Posts

பறவைக்கு கூடுண்டு அனைவருக்கும் வீடு லாரி பேக்கரின் கனவு

Image
 பறவைக்கு கூடுண்டு அனைவருக்கும் வீடு லாரி பேக்கரின் கனவு நூலை முன் வைத்து:  இங்கிலாந்தில் பிறந்து தன்னுடைய இந்திய நண்பர் P.J. சாண்டியின் சகோதரி மருத்துவர் எலிசபெத் என்பவரை மணந்து கொண்ட லாரி பேக்கர் குறித்தும் அவர்களது வாழ்க்கை குறித்தும் அவரது மனைவி எழுதிய நூல் இது. காந்திய கட்டிடக் கலைஞர் என அழைக்கப்படும் லாரி பேக்கர் "மக்கள் நலனுக்காகக் கட்டப்படும் கட்டிடங்கள் மக்களின் வாழ்வுச் சூழல், வசதி,இவற்றைப் பிரதிபலிப்பதாக அந்த அந்த இடங்களில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு கட்டப்படுவது நல்லது எனும் காந்தியடிகளின் அறிவுரைக்கேற்பவே லாரி தன் கட்டிடங்களை வடிவமைத்தார்.இது தான் இந்தியா போன்ற வறுமைப்பட்ட நாடுகளுக்கு ஏற்ற கட்டிட வடிவமைப்பு முறை என லாரி ஏற்றார். மேற்கத்திய சூழலுக்கும்,பருவ நிலைக்கும்,தேவைகளுக்குமாக வடிவமைக்கப்படும் கட்டிடங்கள் இந்தியச் சூழலுக்கு சுமையே என்று கருதினார்" 1948ஆம் ஆண்டு லாரி பேக்கர் எலிசபெத் பேக்கரை திருமணம் செய்து கொண்ட பின் இமயமலையில் உள்ள பித்தோராகர் என்ற இடத்தில் தன் கணவருடன் தொழு நோயாளிகளுக்கு மித்ர நிகேதன் என்ற நட்பு இல்லத்தை நிறுவி 1963 வரை கிட்டத்தட்ட 15 ஆ...

கறுப்பு வெள்ளைக் கடவுள்

Image
 தேவிபாரதியின் கறுப்பு வெள்ளைக் கடவுள் நூலை முன்வைத்து: நான் தேவிபாரதி எழுதிய எல்லா நாவல்களையும்  வாசித்திருக்கிறேன். நான் வாசித்த வரை வஞ்சிக்கப்பட்ட மனிதர்களின் கடந்த கால கசப்பும் வன்மமும்,பழியுணர்ச்சியும் தான் அவரது படைப்புகளில் உள்ள உள்ளோட்டம். அவரின் முதல் நாவலான நிழலின் தனிமை நாவலில் வரும் அந்தப் பெயரற்ற கதை சொல்லியினுடைய வன்மத்திலும் பழி தீர்க்கும் உணர்ச்சியிலும் குற்றமும் தண்டனையில் வரும் Raskolnikov பாத்திரத்தின் பாதிப்பு தெரியும். நீர்வழிப்படூஉம் நாவலில் வரும் காரு மாமா பாத்திரம் வழியாக வாழ்க்கை கைவராத துயர் துரத்தி சரியும் ஒரு மனிதனின் சித்திரத்தை காட்டுவார்.இந்த நாவல் ஒரு விதத்தில் அவர் சார்ந்த நாவித சமூகம் மற்றும் அவருடைய குடும்ப உறவுகள் சார்ந்த சுய புனைவு படைப்பு. பெண்களின் சாபமும்,பழி உணர்ச்சியும் ஒரு வம்சத்தையே நாசம் செய்வதை தொன்மம் குறியீடுகள் வழியாக நொய்யல் நதி மனிதர்களின் வாழ்வியலை நொய்யல் என்ற பெயரில் எழுதியிருப்பார். ஒரு சாதாரண சத்துணவு அமைப்பாளராக இருக்கும் "ந" என்ற காளிங்க நடராஜ் என்பவனின் வாழ்க்கையை முன் வரலாற்று பெருமிதத்துடன் நட்ராஜ் மகாராஜ் நாவலில் அ...

