Posts

சிதறல்கள்

Image
 ///பாவண்ணன் அவர்கள் எழுதிய சிதறல்கள் நாவலை முன்வைத்து 1980 களின் காலகட்டத்தில் மூடப்பட்ட புதுச்சேரி பஞ்சாலை தொழிலாளர்களின் வாழ்க்கை பற்றிய நாவல் சிதறல்கள். ஒரு கட்டத்தில் பஞ்சாலை இழுத்து மூடப்படுவதால் அதில் பணிபுரிந்த ஏராளமான,ஊழியர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பொருளாதார பிரச்சினைகள், குடும்பவறுமை,அகத் தவிப்புகள், அன்றாடத்தை நகர்த்த அவர்கள் கொள்ளும் அவமானங்கள், தற்கொலைகள் ஆகியவற்றை நாவல் படுத்தியுள்ளார் பாவண்ணன். நாவலின் பிரதான கதாபாத்திரமாக வரும் முருகேசன் குடும்ப கஷ்டத்தின் வழியாக எல்லா பஞ்சாலை தொழிலாளர் குடும்பங்களின் கஷ்டங்களையும் முருகேசன் பார்வையில் பதிவு செய்கிறார் பாவண்ணன். ஆறாயிரம் தொழிலாளர்கள் வேலை செய்யும் ஒரு ஆலை மூடப்பட்ட உடன் அதையே நம்பி வாழ்ந்த குடும்பங்கள் கொள்ளும் சித்திரவதை சித்திரம் தான் சிதறல்கள் நாவல். ஆலை மூடப்பட்டதும் வேறு வேலையின்றி தவிக்கும் முருகேசன் தறி வேலை,கொத்தனார் வேலை, என பல வேலைகளுக்குச் செல்கிறான். ஆளை மூடப்பட்டதால் வறுமையின் காரணமாக நல்லசாமி என்ற தொழிலாளியால் வாடகை கொடுக்க முடியாத நிலை எழுகிறது. வீட்டின் உரிமையாளர் நல்லசாமி என்னுடைய மனைவி வாசு...

பாய்மரக் கப்பல்

Image
 ///பாவண்ணன் அவர்களின் "பாய்மரக் கப்பல்" நாவலை முன்வைத்து நம் பொதுப் பார்வையில் விவசாயம் என்பது ஒரு தொழில்.ஆனால்  விவசாயிக்கு அது ஒரு வாழ்க்கை முறை.நிலம் அவனுடைய இன்னொரு உடல்.உழைப்பை முதலீடாக கேட்கும் உயிர் வளர்க்கும் கலை அது. விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த தலை முறைகளிலிருந்து மெல்ல மெல்ல விலகி வேலைவாய்ப்பு தொழில்கள்,பணம், பதவி என ஓடிக் கொண்டிருக்கின்ற ஒரு தலைமுறை நாம். இந்த நவீன வாழ்க்கைமுறை தலைமுறைகளுக்கு இடையேயான மிகப்பெரிய இடைவெளிகளையும், முரண்களையும் பெருக்கி விட்டிருக்கிறது. மூன்று தலைமுறை மனிதர்களின் வாழ்க்கைப்பாடுகள்,அவர்களின் விவசாய வாழ்க்கை முறையின் வீழ்ச்சி,அவர்களின் தலைமுறை இடைவெளி பிரச்சனை ஆகியவற்றை ஒரு நிஜ வாழ்வின் வாசனையுடன் பதிவு செய்கிறது பாவண்ணன் அவர்களின் பாய்மரக் கப்பல் நாவல். காசாம்பு கவுண்டர் மகன் முத்துசாமி கவுண்டரின் மகன்கள் ரங்கசாமி முனுசாமி,ஆறுமுகம் மற்றும் ஆறுமுகத்தின் மகன் துரைசாமி ஆகிய மூன்று தலைமுறை மனிதர்களின் வழியாக நாவல் பயணிக்கிறது. தன் தகப்பன் வாங்கிய கடனுக்கு ஈடாக சீதாராம ரெட்டியாரிடம் தன் நிலத்தை பறிகொடுத்து விட்டு கோர்க்காட்டு கிராமத்தி...

