Posts

திமிங்கல வேட்டை

Image
/ஹெர்மன் மெல்வில்(Herman Mellvile) எழுதிய திமிங்கல வேட்டை(Moby Dick) நாவலை முன் வைத்து கடற்பயண புனைவு நாவல்களில் எப்போதும் என் விருப்பத்திற்குரியது எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் "கிழவனும்,கடலும்" நாவல் என்பேன். சாண்டியாகு எனும் மீன் பிடிக்கும் கிழவனுக்கும்,இயற்கைக்கும் இடையே நிகழும் போராட்டத்தை ஹெர்னஸ்ட் ஹெமிங்வே  எழுதி அந்நாவலுக்காக நோபல் பரிசும் பெற்றார். நடு சமுத்திரத்தில் ஒரு ராட்சத மீனுக்கும்,கிழவனுக்கும் நடக்கும் போராட்டத்தை சாகச உணர்வுகள் மோலோங்க எழுதப்பட்ட ஒரு சிறந்த நாவல் கிழவனும் கடலும். ஒரு வயதான கிழவனின் தன்னம்பிக்கையும்,மன போராட்டத்தையும் மையப்படுத்தி எழுதப்பட்ட நாவல் அது. கிட்டத்தட்ட கிழவனும்,கடலும் நாவலைப் போலவே கடற்பயணத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ள நாவல் திமிங்கல வேட்டை(Moby Dick). நீண்ட நாட்கள் மீன் கிடைக்காத ஒரு கிழவன் தன்னை ஒரு  மீனவன் என நிரூபிக்க கடலுக்குள் பயணம் செய்து மீன் பிடித்து வரும்  வைராக்கிய உணர்வை அடிப்படையாக கொண்ட கிழவனும் கடலும் நாவலைப் போல, திமிங்கல வேட்டை(Moby Dick) நாவல் ஒரு வெள்ளை திமிங்கலத்தால் (Moby Dick) தன் ஒரு காலை இழந்த ஆகாப் என...

வெளியேற்றம்

Image
 வெளியேற்றம் - யுவன் சந்திரசேகர். அறிவியலுக்கும் ஆன்மீகத்துக்கும் அடைபடாத மாற்று மெய்மைகளின் தேடல் தான் யுவன் சந்திரசேகர் எழுதிய அவரின் முதல் நாவலான குள்ளச் சித்தன் சரித்திரம் நாவலின் களம். அதன் தொடர்ச்சியாகவே வெளியேற்றம் நாவலையும் கருதலாம்.நடைமுறை வாழ்க்கையின் சாத்தியத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றை தேட முனையும்,வாழ்க்கையின் சிடுக்குகளின் சிரமம் தாளாமல் குடும்பத்தை உறவுகளை விட்டு திருமணம் ஆன நாளன்றே வீட்டை விட்டு வெளியேறும் வேதமூர்த்தி,ஜய்ராம்,வயிரவன் செட்டியார்,மன்னாதி குற்றாலிங்கம், பால்பாண்டி,சிவராமன்,நிறைய பொம்பளளைங்களிடம் போனதால் நோய் வாங்கும் ராமலிங்கம் பிறகு அது யானைக்கால் என வேதமூர்த்தியால் சரி செய்யப்படுகிறது,கண் தெரியாத ஹரிஹரன், கோவர்த்தனம், என பல்வேறு மனிதர்களின் கதைகளை தேடிச் சென்று கேட்கும் சந்தானம் என எல்லா மனிதர்களுக்குள்ளும் ஒரு வித தொடர்பு இருப்பதை முடிச்சிடுகிறது நாவல். வீட்டை விட்டு வெளியேறும் மேற்கண்ட பெயர் கொண்ட எல்லாரும் சென்று சேர்வது வேதமூர்த்தி என்ற சாமியாரைத்தான். வீட்டைத் துறந்து இலக்கற்று திரியும் மனிதர்களை நாம் அன்றாடம் பார்க்கலாம்.அவர்களில் மனப்பிறழ்வுக்கு ...

