Posts

Image
///ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி எழுதிய "குற்றமும் தண்டனையும்" நாவலை முன்வைத்து வெண்ணிற இரவுகள், நிலவறைக்குறிப்புகள் போன்ற படைப்புகளை வாசித்ததின் வழியே தான் எனக்கு தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புலகம் பரிட்சயம் ஆனது. பொதுவாகவே தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புலகம் என்பது வாசகர்கள் எளிதில் அணுக முடியாத மனித அக மனங்களின் ஆழங்களை பேசுபவை. தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புகளை படிப்பது என்பது உங்களை நீங்களே சுயவதைப் படுத்திக் கொள்வதைப் போன்றது.உங்கள் முன் உங்களையே நேர் நிறுத்தி பேசிக்கொள்வது. ஒரு வருடங்களுக்கு முன்பு குற்றமும் தண்டனையும் நாவலை நான் வாசிக்கத் தொடங்கியபோது மனம் இருநூறு பக்கங்களை கடப்பதற்குள் சலிப்புகளால் சரிந்து பின்வாங்கி நின்றதால் நாவலை தூக்கி தூர வைத்து விட்டேன். குட்டி ஆக்கங்களை விடுத்து கெட்டி அட்டை போட்ட பெரிய ஆக்கங்களை வாசியுங்கள் என கூறிய எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் அவர்களால் குற்றமும் தண்டனையும் நாவலை பதினைந்து நாட்களில் படித்து முடித்தேன். எனக்கு பெருத்த அகச்சலிப்பையும், அகச் சிதைவையும் ஏற்படுத்திய நாவல் குற்றமும் தண்டனையும் நாவல். தன்னை வதைக்கும் வறுமை சூழலின் விரக்தி,அடகு...
Image
///கரிச்சான் குஞ்சு எழுதிய  "பசித்த மானிடம் "நாவலை முன்வைத்து சில படைப்புகள் அது எழுதப்பட்ட காலத்தில் இலக்கியப் பரப்பிலும், வாசகர் மத்தியிலும் சரியான மதிப்பீடுகளையும், அங்கீகாரத்தையும் பெறாமல் போயிருக்கிறது. அப்படி காலதாமதமாக கவனம் பெற்ற நாவல் கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானிடம் நாவல். தமிழில் ஓரினச்சேர்க்கைப் பற்றி வெளிப்படையாய் பேசிய முதல் நாவல் பசித்த மானிடம். பெரும்பாலும் பெண்களின் உடல் சுரண்டலை மட்டுமே பதிவு செய்து வந்த தமிழ் இலக்கியத்தில் ஒரு ஆணின் உடல் சுரண்டலை பதிவு செய்ததில் முக்கிய கவனம் பெறுகிறது இந்நாவல். மனித உடலில் வற்றாமல் ஊறிக் கொண்டேயிருக்கும் , பசி,காமம்,பொருள் சேர்க்கும் வேட்கை, அதிகார அரிப்பு இவையெல்லாம் வற்றிப்போகும் ஒரு புள்ளியில் வாழ்வின் நிறைவு என்பது என்ன? என்ற கேள்வியை முன்வைக்கும் படைப்பாக பசித்த மானிடம் இருக்கிறது. கணேசன் கிட்டா என்ற இரண்டு நண்பர்களின் வாழ்வின் மீது பணம், அதிகாரம்,காமம் என எல்லாம் இயங்கி இருவரும் மனிதர்களாலும், உறவுகளாலும் எப்படி உறிஞ்சப்படுகிறார்கள் என்பதை ஆன்மீகமும்,தத்துவமும் கலந்த பார்வையில் பதிவு செய்கிறார் ...
