Schindlers list

 ///"இன வெறுப்புகளுக்கு  மத்தியில் மலரும் மனிதநேயம்"


Schindler's list- திரைப்படம்.



உலக வரலாற்றில் இன்றளவும் மிக மோசமான இனப்படுகொலை நிகழ்வாக பார்க்கப்படுவது ஹிட்லர் நிகழ்த்திய யூத இன மக்களின் மீதான படுகொலையே.

இரண்டாம் உலகப்போரின் போது கிட்டத்தட்ட 6 மில்லியன் யூத இன மக்களை கொன்றொழித்தான் ஹிட்லர்.

ஒரு இனத்திற்கு எதிராக செயல்படும்  எல்லோருமே ஹிட்லர் போல கெட்டவர்களாக இருப்பதில்லை.

யூதர்களை முழுமையாக வெறுத்து அவர்களை படுகொலை செய்த ஆரிய இனத்தைச் சேர்ந்த ஹிட்லர் பிறந்த அதே ஜெர்மனியில் பிறந்து 1200 யூதர்களை காப்பாற்றிய oscar Schindler என்ற மனிதனின் கருணைப் பற்றியும்,நாஜிப்படைகளின் நாச வேலைகள் பற்றியும் படம் பேசுகிறது.

ஒரு ஐந்து வயது சிறுவன் நாஜி முகாம் ராணுவ வீரர்களிடமிருந்து தப்பித்து ஓடி பதுங்கு அறைகளுக்குள் ஏற்கனவே நிறைய குழந்தைகள் இருப்பதால்  மலக்கிடங்கு தொட்டிக்குள் இறங்கி கழுத்து மட்டும் தெரிய நிற்கும் அந்த ஒரு காட்சி போதும் ஒரு இளம் பிஞ்சு நெஞ்சை இனவெறி எப்படி பதைக்க வைக்கிறது என்பதை உணர.

oscar Schindler ஆக நடித்திருக்கும் Liam Neeson,அவரின் உதவியாளராக வரும் யூத இனத்தைச் சேர்ந்த Itzhak Stern ஆக நடித்திருக்கும் Ben Kingsley(அட்டன்பாரோ இயக்கிய காந்தி திரைப்படத்தில் காந்தியாக நடித்தவர்)ஆகிய இருவரின் நடிப்பும், கருணையும் படம் பார்ப்பவர்களின் மனதை ஒருபுறம் மென்மையாக வைத்திருக்கிறது என்றால்,Amen Goeth என்ற பெயரில் நாஜி படை கமாண்டராக நடித்திருக்கும் Ralph Fiennes ஹிட்லரின் நிழலாக வந்து குருரமாக கண்ணில் படும் யூதர்களை எல்லாம் கொன்று குவித்து நெஞ்சை பதைபதைக்க வைக்கிறான்.

"அன்பை சலித்தால் கருணை.வெறுப்பை சலித்தால் விரோதம்.வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருங்கள்"

என்று சொன்ன அன்னை தெரசாவின் வார்த்தைகளைப் போல் ஜெர்மனியின் ஆரிய இனத்தில் பிறந்த ஒருவன் தன்னிடமுள்ள பணத்தை எல்லாம் நாஜி படைத்தலைவனிடம் கொடுத்து 1200 யூத இன மக்களை காப்பாற்றுகிறான்.



இந்த படத்தில் வருகின்ற ஒரு வசனங்கள் மனதை நெருடுபவை.


"நாம் செய்கின்ற கொலைகளை நியாயப்படுத்தவும்,தப்பித்துக் கொள்ளவும் அதிகாரம் பயன்படுகிறது" என்ற வசனமாகட்டும்,


ஒருவருடைய வாழ்க்கையை காப்பாற்றுபவன் யாராக இருந்தாலும் அவன் இந்த உலகத்தையே காப்பாற்றியவன் போல கருதப்படுவான்" போன்ற வசனங்கள் அருமையாக எழுதப்பட்டுள்ளன.


"ஒருவர் மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போல கருதப்படுவார்.ஒரு மனிதனை வாழ வைத்தவர்,எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போல கருதப்படுவார்" என்று குர்ஆன் கூறுகிறது.

படம் பார்ப்பவர்களின் மனதில் மனிதநேயத்தையும்,கருணையையும்  ஊற வைக்கிறது oscar Schindler கதாபாத்திரம்.


வீட்டு மாடியில் உட்கார்ந்து கொண்டு துப்பாக்கியால் அகதிகளாக்கப்பட்ட யூதர்களை சுட்டுக் கொல்லும் Amen Goeth கடைசியில் வெட்டவெளியில் தூக்கிலிடப்பட்டு கொல்லப்படுகிறான்.

தூக்கிலிடப்பட்டது ஒரு மனிதன் அல்ல.சக மனிதனை கொல்லச் செய்த வெறுப்பு.

Steven Speilberg இயக்கிய இந்தப் படம்   அவருடைய மற்ற புனைவுப் படங்களிலிருந்து வேறுபட்ட ஒரு கலைப்படைப்பு.

பல்வேறு பிரிவுகளில் 7 ஆஸ்கர் விருதுகளை வென்ற திரைப்படம் இது.

இதுவரை பார்க்காதவர்கள் கண்டிப்பாக படத்தை பாருங்கள்///

Velu malayan

24.6.2021


❤️❤️❤️❤️

Comments

Popular posts from this blog

இலட்சிய இந்து ஓட்டல்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்