Posts

அறம்

Image
 ///ஜெயமோகன் எழுதிய அறம் சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து அறம் செய்ய விரும்பு என்கிறார் தமிழ் மூதாட்டி ஒளவை. தமிழில் எழுதப்பட்ட நிறைய நூல்கள் மானுட வாழ்வியலுக்கான அறத்தை முன்வைத்தவை. மானுட இனம் தங்களுக்குள் உருவாக்கிக் கொண்ட நல் நெறிகளே அறம். அறமற்ற மனித வாழ்வு அழுக்கானது. சக மனிதனுக்கு ஒருவன் செய்துவிட்ட தீங்கு அவன் மனதை குடையும் குற்ற உணர்ச்சியாய்  எழுவதும் ஒருவகையில் அறமே. பிறிதொரு மனிதனுக்காக ஒரு மனித மனம் சுரக்கும் கருணையும் ஒரு வகை அறம் தான். அறம் உள்ள மனிதர்களால் தான் இந்த உலகம் இன்னும் உன்னதமாய் இருக்கிறது. சண்டையிடாமல் சாசுவதமாக போராடி இந்தியாவை மீட்ட அண்ணல் காந்தியடிகள் ஒரு அறத்தின் உருவம். ஏழைகளின் துயர் துடைக்க தன் முழு வாழ்க்கையையும் ஒப்புக்கொடுத்த கருணைக் கடவுள் அன்னை தெரசா ஒரு அறத்தின் உருவம்தான். அப்படி முழுக்க முழுக்க அறத்தை மையமாய் வைத்து அறத்தின் உருவமாய் இருந்த மனிதர்களைப் பற்றி ஜெயமோகனால் எழுதப்பட்டது தான் அறம் எனும் நூல். ஜெயமோகன் அவர்களின் அறம் சிறுகதைத் தொகுப்பு முழுவதும் அறத்தின் உருவமாய் இருந்த உண்மை மனிதர்களை பற்றிய சித்திரத்தை நம் முன் வைக்கிறது. ஒரு எ...

முகங்களின் தேசம்

Image
 ///ஜெயமோகன் எழுதிய முகங்களின் தேசம் நூலை முன்வைத்து வெற்று லௌகீகத்தில் திளைத்து குழந்தைகள் பெருக்கி,பொருள் பெருக்கி சொந்த வீடு,சொந்த ஊர்,சொந்த மாநிலம் தாண்டி  செல்லாத மழுங்கடிக்கப்பட்ட மனதை,மூளையைபயணம் தான் கூர்மையாக்குகிறது. சாதி,மதம் என உங்களுக்குள் ஊற்றி இந்த சமூகம் ஏற்படுத்தி வைத்திருக்கும் ஒரு குறு மனநிலையை  உடைத்து உங்கள் அகத்தை அகலப்படுத்தும் வேலையை நிச்சயம் பயணம் சாத்தியப்படுத்தும். ஒரு தேசத்தை முழுமையாய் புரிந்து கொள்ள அதைப் பற்றிய புத்தகங்களை படித்து தெரிந்து கொள்ள முடியாது.அந்த தேசம் முழுவதும் பயணம் செய்ய வேண்டும். பணம்,பொருள் இன்ன பிற விஷயங்கள் உங்கள் புறத்தேவைகளை தான் பூர்த்தி செய்யும்.ஆனால் பயணம் உங்கள் ஆன்மாவை நிரப்பும் ஒரு இயக்கக் கலை. இந்தியாவின் பல்வேறு நிலப்பரப்புகளில் தான் பயணம் மேற்கொண்ட பயண அனுபவ கட்டுரைகளின் தொகுப்பு ஜெயமோகன் எழுதிய முகங்களின் தேசம் என்ற இந்த நூல். ஒரு பயண அனுபவம் என்பது நாம் பார்த்த நிலப்பரப்பை பற்றி,நாம் பார்த்த இடங்களைப் பற்றிய சிலாகிப்பு மனநிலையில் அந்த இடங்களைப் பற்றிய வெறும் தகவல் குறிப்புகளை முன் வைக்காமல் ஒவ்வொரு நிலத்திலும...