குள்ளச் சித்தன் சரித்திரம்

Image
யுவன் சந்திரசேகர் எழுதிய குள்ளச் சித்திரன் சரித்திரம் நாவலை முன்வைத்து: என் பால்யம் கதைகள் ஊட்டி வளர்க்கப்பட்டவை.என் அம்மாவைப் பெற்ற என் பாட்டியின் பெயர் ஜானகி. மர்மங்கள் நிறைந்த ஈசன் காட்டு மொட்டையன் கதைகள்,தான் பார்த்த அலிபாபாவும் ஆயிரம் திருடர்களும் படத்தின் கதைகள் என எனக்கு கதைகளை சொல்லி வளர்த்தவர் என் பாட்டி. எதார்த்தத்திற்கு நேர் எதிராக நடக்கும் அதி அற்புத கதைகள் தான் மனதிற்கு கிலேசம் ஊட்டுவதாக உள்ளது. புற உலக வாழ்வின் எதார்த்த நிகழ்வுகளிலிருந்து ஒரு படி தள்ளி நடக்கும் அதிசயங்களுக்கு எப்போதுமே நம் அகம் ஆசை கொள்கிறது. லௌகீக வாழ்வின் உபாதைகளுக்கு மனிதர்கள் கோயில்,குளம்,கடவுள், ஜோசியம் என எதன் மூலமாகவோ  பரிகாரம் தேடி அலைகிறார்கள். தங்கள் வாழ்வின் குறைகளை தீர்க்க ஏதாவது ஒரு அதிசயம் நிகழ்ந்து விடாதா என ஒரு வித நம்பிக்கையில் வாழ்கிறார்கள். நமக்கு கடவுள் வழிபாடு சார்ந்து,மறுபிறப்பு சார்ந்து நிறைய நம்பிக்கைகள் உண்டு.மறுபிறப்பு என்பது உண்மையில் உண்டா?நம் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து செயல்களும் தற்செயல்களின் கூட்டுத்தொகை தானா? நான் எனும் இந்த சரீரம் என் முன் பிறப்பின் தொடர்ச்சியாகக் க...

ஆலஹாவின் பெண் மக்கள்

Image
 சாரா ஜோஷப்பின் ஆலஹாவின் பெண் மக்கள் நாவலை முன் வைத்து: எப்பொழுதுமே குழந்தைகளின் பார்வையில் சொல்லப்படும் எந்த ஒன்றிலும் கள்ளமும்,கசப்பும் இருக்காது.அவர்கள் விஷம் நிரம்பாத வெள்ளை மனம் கொண்டவர்கள். ஆன்னி என்ற எட்டு வயது பெண் குழந்தையின் பார்வையில் சொல்லப்படும் ஆலஹாவின் பெண் மக்கள் நாவல் முழுக்க முழுக்க  கோக்கஞ்சறா எனும் மாற்றுலகை நம் முன் காட்டுகிறது. கோக்கஞ்சறா என்ற விலக்கப்பட்ட மனிதர்களும்,மலம் அள்ளுபவர்களும் வாழும் ஒரு ஊரை சாரா ஜோஷப் உருவாக்கி அதில் முழுக்க பெண்களையே உரையாட விட்டிருக்கிறார். ஒரு காலத்தில் பிணம் புதைக்கும் இடமாக இருந்த இடம் தான் ஆன்னியும் அவளது குடும்பமும் வசிக்கும் கோக்கஞ்சறா என்ற இடம்.நாவலின் தொடக்கத்தில் ஆன்னியின் பாட்டி அவரை விதை நட மண்ணை தோண்டும் போது எலும்புத்துண்டு வரும்.அவரைச் செடியும்,ஆலஹாவின் மந்திரமும் நாவலில் குறியீடுகளாக வருகிறது. நாவலில் ஆன்னியின் சித்தப்பா குட்டி பாப்பன்(பிரான்ஸிஸ்),குஞ்சன் காம்பவுண்டர் என சில ஆண்கள் வந்தாலும் முழுக்க முழுக்க பெண்களின் அவலச்சுவை நிரம்பிய வாழ்வைத்தான் இந்நாவல் விவரிக்கிறது. சிறு வயதிலேயே வடகிழக்கு மாநிலம் ஓடிவிட்...

இறுதி யாத்திரை

Image
எம்.டி.வாசுதேவன் நாயரின் இறுதி யாத்திரை நாவலை முன் வைத்து: நம்மைச் சார்ந்தவர்களின் மரணம் எதன் பொருட்டு நமக்கு பெரும் துயரையும் இழப்பையும் தருகிறது என்று பார்த்தால் அவருடன் நெருங்கி பழகிய நினைவுகளே அவர் இல்லாமை குறித்து நம் மனதை போட்டு உழற்றும்.அவர் உடன் பிறந்தவரே ஆனாலும் தொடர்ந்து அவரிடம் பேசவில்லை பழகவில்லை என்றால் அவர்களின் இருப்பும் இறப்பும் என்பது நமக்கு  ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. தொடர்ந்து பேசுவதாலும் நினைவுறுதலாலும் மட்டுமே ஒருவருடைய உறவின் வலிமையை அவருடைய முகத்தை நம் அகத்திற்குள் பெருக்கிக் கொள்ள முடியும். நான் கடைசியாக வெடித்து அழுத மரணம் என் அண்ணன் மணிவண்ணனுடைய மரணம் மட்டும் தான்.அண்ணன் தம்பி உறவு தாண்டிய ஒரு புரிதலும் பற்றும் எனக்கும் அவனுக்கும் இருந்ததே அந்த அகவலிக்கு காரணம்.அதுதான் அவன் இழப்பை அவன் இல்லாமையை தொடர்ந்து நான் நினைக்க காரணம். நாம் இறந்த பிறகு நம் பிள்ளைகளால் உறவுகளால் நினைவு கூறப்பட,அழுது பெருக அவர்களுக்கு ஆஸ்தியும் நல்ல ஒழுக்க வாழ்க்கை நாம் வாழ்ந்ததையும் கொடுத்துச் செல்ல வேண்டும் என்பது குடும்ப வாழ்க்கையின் குறுகிய விதியாக இருக்கிறது.அப்போதுதான் நம்...