Image
///தோப்பில் முஹம்மது மீரான் எழுதிய ஒரு கடலோர கிராமத்தின் கதை நாவலை முன்வைத்து இஸ்லாம் சமூகம் ஒரு இறுகிய கட்டமைப்பைக் கொண்டது.குறிப்பாக பெண்கள் மீதான அதன் இறுக்கம் இன்னும் தளர்ந்ததாகவே இல்லை. இஸ்லாம் சமூக பெண்களின் நொம்பலங்களை தனது எழுத்துக்களின் வழியே அம்பலமாக்கியவர் உருது எழுத்தாளர் இஸ்மத் சுக்தாய். இஸ்லாம் சமூகம் எவற்றையெல்லாம் தன் மதத்திற்கான  கண்ணியம், கட்டுப்பாடு  என இறுக்கி வைத்திருந்ததோ அவற்றையெல்லாம் தன் எழுத்துக்களில் பிரதிபலித்து தன்னை எப்போதும் பிரச்சனைகளில் வைத்துக் கொண்ட மீறலின் வடிவம் இஸ்மத் சுக்தாய் அவர்கள். அவர் கதைகளின் வழியாகத்தான் இஸ்லாமிய பெண்களின் சுதந்திர முனகளையும்,அவர்கள் மீது நூற்றாண்டுகளாய் போர்த்தப்பட்டு கிடந்த திரை விலகளையும் கண்டேன். ஒரு நூற்றாண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்த மீறல் இஸ்மத் சுக்தாய். ஆனால் இந்த நொடியிலும் இன்னும் வற்றி விடாத இருண்மையை இஸ்லாம் சமூகம் தனக்குள் சுமந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படி முதல் உலகப்போர் முடிவடைந்த காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு கடலோர கிராமத்தில் எவ்வித நாகரிக வளர்ச்சியையும் தனக்குள் அன...
Image
///டி.தருமராஜ் எழுதிய "அயோத்திதாசர் " (பார்ப்பனர் முதல் பறையர் வரை) நூலை முன்வைத்து பள்ளிப் பாடப் புத்தகங்கள் வழியாகவும், ஒரு சில பேர் சொல்லியும் ஒரு தெளிவற்ற பிம்பமாய்  இதுவரை நான் உள் வாங்கி வைத்திருந்த அயோத்திதாச பண்டிதரை அருகில் அணுகிப் பார்ப்பதற்கான பாதையை ஏற்படுத்தி தந்துள்ளது இந்த நூல். வரலாற்றாய்வாளர்களால் இருட்டிப்பு செய்யப்பட்ட தமிழகத்தின் மிகச் சிறந்த  சிந்தனையாளர் அயோத்திதாசர் பண்டிதரின் எண்ணங்களை, படைப்புகளை அவர் உண்மையான அகமுகம் எது என பேராசியர் டி.தருமராஜ் ஆய்வு நோக்கில் அணுகும் வரலாற்று விசாரணை இந்நூல். அயோத்திதாசர் என்பவரின் தனிப்பட்ட முகத்தை துதிக்காமல் அவரது அக சிந்தனைகளின் மீதான ஆய்வு விசாரணையாக இருக்கிறது இந்நூல். பௌத்தமே தமிழர்களின் பூர்வீக சமயமாக இருந்தது என்றும், பூர்வ பௌத்தர்களே பறையர்கள். பறையர்களின் ஆதி சமயம் என்பது பெளத்தமே என்றும், வேஷ பிராமணர்களே பெளத்த மதத்தை சீர்குலைத்து பெளத்தர்களாக இருந்தவர்களை பறையர்களாக மாற்றினார்கள் என்றும், பார்ப்பனர்களுக்கும், பறையர்களுக்கும் உள்ள முரண் எப்படி உருவானது என்பதை அயோத்திதாசர் தன்னுடைய இந்தி...
Image
எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் "கிழவனும் கடலும் "நாவலை முன்வைத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கேசவரெட்டி எழுதிய "அவன் காட்டை வென்றான் " என்ற நாவலை வாசித்து விட்டு அந்நாவலைப் பற்றி என் நண்பர்களிடம் சிலாகித்து பேசியிருக்கிறேன். ஒரு வயதான கிழவன்,ஒரு காடு, குட்டிகள் ஈன்ற ஒரு தாய்ப்பன்றி இவைகள் மட்டும் தான் நாவலில் வருபவைகள். தான் வளர்க்கும் சினை பன்றி வழி தவறி காட்டுக்குள் சென்று ஒரு புதரில் குட்டிகள் ஈன்று உள்ளதை கண்டுபிடித்து பன்றியையும், குட்டிகளையும் வீட்டுக்கு அழைத்து வர ஒரு கிழவனுக்கும்,பன்றிக் கும், பன்றியை கொல்ல  வரும் நரிகளுக்கும் இடையே ஓர் இரவில் நடக்கும் போராட்டம் தான் நாவல்.  அவன் காட்டை வென்றான் நாவலோடு ஒப்பிடக்கூடியதாகவே இருக்கிறது எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் "கிழவனும் கடலும் "நாவல் காட்டை வென்றான் நாவலின் களம் காடு.கிழவனும் கடலும் நாவலின் களம் கடல்.இரண்டு நாவலிலும் பொதுவான ஒன்று இரண்டு கிழவர்களும் இயற்கையோடு போராடுகிறார்கள். (எர்னெஸ்ட் ஹெமிங்வே) "அவன் காட்டை வென்றான்" நாவலில் தனது பன்றி மற்றும் அதன் குட்டிகளை உயிருடன் மீட்க கடைச...