பாரதி நினைவுகள்

Image
 ம.கோ.யதுகிரி அம்மாள் எழுதிய பாரதியின் நினைவுகள் நூலை முன்வைத்து: பாரதியின் தோழராக விளங்கிய மண்டயம் ஸ்ரீ.ஸ்ரீநிவாஸாச்சாரியாரின் மகள் யதுகிரி எழுதிய பாரதி நினைவுகள் நூல் பாரதி வாழ்க்கை வரலாறு குறித்து எழுதப்பட்ட நூல்களில் மிக முக்கியமானது என்கிறார் க.நா.சு. “எனக்குத் தெரிந்த அளவில், வ.ராவின் பாரதியார் சரித்திரமும், செல்லம்மாளின் தவப்புதல்வர் பாரதியாரும்,யதுகிரி அம்மாளின் பாரதி நினைவுகளும் சிறந்தவையாகத் தோன்றுகின்றன” என்கிறார் க.நா.சு. பாரதி புதுவையில் இருந்தபோது அவருடன் நெருங்கி பழகியுள்ளது யதுகிரியின் குடும்பம்.யதுகிரி சிறு பெண்ணாக இருக்கும் போது பாரதியாருடன் பழகிய பசும் நினைவுகளின் தொகுப்பு இந்நூல். பாரதி நினைவுகள் புத்தகம் மிக முக்கியமான பாரதியார் குறித்த ஆவணம் என்று கூறப்படுவதற்கு காரணம் அது யதுகிரி என்ற ஒரு சிறு பெண்ணின் பாசாங்கு கலக்காத பார்வையில் எழுதப்பட்டது என்பதால். ஒருவரின் வரலாற்றை  வளர்ந்தவர்கள் எழுதும் போது அதில் ஒருவித மேதாவித் தனமும் மிகப்படுத்தலும் இருக்கும்.ஆனால் இந்த பாரதி நினைவுகள் புத்தகத்தில் யதுகிரி பாரதியுடன் கை பிடித்து நடந்ததை,அவருடன் கவிதை வாசித்ததை,அ...

மரப்பசு

Image
தி.ஜானகிராமனின் மரப்பசு நாவலை முன்வைத்து: தி.ஜானகிராமன் அவர்களின் படைப்புலகத்தில் நான் நுழைந்தது அம்மா வந்தாள் நாவல் மூலமாகத்தான்.பிறகு மோகமுள் நாவல் வாசித்தேன்.இப்போது மரப்பசு. நான் வாசித்த வரை தி.ஜா வின் படைப்புலகம் பிராமணியக் குடும்பம்,பிராமணப் பெண்களின் பாலியல் இச்சை,இசை என்ற சட்டகத்திற்குள் நிகழ்வது. சமூகப் பித்தலாட்டத்திற்கு எதிரான கோபம்,மனிதர்களின் புற சிடுக்குகள்,பசி,வறுமை என அவர் எழுதுவதில்லை. மனித அகத்தின் அடிப்படை அவாவே காமம் தான்.அது தான் அவரது படைப்புகளின் அடிநாதம். இடுப்புக்கு கீழ இருக்கிற சமாச்சாரம் தான் எல்லா சமாச்சாரங்களிலும் சத்தானது என நினைத்து பிராமண பொம்மணாட்டிங்க பாலியல் ஏக்கத்தையும் சுதந்திரத்தையும் கலையாக்கும் யுக்தி தி.ஜாவுக்கு கை வந்த கலை போல.  மரப்பசு நாவலில் வரும் அம்மணியை மறக்க நாட்கள் பிடிக்கும். அம்மா வந்தாள் நாவலில் வரும் அலங்காரத்தம்மாள்,மோகமுள் நாவலில் வரும் யமுனா,மரப்பசு நாவலில் வரும் அம்மணி ஆகிய பாத்திரங்களின் வழியாக அவர்  ஆண்களை அதிர்ச்சியூட்டச் செய்கிறார். குடும்பம் என்ற ஒன்றை அமைத்துக் கொண்டு தண்டபாணி இருக்கும் போதே சிவசுவுடன் குழந்தை பெற...

குழந்தைப் பாடல்கள்

Image
குழந்தைப் பாடல்கள்: முன்னோடிகள்&வகைகளும் வளச்சியும்: செல்ல கணபதி & பாவண்ணன். நாம் குழந்தைகளாக இருக்கும் போதிருந்தே தாலாட்டு வடிவில் பாடல் கேட்டு வளர்கிறோம்.பெரியவர்களால் கதை அல்லது விடுகதை வடிவில் கதைகளும் கேட்டு வளர்கிறோம் என்றாலும் குழந்தைகளுக்கு பாடல் வடிவமும் அதன் தாளமும் விரைவில் அவர்கள் உள்வாங்க கூடியதாக இருக்கிறது. முதன்முதலாக 1908 ஆம் ஆண்டு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களே குழந்தைகளுக்காக பாடல்கள் எழுதினார்.ஏறத்தாழ அறுபது பாடல்கள் எழுதி ‘குழந்தைச் செல்வம்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டார். குழந்தை இலக்கியத்தில் ஒரு பெரும் புரட்சி ஏற்படுத்தியவர் கவிஞர் அழ. வள்ளியப்பா.அதற்குப் பிறகு குறிப்பிடத்தகுந்த குழந்தை பாடல்களை குழந்தைகளுக்கான நூல்களை எழுதியவர் பெரியசாமி தூரன்.எழுத்தாளர் பாவண்ணன் அவர்களும் இப்பொழுது குழந்தைகளுக்கான நூல்களை எழுதி வருகிறார். இந்த நூல் குழந்தை இலக்கியம் மற்றும் குழந்தைகளுக்கான பாடல்களின் வளர்ச்சி குறித்தும் அதன் முன்னோடிகள் குறித்தும் விவாதிக்கிறது. தாளம்  இல்லாமல் குழந்தையின் வளர்ச்சி இல்லை.குழந்தையின் வளர்ச்சியில் எல்லா காலகட்டத்திலும் த...