விலங்குப் பண்ணை

Image
 ///ஜார்ஜ் ஆர்வெல்(George orwell) எழுதிய "விலங்குப் பண்ணை(Animal Farm)" நாவலை முன்வைத்து வாழ்க்கையில் ஒரு முறையாவது படித்து விட வேண்டிய நாவல் விலங்குப் பண்ணை என்கின்ற என் அபிப்பிராயத்தை முதலில் முன் வைத்து விடுகிறேன். விலங்குகளை பிரதான பாத்திரங்களாக வைத்து ஒட்டுமொத்த மனித வாழ்க்கையைப் பற்றி பேசியிருக்கிறார் ஜார்ஜ் ஆர்வெல்' மனித இனம் மனிதர்களை வைத்து இன்றளவும் செய்துவரும் அரசியலை Animals பார்வையில் நையாண்டி செய்கிறது நாவல். நாவலின் உள் புனைவின் நோக்கம் சோவியத் ரஷ்ய யூனியனின் அரசியல் கொள்கைகளையும், அதிகாரங்களையும் நையாண்டி செய்ய எழுதப்பட்டதாக இருந்தாலும் இது ஒட்டுமொத்த உலக மனிதர்களின் அரசியலை நையாண்டி தனம் செய்யும் ஒரு கலை ஆவணமாக நிற்க்கிறது இந்நாவல். இந்நாவலின் ஆரம்பத்தில் கிழட்டு தளபதியாக வந்து இறந்து போகும் கிழட்டுப்பன்றி லெனின் ஆகவும், நெப்போலியனாக வரும் பன்றி ஸ்டாலின் ஆகவும்,விலங்கு பண்ணை இன் முதலாளியாக வரும் ஜோன்ஸ் ஜார் மன்னர்வம்சத்தின் கடைசி அரசன் இரண்டாம் நிக்கோலாஸ் ஆகவும் உருவகப் படுத்தப்பட்டுள்ளார்கள் ஒட்டுமொத்த விலங்கு பண்ணையையே  சோவியத் ரஷிய யூனியன் ஆக உருவகப்பட...

கடவுள் தொடங்கிய இடம்

Image
 ///அ.முத்துலிங்கம் எழுதிய "கடவுள் தொடங்கிய இடம்" நாவலை முன்வைத்து "குந்தியிருக்க ஓர் நிலம் குறித்துக் காட்ட ஒர் பூமி அள்ளி அணைக்கும் உறவு  இழந்தவர் இங்கே காற்சட்டை மேற் சட்டை போட்டு நிர்வாணமாக திறிகின்றோம் அந்நியர் பூமியிலே" என்ற "செல்வம்.அருளானந்தம்" அவர்களின் கவிதை அகதிகளின் அவல நிலையை நெருங்கி பதிவு செய்கிற ஒரு கவிதை. ஒரு அகதியின் மனநிலையை புரிந்து கொள்ள நாம் ஒரு அகதியாய் இருந்தால் மட்டுமே சாத்தியம் என நினைக்கிறேன். ஆனால் எழுத்தாளர் ஷோபா சக்தி சொல்வது போல் ஒரு அகதியின் மனநிலையை இன்னொரு அகதியால் கூட புரிந்து கொள்ள முடியாது என்பதே நிதர்சனம். கடவுள் தொடங்கிய இடம் என்ற இந்த நாவல் ஒரு அகதியின் அலைதல் பயணத்தைப் பற்றியது. இலங்கையின் குப்பிளான் எனும் குக்கிராமத்திலிருந்து தன் அம்மாவின் கால் காணி நிலத்தை விற்ற பணத்தில் ஜெர்மனிக்கு அகதியாய் செல்லும் 19 வயது நிஷாந் என்ற அகதியின் அலைதல் பயணத்தையும், அவனது அகதி மனநிலையையும் பதிவு செய்கிறது. ஏஜெண்டுகள் மூலம் கள்ள பாஸ்போர்ட்டில் ரஷ்யா சென்று அங்கிருந்து ஜெர்மனி செல்வது தான் திட்டம். ஆனால் குடிவரவு அதிகாரிகளின் கெடுபி...

ஆடு ஜீவிதம்

Image
 ///பென்யாமின் எழுதிய "ஆடுஜீவிதம்" நாவலை முன்வைத்து இந்தியாவில் இருந்து அரபு தேசங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் என்னை ஒட்டகம் மேய்க்க வைத்து கொடுமை செய்கிறார்கள்,வீட்டு வேலை செய்ய சொல்லி அடித்து துன்புறுத்துகிறார்கள் என்ற பல்வேறு  மனிதர்களின் அவலக் குரல்களை நாம் செய்தித்தாள்கள் வழியாகவும்,சமூக ஊடகங்கள் வாயிலாகவும் பார்த்திருப்போம். சமீபத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளிவந்த மலையாள படமான  C U Soon என்ற படத்தில் கூட கேரளாவில் இருந்து அரபு தேசத்திற்கு வேலைக்கு சென்ற ஒரு பெண்ணை அடித்து பாலியல் சித்திரவதை செய்வதை காட்டியிருப்பார்கள். கல்ஃபிற்கு வேலைக்குச் சென்று அவதிப்படும் இதைப் போன்ற நிறைய நாம் அறியாத மனிதர்களின் துயர் சம்பவங்கள் உள்ளன. அப்படி 1992 ஆம் ஆண்டு அரபு தேசத்திற்கு வேலை தேடிச் சென்ற நஜீப் முகமது என்ற ஒரு மலையாளியின் துயர் மிகுந்த வாழ்க்கை நிகழ்வின் உண்மையை அடிப்படையாக கொண்டு மலையாள எழுத்தாளர் பென்யாமினால் எழுதப்பட்டது தான் இந்த ஆடு ஜீவிதம் நாவல். வெம்மை தகிக்கும் அரபி பாலைவனத்தில் மாட்டிக்கொண்டு மூன்று வருடம் மூச்சு சுருங்கி, உருக்குலைந்து தப்பி வந்த ஒரு அப்பாவியின் ...