தூப்புக்காரி

Image
 ///மலர்வதி எழுதிய தூப்புக்காரி நாவலை முன்வைத்து என்னுடன் பணிபுரியும் ஒரு அண்ணாவுடன் ஒரு நாள் ஒரு உணவகத்தில் உணவு உண்டு கொண்டிருக்கும் பொழுது நான் எதேச்சையாக மலம் என்ற வார்த்தையை பயன்படுத்தி விட்டதற்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த அவருடைய முகம் ஒரு மாதிரி கோணலாகி விட்டது. தொண்டைக்கு கீழே உண்ணும் உணவு இறங்கி விட்டாலே அது மலம் தானே அண்ணே இதுக்கு போய் ஏன் சங்கோஜப்படுகிறீர்கள் என்றேன். மலத்தைப் பற்றி பேசினாலோ, மலத்தை பார்த்தாலோ நம் மனதில் ஒரு அசௌகரிய உணர்வு தோன்றி விடுகிறது. வகை வகையான உணவை தின்றுவிட்டு தினமும் பேளுகிறோம். மனப்பைக்கு கீழே மலப் பையை சுமந்து திரிபவர்கள் நாம். சிலருக்கு மனப் பை இருக்கவேண்டிய இடத்தில் மலப் பையும்,மலப்பை இருக்கவேண்டிய இடத்தில் மனப்பையும் இருக்கிறது. வயிற்றில் மலத்தை சுமந்து திரியும் மலக்கிடங்குகள் மனிதர்கள். நம் மலத்தை நம்மாலே சகித்துக் கொள்ள முடிவதில்லை. ஆனால் மற்றவர்களின் மலங்களையும் அள்ளி சுத்தப்படுத்தும் துப்புரவு பணியாளர்களின் வாழ்வை நினைத்து பாருங்கள். அப்படிப்பட்ட ஒரு துப்புரவு தொழிலாளியைப்பற்றிய வாழ்க்கைச் சித்திரம் தான் இந்த தூப்புக்காரி நாவல். கவிஞர் ...

இரவு(Night)

Image
 ///Elie Wiesel எழுதிய இரவு(Night) நாவலை முன்வைத்து இரவு என்ற பெயரில் ஜெயமோகன் ஒரு நாவல் எழுதி உள்ளார்.ஆனால் இந்த இரவு(Night) நாவல் Elie Wiesel எழுதியது. 1944 ஆம் ஆண்டில் ஹிட்லர் நிகழ்த்திய யூத இன அழிவிலிருந்து(Holocaust) உயிர் தப்பித்த Elie Wiesel -ன் வதை முகாம் சித்ரவதைகளின் தன்னனுபவ கதை வடிவமே இரவு நாவல். தன் பால்ய வயதில் ஆஸ்விட்ச்,புச்சன் வால்ட் மற்றும் புனா ஆகிய வதை முகாம்களில் தன் தாய்,தங்கை மற்றும் தந்தையை இழந்து எலீ வீஸல் மட்டும் உயிர் பிழைக்கிறார். எலீ வீஸல் உயிர் பிழைத்த பின் பத்தாண்டுகள் கழித்து அவரால் எழுதப்பட்டது இந்த நாவல். வரலாறு தன் வயிற்றில் வாங்கி வரவு வைத்திருக்கும் உலகின் மிகப் பெரிய இன அழிப்பு நிகழ்வுகளாக யூத இன மக்கள் அழிக்கப்பட்டதையும், இலங்கை ஈழத்தமிழர்கள் அழிக்கப்பட்டதையும் கூறலாம். ஒரு அரசு அல்லது ஒரு அமைப்பு அல்லது ஒரு தனி மனித அதிகாரம் எப்போதெல்லாம் இன்னொரு இனத்தின் மீது அல்லது இன்னொரு மதத்தின் மீது வெறுப்பு கொள்கிறதோ அப்போதெல்லாம் இனப்படுகொலைகள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. ஆரிய வெறி ஹிட்லர் நிகழ்த்திய யூத இன அழிப்பு,சிங்கள வெறி ராஜபக்ஷே நிகழ்...

புத்துயிர்ப்பு

Image
 ///லியோ டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு நாவலை முன்வைத்து டால்ஸ்டாயும்,தஸ்தாயெவ்ஸ்கியும் ரஷ்ய இலக்கியத்திற்கு மட்டுமல்ல,உலக இலக்கியத்திற்கே பேராசான்கள். இருவருமே ரஷ்யாவில் பிறந்தவர்கள் என்றாலும் வெவ்வேறு வாழ்க்கை பின்னணியைக் கொண்டவர்கள். ஒரு செழிப்பான நிலபிரபுத்துவ குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் டால்ஸ்டாய். ஆனால் தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கை அப்படிப்பட்டதல்ல.அவஸ்தையும், அலைக்கழிப்பும்,வலிப்பு நோயின் வாதையும் கொண்ட வாழ்க்கை அவருடையது. ஒரு படைப்பாளி தன்னுடைய சொந்த வாழ்வின் பாதிப்புகளை தன்னுடைய படைப்புகளில் பிரதிபலிப்பது வழக்கம். தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகளில் வரும் பாத்திரங்கள் தஸ்தாயெவ்ஸ்கியை பிரதிபலிப்பவையே. குற்றமும் தண்டனையும் நாவலில் வரும் ஒரு ராஸ்கோல்னிவ்வும்,அசடன் நாவலில் வரும் மிஷ்கினும் வேறு யாருமல்ல தஸ்தயேவ்ஸ்கி தான். நான் தஸ்தயேவ்ஸ்கியைத் தான் டால்ஸ்டாய்யை விட அதிகமாக வாசித்திருக்கிறேன். தஸ்தாயெவ்ஸ்கியின் முப்பெரும் காப்பியங்களான குற்றமும் தண்டனையும்,கரமசேவ் சகோதரர்கள் மற்றும் அசடன் ஆகியவற்றை வாசித்திருக்கிறேன். நான் வாசிக்கும் டால்ஸ்டாயின் முதல் ஆக்கம் புத்துயிர்ப்பு தான். மன...

