இரவு(Night)

 ///Elie Wiesel எழுதிய இரவு(Night) நாவலை முன்வைத்து



இரவு என்ற பெயரில் ஜெயமோகன் ஒரு நாவல் எழுதி உள்ளார்.ஆனால் இந்த இரவு(Night) நாவல் Elie Wiesel எழுதியது.

1944 ஆம் ஆண்டில் ஹிட்லர் நிகழ்த்திய யூத இன அழிவிலிருந்து(Holocaust) உயிர் தப்பித்த Elie Wiesel -ன் வதை முகாம் சித்ரவதைகளின் தன்னனுபவ கதை வடிவமே இரவு நாவல்.

தன் பால்ய வயதில் ஆஸ்விட்ச்,புச்சன் வால்ட் மற்றும் புனா ஆகிய வதை முகாம்களில் தன் தாய்,தங்கை மற்றும் தந்தையை இழந்து எலீ வீஸல் மட்டும் உயிர் பிழைக்கிறார்.

எலீ வீஸல் உயிர் பிழைத்த பின் பத்தாண்டுகள் கழித்து அவரால் எழுதப்பட்டது இந்த நாவல்.

வரலாறு தன் வயிற்றில் வாங்கி வரவு வைத்திருக்கும் உலகின் மிகப் பெரிய இன அழிப்பு நிகழ்வுகளாக யூத இன மக்கள் அழிக்கப்பட்டதையும்,

இலங்கை ஈழத்தமிழர்கள் அழிக்கப்பட்டதையும் கூறலாம்.

ஒரு அரசு அல்லது ஒரு அமைப்பு அல்லது ஒரு தனி மனித அதிகாரம் எப்போதெல்லாம் இன்னொரு இனத்தின் மீது அல்லது இன்னொரு மதத்தின் மீது வெறுப்பு கொள்கிறதோ அப்போதெல்லாம் இனப்படுகொலைகள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.

ஆரிய வெறி ஹிட்லர் நிகழ்த்திய யூத இன அழிப்பு,சிங்கள வெறி ராஜபக்ஷே நிகழ்த்திய தமிழ் ஈழப்படுகொலைகள் போன்றே மியன்மரில் ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு எதிராக நடந்த தாக்குதல்களில் நான்கு லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்டு வங்காளதேசத்தில் தஞ்சம் புகுந்தனர்.

மேற்சொன்ன மூன்று நிகழ்வுகளின் வீரியத்தின் அளவு இல்லாவிட்டாலும் சிறுக சிறுக இதுபோன்ற சாதிய,மத வெறுப்பு தாக்குதல்களும் படுகொலைகளும் தலித்துகள் மீதும், இஸ்லாமியர்கள் மீதும் இந்தியாவில் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது.

இரவு நாவலை முழுக்க முழுக்க ஒரு இனம் வதைத்து அழிக்கப்பட்டதற்கான ஒரு எழுத்துப் பிரதி வடிவ சாட்சி எனலாம்.

வதை முகாம்களில் யூத இன மக்களுக்கு வெறும் எண்கள் மட்டும் வழங்கப்பட்டு அவர்கள் எதுவுமற்றவர்களாக மாற்றப்பட்டு கொல்லப்படுகிறார்கள்.

நீங்கள் நிலமற்றவர்களாக,எதுவும் அற்றவர்களாக,வெறும் எண்களாக நிற்கும் வலியின் கனத்தை  உணர நீங்கள் ஒரு யூதராக,இலங்கை ஈழத்தமிழராக,ஒரு ரோஹிங்கியா முஸ்லிமாக உங்களை பொறுத்திக் கொள்ளுங்கள். 

Steven Spielberg இயக்கிய Schindlers List என்ற படம் யூத இன அழிப்பை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம்.

இந்த படத்தை பார்த்த பிறகு இரவு நாவலை நான் வாசித்ததால் நாவல் எனக்குள் ஏற்படுத்திய அழுத்தத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடிந்தது.

என்னுடைய நண்பரும், எழுத்தாளருமான திரு.க.நல்லதம்பி அவர்கள் கன்னடத்திலிருந்து மொழிபெயர்த்த

"யாத்வஷேம்" என்ற நாவல் இரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவிற்கு வரும் ஒரு யூத சிறுமி நாற்பது ஆண்டுகள் கழித்து தன் உறவுகளை, தன் வேர்களைத் தேடி ஜெர்மனி செல்வதை மையமாக கொண்ட நாவல்.ஒரு சிறந்த புனைவு நாவல் யாத்வஷேம்.



இரவு நாவல் வாசிக்கும் போது அது ஏற்படுத்தும் மனதாக்கத்தை யாத்வஷேம் நாவலும் ஏற்படுத்தும்.

இரவு நாவல் யூத இன பேரழிவின் நிஜங்களின் எழுத்துப் பதிவு என்றால் யாத்வஷேம் ஒரு புனைவுப் பதிவு.ஆனால் ரெண்டு நாவலும் நமக்குள் ஏற்படுத்தும் அதிர்வும்,வலியும் நிஜமானவை.

If you've never read this book, pls read this book "Night".I Strongly recommed this book.it will break your heart.

இரவு நாவல் வாசிக்க வேண்டிய ஒரு நல்ல படைப்பு///

velu malayan

30.8.2021

❤️❤️❤️❤️

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்