The Shawshank Redemption

 ///The Shawshang Redemption படத்தை முன்வைத்து



கொரோனா பெருந்தொற்றின் பேரச்சத்தில் நாம் பயந்து வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில் நாம் எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையை  தடுப்பூசி வந்து தந்துள்ளது.

மருத்துவர்களே நம் உடல் நோய்க் கொண்டிருக்கும் போது மருந்தும் எடுத்துக் கொள்ளுங்கள்,அதோடு சேர்த்து நம்பிக்கையோடும் இருங்கள் என்கிறார்கள்.

நம்பிக்கை தான் நம்மை நாளை என்ற ஒன்றை நோக்கி நகர்த்துகிறது.

வாழ்வின் எப்படிப்பட்ட நெருக்கடியான சூழலிலும் நாம் நம்பிக்கை என்ற ஒன்றை மட்டும்  இழந்துவிடக்கூடாது என்பதை உணர்த்தும் ஒரு உன்னத கலைப்படைப்பு The Shawshank Redemption திரைப்படம்.

எப்பொழுதெல்லாம் நம் விருப்பத்திற்கு,அல்லது நம் வாழ்விற்கு எதிரானதாக  நிகழும் எதிர்மறையான நிகழ்விற்கு நம் மனம் போராடாமல் நம் வாழ்வே அவ்வளவுதான் என்று துவண்டு விடுகிறது.

"இனி வாழ முடியாது என்கிற பயம் ஒருவனை சிறைக்கைதியாக வைத்து விடுகிறது.ஆனால் நம்பிக்கை தான் ஒருவனை எல்லா சிக்கல்களிலிருந்தும் விடுதலை செய்கிறது" என்ற கருத்தை நம் கண் முன் வைக்கும் கலைப் புதையல் இந்த திரைப்படம்.

உங்கள் மனம் நம்பிக்கைகளால் நிரம்பப்பட்டு உறுதியாக இல்லையென்றால் இந்த உலகம் உங்களுக்கு உறுதியாக கிடையாது.

இந்தப் படத்தில் வரும் ஒரு வசனத்தைப் போல உங்கள் முன் எப்போதும் இருக்கும் ஒரு கேள்வி "Get busy living or Get busy dying?" என்பது தான்.

எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களின்

 "இருந்து என்ன ஆகப்போகிறது. செத்துத் தொலைக்கலாம்.  செத்துதான் என்ன ஆகப்போகிறது இருந்து தொலைக்கலாம்" என்கின்ற கவிதையை போல.

இந்தப் படத்தின் ஒரு காட்சியில் Red கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் morgan Freeman, Andy ஆக நடித்திருக்கும் Tim Robbins இடம்

 "Hope is a dangerous thing.Hope Can drive a man insane" என்பார்.

ஆனால் 19 வருடங்களுக்கு பிறகு தன்னுடைய தளராத நம்பிக்கையால் சிறையிலிருந்து தப்பிச் செல்லும் Andy

"Remember Red,hope is a good thing,maybe the best of things,and no good thing ever dies." என்கிறான்.

வாழ்வை முடித்துக் கொள்ள அதன் கடைசி நுனியில் நின்று கொண்டிருக்கும் ஒருவனுக்கு இந்தப் படம் வாழ்க்கையை வாழு என கற்பிக்கிறது.

அதுவும் கொரோனா போன்ற இந்த கொடுங் காலத்தில் நம் மனத்தளர்வை போக்கி நம்பிக்கையூட்டும் நல்ல ஒரு கலைப்படம் "The Shawshank Redemption".

செய்யாத குற்றத்திற்காக தண்டனை,சிறைச்சாலையின்  தனிமை கொடுக்கும் உள நசிவின் தாக்கத்திலிருந்து மீண்டும் வாழ ஒருவன் தன்னை மீட்டுக்கொள்ளும் உள வலிமையை உங்களுக்குள்ளும் இந்தப் படம் உண்டாக்கும்.

"மனவுறுதியே வாழ்வில் வெல்கிறது, மூளைகள் அல்ல"என்கிறார் மகாகவி அல்லாமா இக்பால்.ஆனால் Andy யின் மன உறுதியும்,மூளையும் சேர்ந்துதான் அவனை சிறையில் இருந்து தப்பிக்க வழி செய்கிறது.

உங்கள் நெஞ்சமெல்லாம் நம்பிக்கை நிரப்பிக்கொள்ள உங்கள் வாழ்வின் கண் முழுதும் மூடி கொள்வதற்கு முன் கண்டிப்பாக காண வேண்டிய ஒரு கலை பொக்கிஷம் இந்த படம்.

படம் Amazon prime மற்றும் Netflix இரண்டிலும் காணக் கிடைக்கிறது.

நண்பர்களுக்கு 400% பரிந்துரை செய்கிறேன்///


Velu malayan

23.6.2021


❤️❤️❤️❤️

Comments

Popular posts from this blog

இலட்சிய இந்து ஓட்டல்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

வீடில்லா புத்தகங்கள்