ஒற்றை வைக்கோல் புரட்சி

Image
 ///"ஜப்பானிய நம்மாழ்வாரும், ஒற்றை வைக்கோல் புரட்சியும்" நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்வியல் முறை முழுக்க முழுக்க செயற்கைத் தனங்களால் ஆனது. ரசாயனம் கலந்த உணவு உண்டு, ரசாயனம் கலந்த குடிநீர் குடித்து, நஞ்சு கலந்த காற்றை நுகர்ந்து நுரையீரல் பையை  நிரப்பிக்கொண்டு ஒரு சதை தொழிற்சாலையாக ஒவ்வொரு மனிதனும்  உலவிக் கொண்டிருக்கிறான். நாம் காட்டைவிட்டு எப்பொழுது வெளியே வந்தோமோ அப்பொழுதே நம் ஆரோக்கியமும்,ஆயுளும் குறைய ஆரம்பித்துவிட்டது. இயற்கையோடு ஒத்திசைந்து வாழும் வாழ்விலிருந்து விலகி நாகரீக நாய்களாக வளர்ந்து  நிற்கிறோம். இன்றைய மனிதனின் செயற்கை நுகர்வு கலாச்சார வாழ்க்கைக்கு ஒரே மாற்று இயற்கை வேளாண்மை தான் என்பதை முன்வைக்கக் கூடிய ஒரு மிகச் சிறந்த புத்தகம்  "ஒற்றை வைக்கோல் புரட்சி". ஜப்பானிய இயற்கை வேளாண் விஞ்ஞானி மசானபு ஃபுகோகா (Masanobu Fukuoka) அவர்களின் இயற்கை வேளாண்மை குறித்த கருத்தியல் மற்றும் கள ஆய்வு ஆவணம் இப்புத்தகம். இயற்கை வேளாண் முறையை தன்னுடைய வாழ்வியல் முறையாக கொண்டு வாழ்ந்து காட்டியவர் மசானபு ஃபுகோகா. இந்த புத்தகத்தை வெறுமனே ஒரு இயற்கை வேளாண் க...

கானகத்தின் குரல்

Image
 ///ஜாக் லண்டன் எழுதிய கானகத்தின் குரல்(Call of the wild ) நாவலை முன்வைத்து மனித வளர்ச்சியின் ஆதியிலிருந்தே மனிதன் முதன் முதலாக பழக்கப்படுத்திய விலங்கு நாய் தான் என்று வரலாறு சொல்கிறது. மனிதன் நாடோடியாய் திரிந்ததிலிருந்து,இன்றைய நாகரீக வாழ்க்கை முறை வரை மனித உறவின் தொடக்க விலங்கான நாய் நம்முடன் தொடர்ந்து வளர்க்கப்பட்டு வருகிறது. "மாட்டிடம் பால் கறக்க ஆரம்பிக்கும் முன்,ஆடுகளை மேய்க்கும் முன்,பன்றிகளை வளர்க்கும் முன், விவசாயத்தை கண்டுபிடிக்கும் முன்,எழுத கற்றுக் கொள்ளும் முன், நிரந்தர வீடுகளை உருவாக்கும் முன், பூனைகளை வளர்க்க தொடங்கும் முன் மனிதர்கள் நாய்களை வளர்க்க தொடங்கி இருந்தனர்" என்று கூறுகிறார் ஜேம்ஸ் கார்சன் என்பவர்.(தியோடர் பாஸ்கரனின் இந்திய நாயினங்கள் நூலில் இருந்து) பொதுவாக நாய்கள் கூர்மையான மோப்ப உணர்வும், மனிதர்களின் உடல் மொழிகளை உள்வாங்கிக் கொள்ளும் திறனும் கொண்டவை. அதனால் தான் மனிதர்களுடன் அவை அவ்வளவு நெருக்கத்துடன் பழக முடிகிறது.இதைத் தான் நாம் நாய் விசுவாசமுள்ள பிராணி என்கிறோம். நாய் நன்றியுள்ள விலங்காக நாம் ஆபத்தில் மாட்டிக் கொண்டிருக்கும் போது காப்பாற்றும் ஒர...