Posts

Image
எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் "கிழவனும் கடலும் "நாவலை முன்வைத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கேசவரெட்டி எழுதிய "அவன் காட்டை வென்றான் " என்ற நாவலை வாசித்து விட்டு அந்நாவலைப் பற்றி என் நண்பர்களிடம் சிலாகித்து பேசியிருக்கிறேன். ஒரு வயதான கிழவன்,ஒரு காடு, குட்டிகள் ஈன்ற ஒரு தாய்ப்பன்றி இவைகள் மட்டும் தான் நாவலில் வருபவைகள். தான் வளர்க்கும் சினை பன்றி வழி தவறி காட்டுக்குள் சென்று ஒரு புதரில் குட்டிகள் ஈன்று உள்ளதை கண்டுபிடித்து பன்றியையும், குட்டிகளையும் வீட்டுக்கு அழைத்து வர ஒரு கிழவனுக்கும்,பன்றிக் கும், பன்றியை கொல்ல  வரும் நரிகளுக்கும் இடையே ஓர் இரவில் நடக்கும் போராட்டம் தான் நாவல்.  அவன் காட்டை வென்றான் நாவலோடு ஒப்பிடக்கூடியதாகவே இருக்கிறது எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் "கிழவனும் கடலும் "நாவல் காட்டை வென்றான் நாவலின் களம் காடு.கிழவனும் கடலும் நாவலின் களம் கடல்.இரண்டு நாவலிலும் பொதுவான ஒன்று இரண்டு கிழவர்களும் இயற்கையோடு போராடுகிறார்கள். (எர்னெஸ்ட் ஹெமிங்வே) "அவன் காட்டை வென்றான்" நாவலில் தனது பன்றி மற்றும் அதன் குட்டிகளை உயிருடன் மீட்க கடைச...
Image
///கி.ராஜநாராயணன் எழுதிய கோபல்லபுரத்து மக்கள் நாவலை முன்வைத்து சிறுவயதில் கதைகள் கேட்டு வளர்ந்தவன் நான்.என்னுடைய தாத்தம்மா (அம்மாவை பெற்றவள் ) தான் எனக்கு நிறைய கதைகள் சொல்லுவாள். என்னுடைய தாத்தம்மா பிறந்த ஊர் ஊத்தங்கரைக்கு அருகிலுள்ள நாயக்கனூர்.அவளுடைய சிறு வயதில் அவளுடைய அண்ணன்களுடன் சேர்ந்து பார்த்த நிறைய சினிமாப் படங்கள், அவள் கேட்ட கதைகள் என நிறைய கதைகளை எனக்கு சொல்லுவார். அலிபாபாவும் 40 திருடர்களும், குலேபகாவலி போன்ற படங்களின் கதையை தாத்தம்மா என்னிடம் சுவாரஸ்யமாக சொல்லியது என் நினைவின் சுவடுகளில் இன்னும் இருக்கிறது. என் தாத்தம்மா எனக்கு அடிக்கடி சொல்லும் கதை ஈசன்காட்டு மொட்டையன் கதை தான்.இந்தக் கதையில் ஈசன் காட்டு மொட்டையன் எதுவும் தெரியாத ஒரு அப்பாவியாக இருப்பான்.ஒரு தடவை பலாப் பழம் வியபாரம் செய்வதற்காக பலாப் பழக்கூடையை தலை சுமாடு இல்லாமல் தலையில் சுமந்து கொண்டு போகும் போது பலாப்பழ பால் அவன் தலைமுடியை இறுக்கமாக பிடித்துக் கொள்ளுவதால் பலாப்பழம் கூடை என் தலையை முழுங்கப் பார்க்கிறது என ஊரையே கூப்பிடுவான். ஒருமுறை ஈசன் காட்டு மொட்டையன் கல்யாணமாகி தன் புது மனைவியை கூட்டிக...