பாட்டையாவின் பழங்கதைகள்

Image
 பாட்டையாவின் பழங்கதைகள்: பாரதி மணி நம் வாழ்ந்த இடம்,பழகிய மனிதர்களுடன் உடனான நினைவுகள் எல்லாம் நம் ஆழ்மனதில் அனுபவங்களாக நின்று விடுகின்றன.வாழ்வின் சம்பவ தொகுப்புகளை நேரடியாக சொல்லும்போது அதில் ஒரு சம்பவத்தின் நிகழ்வுகளும் அது குறித்த தரவுகளும் மட்டுமே இருப்பதாக தோன்றும். நீங்கள் நிகழ்ந்த வரலாற்றையே ஒரு சம்பவத்தையோ சொல்லும்போது அதில் கொஞ்சம் புனைவுத்தன்மையும் இருக்கும்.புனைவற்ற எதுவுமே இங்கு வறட்சியானது. எழுத்தர் பாரதி மணியின் பல நேரங்களில் பல மனிதர்கள் புத்தகத்தை வாசித்த போது உண்மையில் இது அவருடைய வாழ்க்கை அனுபவ கட்டுரைகளாகவே எனக்கு தோன்றவில்லை.புனைவைப் பூசிக் கொண்ட ஒரு சிறுகதை போல இருந்தது. அத்தனை கட்டுரையிலும் பகடி பாஷை இருக்கும்.பாரதி மணி தன்னுடைய பெரும்பான்மையான வாழ்வை டெல்லியில் கழித்ததால் டெல்லி குறித்த ஒரு நேர்மையான சித்திரத்தை அவரது படைப்புகளில் காணலாம்.பல நேரங்களில் பல மனிதர்கள் நூலில் அதை காணலாம். பாட்டையாவின் பழங்கதைகள் நூலும் அப்படிப்பட்ட சுவாரஸ்யமான தகவல்களும்,பகடியும் சேர்ந்த ஒரு படைப்பு.எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் எழுத்துக்களில் தொடர்ச்சியான ஒரு பகடி வாடை ...

பறவைகளைப் பார்

Image
பறவைகளை விரும்பாதவர்கள் யார்? அழகாகவும் ஒயிலாகவும் உள்ள இந்த சிறு உயிர்களை நோக்கிக் கொண்டிருப்பதே ஒரு பெரிய இன்பம். அங்கு மிங்கும் பறப்பதும், தத்தித்தத்தி நடப்பதும்,ஓடுவதும்,பாடுவதும், பேசுவதும், அலகினால் கோதி அழகுசெய்து கொள்வதுமாக இப்படி அவை எப்பொழுதும் சுறுசுறுப்பாகவே இருக்கின்றன.அவற்றின் பேச்சிற்காகவும்,அவற்றின் அழகுக்காகவும் நாம் அவற்றை விரும்புகிறோம் பறவைகள் இல்லாத உலகம் சுவை குறைந்ததாகவே இருக்கும் என தொடங்கும் இந்த புத்தகம் பறவைகள் குறித்து விளக்கும் ஒரு நல்ல புத்தகம். பறவைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கான ஒரு முழுமையான கையேடு இந்த புத்தகம். குறிப்பாக  பறவைகளைப் பற்றி அறிந்து கொள்ள குழந்தைகளுக்கு பயனுள்ள ஒரு பார்வையை இந்த புத்தகம் வழங்குகிறது. பறவைகளின் வகைகள்,அவைகளின் வாழ்விடம்,வலசைப் போதல்,பறவைகளின் மொழிகள்,அவைகள் கூடு கட்டும் முறைகள் என பறவைகளின் முழு உலகை இப்புத்தகம் தொகுத்து தருகிறது ஆங்கிலத்தில் ஜமால் ஆரா எழுதியதை. தமிழில் பெரியசாமி தூரன் மொழிபெயர்த்துள்ளார்.