்.

ஆடுஜீவிதம் -பென்யான்

என் பெயர் ராமசேஷன் -ஆதவன்

சிதறல்கள் - பாவண்ணன்

 எண்ணும் மனிதன் - மல்பா தஹான்

ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி -
சலீம் அலி

கண்மணி கமலாவுக்கு _ இளையபாரதி

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்