Image
எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் எழுதிய "கற்றாழைக்கிணறு" சிறுகதையை முன்வைத்து தற்போது தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் இளம் எழுத்தாளர்களில் ஒரு Promising எழுத்தாளர் என சுரேஷ் பிரதீப்பைச் சொல்லலாம். எழுத வந்த குறைந்த காலங்களில் நிறைய எழுதியவர்.எழுதிக் கொண்டிருப்பவர். சிறுகதைகளில் எல்லாவிதமான வடிவ முயற்சிகளையும் மேற்கொண்டவர் புதுமைப்பித்தன். அதிகமாக சமூகத்தின் புற நிகழ்வுகளை சிறுகதைகளாக எழுதிய புதுமைப்பித்தன் பரிசோதனை முயற்சியாக காஞ்சனை எனும் பேய்க் கதையையும் எழுதியிருப்பார். அந்த வகையான ஒரு முயற்சிதான் சுரேஷ் பிரதீப்பின் இந்த கற்றாழைக்கிணறு சிறுகதையும். கோயில்கள்,தெய்வங்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் பேராசிரியர் நரசிம்மன் என்பவரால் அனுப்பப்பட்டு பாண்டவனுருக்கும்,பாயா நிலத்துக்கும்ம் இடைப்பட்ட குறத்திமேட்டுப்பகுதியில் மூங்கில் வீரன்,செண்பககுறத்தி கதையை ஆராய்வதற்கு வரும் சுரேஷ் என்ற முனைவர் பட்ட மாணவனின் பார்வையில் கதை நகர்கிறது. தெய்வங்களைப் பற்றிய,மனிதர்களைப் பற்றிய தொன்ம,அமானுஷ்ய கதைகளை கி. ராஜநாராயணன்,சோ.தர்மன் படைப்புகளை படித்ததிலிருந்து அந்தக் கதைகள் மீது எனக்கு ஒரு ...
Image
.///Joaquin Phoenix நடித்த "JOKER" English Movie ஒரு பார்வை ஒரு சமூகத்தால் தொடர்ந்து உதாசீனப்படுத்தப்படும், முற்றிலும் கைவிடப்படும் ஒரு மனிதனின் மன நிலையின் கடைசி புள்ளி உளப் பிறழ்வு நிலை அல்லது வன்முறை என முடியும் என்பதை JOKER படம் உணர்த்துகிறது. சமூகத்தின் கரிசனமும்,காருண்யமும் எப்பொழுதுமே எளிய மனிதர்களை நோக்கி இருந்ததில்லை. Television Show நிகழ்ச்சியில் Joaquin Phoenix பேசும் வசனம் இந்த சமூகத்தின் விரல்களால் நெட்டித் தள்ளப்பட்டு உதாசீனப்படுத்தப்படும் எல்லா எளிய மனிதர்களுக்கும் பொருந்தும். i Killed those guys becoz they Were awful. Every body is awful these days.its enough to make anyone Crazy. (அவனுங்க மோசமானவங்க,மோசமா நடந்துகிட்டாங்க. அதனால தான் அவனுங்கள கொலை பண்ணேன். இங்கு எல்லோருமே மோசமாக இருக்கிறார்கள் அது ஒன்னு போதும் ஒருத்தனா பைத்தியக்காரனா மாத்தறதுக்கு) oh Why is So upset about these guys. "if it was me dying on the Side walk. you had walk right over me. I Pass you everyday and you don't notice me". (ஏன் செத்துப் போன அந்த பணக்கார பச...
Image
///Palasa 1978 தெலுங்குப் படத்தைப் Uற்றி ஒரு பார்வை. நான் பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் போது பர்கூரில் இருந்த மூன்று சினிமா தியேட்டர்களில் ஏதாவது ஒன்றில் ஒரு தெலுங்கு படம் ஓடிக்கொண்டிருக்கும். பர்கூரில் தெலுங்கு பாஷை பெரும்பான்மையாக பேசக்கூடிய ஒரு சமூகம் இருந்ததால் தெலுங்கு படம் திரையிட கூடிய ஒரு நிலை அங்கு இருந்தது.  சஞ்சீவி தியேட்டர், துரைஸ் தியேட்டர் மற்றும் துரைசாமி பாரடைஸ் என இருந்த மூன்று தியேட்டரில் இப்போது துரைஸ் தியேட்டர் மட்டும் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது என நினைக்கிறேன். அங்குதான் நான் நிறைய தெலுங்கு படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். சிரஞ்சீவி, பவன் கல்யாண், பாலகிருஷ்ணா, ஜீனியர் NTR நடித்த திரைப்படங்களை பார்த்தும்,அங்குள்ள உள்ளூர் நண்பர்களோடு பழகியும் தெலுங்கு மொழி பேசக் கற்றுக் கொண்டேன். தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட, கலையம்சம் அல்லாத ஜனரஞ்சக தெலுங்கு சினிமாக்களையே பார்த்து வந்த எனக்கு நேற்று இரவு பார்த்த "Palasa 1978" என்ற தெலுங்குத் திரைப்படம் வெகுவாக என்னை ஈர்த்தது. ரெட்டியார்களும்,நாயுடுகளும்,ராஜு (பிரபாஸ் குலம்)  மற்றும...
