
"சென்னைப் புத்தகக் கண்காட்சியும், வண்டலூர் மிருக காட்சியும்" - (ஒரு நாள் பயண அனுபவம்) வாழ்வின் சள்ளைகள் முட்டி கோணல் கொள்ளும் மனங்களை நேராக்க, அன்றாடம் வாழ்க்கையை நகர்த்தும் பிழைப்புக்கலையில் எழும் சிக்கல்களால் சக மனிதர்கள் நோக்கியும்,சமூகத்தை நோக்கியும் மனம் கொள்ளும் கோபம், பொறாமை, குரோதம்,எரிச்சல் என எல்லா அழுக்குகளையும் அகம் கழுவிக்கொள்ள வாசிப்பதும், பயணம் கொள்வதும் மட்டுமே ஒரு பயனுள்ள வழியாக இருக்கும் என கருதுகிறேன். வாசிப்பு என்பது கண்களால் புத்தகத்திற்குள் இறங்கி நடக்கும் கலை.பயணம் என்பது புதிய நிலங்களின் மீது கால்களால் கவிதை எழுதும் கலை.இந்த நவீன வாழ்வின் அழுத்தத்தில் எப்போதும் இரைச்சலில் இயங்கும் மனதை சமநிலைப்படுத்த புத்தகங்களை வாசிப்பதும், புதிய இடங்களை நோக்கி பயணம் செய்வதும் மட்டுமே மனதை லகுவாக்குவதற்கு தீர்வு என்பது என் எண்ணம். இந்த சராசரி மொண்னைத்தன வாழ்விலிருந்தும்,எவ்வித அறமுமற்ற சுரணையற்ற சமூகத்திலிருந்து உங்களை தனித்து நிறுத்திக் கொள்ள வாசிப்பும், பயணம் செய்வதும் மட்டுமே ஒரு சிறந்த வழி. எங்களின் பயணம் 18.1.2020 சனிக்கிழமை விடியற்காலை நான்கு ...