நெடுஞ்சாலை

Image
கண்மணி குணசேகரனின் நெடுஞ்சாலை நாவலை முன் வைத்து: எதார்த்த வாத எழுத்துக்கள் என்றாலே தமிழில் ஆர்.ஷண்முகசுந்தரம் பூமணி அதன் பிறகு கண்மணி குணசேகரன், இமையம் போன்ற எழுத்தாளர்களின் வரிசை வரும்.  கண்மணி குணசேகரன் தான் சார்ந்த மண்ணையும் மக்களையும் இலக்கியமாக்குபவர்.எந்த வித ஜோடனைகளும்,சொற்பகட்டும் இல்லாதவை அவருடைய எழுத்து நடை. ஒரு போக்குவரத்து பணிமனையில் பணிபுரியும் பணியாளர்களை கதாபாத்திரங்களாக வைத்துக் கொண்டு அந்த போக்குவரத்து துறை சார்ந்த வேலையில் இருக்கும் சிரமங்களையும் அதற்கு பின்னுள்ள உலகையும் இந்த நாவலில் நமக்கு காட்டுகிறார் கண்மணி குணசேகரன். கண்மணி குணசேகரன் தற்போது விழுப்புரம் போக்குவரத்து பணிமனையில் பணிபுரிவதால் அந்த துறை குறித்த விவரணைகளில் தரவுகளில் ஒரு நம்பகத் தன்மை உள்ளது.தான் பணிபுரியும் போக்குவரத்து பணி மனையையும் அதன் ஊழியர்களையும் வைத்து அவர்களின் தனித் தனி வாழ்க்கையை நாவலில் தொகுத்து காட்டுகிறார்.கதை நிகழும் இடத்தை,சூழலைத் தாண்டாத சொற்களும் சொலவடைகளும் எதார்த்த எழுத்துகளே நாவல் முழுதும். நாவலில் வரும் கம்பிளி,சந்திரா,பார்வதி பெண் பாத்திரங்கள் வலுவான சிருஷ்டிப்புகள்.அஞ்சலை ந...

என் கதை

Image
 நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் என் கதை நூலை முன்வைத்து: தன் வரலாறு நூல்களில் முதன்மையாக கருதப்படுவது காந்தியின் வாழ்க்கை வரலாறு நூலான சத்திய சோதனை.அதற்குப் பிறகு உ.வே. சாமிநாதையர் எழுதிய என் சரிதம் நூலைச் சொல்வார்கள்.இந்த நூல்களைத் தொடர்ந்து நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை எழுதிய என் கதையும் ஒரு சிறந்த தன் வரலாற்று நூல் என எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன். தன் வரலாறு நூல்களின் தரமும் தகுதியும் அதை எழுதுபவர்களின் வெளிப்படைத் தன்மையையும் உண்மைத் தன்மையையும் பொறுத்தது. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பள்ளியின் என் கதை என்பது அவருடைய எதார்த்தமும் நேர்மையும் கலந்த வாழ்க்கை நிகழ்வுகளின் தொகுப்பு என கூறலாம். ஒரு ஏட்டுவின் மகனாக பிறந்து தந்தையின் ஆசைக்கிணங்க ஒரு அரசு வேலையில் சேராமல் ஓவியக் கலைஞராக, விடுதலைப் போராட்ட வீரராக திகழ்ந்த ராமலிங்கம் பிள்ளை கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது என்ற பாடலை எழுதியதால் ராஜாஜியால் பாரதியின் இழப்பை ஈடு செய்ய வந்தவர் என்று பாராட்டப்பட்டவர். தன் தன் தாயின் அஞ்சாத குணத்தை சொல்லும் இலுப்பு மர பிசாசு என்னும் அத்தியாய...