Image
///கி.ராஜநாராயணன் எழுதிய கோபல்லபுரத்து மக்கள் நாவலை முன்வைத்து சிறுவயதில் கதைகள் கேட்டு வளர்ந்தவன் நான்.என்னுடைய தாத்தம்மா (அம்மாவை பெற்றவள் ) தான் எனக்கு நிறைய கதைகள் சொல்லுவாள். என்னுடைய தாத்தம்மா பிறந்த ஊர் ஊத்தங்கரைக்கு அருகிலுள்ள நாயக்கனூர்.அவளுடைய சிறு வயதில் அவளுடைய அண்ணன்களுடன் சேர்ந்து பார்த்த நிறைய சினிமாப் படங்கள், அவள் கேட்ட கதைகள் என நிறைய கதைகளை எனக்கு சொல்லுவார். அலிபாபாவும் 40 திருடர்களும், குலேபகாவலி போன்ற படங்களின் கதையை தாத்தம்மா என்னிடம் சுவாரஸ்யமாக சொல்லியது என் நினைவின் சுவடுகளில் இன்னும் இருக்கிறது. என் தாத்தம்மா எனக்கு அடிக்கடி சொல்லும் கதை ஈசன்காட்டு மொட்டையன் கதை தான்.இந்தக் கதையில் ஈசன் காட்டு மொட்டையன் எதுவும் தெரியாத ஒரு அப்பாவியாக இருப்பான்.ஒரு தடவை பலாப் பழம் வியபாரம் செய்வதற்காக பலாப் பழக்கூடையை தலை சுமாடு இல்லாமல் தலையில் சுமந்து கொண்டு போகும் போது பலாப்பழ பால் அவன் தலைமுடியை இறுக்கமாக பிடித்துக் கொள்ளுவதால் பலாப்பழம் கூடை என் தலையை முழுங்கப் பார்க்கிறது என ஊரையே கூப்பிடுவான். ஒருமுறை ஈசன் காட்டு மொட்டையன் கல்யாணமாகி தன் புது மனைவியை கூட்டிக...
Image
எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் எழுதிய "கற்றாழைக்கிணறு" சிறுகதையை முன்வைத்து தற்போது தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் இளம் எழுத்தாளர்களில் ஒரு Promising எழுத்தாளர் என சுரேஷ் பிரதீப்பைச் சொல்லலாம். எழுத வந்த குறைந்த காலங்களில் நிறைய எழுதியவர்.எழுதிக் கொண்டிருப்பவர். சிறுகதைகளில் எல்லாவிதமான வடிவ முயற்சிகளையும் மேற்கொண்டவர் புதுமைப்பித்தன். அதிகமாக சமூகத்தின் புற நிகழ்வுகளை சிறுகதைகளாக எழுதிய புதுமைப்பித்தன் பரிசோதனை முயற்சியாக காஞ்சனை எனும் பேய்க் கதையையும் எழுதியிருப்பார். அந்த வகையான ஒரு முயற்சிதான் சுரேஷ் பிரதீப்பின் இந்த கற்றாழைக்கிணறு சிறுகதையும். கோயில்கள்,தெய்வங்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் பேராசிரியர் நரசிம்மன் என்பவரால் அனுப்பப்பட்டு பாண்டவனுருக்கும்,பாயா நிலத்துக்கும்ம் இடைப்பட்ட குறத்திமேட்டுப்பகுதியில் மூங்கில் வீரன்,செண்பககுறத்தி கதையை ஆராய்வதற்கு வரும் சுரேஷ் என்ற முனைவர் பட்ட மாணவனின் பார்வையில் கதை நகர்கிறது. தெய்வங்களைப் பற்றிய,மனிதர்களைப் பற்றிய தொன்ம,அமானுஷ்ய கதைகளை கி. ராஜநாராயணன்,சோ.தர்மன் படைப்புகளை படித்ததிலிருந்து அந்தக் கதைகள் மீது எனக்கு ஒரு ...