Image
///தகழி சிவசங்கரன் பிள்ளையின் "இரண்டு படி" நாவலை முன்வைத்து தகழியின் படைப்புகளை வாசிக்கும் போது அவரது படைப்புகளில் எளிய மனிதர்களின் குரல்களை கேட்கலாம். சமூகத்தின் பார்வையிலிருந்து சாதிய,வர்க்க பேதத்தால் விலக்கப்பட்ட ஒரு தோட்டியின் குரலை தோட்டியின் மகன் நாவலில் பதிவு செய்திருப்பார் தகழி. அதே போல் "இரண்டு படி" நாவலில் கேரளாவின் குட்ட நாட்டில் உள்ள பண்ணையார்களுக்கும், புலையர்களுக்கும் உள்ள வர்க்க பேதத்தை, புலையர்களின் உழைப்புச்சுரண்டலை, அவர்களின் இனத்திற்காக போராடும் கோரன் என்பவனின் குரலை பதிவு செய்கிறார் தகழி சிவசங்கரன் பிள்ளை. சுதந்திரத்திற்கு முன்பான காலகட்டத்தில் குட்டநாடு பண்ணையார்களிடம் அடிமைகளாக வயல்களில் வேலை செய்யும் புலையர்கள் அதிக கூலி வேண்டியும், நிலம் உழபவனுக்கே சொந்தம் என ஓங்கும் புரட்சி மற்றும் அதனால் சுட்டு வீழ்த்தப்படுபவர்களின் தியாகத்தை பேசும் "இரண்டு படி" நாவல் ஒரு இனப் போராட்டத்தை முன்னிலைப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. குட்ட நாட்டு வழக்கப்படி காளிச் சாம்பனின் மகள் சிருதையை ஐம்பது ரூபாய் பணமும்,இருப்பத்தைந்து பறை நெல்லும் கொடுத்து...
Image
தகழி சிவசங்கரன் பிள்ளையின் "செம்மீன்" நாவலை முன்வைத்து இரண்டு வருடங்களுக்கு முன்பே தோட்டியின் மகன் நாவலை  வாசித்தேன்.நாவலை வாசித்து முடித்த பிறகு ஒரு அவஸ்தையை உணர்ந்தேன். சுடலைமுத்து என்ற தோட்டி தன் மகன் மோகனை தன்னை விட உயர்ந்த வாழ்வு வாழ வேண்டும் என அவனை படிக்க வைக்கிறான்.ஆனால் வாழ்வு நிகழ்த்தும் கோர விளையாட்டில் அவன் மகனும் மலம் அள்ளும் தோட்டித் தொழிலே செய்யும் நிலைக்கு தள்ளப்படுவதை நாவல் பேசும். ஒரு தோட்டியை முதன்மைப்படுத்தி  தோட்டி வாழ்வின் நிறைவின்மையை,  நிராசைகளின் வலியை நெருங்கி பேசியதில் மிக முக்கிய நாவல் என தோட்டியின் மகனைப் பார்க்கிறேன். தகழியின் படைப்புகளில் நான் இரண்டாவதாக வாசித்தது ஏணிப்படிகள் நாவல். கேசவ பிள்ளை எனும் ஒரு சாதாரண குமாஸ்தா குறுக்கு வழியில் எப்படி உயர்ந்த அதிகாரமுள்ள பதவியில் உட்காருகிறான் என்பதை ஏணிப்படியில் எழுத்தாக்கியிருப்பார் தகழி. வெகுஜன வாசிப்பு சாரமும்,கலைத் தன்மையையும் கலந்த படைப்புகளை உருவாக்குவதில் தகழி தன்னிகரகற்றவர். கறுத்தம்மா என்ற மீனவப் பெண்ணுக்கும்,இஸ்லாமிய மீன் வியாபாரியான பரீக்குட்டிக்கும் இடையே ஏற்படும் கைகூட...