Schindlers list

Image
 ///"இன வெறுப்புகளுக்கு  மத்தியில் மலரும் மனிதநேயம்" Schindler's list- திரைப்படம். உலக வரலாற்றில் இன்றளவும் மிக மோசமான இனப்படுகொலை நிகழ்வாக பார்க்கப்படுவது ஹிட்லர் நிகழ்த்திய யூத இன மக்களின் மீதான படுகொலையே. இரண்டாம் உலகப்போரின் போது கிட்டத்தட்ட 6 மில்லியன் யூத இன மக்களை கொன்றொழித்தான் ஹிட்லர். ஒரு இனத்திற்கு எதிராக செயல்படும்  எல்லோருமே ஹிட்லர் போல கெட்டவர்களாக இருப்பதில்லை. யூதர்களை முழுமையாக வெறுத்து அவர்களை படுகொலை செய்த ஆரிய இனத்தைச் சேர்ந்த ஹிட்லர் பிறந்த அதே ஜெர்மனியில் பிறந்து 1200 யூதர்களை காப்பாற்றிய oscar Schindler என்ற மனிதனின் கருணைப் பற்றியும்,நாஜிப்படைகளின் நாச வேலைகள் பற்றியும் படம் பேசுகிறது. ஒரு ஐந்து வயது சிறுவன் நாஜி முகாம் ராணுவ வீரர்களிடமிருந்து தப்பித்து ஓடி பதுங்கு அறைகளுக்குள் ஏற்கனவே நிறைய குழந்தைகள் இருப்பதால்  மலக்கிடங்கு தொட்டிக்குள் இறங்கி கழுத்து மட்டும் தெரிய நிற்கும் அந்த ஒரு காட்சி போதும் ஒரு இளம் பிஞ்சு நெஞ்சை இனவெறி எப்படி பதைக்க வைக்கிறது என்பதை உணர. oscar Schindler ஆக நடித்திருக்கும் Liam Neeson,அவரின் உதவியாளராக வரும் யூத இனத்தை...

The Shawshank Redemption

Image
 ///The Shawshang Redemption படத்தை முன்வைத்து கொரோனா பெருந்தொற்றின் பேரச்சத்தில் நாம் பயந்து வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில் நாம் எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையை  தடுப்பூசி வந்து தந்துள்ளது. மருத்துவர்களே நம் உடல் நோய்க் கொண்டிருக்கும் போது மருந்தும் எடுத்துக் கொள்ளுங்கள்,அதோடு சேர்த்து நம்பிக்கையோடும் இருங்கள் என்கிறார்கள். நம்பிக்கை தான் நம்மை நாளை என்ற ஒன்றை நோக்கி நகர்த்துகிறது. வாழ்வின் எப்படிப்பட்ட நெருக்கடியான சூழலிலும் நாம் நம்பிக்கை என்ற ஒன்றை மட்டும்  இழந்துவிடக்கூடாது என்பதை உணர்த்தும் ஒரு உன்னத கலைப்படைப்பு The Shawshank Redemption திரைப்படம். எப்பொழுதெல்லாம் நம் விருப்பத்திற்கு,அல்லது நம் வாழ்விற்கு எதிரானதாக  நிகழும் எதிர்மறையான நிகழ்விற்கு நம் மனம் போராடாமல் நம் வாழ்வே அவ்வளவுதான் என்று துவண்டு விடுகிறது. "இனி வாழ முடியாது என்கிற பயம் ஒருவனை சிறைக்கைதியாக வைத்து விடுகிறது.ஆனால் நம்பிக்கை தான் ஒருவனை எல்லா சிக்கல்களிலிருந்தும் விடுதலை செய்கிறது" என்ற கருத்தை நம் கண் முன் வைக்கும் கலைப் புதையல் இந்த திரைப்படம். உங்கள் மனம் நம்பிக...